Wednesday, August 25, 2010

கொள்ளுப் பருப்பு

தேவையான பொருட்கள்
கொள்ளு-1/4கப்
சின்னவெங்காயம்-7
தக்காளி-2
பச்சைமிளகாய்-3(காரத்துக்கேற்ப)
தனியா-1ஸ்பூன்
சீரகம்-1ஸ்பூன்
கறிவேப்பிலை-சிறிது
உப்பு

செய்முறை
சின்னவெங்காயத்தை உரித்துக்கொள்ளவும்.தக்காளி,மிளகாயை நறுக்கவும்.

குக்கரில் உப்பு தவிர அனைத்துப்பொருட்களையும் சேர்த்து தேவையான நீர் சேர்த்து, 5 விசில்கள் வேகவைக்கவும்.
குக்கரில் ப்ரெஷர் அடங்கியதும் உப்பு சேர்த்து, நன்றாக கடையவும்.

ஆரோக்கியமான,சுவையான கொள்ளுப்பருப்பு தயார். சுடுசாதத்துடன் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

எங்க வீட்டுப்பக்கம் இது ரொம்ப சாதாரணமா அடிக்கடி செய்யும் ரெசிப்பி இது.இன்னும் தெரிந்துகொள்ள இங்கே வாங்க..

38 comments:

  1. Healthy dal..thanks for sharing..oru vazhiya kollu vangiyacha..

    ReplyDelete
  2. ஆஹா...வித்தியசமாக சத்தான உணவு...சூப்பர்ப் மகி...

    ReplyDelete
  3. kollu ennoda fav, romba nalla irukku Mahi, superb

    ReplyDelete
  4. Wow,nice recipe,sounds like an easy preparation too, really delicious Mahi!

    ReplyDelete
  5. நானும் கொள்ளு வாங்கணும் போல.அருமை.

    ReplyDelete
  6. நான் சாப்பிட வரேன். ;P

    ReplyDelete
  7. Ongolke blog supera irike. Rombo nalla recipe. Enakke rombo purikon. Looks spicy and delicious.
    You are welcome in my blogs.

    ReplyDelete
  8. I amke it the same way too but with out tomato .. will have to try it with tomato..yes surele it is the tastiest paruppu

    ReplyDelete
  9. இந்த கொள்ளு பருப்பை சாப்பிட்டுட்டு ஓடனுமா ..? இல்லை நடக்கனுமா..? எதுங்க் பெஸ்ட் ..!!

    ReplyDelete
  10. ஹா....ஹா......ஹா......ஹா..... வெங்காயத்தை உரிச்சி போடனும் சொல்லிட்டு அப்படியே போட்டிருக்கீங்க ( 2 வது படம் ) ..மேல உள்ள 11 பேரை நினைச்சா பாவமா இருக்கு ..ஹா..ஹா....ஹா...... ஹய்யோ..ஹய்யோ...அவ்வளவு சோம்பேறியா நீங்க மஹி......


    ((மாம்ஸுக்கு இன்னும் என்னஎன்னத்தை அப்படியே குடுக்குறீங்களோ மாம்ஸ் பாவம் ))

    ReplyDelete
  11. @@@ இமா--//

    நான் சாப்பிட வரேன். ;P //


    இமா மாமீ போகும் போது ( ஈனோ )ஒரு டைஜஸ்ட் டேப்ளட்டும் கொண்டு போங்க ...ஹி..ஹி...

    :-))

    ReplyDelete
  12. எப்பவும் எனக்கு முன்னால வரும் பூஸு இந்த தடவை தப்பிச்சிடுச்சே..!!

    ReplyDelete
  13. //மேல உள்ள 11 பேரை நினைச்சா பாவமா இருக்கு// க்ர்ர்ர்ர்ர் மருமகனே! பார்த்து, பத்திரம். அதிகம் சிரிச்சீங்க வாய் கோணலாயிடும் & தூக்கத்துல கண்ணும் தெரியாம போய்டும். ;)))

    //இமா மாமீ போகும் போது (ஈனோ )ஒரு டைஜஸ்ட் டேப்ளட்டும் கொண்டு போங்க ...ஹி..ஹி...// க்ர்ர்ர் நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் மருமகனே. நீங்க மட்டும் நிஜமாவே கிச்சன் பக்கம் போனீங்க.. நல்ல கவனிப்பு இருக்கும் உங்களுக்கு. ;))))

    ReplyDelete
  14. மகி வித்தியாசமான கடையலா இருக்கு..கொள்ளுபருப்பை இப்படியும் செய்யலாமாப்பா..செய்துபார்க்கிரேன்.னான் எப்போவும் சுண்டல் மாதிரி அவிக்க மட்டும்தான் செய்கிரேன்..நன்றி மகி.

