Tuesday, July 13, 2010

ஏ குருவி!!

இங்கே வீட்டைச் சுற்றிலும் நிறைய மரங்கள்.கிட்டத்தட்ட காட்டுக்குள் இருப்பது மாதிரிதான். அவ்வப்பொழுது, சின்னசின்ன குருவிகள் கீச்-கீச் என்று கத்தியபடி அருகில் இருக்கும் மரங்களில் அமர்ந்திருக்கும்..சிட்டுகுருவி போல சுறுசுறுப்பு என்று சொல்வது முற்றிலும் சரியே..இந்தக் குருவிகள் சிட்டுக்குருவிகளில்லை,ஆனால் இவையும் ஒரு வினாடி ஒரு இடத்தில் இருக்காது.படபடவென்று இறக்கைகளை அடித்தபடி அங்குமிங்கும் பறந்துகொண்டேதான் இருக்கும்.மேற்கண்ட புகைப்படத்திலிருப்பவர் எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் குருவியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.(எல்லாக் குருவிகளும் ஒரேமாதிரியாய் இருக்கே,எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது? :))

ஒருநாள் மாலை நேரம், பக்கத்து வீட்டைக் கடக்கும் சமயம் குருவிகள் சத்தமாக இருந்தது..சில நிமிஷங்களில் திரும்பி வரும்போதும் அதே சத்தம்..இதே போல் ரெண்டு மூன்று முறை கவனித்தபின்னர், அப்படியே கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தால்..ஒரு ஆச்சர்யம் காத்துக்கொண்டிருந்தது.

இது ஒரு முற்பகல் நேரம்..இவர் வீடு(கூடு) கட்ட கட்டுமானப் பொருட்கள் சேகரித்துக்கொண்டிருந்த வேளை..

பொறுமையாய் சில போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தார்..அதன்பின்னர் 'எத்தனை போட்டோதான் எடுப்பே?' என்பது போல ஒரு லுக் விட்டுட்டு பறந்துவிட்டார்.

பறந்து,பறந்து எங்கு சென்றார் குருவியார்? அவர் கட்டிய கூடுகள்,அவரது குழந்தைகளையெல்லாம் பார்க்க ஆவலா? இங்கே க்ளிக் பண்ணுங்க!

18 comments:

  1. Mahi, azhagana kavithai mathiri iruku ovvoru photovum, unga ezhuthum :). Romba rasichen. Naan visarichenu sollunga antha azhagu family kita :)

    ReplyDelete
  2. roombha nalla ezhuthi irukkengha..arumayana pugai padankal..

    ReplyDelete
  3. ஊர்க்குருவி அழகாக போஸ் கொடுக்கிறார் மகி.

    ReplyDelete
  4. lovely write up, beautiful pictures

    ReplyDelete
  5. குருவி...சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்பரூஊஊஊஊ/

    ReplyDelete
  6. For fenugreek sprouts chutney: Since i have added tamarind and red chilis, this chutney had a good taste without that much bitterness

    ReplyDelete
  7. மகி...அழகாக இருக்கின்றது...எங்க வீட்டில் கதவினை திறக்கும் இடத்தில் உள்ள ஒரு பெரிய செடியில் குருவி கூடு கட்டி முட்டை இட்டு இரண்டு குட்டிகளும் பிறந்து அது வளர்ந்து...சுமார் 1 மாதத்திற்கு இதே தான் அக்ஷ்தாவிற்கு பொழப்பாக எடுத்து கொண்டு அவளுடன் நானும் காலை, மதியம், சாயங்காலம் என்று பார்க்கவேண்டும்...இல்லை என்றால் என்னை ஒரு வழி பன்னிடுவா...இப்ப பறவை கூட்டினை கலைத்துவிட்டு பறந்து போச்சு என்று நினைத்தால், இப்ப பக்கத்தில் உள்ள இன்னொரு மரத்தில் கட்ட ஆரம்பித்துவிட்டது....

    ReplyDelete
  8. mahima

    am the first.................

    very nice...

    ReplyDelete
  9. எங்கட சரண் பண்ணுற வேலையெல்லாம் மஹியும் பண்ணுறா மாதிரி இருக்கே? :)) நல்லா ஜூம் பண்ணி எடுத்திருக்கீங்க மஹி.. (யாராச்சும் அப்பாவிக பாத்து மேல ஏறிப் போயி எடுத்ததுன்னு நினைச்சுக்கப் போறாங்க :)) )

    ReplyDelete
  10. @மஞ்சு~~~>கண்டிப்பா சொல்லிடறேன் மஞ்சு!:) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    @மேனகா~~~>நன்றி மேனகா!

    @நித்து~~~>வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி!

    @ப்ரேமா~~~>நன்றிங்க ப்ரேமா!

    @அதிரா~~~>ஊர்க்குருவியா? பேர் நல்லாருக்குங்க. :) அழகா போஸ் குடுக்கிறார்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    @வானதி~~~>நன்றி வானதி!

    @வேணி~~~>நன்றிங்க வேணி! வெந்தயசட்னி விளக்கத்துக்கும் நன்றி!

    @ஜெய் அண்ணா~~~>வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

    @கீதா~~~>நல்ல பொழுதுபோக்கா இருந்திருக்கும் இல்ல கீதா? வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.

    @தெய்வசுகந்தி~~~>வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சுகந்திக்கா!

    @சிவா~~~>நன்றிங்க!

    @சந்தனா,பாதி போட்டோ மரத்துமேல ஏறிதான் எடுத்திருக்கேன்.கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
    உங்க சரண் இப்பவே கேமராவைக் கையிலெடுத்துட்டாரா? ரொம்ப ஸ்பீடா வளரறாரோ? :))))

    ReplyDelete
  11. Bumped into your blog from Geetha Achal's. We have the same bird's nest too. They are house martins. There was tons of bird poo on our patio. Other than that we enjoyed the birds too. Great blog and keep up the good work.

    ReplyDelete
  12. மஹேஸ்~~~>முதல் வருகைக்கும்,தகவலுக்கு நன்றிங்க!
    உங்க தோட்டத்தைப் பார்த்தேன்,பூக்கள் அழகழகா இருக்கு.:)

    ReplyDelete
  13. Thanks for the comments on my blog, Mahi. Me too enjoying your blog, such nice recipes. Btw, we removed the bird's nest last week. The baby birds moved out a month ago.

    ReplyDelete
  14. ஓ..கூடுகளை எடுத்துட்டீங்களா மஹேஸ்? இங்கே கூரை மேலே கட்டிருப்பதால அந்த கூடுகள் அப்படியேதான் இருக்கு..அப்பப்ப ரெனொவேட் பண்ணிக்கிறாங்க குருவிகள்!

    நன்றிங்க!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails