சுகந்திக்கா சந்தகை போஸ்டிங் போட்டதில இருந்தே சந்தகை ஞாபகம் வந்துவிட்டது..வீகெண்டில் இடியப்பம் செய்திருந்தேன். அப்பவே என்னவருக்கும் சந்தகை நினைவு வந்துவிட்டது. "எங்கம்மா அடிக்கடி செய்வாங்க..நாங்கள்லாம்(இவர்&2 தம்பிகள்)தான் சந்தகை மெஷின்ல சந்தகை பிழிஞ்சு தருவோம்"னு மலரும் நினைவுகளுக்குப் போய்விட்டார்.
இடியாப்பமும் கிட்டத்தட்ட அப்படியேதானே இருக்கு,அப்புறம் என்ன?ன்னு கேட்டா,"இடியப்பம் குட்டிக்குட்டியா இருக்கு..சந்தகை நீள-நீளமா புழு(!!?) மாதிரியே இருக்கும்..தேங்காயும்,சர்க்கரையும் போட்டு சாப்பிடுவோம்..லெமன் சேவை/தேங்காய்சேவை/தக்காளிசேவையா தாளிச்சு தருவாங்க.."ன்னு விளக்கம். சரி,நாமும் ஒரு நாள் செய்துபார்ப்போம்னு ஆரம்பித்தேன்.
11/2 டம்ளர் புழுங்கல்அரிசியை 2மணிநேரம் ஊறவைச்சு, நைஸா மாவா அரைச்சு எடுத்து,இட்லிதட்டுகளில் ஊற்றி வேகவைத்தேன்.

சந்தகை பிழிய என்று ஸ்பெஷலா ஒரு மெஷின் இருக்கு(படம்
இங்கே&இங்கே).அதிலே பிழிவது கொஞ்சம் ஈஸியா இருக்கும்.ஆனால் என்னிடம் இருப்பதோ இந்த குட்டியூண்டு முறுக்கு அச்சுதான்..

இட்லி வெந்தாச்சு..எடுத்து முறுக்கு அச்சில் போட்டு பிழிய ஆரம்பிச்சேன்..

என் மாமியார் புத்திசாலித்தனமா பசங்க வீட்டிலிருக்கையில் சந்தகை செய்திருக்காங்க..நான் இவர் ஆபீஸ்ல இருந்து வரும் முன்பே இந்த வேலைய ஆரம்பிச்சு ஒரு அனுபவப்பாடம் கத்துகிட்டேன்.முதல்முறை சூடா இருந்த இட்லிய கொஞ்சம் கஷ்டப்பட்டு பிழியமுடிஞ்சுது.

அடுத்த ஈடு போட்டதும்தான் வம்பு ஆரம்பம்!இட்லி ஆறிப்போனா கல்லு மாதிரியே ஆகிடும்..இந்த முறை அச்சிலே இட்லிய திணிச்சாச்சு.ஆனா அசைக்ககூட முடியல! :-| :-|
எப்படியோ ஒரு வழியா பிழிஞ்சு முடிச்சேன்.அதுக்கும் மேல தெம்பு இல்ல. மீதிஇருந்த மாவை, கடாய்ல ஒரு ஸ்பூன் எண்ணெய் காயவச்சு, கொழுக்கட்டைக்கு வதக்கற மாதிரி வதக்கி, இட்லிதட்டிலே பிழிஞ்சு வேகவைத்தேன்.அது சுலபமா இருந்தது.

சந்தகை ரெடியாகிவிட்டது(அப்பாடீ..பெண்டு நிமிர்ந்துபோச்சு போங்க:))..இதிலே இருந்து நான் கண்டுபிடிச்ச உண்மை,
சரியான உபகரணங்கள் இல்லாம சந்தகை செய்கையில் மாவை வேகவச்சு பிழியறத விட....பிழிஞ்சு வேக வைப்பதுதான் ஈஸி!!! :)))))
இடியப்பத்துக்கும்,சந்தகைக்கும் கண்டிப்பா வித்யாசம் உண்டு..எங்க வீடுகளில் பச்சரிசி அவ்வளவா சாப்பிட மாட்டோம். இடியப்பத்துக்கு மாதிரியே தேங்காய்ப்பால் ஊற்றி சாப்பிடலாம்..அல்லது தேங்காய்த்துருவல்,சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.தாளிச்சும் சாப்பிடலாம். இந்த முறை எலுமிச்சம்பழம் பிழிஞ்சு லெமன் சேவையா தாளிச்சுட்டேன்.

ஆக மொத்தம் இனி எங்க வீட்டில் அடிக்கடி சந்தகை உண்டு..சாப்பிட வரீங்களா?
நன்றி:
என் சமையலறையில்-தெய்வசுகந்தி&
கிருஷ்ணவேணி'ஸ் கிச்சன்-கிருஷ்ணவேணி