Friday, September 24, 2010

என் இனிய தமிழ் மக்களே!

வணக்கம்! என் பெயர் எலிபன்ட் ஸீல்..நாங்கள்லாம் கடல்வாழ் உயிரினங்கள்.என்னைப்பத்தி விவரங்கள் தெரிய ஆசையா இருக்கா? இதோ இங்கே க்ளிக்குங்க. விக்கி-ல எல்லா வெவரமும், வெவரமாப் போட்டிருக்காங்க.

எங்களை பார்க்க விருப்பப்பட்டா நீங்க படகுல ஏறி, சிலமணி நேரம் கடலுக்குள்ள வந்து பாக்கோணும். எங்கள்ல சிலரைப் புடிச்சு, வித்தை காட்டறதுக்கு பழக்கி, "ஸீ வர்ல்ட்"ங்கற பேர்ல யுனைட்டட் ஸ்டேஸ்ல ஒரு ரெண்டு-மூணு இடங்கள்ல வச்சிருக்காங்க. அங்க நாங்க பந்து வெளாடுவோம்.குட்டிக்கரணம் போடுவோம்.இன்ஸ்ட்ரக்டர் சொல்லறா மாதிரி எல்லாம் பண்ணுவோம். கொஞ்சம் கஷ்டம்தான்,ஆனா அங்க வர சின்னக்குழந்தைங்க எங்களைப் பாத்து சந்தோஷப்படறதைப் பார்த்து மனசத் தேத்திக்குவோம்.

நாங்க அப்பப்ப கரையோரமா ஒதுங்குவோம்.இலவசமா நீங்க எங்களைப் பாத்துக்கலாம்.இது பஸிபிக் கடலோரம் எங்க காலனி..

எங்க உருவம் ரொம்ப வித்யாசமா இருக்கும். ஆண்கள் மிகவும் பெரிய உருவமா,எக்கச்சக்க எடையோட இருப்பாங்க.(எல்லாருமே குண்டு கல்யாணங்கதேன்.ஹிஹி)..உருவமும் பாக்கவே (உங்களுக்குத்தேன்)பயம்மா இருக்கும்.அவிங்க முகமும் கொஞ்சம் யானையின் சாயல்ல இருக்கறதாலதான் எங்க இனத்துக்கே இந்தப்பெயர் வந்திருக்கும்னு நினைக்கிறேன். ஆனா பாருங்க,லேடீஸ் நாங்கள்லாம் வழக்கம் போல, ஸ்லீக்&ஸ்லிம்-ஆ இருப்போம்.பார்க்கவும் லட்சணமா இருப்போம். :)

ஒரு நாள் மகி அக்கா எங்களையெல்லாம் பாக்க வரப்போறதா எனக்கு நியூஸ் வந்தது. நானும் காலைல இருந்து பாத்துகிட்டே இருந்தேன்..பொழுது போயிட்டே இருந்தது. எனக்கு கொஞ்சம் கொஞ்சமா பொறுமை குறைஞ்சுட்டே வந்தது.நிறைய மக்கள் அப்ஸர்வேஷன் டெக்ல இருந்து எங்களைப் பாத்துகிட்டே இருந்தாங்க. அக்கா கூட்டத்துக்குள்ள எங்கியாவது இருக்காங்களான்னு நாமே போய்ப் பாக்கலாம்னு நான் மட்டும் அப்படியே மெதுவா மக்கள் கூட்டத்துகிட்ட வந்தேன்.

ஊஹும்..அக்காவக் காணல! எல்லாருமே வெள்ளைக்காரங்கதேன் இருக்காங்க. அங்க ஒரு கைட் ஆன்ட்டி, எங்களைப்பத்தி கதையெல்லாம் எல்லாருகிட்டவும் சொல்லிட்டு இருந்தாங்களா..எனக்கும் கேக்க இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. கதை கேட்டுகிட்டே அக்காவுக்காக வெயிட் பண்ணி,அப்பூடியே தூங்கிப் போயிட்டேன்..
அக்கா வரதுக்குள்ள நீங்களும் தூங்கிரக்கூடாது.அதனால உங்களுக்கு ஒரு படங்காட்டறேன்.இது எங்க பேமிலி போர்ட்ரெய்ட்டுங்கோ. ஜூனியர் என்னைய மாதிரியே லட்சணமா இருக்காரல்ல? அப்பா ரெம்ப கத்தறாரும்மா,எனக்கு ரொம்ப பயமா இருக்குதுன்னு என்ரகிட்ட கம்ப்ளெயின்டு பண்ணிட்டு இருக்கறாரு ஜூனியரு. அவரு எப்பவுமே அப்புடித்தேஞ்சாமி,நீ பயப்படாதைன்னு சொல்லி சமாதானப்படுத்திருக்கறேன். இது பழைய படமுங்கோ. அடுத்த ஜனவரில வந்தீங்கன்னா எங்க குடும்பத்துப் புதுவரவைப் பாக்கலாம்.:)


திடீர்னு முழிச்சுப் பாத்தா அக்கா வந்து,என்னையவே கண்கொட்டாம பாத்துட்டு இருக்காங்க. எனக்கு ஒரே சந்தோஷமா போச்சுது.அப்புடியே உடம்பு சிலிர்த்துப் போச்சு, இது கனவா,நனவா?ன்னு என்னைய நானே கிள்ளிப் பாத்துகிட்டேன்.

நானும் அக்காவுக்கு ரொம்பநேரம் பேசிட்டு இருந்தோம். சாயங்கால நேரமாயிருச்சா..கடல் காத்து கொஞ்சம் கூலா வீச ஆரம்பிச்சதும் அக்கா கூட வந்தவங்க எல்லாரும் காருக்கு போயிட்டாங்க. அக்காவுக்கு என்னை விட்டுப் போறதுக்கு மனசே இல்ல. நாந்தான்,"குளிர ஆரம்பிச்சிருச்சு,போயிட்டு வாங்க"ன்னு டாட்டா சொல்லி அனுப்பிவச்சேன். அக்கா பத்திரமா ஊருக்கு வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

என்ர ஊட்டுக்காரர் வேற இப்புடி என்னத்தேன் பேசுவியோ நீயி..பேச ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டியா?-ன்னு அர்ச்சனை பண்ண ஆரம்பிச்சுட்டாரு,வர்ட்டா?
~~~~~
எலிபன்ட் ஸீல் பேமிலி போர்ட்ரெய்ட்(மட்டும்)உதவி:விக்கிபீடியா

25 comments:

  1. Mahi Akka;-) pathivu rombha superb..

    ReplyDelete
  2. antha seal-kku ippa thaan 7 vayasaam,athaan akka-nu solluthu.Neenga appadilaam sollakkoodathu nithu akkaaaaaaaaaaaaa!;) ;)

    Thanks nithu!

    ReplyDelete
  3. Beautiful photos, very nice write up, great

    ReplyDelete
  4. உங்க தம்பியா? சூப்பரா இருக்கிறார். சுத்திப்போடுங்க.

    ReplyDelete
  5. /உங்க தம்பியா? சூப்பரா இருக்கிறார்./கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நீங்க படம்பாத்து கதை சொல்றீங்கன்னு தெரியுது!'படித்து'பாருங்க வானதி!அது தம்பி இல்ல,தங்கச்சி. :)

    நன்றி வேணி!

    ReplyDelete
  6. மகி, கதை எல்லாம் படித்து முடிச்ச பின்னர் தான் கமன்ட் போட்டேன். கொஞ்சம் அசதியா இருந்ததால் கை ஸ்லிப் பண்ணி தம்பி என்று டைப் பண்ணிட்டேன். மக்களே! என் கமன்டில் தங்கை என்று மாத்திப் படிங்கப்பா.

    ReplyDelete
  7. no no
    chelathu chelathu
    nanthan firstu...neenga marupadium padhiu podunga..sorry pesunga..

    ReplyDelete
  8. என் கமன்டில் தங்கை என்று மாத்திப் படிங்கப்பா.
    :)))mattom

    ReplyDelete
  9. உண்மையா மகிமா நீங்க சூப்பரா எழுதறீங்க..
    ஒரு கதை சொல்றது போல
    படங்களுடன்
    கிரேட்.
    எச்சுமீ
    பள்ளிக்கு நேரம் ஆய்ட்டு..டாட்டா

    ReplyDelete
  10. சீல் கூட மகியக்கா ஃப்ரென்ட் ஆயாச்சா? திடீர் திடீரென்று நாஷனல் கியாக்ரஃபிக்ஸ் ரேஞ்சுக்கு எழுதறீங்க. கலக்கல் எழுத்து. ரசித்தேன். மகி, அழகா இருக்காங்க உங்க ஃப்ரெண்ட்ஸ்.

    ReplyDelete
  11. http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_22.html

    ReplyDelete
  12. நல்லாயிருக்கு மஹி.. பேமிலி போட்டோ அழகா இருக்கு.. நான்கூட நீங்க எடுத்ததொன்னு ஏமாந்து போயிட்டேன் :)

    ReplyDelete
  13. பகிர்வு அருமை.

    ReplyDelete
  14. ஹை! பாரதிராஜா சீல்!!
    ;)) நல்லாப் பேசறீங்க சீல்ராஜா.
    படங்கள் எல்லாம் அழகா இருக்கு. இத்தனை அருகே போக முடிந்ததா மகி?

    ReplyDelete
  15. //கதை கேட்டுகிட்டே அக்காவுக்காக வெயிட் பண்ணி,அப்பூடியே தூங்கிப் போயிட்டேன்///

    அச்சச்சோ... சோ.. ஸ்வீட்.......
    இந்த படமும், உங்க வரியும்... சூப்பர் மகி.. :-)))

    ///எனக்கு ஒரே சந்தோஷமா போச்சுது.அப்புடியே உடம்பு சிலிர்த்துப் போச்சு, இது கனவா,நனவா?ன்னு என்னைய நானே கிள்ளிப் பாத்துகிட்டேன்.//

    எப்படிங்க இப்படி.. செம தூள்.. ஏற்ற படம்.. :-)))
    நல்லா இருக்குங்க. தேங்க்ஸ்.

    ReplyDelete
  16. Nice post,loved reading it and thanks for sharing the pics Mahi!

    ReplyDelete
  17. வானதி,படித்துட்டீங்களா? அப்ப சரி! :)

    சிவா,ஸ்கூலுக்கெல்லாம் போறீங்களா? அவ்வளோ வளர்ந்துட்டீங்களா? நிறைய காம்ப்ளான் குடிக்கறீங்களோ?:)
    நன்றி தம்பி வருகைக்கும் கருத்துக்கும்!

    புனிதா,அடடா..இப்பூடி ஐஸ் வைக்கறீங்களே?? அச்சூ..அச்சூ!! தேங்க்ஸ்ங்க! :)

    ஜெய் அண்ணா,இந்த வலைச்சரம் வெளிவந்த அன்றே பார்த்து,கருத்தும் தெரிவித்துட்டேன். மறுபடியும் நன்றிகள்!

    /நான்கூட நீங்க எடுத்ததொன்னு ஏமாந்து போயிட்டேன் :)/கர்ர்ர்ர்ர்ர்! அப்ப மத்த போட்டோல்லாம் அழகா இல்லயா அம்மணி?

    ஆசியாக்கா,நன்றி அக்கா!

    /நல்லாப் பேசறீங்க சீல்ராஜா./இமா,உங்களுக்கு கர்*100!! அது ஸீல் ராணி!
    நன்றி இமா!

    அகிலா,மிக்க நன்றிங்க வருகைக்கும்,கருத்துக்கும்.

    ஆனந்தி,நான் ரசித்து எழுதியதை நீங்களும் ரசித்தது ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.என் மனமார்ந்த நன்றி ஆனந்தி!

    ராஜி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி!

    ReplyDelete
  18. மஹி...உங்களோட போட்டோ நான் கேக்கவே இல்லை .அதுக்காக கோவிச்சிகிட்டு இத்தனை போட்டோ போட்டு இருக்கீங்க ..உங்க பாசத்தை பாத்து ஒரே அழுவாச்சியா வருது ..இருங்க கொஞ்சமா அழுதுட்டு அப்புறமா வரேன் :-)))

    ReplyDelete
  19. அழகா ரசிச்சு எழுதியிருக்கீங்க மஹி. சமையலைப்போலவே உங்கள் எழுத்துக்களும் ருசியானவையே. வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  20. தர்ஷினி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தர்ஷினி! நீண்டஇடைவெளிக்குப்பின் உங்களை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கு.:)

    ஜெய் அண்ணா,அயுது முடிச்சிட்டீங்களா? படம் பாத்து அழுதுட்டீங்க.தெம்பா வந்து எழுதிருப்பதைப் படித்து சிரியுங்க.நன்றி!

    ReplyDelete
  21. hai mahi...really enjoyed the narration with beautiful photos....cute seals...

    ReplyDelete
  22. //ஆனா பாருங்க,லேடீஸ் நாங்கள்லாம் வழக்கம் போல, ஸ்லீக்&ஸ்லிம்-ஆ இருப்போம்.பார்க்கவும் லட்சணமா இருப்போம். :)//

    இது சூப்பர்... ஹா ஹா ஹா

    //ஒரு நாள் மகி அக்கா எங்களையெல்லாம் பாக்க வரப்போறதா எனக்கு நியூஸ் வந்தது//

    ஓ.. அதான் உங்கூர்ல எலிபன்ட் ஸீல் எல்லாம் மாயம்னு நியூஸ் வந்ததா... பாவம் மகி அதேயேன் பயப்படுதறீங்க... (ஹா ஹா ஹா)


    //நானும் அக்காவுக்கு ரொம்பநேரம் பேசிட்டு இருந்தோம்//

    பாவம் நீ அக்காகிட்ட செமயா மாட்டிகிட்டையா (ஹி ஹி ஹி)


    //என்ர ஊட்டுக்காரர் வேற இப்புடி என்னத்தேன் பேசுவியோ நீயி..பேச ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டியா?-ன்னு அர்ச்சனை பண்ண ஆரம்பிச்சுட்டாரு,வர்ட்டா?//

    இது மட்டும் மகி statement கரெக்டா? ஹா ஹா ஹா


    Jokes Apart... நல்ல கற்பனை மகி... எப்படி இப்படில்லாம்?

    ReplyDelete
  23. என்றும் 16,வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிங்க!

    புவனா,ஆமாங்க..ஸீல்ஸ் எல்லாம் இப்ப எங்க வீட்டுலதான் இருக்கு.பெட்-டா வளத்துக்கலாம்னு இருக்கோம்.ஹிஹி

    /இது மட்டும் மகி statement கரெக்டா?/நோ வே! நான் ரொம்ப அமைதியான புள்ளைங்கம்மிணி.இந்த போஸ்ட் முழுக்க ஸீல் சொன்னதுதேன்.

    நன்றி புவனா!போட்டோஸ் பாத்ததும் கற்பனை தானா வந்துடுச்சுங்க.:)

    ReplyDelete
  24. nicely written..chinna kulanthai madhiri maritinga..nice to read

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails