
தேவையான பொருட்கள்
ஸ்வீட்டன்ட் கோக்கனட் ப்ளேக்ஸ் - 14 Oz பேக்கட் ஒன்று ( 396 கிராம்)
ஸ்வீட்டன்ட் கண்டென்ஸ்ட் மில்க் (அ) மில்க்மெய்ட் - 14 Oz கேன் ஒன்று ( 396 கிராம்)
வெண்ணெய் - 1 ஸ்டிக் ( 115 கிராம்)
முட்டை - 3

செய்முறை
முட்டையையும்,வெண்ணையையும் மூன்று மணி நேரங்கள் முன்பாக ப்ரிட்ஜ்-லிருந்து வெளியே எடுத்து வைக்கவும்.
முட்டைகளை உடைத்து வெள்ளைக்கருவை மட்டும் தனியாகப் பிரிக்கவும்.

எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு வெள்ளைக்கருக்களை நன்றாகக் கலக்கவும்.

வெள்ளைக்கரு கனமில்லாமல் சோப்புநுரை போல வரும் வரை கலந்து வைக்கவும்.

வெண்ணெயை பீட்டரால் கலக்கவும்.

வெண்ணெயுடன் இரண்டு ஸ்பூன் கலர் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும். ( சர்க்கரை சேர்ப்பது கட்டாயமில்லை, கலர்புல்லாக இருக்குமே என்று சேர்த்திருக்கிறேன்..:) )

கண்டென்ஸ்ட் மில்க்-ஐ வெண்ணெயுடன் சேர்க்கவும்.

விஸ்க் மூலம் மெதுவாக கலக்கவும்.

கோக்கனட் ப்ளேக்ஸ்-ஐயும் சேர்த்து விஸ்க்கால் கலக்கவும்.

ஏற்கனவே கலக்கி வைத்திருக்கும் முட்டையின் வெள்ளைக்கருவையும் சேர்த்து மெதுவாக கலந்துவிடவும்.


வெண்ணெய் தடவிய கப் கேக் பானில் மக்ரூன் கலவையை வைக்கவும். ( ஒரொரு கப்பிலும் பாதியளவு வரும்வரை வைத்தால் போதும்)

350 F ப்ரீஹீட் செய்த அவன் - இல் வைத்து முப்பது நிமிடங்கள் பேக் செய்யவும்.
பின்னர் வெளியே எடுத்து இரண்டு மணி நேரம் ஆற வைத்து, மக்ரூன்களை பானிலிருந்து எடுக்கவும்.

சுவையான மக்ரூன் ரெடி!
நேரமிருப்பவர்கள் இங்கேயும் சென்று பாருங்கள்.
யம்மி யம்மி..
ReplyDeleteஆஹா... எனக்கு ஒரு மக்ரூன் எடுத்துகிட்தேன்.. பார்த்தவுடன் சாப்பிடனும் போல் இருக்கு
ReplyDeleteமஹி சூப்பர் நானும் ஒன்னு எடுத்துகிட்டேன்
ReplyDeleteரொம்ப நல்லாயிருக்கு...
ReplyDeleteஇமா, சந்தனா, மேனகா, சாரு & ஃபாயிஜா தங்கள் அனைவரின் வருகைக்கும் நன்றி!:) :D :)
ReplyDelete