Friday, September 3, 2010

தக்காளி தொக்கு

தேவையான பொருட்கள்
தக்காளி-4 (பெரியது)
வெங்காயம்-2(மீடியம் சைஸ்)
பச்சைமிளகாய்-2
மிளகாய்த்தூள்-1ஸ்பூன்(காரத்துக்கேற்ப)
கடுகு-1/2ஸ்பூன்
சீரகம்-1ஸ்பூன்
கறிவேப்பிலை-1 இணுக்கு
கொத்துமல்லிஇலை-சிறிது
மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
சர்க்கரை-1/2ஸ்பூன்
எண்ணெய்-3டேபிள்ஸ்பூன்
உப்பு

செய்முறை
வெங்காயம்,தக்காளி,மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

கடாயில் 2டேபிள்ஸ்பூன் எண்ணெய் காயவைத்து, கடுகு-சீரகம் தாளித்து,வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கி,லைட் ப்ரவுன் கலரானதும் தக்காளியைச் சேர்க்கவும்.

தக்காளி ஓரளவுக்கு வதங்கியதும் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து நன்றாக கிளறி, மூடி போட்டு குறைந்த தணலில் வேகவிடவும். (தண்ணீர் சேர்க்கக்கூடாது,தக்காளி விடும் தண்ணீரே போதும்.)

அவ்வப்பொழுது, மூடியைத்திறந்து தக்காளியைக் கிளறிவிடவும். நன்கு சுருண்டு வரும்போது மீதமிருக்கும் 1டேபிள்ஸ்பூன் எண்ணெயையும் ஊற்றி அடிபிடிக்காமல் கிளறிவிடவும்.


கலவை நன்றாக சுண்டி,எண்ணெய் மிதக்கும் பக்குவம் வந்ததும், சர்க்கரை,பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.நன்கு ஆறியதும் ஈரமில்லாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.

சுவையான தக்காளி தொக்கு தயார். இது பயணங்களுக்கு எடுத்துச் செல்ல ஏற்றது. 2 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். ப்ரிட்ஜில் ஒரு வாரம் வரை கூட வைக்கலாம். சப்பாத்தி,இட்லி,கலந்தசாத வகைகளுடன் சாப்பிடப் பொருத்தமாக இருக்கும்.

இரண்டாவது படம், அழகா இல்லாட்டாலும்(!) இங்கே போட்ட காரணம், தொக்கு எந்த அளவுக்கு சுண்டியிருக்கு என்று உங்களுக்கு ஒரு ஐடியா கிடைப்பதற்காகவே.(ஓக்கே,ஓக்கே,பல்லை கடிக்காதீங்க,கொஞ்சம் ஓவராதான் தெரியுது எனக்கே! நிறுத்திக்கறேன்:))

பி.கு./இது பயணங்களுக்கு எடுத்துச் செல்ல ஏற்றது/இதைப் படித்ததுமே உங்களுக்கு தெரிந்திருக்கும்.:) இங்கே இந்த வாரம் மூன்று நாட்கள் லீவ். நாங்களும் ஊர்சுற்றப்போறோம். சமையல் குறிப்பில்லாமல் வேறு பதிவு போட நினைத்தேன்,டைப் செய்ய நேரமில்லாத காரணத்தால்(!!?)...நீங்க இந்த வீகெண்டு தப்பிச்சீங்க,அடுத்த வாரம் வந்து மொக்கைய போட்டுருவமில்ல?ஹிஹிஹி!

27 comments:

  1. ஹை இன்னைக்கு முதல் வடை எனக்குதான்

    ReplyDelete
  2. //வெங்காயம்-2(மீடியம் சைஸ்)//

    இந்த மீடியம் மட்டும் எனக்கு புரியவே மாட்டேங்குது...எந்த ஊரில வெங்காயம் மீடியம் சைஸுல வருது. எந்த வெங்காயமாவது ஒரே சைஸு , ஹைட் வெயிட்ல வருதா ...

    சரி விடுங்க ....வெங்காயம் போடாம தொக்கு வருமாஆஆஆஆ....

    அப்பதானே அது தக்காளி தொக்கு .இல்லாட்டி வெங்காய தொக்காகிடுமேஏஏஏ ((ஆமாவா இல்லையா..? ))

    ReplyDelete
  3. //(தண்ணீர் சேர்க்கக்கூடாது,தக்காளி விடும் தண்ணீரே போதும்.)//

    நான் செய்ய போனா தக்காளி கண்ணீரே விடுதே ஏன்...ஹி..ஹி...

    ReplyDelete
  4. //சர்க்கரை,பொடியாக நறுக்கிய மல்லி இலை //

    இதென்ன அநியாயமா இருக்கு..தேவையான லிஸ்ட்டுல சர்க்கரையே இல்லை இப்ப மட்டும் எங்கிருந்து வந்துச்சி....(( ஓ அப்ப இத பத்தி மாம்ஸு கிட்டதான் கேக்கனும் ))

    ReplyDelete
  5. //2 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். ப்ரிட்ஜில் ஒரு வாரம் வரை கூட வைக்கலாம்//

    பிரிட்ஜ்ல் ஒரு வாரம் இருப்பது இருக்கட்டும் . அதுக்கு ஃபிரிட்ஜ் ஆன்ல அவசியம் இருக்கனுமா..? இல்ல ஆஃப் பண்னி இருந்தால் போதுமா..!!!

    ReplyDelete
  6. //இரண்டாவது படம், அழகா இல்லாட்டாலும்(!) இங்கே போட்ட காரணம், தொக்கு எந்த அளவுக்கு சுண்டியிருக்கு என்று உங்களுக்கு ஒரு ஐடியா கிடைப்பதற்காகவே.//

    இந்த பொய்தானே வேனாங்கிறது .அதுல எனக்கு அரை லிட்டர் எண்னெய் மிதக்கிறது தெரியுதே..ஹி..ஹி..

    ReplyDelete
  7. //இது பயணங்களுக்கு எடுத்துச் செல்ல ஏற்றது/இதைப் படித்ததுமே உங்களுக்கு தெரிந்திருக்கும்.:) இங்கே இந்த வாரம் மூன்று நாட்கள் லீவ். நாங்களும் ஊர்சுற்றப்போறோம்//

    ஏங்க மஹி ஓரு சின்ன வேண்டுகோள் ரெக்வஸ்ட், மாம்ஸுக்கு மூனு நாளைக்கு 3 X 3 = 9 வேலையும் இதையே குடுத்துடாதீங்க பாவம் அவர் ...க்கி..க்கி...

    ReplyDelete
  8. உஸ் ..முடியல ..அப்புறமா வரேன்..இன்னும் 3 கேள்வி பாக்கி இருக்கு... ((மூனு நாள் கழிச்சு பொருமையா வந்து பதில சொல்லுங்க ))

    ReplyDelete
  9. தக்காளி-4 (பெரியது)//
    என்னங்க பதிவு படிக்க வந்த திட்டுறிங்க ?

    //வெங்காயம்-2(மீடியம் சைஸ்)//

    என்னங்க மறுபடியும் திட்டுறிங்க ?

    ReplyDelete
  10. ஜெய்லானி said...///

    அடப்பாவி , நீதான் அந்த ஒன் மேன் ஆர்மியா ?

    ReplyDelete
  11. ஜெய்லானி said...

    //2 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். ப்ரிட்ஜில் ஒரு வாரம் வரை கூட வைக்கலாம்//

    பிரிட்ஜ்ல் ஒரு வாரம் இருப்பது இருக்கட்டும் . அதுக்கு ஃபிரிட்ஜ் ஆன்ல அவசியம் இருக்கனுமா..? இல்ல ஆஃப் பண்னி இருந்தால் போதுமா..!!!///

    பஸ்ட்டு யாரு வீட்டு பிரிட்க்சுலன்னு கேளு

    ReplyDelete
  12. Thokku with onion is new to me,looks mouthwatering,instand side dish for roti and idly dosa too :)

    ReplyDelete
  13. இதே மாதிரி தான் நானும் செய்வேன்...ஆனால் சக்கரை சேர்த்து கிடையாது..நானும் நேற்று தான் செய்து வைத்தேன்..மூன்று நாள் லீவிற்காக...

    ReplyDelete
  14. Never tried adding onions to tomato thokku,sounds tasty.

    ReplyDelete
  15. சூப்பராயிருக்கு தொக்கு...என் செய்முறையும் இதேதான்..ஆனால் சீரகமும்,சர்க்கரையும் சேர்த்து செய்ததில்லை..

    ReplyDelete
  16. my fav thakkaali thokku, delicious, have a nice weekend Mahi

    ReplyDelete
  17. மகி, நல்லா இருக்கு. மூணு நாளைக்கு அப்புறம் வந்து மெதுவா ஜெய்யின் கேள்விகளுக்கு பதில் ( குடுக்காவிட்டாலும் பரவாயில்லை ) குடுங்கோ.
    Happy vacation!

    ReplyDelete
  18. மஹி நல்லா இருக்குது. நானும் வெங்காயம், சர்க்கரை சேர்க்க மாட்டேன்.

    ReplyDelete
  19. Good tomato chautney.....thanks mahi....

    ReplyDelete
  20. Wonderful and tempting thokku
    http://shanthisthaligai.blogspot.com/

    ReplyDelete
  21. @@@தெய்வசுகந்தி
    மஹி நல்லா இருக்குது. நானும் வெங்காயம், சர்க்கரை சேர்க்க மாட்டேன்.//

    ஏங்க இன்னும் வீட்டில பூண்டு குழம்பு சரியாகலையா ..? மாச கணக்குல அப்படியே இருக்கு..ஹி..ஹி..

    ReplyDelete
  22. This is my favourite Mahi... I do it so often for dosai, chapathi and rice too sometimes.. very easy one too.. thanks for sharing your recipe

    ReplyDelete
  23. நான்ம் அடிக்கடி செய்வேன். சர்க்கரை சேர்த்து செய்வேன். ஒரு குஜராத்தி ஆண்டி சொல்லி தந்தாங்க. ரொம்ப நல்லாயிருக்கு மஹி.

    ReplyDelete
  24. Thokku really superb,love that with onion ,should give a try.

    ReplyDelete
  25. @அகிலா,நன்றிங்க!
    @ஆமாம் ராஜி.சீக்கிரமா செய்துடலாம்.டேஸ்ட்டும் நல்லா இருக்கும்.நன்றிங்க!
    @சர்க்கரை சேர்த்துப்பாருங்க கீதா.தக்காளியின் புளிப்புடன் கொஞ்சம் இனிப்பும் சேர்ந்து சூப்பரா இருக்கும்.நன்றி!
    @நன்றி வேணி!
    @வானதி,நன்றி!பதில்தானே? குடுத்துடலாம்.:)
    @சுகந்திக்கா,அடுத்தமுறை செய்துபாருங்க.அருமையாஇருக்கும்.நன்றி!
    @கொயினி,நன்றிங்க!
    @சாரு,நன்றி சாரு!
    @ஷாந்திமேடம்,மிக்கநன்றி!
    @புவனா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    @விஜி,நன்றிங்க!
    @ப்ரேமா,செய்துபாருங்க.நன்றி ப்ரேமா!

    வழக்கம் போல கமெண்ட் கதகளி ஆடிய ச.ச.தலைவர் அவர்களுக்கும்,அவரது அஸிஸ்டன்ட்,கொ.ப.செ.மந்திரிக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி.விரைவில் உங்க சந்தேகங்களைத் தீர்க்க முயற்சிக்கறேன்.:)))))

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails