Thursday, May 20, 2010

என் வீட்டுத் தோட்டத்தில்..

வீட்டில் கொஞ்சம் செடிகள் வளர்க்க வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆசை.. இப்ப கொஞ்சூண்டு இடம் கிடைத்திருக்கு..அதிலே என் கைவண்ணத்தை காட்ட ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.

இப்படி இருந்த இடத்தை..

கொத்தி,கிளறி அகப்பட்ட கற்கள்,ஆணி,சிமென்ட் கட்டி, நிறைய வேர்கள் இப்படி எல்லாவற்றையும் அகற்றி..
ஒரு மூட்டை கம்போஸ்ட் வாங்கிவந்து கொட்டி..

உரம் ஒரு பேக்கட் கொட்டி கலந்து விட்டு..

தண்ணீர் விட்டு ஒரு நாள் ஊற விட்டேன்..வெந்தயக்கீரை,மிளகாய்,கொத்துமல்லி எல்லாம் முளைக்க வைக்கலாம் என்ற ஆர்வக் கோளாறில்..

கொத்துமல்லியை ரோலிங் பின்னால் நுணுக்கி,வெந்தயத்தை முதல் நாளிரவே ஊறவைத்து..

ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் நர்சரியில் இருந்து வாங்கி வந்த செடிகளை மண்ணில் நட்டுவிட்டு..அந்த பிளாஸ்டிக் கண்டெய்னரில் கொஞ்சம் மண் நிரப்பி..

வெந்தயம்,மிளகாய், கொத்துமல்லி விதைகளைப் போட்டிருக்கிறேன்..


இது என் முதல் முயற்சி..அம்மா வீட்டில் செடிகள் வளர்த்த அனுபவம் கொஞ்சம் இருந்தபோதும்,நம் ஊருக்கும்,இங்கேயும் பல வித்யாசங்கள்..என்னவருக்கு வாழ்க்கையில் இதுவரை செடிகள் வளர்த்த அனுபவமே இல்லையாம். ஒரு எக்ஸ்பர்ட்டிடம் அட்வைஸ் (ப்ரீ அட்வைஸ்தான்.. :) ) கேட்டு நானாக இதைத் தொடங்கியிருக்கிறேன். இதனைப் படிக்கும் நண்பர்கள்/நண்பிகள் தங்களுக்குத் தெரிந்த டிப்ஸ்-ஐத் தாரளமாக சொல்லுங்க..

அவ்வப்பொழுது என் வீட்டுத் தோட்டத்தில் என்னென்ன வளர்ந்திருக்கு என்று பகிர்ந்துகொள்கிறேன். (அதாவது கான்ஸ்டன்ட்டா அப்பப்ப மொக்கை போடுவேன் என்று எச்சரிக்கிறேன். :) )

21 comments:

 1. தோட்டம் ஐடியா சூப்பர்.முதல் படத்தில் உள்ள செடியும்,பூவும் நிஜமா அல்லது செயற்கை செடியா?அதில் உள்ள பூ அழகா இருக்கு.

  ReplyDelete
 2. சூப்பர் ஜடியா மகி

  ReplyDelete
 3. அம்மு,அது நிஜ செடிங்கதான்ப்பா..பாத்தா பிளாஸ்டிக் மாதிரி தெரியுதா? :))

  தமிழ்குடும்பம் டீம், நன்றிங்க! வெகு நாள் கழித்து ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு..அதான் யூஸ் பண்ணிட்டு இருக்கேன். :)

  ReplyDelete
 4. தங்களுடைய தோட்டம் அழகாக வளர வாழ்த்துகள்....நானும் இங்கே ப்ரோக்கோலி, தக்காளி, புதினா, கொத்தமல்லி, வெந்தயகீரை எல்லாம் போட்டு இருக்கின்றேன்...நன்றி

  ReplyDelete
 5. அருமை...அருமை...வாழ்த்துகள்!

  ReplyDelete
 6. Hi,
  All the best for your gardening...The flowers showen in first pic is beautiful and attrative.

  Keep gardening.....:-)))

  ReplyDelete
 7. hi magi,

  first time here,very interesting blog,nice gardening!

  ReplyDelete
 8. //கொத்துமல்லியை ரோலிங் பின்னால் நுணுக்கி, வெந்தயத்தை முதல் நாளிரவே ஊறவைத்து..// வரமிளகாயை இரண்டாய் நாலாய்க் கீறித் தாளித்து, வெங்காயத்தை வதக்கி அரைத்து எடுத்தால் சுவையான சட்னி தயார். ;)

  செடிகள் வாழ்க வளமுடன். ;)

  ReplyDelete
 9. நல்ல முயற்சி தொடருங்கள்,கொஞ்சம் பிஸி.

  ReplyDelete
 10. எனக்கும் தோட்டம் என்றால் உயிர்,ஆனா அதற்கு இப்போ வாய்ப்பில்லை.பச்சை மிளகாய்,கத்திரிக்காய்,காலிபிளவர்,கேரட்,முள்ளங்கி போடலாம்...வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 11. மகி, நல்லா இருக்கு. எனக்கும் தோட்டம் என்றால் பிடிக்கும். ஆனால் இங்கே முயல்கள் அதிகம். ஸ்ட்ராபெரிஸ் எல்லாவற்றையும் சாப்பிட்டு விடும் ( முயல்கள் சாப்பிட்டு மீதி எங்களுக்கு.) . போன வருடம் பார்ஸ்லி போட்டேன். நல்லா வந்திச்சு. இந்த வருடம் இனிமேல் தான் போடணும். மின்ட் செடி இருக்கு. தக்காளி போட்டிருக்கு.

  vary cute flowers.

  ReplyDelete
 12. உங்கள் வீட்டின் தோட்ட வளர்ச்சியை அவ்வப்பொழுது பகிர்ந்து கொள்ளுங்கள்.தோட்டம் செழிக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. nice work mahi. keep doing....all the best for great gardening

  ReplyDelete
 14. ஆஹா. நல்ல முயற்சி, வளர்க செடிகள். குளிர்ச்சியான க்ளைமேட் என்றால் தண்ணீர் அதிகம் ஊற்றவேண்டாம். செடிகள் அழுகிப்போகலாம்.

  ReplyDelete
 15. ////கொத்துமல்லியை ரோலிங் பின்னால் நுணுக்கி, வெந்தயத்தை முதல் நாளிரவே ஊறவைத்து..// வரமிளகாயை இரண்டாய் நாலாய்க் கீறித் தாளித்து, வெங்காயத்தை வதக்கி அரைத்து எடுத்தால் சுவையான சட்னி தயார். ;)

  செடிகள் வாழ்க வளமுடன். ;)//

  சிரிப்பு தாங்க முடியல இமா.. ஹாஹ்ஹாஹ்ஹா...

  ReplyDelete
 16. மஹி.. கடைசி படத்துல இருக்கற மாதிரி விட்டிருக்கீங்களா? விதைகளை மண் மூடி இருக்கு தானே?

  முளைச்சுதா இல்லையான்னு கண்டிப்பா சொல்லிடுங்க :)

  ReplyDelete
 17. ~~ கீதா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! இங்கே நர்சரில அதிகமா காய் செடிகள் கிடைக்கலை எனக்கு.
  ~~யாதவன்,சுமதி, பிரேமா..நல்வரவு! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
  ~~இமா,கர்..ர்ர் x 1001
  சட்னி வேணும்னா இன்னும் சில வாரங்கள் வெயிட் பண்ணுங்க..அப்புறம் நீங்க சொன்ன மெதட்படியே சட்னி அரைச்சு அனுப்பறேன். என் செடிகள்: வாழ்த்துக்கு நன்றி இமா டீச்சர்!! :) :)
  ~~ஆசியாக்கா,நிதானமா வாங்க..வேலைகளுக்கு நடுவிலும் பின்னூட்டம் தந்ததுக்கு நன்றி!
  ~~மேனகா, கேரட் மற்ற காய்கறி எல்லாம் மார்சல விதை போட்டு முளைக்க வைத்திருந்தா சரியா இருந்திருக்கும்.இப்ப சம்மர் ஆரம்பிச்சுடுச்சு...அதான் எல்லாம் நாற்றா வாங்கிட்டேன்..காய் செடிகள் இங்கே கிடைக்கலை..மோர் ஓவர், இனி இடமும் இல்லை. :) உங்க வாழ்த்துக்கு நன்றிமேனகா!
  ~~வானதி, இங்கேயும் முயல்கள் இருக்குன்னுதான் நினைக்கிறேன்..ஆனா வீட்டுக்கு பக்கத்துல பார்க்கலை. முயல் சாப்ட்டது போக மீதி உங்களுக்கா? ஹா..ஹா!!!
  ~~ஸாதிகா அக்கா,வேணி..வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
  ~~கவுண்டரே, ஆர்வக் கோளாறுல ஒரு வாரம் டெய்லி தண்ணி ஊத்திட்டு இருந்தேன்..அப்புறம்தான் ஞானோதயம் வந்து அளவா தண்ணி ஊத்த ஆரம்பிச்சிருக்கேன்..வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க!
  ~~சந்தனா,//சிரிப்பு தாங்க முடியல இமா.. ஹாஹ்ஹாஹ்ஹா... // //கடைசி படத்துல இருக்கற மாதிரி விட்டிருக்கீங்களா? விதைகளை மண் மூடி இருக்கு தானே?//கர்..ர்ர்x10001
  பார்த்து..பார்த்து!! சிரிச்சு பல்லு சுளுக்கிக்கப் போகுது!
  விதைகளை மண் மூடிதான் இருக்கு...அடடா,எப்படி எல்லாம் சந்தேகம் வருது பாருங்க! எல்போர்டுங்கறது சரியாத்தான் இருக்கு! :))))

  ReplyDelete
 18. Great dear..My wishes..keep us posted about your garden!

  ReplyDelete
 19. வாழ்த்துக்கு நன்றி நிது! கட்டாயமா கார்டன் செக்ஷனை அப்பப்போ அப்டேட் பண்ணுவேன். :)

  ReplyDelete
 20. வெந்தயம் 3,4 நாட்களில் முளைத்து விடும். கொத்தமல்லி 1 வாரமாகும்.ஊரிலெல்லாம் வைக்கோலால் தனியா பாத்தியை மேலாக மூடி வைப்போம். ஈரப்பதம் நிறைய வேண்டும்.இது மகியுடைய கார்டன். நீ
  சொன்நபடியெல்லாம் கேட்டு செடிகள் சமத்தாக வளர்ந்து உன்னுடைய ப்லாகை அலங்கரித்து வலம் வரும்
  என்று ஆசீர்வாதம் செய்தேனென்று சொல்லு. சுறு சுறுப்பாகிவிடும்.எனக்கு அது ஒன்று
  தான் தெறியும்.

  ReplyDelete
 21. nalla eruku idea valthukal

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails