Wednesday, June 30, 2010

ரசித்து ருசித்தவை-1

இன்று மற்ற வலைப்பூக்களிலிருந்து நான் ரசித்து சமைத்து,ருசித்த குறிப்புகளை பகிர்ந்துகொள்கிறேன். வானதி,ஆசியாக்கா,மேனகா,கீதா இந்த சுவையான குறிப்புகளை பகிர்ந்ததற்கு நன்றி!!

இவை எல்லாம் இப்பொழுது அடிக்கடி எங்க வீட்டு சமையலில் இடம் பிடிப்பவை..குறிப்பாக ஆசியாக்காவின் பீன்ஸ் பொரியலும், வானதியின் வாழைக்காய்-கத்தரிக்காய் வறையும் என் கணவருக்கு மிகப் பிடிக்கும்.

வானதியின் முட்டைசொதி


வாழைக்காய்கத்தரிகாய் வறை

குஸ்-குஸ் உப்மா

ஆசியாக்காவின் பீன்ஸ்பொரியல்

அவரது வறுத்தரைத்த பூண்டுகுழம்பும் செய்திருக்கேன்..புகைப்படம் எடுக்கவில்லை..அப்புறம் எம்டி சால்னா ஏற்கனவே தனிபதிவு போட்டுட்டேன்.:)

மேனகாவின் கத்தரிக்காய் சாதம்

கீதாவின் பார்லி இட்லி

கீதாவின் அவசரசாம்பாரும் செய்து ருசித்திருக்கேன்,புகைப்படம் எடுக்கலை..

சமைக்கும் முறை,கைப்பக்குவம் இதெல்லாம் ஆளுக்கு ஆள் மாறுபடும்..அப்படி மற்றவர்களின் சமையல் குறிப்புகளை சமைத்து ருசிக்கையில் ஒரு மகிழ்ச்சி..இந்த குறிப்புகளைத் தந்தவர்களும் சந்தோஷப்படுவார்கள்..அதற்காக இந்தப் பதிவு! :)

12 comments:

  1. மகி ரொம்ப சந்தோஷமா இருக்கு....என் குறிப்பையும்,மற்றவர்களின் குறிப்பையும் செய்தது மட்டுமில்லாமல் புகைப்படமும் போட்டு சந்தோஷபடுத்திட்டீங்க...மிக்க நன்றிப்பா!!

    ReplyDelete
  2. மகி ரொம்ப சந்தோசம் ....எல்லா குறிப்புகளும் அருமை...நானும் ஆசியா அக்காவிம் எம்டி சால்னா செய்யவேண்டும் என்று தான் நினைத்து கொண்டு இருக்கின்றேன்...புகைபடங்கள் எல்லாம் கலக்கல்...பார்லி இட்லியினை செய்து பார்த்து புகைபடமும் எடுத்து போஸ்ட் செய்ததற்கு மிகவும் மகிழ்ச்சி...

    ReplyDelete
  3. Wat a yummy recipes,well done...All r yummy...luks fantastic!

    ReplyDelete
  4. மகி, அசத்திட்டீங்கள். படங்கள் எல்லாமே அருமை. ஆசியா அக்காவின் பீன்ஸ் பொரியல் பார்க்கவே நல்லா இருக்கு. செய்து பார்த்திட வேண்டியது தான்.
    மேனகாவின் கத்தரிக்காய் சாதம் சூப்பர். இந்த வாரம் ட்ரை பண்ண வேண்டும்.

    கீதாவின் ஒரு சில ரெசிப்பிகள் செய்து பார்த்திருக்கேன். இதையும் விரைவில் செய்து பார்க்கணும்.

    நல்ல பொறுமையா படங்கள், அதற்கான விளக்கங்கள் சூப்பர்.

    முட்டைச் சொதி எங்கள் வீட்டிலும் செம ஹிட். என் பிள்ளைகளின் விருப்பமான உணவு.

    நன்றி, மகி.

    ReplyDelete
  5. excellent recipes...must be delicious...beautiful pictures

    ReplyDelete
  6. நீங்கள் பகிர்ந்த அனைத்து குறிப்பும் அருமை.நானும் மற்ற எல்லாவற்றையும் செய்து பார்க்க வேண்டும்.அசத்தல்.

    ReplyDelete
  7. மஹி.. இந்த வாட்டி ஒரு வாரம் விடுமுறைல நிறைய பண்ணிப் பாக்கப் போறன்.. நன்றி பகிர்ந்ததற்கு..

    ReplyDelete
  8. ஆனி அதிகம் இருப்பதால் பிறகு முழு தெம்புடன் வருகிறேன்


    ################
    உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
    http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

    அன்புடன் > ஜெய்லானி <
    ################

    ReplyDelete
  9. மேனகா,கீதா,வானதி,ப்ரேமா,ஆசியாக்கா,சந்தனா,வேணி அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி!

    ஜெய் அண்ணா,சொன்னமாதிரியே விருது குடுத்துட்டீங்க!:))) மிக்க நன்றி!!

    உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது கட்டாயம் வாங்க,நன்றி!

    ReplyDelete
  10. நீங்க சொன்னா நிச்சயம் அந்தச் சமையல் எல்லாம் நல்லாத்தான் இருக்கும் மகி. அவங்களுக்கும் என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  11. பதிவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக பார்த்ததை சமைத்து பதிவும் போட்ட உங்கள் நல்ல மனதிற்கு ஒரு ஜே.இதனை எல்லோரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  12. இமா,/நீங்க சொன்னா நிச்சயம் அந்தச் சமையல் எல்லாம் நல்லாத்தான் இருக்கும் மகி/ இப்படி இமயமலையையே என் தலைமேலே வச்சுட்டீங்களே!!:))))) நன்றி,நன்றி!

    ஸாதிகாக்கா, ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு நன்றி! உங்கள் கருத்தைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails