ஒரு சில வாரங்களுக்கு முன் (பழைய)வீட்டுக்கு அருகே இருக்கும் ஒரு "ஹெரிடேஜ் சென்டர்"ல பேபி அனிமல் டே கொண்டாடினார்கள்.அந்தக் கால வீடுகள், பழைய காலத்துல விவசாயத்துக்கு உபயோகித்த கருவிகள்,மக்கள் வாழ்க்கைமுறை இப்படி எல்லா விஷயங்களும் ஹெரிடேஜ் சென்டர்ல இருக்கு.
ஒரொரு சீசனும் துவங்கும்போது இங்கே பல நிகழ்ச்சிகள் நடக்கும். இப்போ ஸ்ப்ரிங் சீசன் ஆரம்பித்திருப்பதால் இந்த பேபி அனிமல் டே..ஆடு,குதிரை,மாடு,கோழி,முயல்
முதல்ல நாங்க பார்த்தது ஒரு வெள்ளை கலர் ஆட்டுக்குட்டி..அதுக்கு உடம்பு சரியில்லை போல...சோகமா படுத்திருந்தது!பக்கத்துலையே அதோட பீடிங் பாட்டில்.
அம்மா குதிரைகள் & குட்டிக்குதிரைகள்
குழந்தைகள் முதல் பெரியவங்க வரை எல்லோரும் தைரியமா:) தொட்டுப் பார்க்கலாம் இந்த அழகழகான கன்றுக் குட்டிகளை!
செம்மறி ஆட்டுக்குட்டி ஸோ க்யூட்! இந்த அம்மாவும் குழந்தையும் பார்வையாளர்களை கண்டுக்கவே இல்ல! அவங்க பாட்டுக்கு வெயில் காய்ந்துட்டு படுத்திருந்தாங்க.
வெள்ளைப் பன்றியும்,குட்டிகளும்..
வித்யாசமான ஆடு மற்றும் குட்டிகள்..ஆட்டின் உயரமே அரையடிதான் இருந்தது.
அந்தக்கால யு.எஸ்.கிச்சன். பக்கத்துல இன்னொரு வீட்டு கிச்சன்ல குக்கீஸ் எல்லாம் Bake பண்ணிட்டு இருந்தாங்க..டேஸ்ட்டி குக்கீஸ்-ஐ சுவைத்துக்கொண்டே அந்தக்கால கன்வென்ஷனல் அவன் மற்றும் அவர்கள் வசித்த அறைகளைப் பார்த்தோம்.
முயல் குட்டிகள்..பெரீய்ய கியூல பொறுமையா நின்னு பார்க்க டைம் இல்லை..வெளியில் நின்றே க்ளிக்கியது..
இந்த குட்டீஸ் அழகா இருக்காங்களா..அவங்க கைல இருக்க கோழிக்குஞ்சு அழகா இருக்கா?
அட்ராக்ஷன் ஆப் தி டே, யெல்லோஸ்டோன் நேஷனல் பார்க்ல இருந்து வந்திருக்கும் இந்த கரடிக்குட்டிகள்..துரதிர்ஷ்ட வசமா,எங்க கேமராலே பேட்டரி ட்ரெய்ன் ஆகிவிட்டதால் இந்த ஒரே ஒரு போட்டோதான் எடுக்க முடிந்தது.
டெடி பேர் பொம்மைங்க மாதிரியே அழகா, அந்த ட்ரெய்னர்ஸ் கூட பிரெண்ட்லியா விளையாடிகிட்டு இருந்தது. ஜனவரில பிறந்த இந்த குட்டிகளை மூணு மாதத்துல அம்மாகிட்ட இருந்து பிரித்துடறாங்க...இப்போவே பிரித்தால்தான் மனிதர்களுடன் அவற்றை பழக்க முடியுமாம்,வளர்ந்துட்டா மனிதர்களை நெருங்க விடாதாம்!
யு.எஸ்.ல எந்த ஒரு பிக்னிக் ஸ்பாட் போனாலும் அங்கே இந்தியர்கள் நிறையப் பேரை பார்க்க முடியும்..ஆனா இந்த ஊர்ல நம்ம மக்கள் கொஞ்சம் குறைவு..அந்த சனிக்கிழமை அங்கே இருந்த கும்பல்ல நாங்க ரெண்டு பேர் மட்டுமே இந்தியர்கள். நிறைய பேர் குழந்தைங்களை கூட்டிட்டு வந்திருந்தாங்க. ஒரு வித்யாசமான அழகான அனுபவமா இருந்தது பேபி அனிமல்ஸ் டே! [ஊருக்கு பேசும்போது, ஆட்டுக்குட்டி,கன்னுக்குட்டிய பார்க்க ரெண்டுமணி நேரம் டிரைவ் பண்ணிப் போனோம்னு சொன்னா, அம்மா சிரிக்கிறாங்க! :) ]
சூப்பராக இருக்கின்றது...அக்ஷ்தா தான் பார்க்கவேண்டும் என்று கேட்டு கொண்டே இருக்கின்றாங்க..அவளுக்காக தான் இதனை பார்க்க போகவேண்டும்...
ReplyDeleteஎனக்கும் இவை எல்லாம் பார்க்கப் பிடிக்கும் மகி. அழகு இல்லையா!!
ReplyDeleteஇங்கே இப்படி எல்லாம் குழந்தைகளுக்குக் காட்டத்தான் வேண்டும். இவர்களுக்குக் காலையில் கோழி கூவும் என்றும் தெரியாது, பசு பால் தரும் என்பதும் தெரியாது. நிறையப் பேர் ஏதோ பழத்தைப் பிழிந்து சீனி சேர்த்தால் ஜூஸ் என்பதுபோல் தான் பாலும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ;)
அதெப்படி, நானும் கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி இந்த மாதிரி ஒரு ஷோ க்கு போயிருந்தேன்.. :) ஆனா எனக்கென்னமோ வருத்தமாயிருந்தது மஹி.. மக்கள் பார்வைக்காக அதுகளை அடைச்சு வச்சிருந்தாங்க.. ம்ம்..
ReplyDeletecute photos!!
ReplyDeleteEvlo azagha irukku ellam..nalla photo eduthu irukengha mahi..
ReplyDeletebeautiful pictures... really cute
ReplyDeleteOMG!!!!! sema cute-aana pictures!
ReplyDeleteMahi, very cute animals. I love that bear cub very much. So cute.
ReplyDeletecute clic ,sooo nice mahi.
ReplyDeleteபோட்டோ எல்லாமே ரொம்ப பிரமாதம்! வித்யாசமான பதிவு!!..:)
ReplyDeleteகட்டாயம் கூட்டிப் போங்க கீதா! குட்டீஸ் நல்லா என்ஜாய் பண்ணுவாங்க!
ReplyDelete~~
ஆமாம் இமா..இந்தக் கால குழந்தைகளுக்கு இதெல்லாம் ஸ்பெஷலா காட்டவேண்டிய நிலைமை!
~~
சந்தனா, தனியா ஒரு கூட்டுக்குள்ளே அடைத்து இருப்பதற்கு பதிலா கொஞ்சம் பெரிய ஓபன் ஸ்பேஸ்-ல வைத்திருந்தாங்க. :) நம்ம ஊர் மாதிரி இங்கே இந்த மிருகங்களை எல்லாம் சுதந்திரமா விட்டிருக்காங்களா என்ன?
நெறைய புது முகங்களைப் பார்க்கிறோம் என்று அவையும் சந்தோஷமாவே எல்லோருடனும் இன்டராக்ட் பண்ணிட்டு தான் இருந்தது.நீ வருத்தப்படாதே! :))
~~
பாராட்டுக்கு நன்றி நிது,ஆசியா அக்கா,மேனகா,வேணி & Ann !
~~
ஆமாம் வானதி..ரொம்ப அழகா இருந்தது கரடிக் குட்டிகள்.
~~
தக்குடுபாண்டி,நல்வரவு!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!