    ReplyDelete
  15. wowww mahi super & healthy recipe...

    ReplyDelete
  16. ////இமா மாமீ போகும் போது (ஈனோ )ஒரு டைஜஸ்ட் டேப்ளட்டும் கொண்டு போங்க ...ஹி..ஹி...// க்ர்ர்ர் நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் மருமகனே.


    சாப்பாடு செரிக்கனுமில்லையா அதான் சொன்னேன்.. சில நேரம் தேங்காய உரிக்காம , உடைக்காம அப்படியே போட்டிருந்தா.. ..ஹி..ஹி.. :-)))

    // நீங்க மட்டும் நிஜமாவே கிச்சன் பக்கம் போனீங்க.. நல்ல கவனிப்பு இருக்கும் உங்களுக்கு. ;))))//


    ஹா...ஏன் இந்த கொல வெறி..கிச்சன்ல நா ரொம்ப நல்ல பிள்ள ,வாயை திறக்கவே மாட்டேன்...( யாரு அடி வாங்குறது )

    ReplyDelete
  17. //ஹா....ஹா......ஹா......ஹா..... வெங்காயத்தை உரிச்சி போடனும் சொல்லிட்டு அப்படியே போட்டிருக்கீங்க ( 2 வது படம் ) ..மேல உள்ள 11 பேரை நினைச்சா பாவமா இருக்கு ..ஹா..ஹா....ஹா...... ஹய்யோ..ஹய்யோ...அவ்வளவு சோம்பேறியா நீங்க மஹி......//நானும் பார்த்தேன்...ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சமைப்பாங்க...சில பேர் சட்னி செய்யும் பொழுது பச்சைமிளகாயில் கூட் மேல் காம்பு நீக்காமல் தான் செய்வாங்க...அது தான் டேஸ்ட் கொடுக்குமுனு சொல்லுவாங்க...அது மாதிரி தான் இது எல்லாம்...சகஜம் ஜெய்லானி...

    ReplyDelete
  18. I have a doubt.Pls clarify.Is soaking of kollu overnight needed or not?

    ReplyDelete
  19. சௌம்யா,கொள்ளை ஊறவைக்க வேண்டிய அவசியம் இல்லைங்க.ஊறவச்சு போட்டா சீக்கிரம் வெந்துடும்.இல்லைன்ன விசில் கொஞ்சம் அதிகமா விடணும்.

    எங்க வீட்டில கொள்ளு முளைகட்ட மட்டுமே ஊறவைப்போம்.கடையறதுக்கு அப்படியேதான் போடுவோம்.

    ReplyDelete
  20. ம்ம்.. ஊருக்கு போனப்ப இதய ஆச ஆசயா வாங்கிட்டு வந்து வச்சதோட போச்சு.. அப்பிடியே கெடக்கு.. இந்த வாட்டி (ஐ மீன் லாங் வீகெண்ட்) செஞ்சுடலாம்..

    ReplyDelete
  21. Hi Mahi,

    Unga samayal supero super!!Ippediye continue pannunga!!!neram kidaikumpodhu ennoda blog pakkam vaanga!!!

    Dr.Sameena@http://www.myeasytocookrecipes.blogspot.com

    ReplyDelete
  22. ஜெய்லானி,

    வெண்காயத்தை சுத்தத்திற்காக வெளித் தோலை மட்டும் எடுத்து விட்டு இப்படிப் போடுவாங்க. செபாம்மா சில சமயம் உள்ளி தோலோடேயே தட்டிப் போடுவாங்க. அப்படிப் போட்டால் சுவை என்பார்கள். சுத்தமாக இருந்தால் போதும் இல்லையா! //கொல வெறி// எல்லாம் இல்லை. ;)) ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரி வழக்கம் இருக்கும்.

    என் பையன் குழந்தையாக இருந்த போது எனக்கு வெண்காயம் உரித்துத் தர வந்தார் ஓர் நாள். முழுக்க உரித்து விட்டு அழுதார், உள்ளே ஒன்றையும் காணோமாம். ;D

    //கிச்சன்ல நா ரொம்ப நல்ல பிள்ள ,வாயை திறக்கவே மாட்டேன்...( யாரு அடி வாங்குறது )// பூரிக்கட்டை!! ;D ;D ;D

    ReplyDelete
  23. கொள்ளுப்பருப்புக் குறிப்பு நன்றாக இருக்கிறது. புகைப்படங்களும் அழகு.

    ReplyDelete
  24. Thanks for your lovely comment. My mother tongue is Bengali but my house is at Pondicherry thats why I can speak Tamil very well. My parents are staying over there and I am staying at Perth with my husband.

    ReplyDelete
  25. ஜெய் அதுக்கு ரெண்டு காரணம் இருக்கலாம். ஒன்று:அண்ணிக்கு, தண்ணிக்கு சமையல் கத்து கொடுக்கும் போது கண்ணுல தண்ணி வராம இருந்தாதானே அண்ணி சரியா கத்து கொடுத்தாங்கனு சொல்லுவாங்கோ:)

    இரண்டு: தந்தை பெரியார் சொன்ன ”வெங்காய” தத்துவத்தை நல்லா புரிஞ்சு வச்சு இருப்பாங்கோ!!!

    ReplyDelete
  26. மகி, நல்லா இருக்கு. மத்து அழகா இருக்கு. கொள்ளு எங்கே வாங்கினீங்க?
    இமா, உங்கள் மகன் பெரிய தத்துவஞானி தான். சிரிக்க வைக்கிறீங்க, இம்ஸ்.

    ReplyDelete
  27. //ஜெய் அதுக்கு ரெண்டு காரணம் இருக்கலாம். ஒன்று:அண்ணிக்கு, தண்ணிக்கு சமையல் கத்து கொடுக்கும் போது கண்ணுல தண்ணி வராம இருந்தாதானே அண்ணி சரியா கத்து கொடுத்தாங்கனு சொல்லுவாங்கோ//


    ஓக்கே...ஓக்கே..இது சரிதான் ....

    ReplyDelete
  28. //கிச்சன்ல நா ரொம்ப நல்ல பிள்ள ,வாயை திறக்கவே மாட்டேன்...( யாரு அடி வாங்குறது )// பூரிக்கட்டை!! ;D ;D ;D//

    ஹி..ஹி... அதேதான் ..

    ReplyDelete
  29. நித்து,கொள்ளு கிடைப்பது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு.ஒருவழியா வாங்கிட்டேன்.:)

    கீதா,நன்றிங்க!

    வேணி,நன்றிங்க!

    ராஜி,நன்றீங்க!

    ஆசியாக்கா,சீக்கிரமா வாங்கி செய்துபாருங்க.நன்றி!

    இமா,வாங்க சாப்பிடலாம்!:)

    ஊர்மி,நன்றிங்க!

    சாரு,செய்து பார்த்து சொல்லுங்க,நன்றி!

    ஸ்ரீவித்யா,மிக்க நன்றி!

    பவித்ரா,தக்காளி போட்டு செஞ்சு பாருங்க,நல்லா இருக்கும்.நன்றிப்பா!

    மேனகா,நன்றிங்க மேனகா!

    ReplyDelete
  30. /இந்த கொள்ளு பருப்பை சாப்பிட்டுட்டு ஓடனுமா ..? இல்லை நடக்கனுமா..? எதுங்க் பெஸ்ட் ..!!/கர்ர்ர்ர்ர்ர்ர்ர்!ஜெய்அண்ணா,இதை சாப்ட்டதும்,ரெண்டு றெக்கை முளைக்கும்.அப்பூடியே பறக்கலாம்!:)

    /வெங்காயத்தை உரிச்சி போடனும் சொல்லிட்டு அப்படியே போட்டிருக்கீங்க / ஹாஹ்..ஹா!என் மாமியார் என்கூட இல்லங்கற குறைய தீர்க்க நீங்க இருக்கீங்க!வெங்காயம் உரிக்காம போட்டதுக்கு ரீசன்..கீதா&இமாமாமியே சொல்லிட்டாங்க.

    /எப்பவும் எனக்கு முன்னால வரும் பூஸு இந்த தடவை தப்பிச்சிடுச்சே..!!/பூஸுஅனிவர்ஸரி பார்ட்டில பிஸியா இருக்காங்க போலிருக்கு.

    இமா,மிக்க மிக்க மிக்க நன்றி! என் சார்பா ஜெய் அண்ணாக்கு அழகா:) பதில் சொன்னதுக்கு.

    கொயினி,நான் கொள்ளு சுண்டல் பண்ணதில்ல.செஞ்சு பாக்கிறேன்.நன்றிங்க!

    அகிலா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    /சில நேரம் தேங்காய உரிக்காம , உடைக்காம அப்படியே போட்டிருந்தா.. ..ஹி..ஹி.. :-)))/உங்களுக்கு கர்ர்ர்ர்ர் சொல்லியே என் பல்லு கழண்டிரும் போலருக்கே!உங்க வீட்டு சமையல் நெனப்பு வந்திருச்சு போல இருக்கு.

    எனது சார்பாக விளக்கம் தந்ததுக்கு நன்றி கீதா!நன்றி இமா!

    சந்தனா,லாங் வீகெண்டுக்கு ட்ரிப் போகலையா? கொள்ளு ப்ராஜெக்ட்பண்ணப்போறீங்களா?:)

    முதல் வருகைக்கு நன்றிங்க சமீனா!உங்க ப்ளாக் பாத்தேன்.வீகெண்ட் முடிஞ்சதும் மறுபடி வரேன்.
    /Ippediye continue pannunga!/இதுக்கு மேல இம்ப்ரூவ் பண்ணவேணாமா?;)

    ReplyDelete
  31. இமா,வெங்காயம் உரித்தது A1-ஆ இல்ல A2-ஆ?:)

    மனோ மேடம்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ஊர்மி,பெங்காலியா இருந்தும் தமிழ் மேல உங்களுக்கு இருக்க ஆர்வத்துக்கு பாராட்டுக்கள்!நன்றிங்க!

    விஜி,நன்றி விஜி!

    ஹைஷ் அண்ணா,நல்வரவு! வெங்காயம் உங்களையும் இங்கே இழுத்துவந்துவிட்டதா?:)
    அண்ணி-தண்ணி சமையலெல்லாம் ஒரு காலத்துல..இப்பல்லாம் தண்ணி ரெம்ப பிஸி!இரண்டாவது தத்துவம் சூப்பருங்க!மிக்க நன்றி தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்.

    வானதி,மத்து கோவைல வாங்கியது.கொள்ளு இங்கே இண்டியன் ஸ்டோர்லதான் வாங்கினேன்.சில மாதங்களுக்கொருமுறை வருமாம்.நன்றி வானதி!

    ஜெய் அண்ணா,உங்க காமெடி சரவெடிக்கு நன்றி!வெங்காயத்துல ஆரம்பிச்சீங்க.பூரிக்கட்டைல முடிச்சிருக்கீங்க.ஹிஹி!

    ReplyDelete
  32. வித்தியாசமாக இருக்கே!

    ReplyDelete
  33. ஐ.. நம்ம ஊரு ஸ்பெஷல்...நான் இங்கயும் இது அடிக்கடி செய்வேன்... குறிப்பா விண்டர்ல...

    ReplyDelete
  34. தாளிக்க வேண்டாமா மகி

    ReplyDelete
  35. ஸாதிக்காக்கா,எங்க வீட்டுப்பக்கம் சர்வசாதாரணமா செய்வது இந்த கொள்ளுபருப்பு.:)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா!

    புவனா,இங்கே எனக்கு கொள்ளு கிடைப்பதே குதிரைக்கொம்புதான்.:) வெகு நாள் கழிச்சு கிடைச்சது.நன்றிங்க

    ஜலீலாக்கா,இது எல்லாவற்றையும் பச்சையாகவே போட்டு கடைவது.தாளித்துக் கொட்டுவதுன்னா,இந்த ரெசிப்பிய பாருங்க,http://mahikitchen.blogspot.com/2010/05/blog-post_23.html அதே மாதிரி தாளித்துக்கொட்டி கடையலாம்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails