உதிரியாக வடித்த சாதம்-2கப்
கேப்ஸிகம்-1
புளிக்கரைசல்-1/4கப்
மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
MTR சாம்பார் பவுடர்-2 ஸ்பூன்
ட்ரை தேங்காய்த்துருவல்-1டேபிள்ஸ்பூன்
சர்க்கரை-1/2ஸ்பூன்
உப்பு
எண்ணெய்-2ஸ்பூன்
நெய்-1ஸ்பூன்
பட்டை-சிறுதுண்டு
கிராம்பு-1
கடலைப்பருப்பு,உளுந்துப்பருப்பு,முந்திரி-சிறிது
செய்முறை
கேப்ஸிகமை சதுரத்துண்டுகளாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய்+நெய் காயவைத்து பட்டை,கிராம்பு தாளித்து,க.பருப்பு,உ.பருப்பு,முந்திரிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பின்னர் கேப்ஸிகம் துண்டுகளை சேர்த்து,மிதமான தீயில் வதக்கவும்.
கேப்ஸிகம் ஓரளவு வதங்கியதும் புளிக்கரைசல்,உப்பு,ம.தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
புளிக்கரைசல் நன்கு கொதித்து பச்சைவாசம் அடங்கியதும் சாம்பார்தூள்,தேங்காய்த்துருவல்,சர்க்கரை சேர்த்து கிளறவும்.தண்ணீர் வற்றியதும் உதிரியாக வடித்த சாதம் சேர்த்து கிளறவும்.
கேப்ஸிகம் ரைஸ் ரெடி!
உருளை சிப்ஸ் உடன் பரிமாறலாம். லன்ச் பாக்ஸுக்கு பொருத்தமான உணவு இது.குறிப்பு
எந்த சாம்பார் பவுடரும் சேர்க்கலாம்.எம்.டி.ஆர். பவுடர் சேர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும். :)
அதே போல் தேங்காய்த்துருவலும் ப்ரெஷாகப் போடாமல் கொப்பரைத்தேங்காய் அல்லது ட்ரையா இருக்கும் தேங்காய்ப்பொடி சேர்த்தால் நன்றாக இருக்கும்.
************
************************
ஈஸி லட்டு ரெசிப்பியை Celebrate Sweets-ladoo ஈவன்ட்டுக்கு அனுப்புகிறேன்.************************
The event was started by Niveditha and hosted by Nithu
New recipe to me..thanks for sharing..lovely pictures..
ReplyDeleteஎதையாவது போட்டு நாவூற வச்சுருவீங்க. ஹும்!
ReplyDeleteபாத்தாலே சாப்பிடணும்போல இருக்குது மகி! ஒரு பார்சல் பிளீஸ்!!!
ReplyDeletemeeeeeeeeeeeee
ReplyDeletethe first mahima..
vadai enakuthan..no no kapsicam rice enakuthan..
2 plates parcel please..
மகி, நல்லா இருக்கு.
ReplyDeleteசிவா, இதை எங்க ஊரிலை 4வதுன்னு சொல்வாங்கப்பு. முதலாவது நிது பாலா மேடம்.
சூப்பர்.கொடைமிளகாயை சன்க் சன்காக கட் செய்து,புளி சாம்பார் பொடி அசத்திட்டீங்க.
ReplyDeletenalla irukku mahi
ReplyDeleteNever tried capsicum rice so far,love the idea of cooking capsicum and rice separately,otherwise the capsicum may turn mushy..
ReplyDeleteபுளிப்பு சுவையுடன் ரொமப் நல்லாயிருக்கும்..விரைவில் செய்து பார்க்கிறேன்...
ReplyDeletesuper rice....
ReplyDeletehttp://akilaskitchen.blogspot.com
Regards,
Akila
Mahi capcicum Rice nalla irukkuppa......intha maadhiri puli oorri seyyura vidham pudhusaa irukku...seythu paarkkiren..Thanks mahi.
ReplyDeletelovely recipe, going to try soon, thanks for sharing Mahi
ReplyDelete//லன்ச் பாக்ஸுக்கு பொருத்தமான உணவு இது.//
ReplyDeleteபொருத்தியாச்சு.. :))
இந்த வாட்டி எல்லாமே இருந்தது.. எம் டி ஆர் உட்பட.. செஞ்சுட்டேன்.. டேஸ்ட் பண்ணிப் பாத்தேன்.. குட்.. செய்யறதுக்கு ஈசியாவும், ரொம்ப ட்ரை ஆ இல்லாமலும் இருக்கு.. நன்றிங்கோ..
@நித்து,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.செய்துபாருங்க.
ReplyDelete@இமா,:)
நன்றிங்க!
@சுகந்திக்கா,பார்சல்தானே?அனுப்பிட்டா போச்சு.:)
@சிவா,நன்றி!உங்களுக்கும் பார்சலா?அனுப்பிடறேன்.நன்றி சிவா!
@வானதி,நன்றி!சிங்கப்பூரு சிவா எப்ப வந்தாலும்,அவருதான் பர்ஸ்ட்டுங்க!:)
@ஆசியாக்கா,நன்றி வருகைக்கும்,கருத்துக்கும்!
@சாரு,எப்படி இருக்கீங்க? நன்றி சாரு!
@ஆமாங்க ராஜி..இப்படி செய்வதால் கேப்ஸீகம் டேஸ்ட் நல்லா இருக்கும்.
@மேனகா,செய்து பாருங்க.நன்றி மேனகா!
@அகிலா,நன்றிங்க!
@கொயினி,வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@வேணி,நிச்சயம் செய்துபாருங்க.நன்றிங்க!
@சந்தனா,கேப்ஸிகம் ரைஸ் செய்தாச்சா?நன்றி!
சாதம் நல்ல் உதிரியா பார்க்கவே ரொம்ப நல்ல இருக்கு, கேப்சிகம் மணத்துடன் அருமையாக இருக்கும் இல்லையா மகி .
ReplyDeletewow... mouthwatering just to see this pic...superb
ReplyDeleteஆமாம் ஜலீலாக்கா! இந்த ரைஸ் எனக்கு பிடித்தமான ரெசிப்பி!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ReplyDeleteபுவனா,சீக்கிரம் செய்துபாருங்க! சூப்பரா இருக்கும்.:)
நன்றி புவனா!