Tuesday, May 25, 2010

வீட் ப்ரெட் ஹல்வா

ஜலீலாக்கா செய்த ப்ரெட் ஹல்வா பார்த்ததுல இருந்தே சீக்கிரம் செய்து பார்த்துடணும்னு நினைச்சுட்டே இருந்தேன்..எங்க வீட்டுல ப்ரெட் வாங்கறதே அபூர்வம்..சில மாதங்கள்/வாரங்களுக்கொருமுறை திடீர்னு என்னவருக்கு டயட் கான்ஷியஸ் வந்து
ஹோல் கிரெயின் ப்ரெட்,இல்லைன்னா ஹோல் வீட் ப்ரெட் இதுல(இது ரெண்டு மட்டும்தான் ..நோ வொயிட் ப்ரெட்!) வாங்கிட்டு வருவார்..வாங்கி வந்த ஒரு நாள் மீறிப் போனா ரெண்டு (ஆல்டர்நேட்டிவ் டே) நாள் சான்ட்விச் பண்ணி சாப்பிடுவார்..அப்புறம் அந்த ப்ரெட் அப்படியே பரிதாபமா கிடக்கும். இந்த முறையும் அதே போல ஒரு ப்ரெட் வீட்டுல தூங்கிட்டு இருந்தது.

ஜலீலாக்கா வொயிட் ப்ரெட்ல பண்ணிருந்தாங்க..அதான் யோசிச்சுட்டே இருந்தேன்..அப்ப ஒருநாள் நிதுபாலா மிக்ஸட் ப்ரூட்ஸ் அன்ட் ப்ரெட் ஹல்வா
போஸ்ட் பண்ணிருந்தாங்க..அதைப் பார்த்ததும், ஆஹா.. நம்ம வீட்டு ப்ரெட்க்கும் விடிவு காலம் பொறந்துடுச்சுன்னு மண்டைக்குள்ள 'பல்ப்' எரிஞ்சது!
(பல்ப்-கர்ட்டஸி : சந்தனா ) :)))

இவங்க ரெண்டு பேர் யூஸ் பண்ணிருந்த சாமான்கள் எல்லாம் கைவசம் இல்லை.(லைக் கண்டென்ஸ்ட் மில்க், பழங்கள்)..சரி,இருக்கறத வச்சு ஒப்பேத்திடலாம்னு ஒரு தைரியத்துல ஆரம்பிச்சுட்டேன்..இதோ தேவையான(??!) பொருட்கள்..

அஞ்சு ஸ்லைஸ் வீட் பிரெட்ல லைட்டா நெய் தெளித்து, ப்ரீ ஹீட் பண்ணின அவன்ல ஒரு பத்து நிமிஷம் பேக் பண்ணேன்..அப்புறம் ப்ரெட்-ஐத் திருப்பி வைச்சு ஒரு அஞ்சு நிமிஷம் வைச்சேன்.

அதுக்குள்ளே,பேக் பண்ணனுமா,ப்ராயில் பண்ணனுமான்னு வேற ஒரு டவுட்டு..பேக் பண்ணினாலே நல்லா மொறு-மொறுன்னு ஆயிடுச்சு!:))

இப்ப அடுத்த ஸ்டெப்பு..கடாய்ல கொஞ்சம் நெய் காயவைச்சு மேல தட்டுல இருந்தத எல்லாம்(!!) கொட்டிட்டேன்..பொன்னிறமா வறுபட்ட பின்னால பார்த்தா...(****நீங்க மேல படிங்க..கடைசில சொல்லறேன்)
வறுத்த எல்லாத்தையும் எடுத்து தனியா வைச்சுட்டு,அதே கடாய்ல ரெண்டு டம்ளர் பாலை ஊத்தி கொதிக்க வைச்சு, உடைச்சு வைச்ச ப்ரெட்-ஐ சேர்த்தேன்.

அய்யகோ..ப்ரெட்-க்கு என்ன ஒரு தாகம்ங்கறீங்க? பத்து செகண்ட்ல பால் எல்லாத்தையும் உறிஞ்சுடுச்சு..இன்னும் கொஞ்சம் ஊத்தலாமான்னு யோசிக்க(பாலை காய வைக்கணுமில்ல!) டைம் இல்லை..சரி சர்க்கரை சேர்த்தா கொஞ்சம் இளகுமேன்னு முக்கால் கப் சர்க்கரைய சேர்த்தேன்.
கொஞ்சம் ஹல்வா பார்ம் வந்துடுச்சு..அப்புறம் ஒரு ரெண்டு-மூணு ஸ்பூன் நெய் ஊத்தி நல்லா கிளறினேன்..கடைசியா, வறுத்து வைத்த முந்திரி-பாதாம்-திராட்சை எல்லாம் சேர்த்து கலந்தா..

சூப்பர் ப்ரெட் ஹல்வா ரெடி!

ஹல்வா செய்து வைச்சுட்டேன்.டேஸ்ட் பண்ணலை..இவர் இனிப்பே சாப்பிட மாட்டாரு..இவ்வளவு ஹல்வாவையும் என்ன செய்யப் போறோமோன்னு நினைத்துட்டே இருந்தேன்.ஈவினிங் ஆபீஸ்ல இருந்து வந்ததும், ஒரு பவுல்-ல குடுத்துட்டு,ரிசல்ட்டுக்காக திகிலோட வெயிட் பண்ணினேன். ஒரு ஸ்பூன் சாப்ப்ட்டதுமே,'வாவ்..சூப்பர் ஸ்வீட்! நல்லா இருக்கு'ன்னுட்டாரு..அதுக்கப்புறம் தான் எனக்கு நிம்மதியாச்சு! நானும் சாப்ட்டுப் பார்த்தேன்..சூப்பர் டேஸ்ட்!

இருங்க,இன்னும் மொக்கை முடியல..நாம தான் சூப்பர் குக்-கா ஸ்வீட் செஞ்சு அசத்திட்டமில்ல(நன்றி ஜலீலாக்கா& நிது) இனி கொஞ்சம் கெத்து காட்ட வேண்டியதுதானே?:) :)

"இது என்ன ஸ்வீட்னு சொல்லுங்க பார்ப்போம்..மூணு சான்ஸ் தான் குடுப்பேன்..அதுக்குள்ளே கண்டு புடிக்கணும்"-னு இவர்கிட்ட கேட்டேன்..என்னென்னமோ சொல்லிப் பாத்தாரு, பாவம்! ஆனா ப்ரெட் ஞாபகமே வரல...போனா போகட்டும்னு வீட் ப்ரெட் ஹல்வான்னு சொன்னா..நம்பவே முடியல அவருக்கு! பிரெண்ட் வீட்டுக்கும் கொண்டு போனோம்..அவங்களுக்கும் இது ப்ரெட் ஹல்வா-ன்னு கண்டுபுடிக்கவே முடியல..:)

பிரிட்ஜ்ல வைச்சா ஒரு வாரம் வரை நல்லா இருந்தது..அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னு கேட்கறீங்களா? ஒண்ணும் ஆகலை....ஹல்வா தீர்ந்துடுச்சு.ஹி,ஹி!

****கடைசில சொல்லறேன்னு ஒரு இடத்தில சொல்லிருக்கேன்..என்ன ஆச்சுன்னா,ஏலக்காயை பொடித்து போடறதுக்கு பதிலா நெய்ல 'பொறித்து' போட்டுட்டேன். :)

17 comments:

 1. ஹல்வாவும் சூப்பர்,நீங்க கொடுத்த செய்முறை விளக்கம் அதைவிட சூப்பர்.

  ReplyDelete
 2. Enjoyed the halwa recipe and the hilarious write-up.

  ReplyDelete
 3. super, nanum try panna porean.
  dhiratchai mattum colour mari vittadha?

  ReplyDelete
 4. Happy to know you got inspired from me to try the halwa with whole wheat bread..the write-up is very lovely and your halwa looks mouthwatering..I'm poor in guessing..enna nu enakku mattum sollalamey Magi..

  ReplyDelete
 5. செய்முறை விளக்கும் சூப்பர்ப்...அழக்காக எழுதி இருக்கின்றிங்க..பிரட் அல்வாவும் சூப்பர்ப்...நானும் இதே மாதிரி தான் செய்வேன்...ஆனால் கொஞ்சம் வித்தியாசம்...

  ReplyDelete
 6. மகி, பார்க்க நல்லா இருக்கு. நான் நெய் யூஸ் பண்ணுவது குறைவு. கொஞ்சம் பிஸியாக இருக்கு. ஒரு நாளைக்கு செய்து பார்த்திட வேண்டியது தான்.

  மறுபுறம் ப்ரெட் தீஞ்சு போய் இருந்திச்சு??? சரியான விடையா???

  ReplyDelete
 7. ஆசியாக்கா, நன்றி!
  ~~
  மேனகா..அப்பப்போ என் கிச்சன்ல இப்படி காமெடி நடக்கும். :)
  ~~
  நன்றிங்க சிட்சாட்! நான் போடும் மொக்கைய ஆரம்பத்துல இருந்து ஊக்கப் படுத்திட்டு வர ஆட்கள்ல நீங்களும் ஒருத்தர். எதுக்கும் பத்திரமா இருங்க..நம்ம வாசகர்கள் உங்களை தாக்கிடப் போறாங்க..:) :)
  ~~
  ப்ரியா,/dhiratchai mattum colour mari vittadha?/ இல்லை..அதெல்லாம் கரெக்ட்டா பொன்னிறமா வறுத்து எடுத்துட்டேன். கொஞ்சம் பக்கத்துல வந்துட்டீங்க..கீப் கெஸ்ஸிங்..
  ~~
  நிது, சீக்கிரம் சொல்லிடறேன்..அப்புறம் எல்லாரும், 'ச்சே,இதுக்குதான் இவ்ளோ பெரிய பில்ட்-அப்பா?'ன்னு எனக்கு தர்ம அடி கொடுக்கப் போறீங்க. :)
  ~~
  கீதா,நன்றிங்க!
  ~~
  வானதி..நதி..நதி../மறுபுறம் ப்ரெட் தீஞ்சு போய் இருந்திச்சு??? சரியான விடையா??? / நோ..சம்பந்தமே இல்லாத விடை. :)
  மொத்தமா நாலு ஸ்பூன் நெய்தான் வானதி..ரொம்பவெல்லாம் யூஸ் பண்ணவேணாம்..செஞ்சு பாருங்க.
  ~~
  ஓகே..கீப் கெஸ்ஸிங்..இன்னும் சில மணி நேரம் கழித்து வரேன். அனைவருக்கும் நன்றி!

  ReplyDelete
 8. delicious halwa and enjoyed the write up too. it was so lovely mahi.

  ReplyDelete
 9. எனக்குக் 'கண்' கொஞ்சம் மங்கலாகத் தெரிகிறது மகி. ;)

  ஆனாலும் முதல் பார்வையிலேயே தெரிந்தது. ;)

  ReplyDelete
 10. Cardamom powder pannala correct aa?

  ReplyDelete
 11. வேணி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
  நீங்க பார்த்தவுடனே கண்டுபிடிச்சுடுவீங்கன்னு தெரியுமே இமா! :) என்னது? /எனக்குக் 'கண்' கொஞ்சம் மங்கலாகத் தெரிகிறது மகி. ;) /???? சந்தனா சொன்னது நிஜம்தான் அப்போ!! வயசாகிட்டா, லேப்டாப் பாக்கும்போது கண்ணாடி போட்டுக்கணும் இமா! ;);)
  பிரியா, ரெண்டாவது கெஸ்ல கரெக்ட்டா கண்டு பிடிச்சுட்டீங்க! ஆமாம்,ஏலக்காயை பொடித்து போடறதுக்கு பதிலா நெய்ல 'பொறித்து' போட்டுட்டேன். :)

  ReplyDelete
 12. ஏலக்கா பொடிச்சுப் போடாததெல்லாம் ஒரு தப்புன்னா?? அப்ப நான் பண்ணுறதெல்லாம்?? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

  அண்ணாத்தையால வாய் திறந்து பதில் சொல்லமுடியும் போதே தெரியுது.. அல்வா நல்லா வந்திருக்குன்னு :))))

  ReplyDelete
 13. /ஏலக்கா பொடிச்சுப் போடாததெல்லாம் ஒரு தப்புன்னா??/ என் சமையலுக்கு பர்ஸ்ட் கிரிட்டிக் நானேதான்..பலமுறை நான் சமைக்கறது எனக்கு புடிக்காது..ஆனா இவரு நல்லாருக்குன்னு சொல்லுவாரு.

  /அண்ணாத்தையால வாய் திறந்து பதில் சொல்லமுடியும் போதே தெரியுது.. அல்வா நல்லா வந்திருக்குன்னு :))))/ஆமாம்..அதுக்கப்புரம்தானே தைரியமா நானே சாப்ட்டேன். :))))

  ReplyDelete
 14. நல்ல இருக்கு மகி

  நானும் அதில் டிப்ஸில் போட்னும் என்று இருதேன்,. டயபட்டீஸ் இருபப்வர்கள் இது போல் ஆனால் நெயில் பொரிக்க கூடாது , பிரெட் டோஸடரில் டோஸ்ட் செய்யனும், என்றூ சொல்லனும்.

  ReplyDelete
 15. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜலீலாக்கா!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails