Friday, October 29, 2010

கோதுமை ரவை உப்மா

உப்மா...இது உப்மாவா,உப்புமா-வா? உப்புமா,உப்பாதா? ரவா உப்புமாவா? பாம்பே ரவா உப்புமாவா? சம்பா ரவை உப்புமாவா? வெள்ளை ரவை உப்புமாவா??
அப்பாடி 7 கேள்விக்குறி(கவனிங்க,கேள்வி இல்ல,கேள்விக்குறி) ஆகிடுச்சு. இதுக்கும் மேல கேள்வி கேட்டா,எல்லாரும் அப்பூடியே அடுத்த ப்ளாகுக்கு தாவிடுவீங்க,அதனால கேள்விகளை நிறுத்திட்டு அடுத்த ஸ்டெப்புக்கு போவோம்.:)

என்னோட சிற்றறிவுக்கு தெரிந்தவரை ரவைல இரண்டே வகைதான்..வெள்ளைரவை-கோதுமை ரவை. கல்யாணமாகி, பெங்களூர் வந்தப்ப அங்கே கோதுமை ரவை கிடைக்காது,இங்கருந்தே வாங்கிட்டுப்போயிருங்கன்னு அறிவுரை கிடைத்தது. அதே மாதிரி பெங்களூர்ல வெள்ளை ரவை மட்டுமேதான் கிடைத்தது.

ஒரொரு முறையும் ஊருக்கு போயிட்டு வரும்போது கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்,ஹோம் மேஜிக் [கண்ணன் அம்மா வீட்டு மளிகை,ஹோம் மேஜிக் மாமியார் வீட்டு மளிகைக்கடைங்க. :) கடை எங்களுதல்லாம் இல்ல,மாசாமாசம் அங்கேதான் மொத்தமா சாமான் வாங்கறது...ப்ரீ ஹோம் டெலிவரியும் இருக்கறதால நல்ல வசதியா இருக்கும்.] இப்படி கடைகள்ல ரவை, சின்ன வெங்காயம்,பெரியவெங்காயம்(சிரிக்கக்கூடாது, அப்ப வெங்காயம் யானைவிலை-குதிரை விலை வித்துட்டு இருந்த காலம்) இதெல்லாம் வாங்கிட்டு போவோம்.

ரவைல ஆரம்பிச்சு கதை எங்கேயோ போயிடுச்சு. அகெய்ன்,ரிடர்ன் பேக் டு ரவை..சம்பா ரவைன்னு ஒண்ணு சொல்லுவாங்க,அது என்னன்னு ஒரு சந்தேகமும் இருக்குது..அதை கொஞ்சம் ஒத்திவச்சுட்டு மேலே போலாம். இங்கே வந்தப்புறம் எனக்கு தெரிந்தது,புரிந்தது அமேரிக்கால கோதுமை ரவை கிடைக்காது..ஒன்லி ஒயிட் ரவா-சூஜி-செமோலினா(என்னல்லாம் பேரு பாருங்க!!)தான் கிடைக்கும் என்று. அம்மா வீட்டுலல்லாம் உப்மா-ன்னா..என்னது?உப்ப்ப்ப்ப்ப்புமாவா??ன்னு கேட்டதெல்லாம் போயி, ஒரு நாளாவது கோதுமை ரவை உப்மா சாப்பிடமாட்டோமான்னு ஏக்கமா இருக்கும். அப்பல்லாம், பல்கர்னு ஒண்ணு இருப்பது..ஏஷியன் மார்க்கெட்-பெர்ஷியன் மார்க்கட் இங்கேயும் நம்ம சமையல் பொருட்கள் எல்லாம் கிடைக்கும்ங்கறதெல்லாம் எனக்கு தெரியாதுங்க.

அப்புறம் மெது-மெதுவே டயட் சமையல் ப்ளாக்ல எல்லாம் பாத்து,அவிங்ககிட்ட டவுட்டு கேட்டுகேட்டு பல்கர்-னா க்ராக்ட் வீட் என்று புரிந்துகிட்டேன். புரிந்தாலும், நான் சாமான் வாங்கற கடைலல்லாம் அது கிடைக்கவேஇல்ல. கோதுமை குருணைதான் இருந்தது.அது கோதுமை சாதம் வைக்கதான் நல்லாருக்கும்..உப்மாவா செய்தா...கொழ-கொழன்னு நல்லாவே இருக்காது.(அதையும் விடாம வாங்கி செய்து பார்த்த அனுபவம்,ஹிஹி)

ஒருவழியா இப்ப இருக்க ஊருக்கு வந்ததும், இங்கே கடைகள்ல பர்கர்..ச்சீ,ச்சீ,பல்கர் கிடைத்தது. நல்லா நைஸா நம்ம ஊர் கோதுமை ரவை மாதிரியே இருந்தது. கோவைல "மயில்"மார்க் ரவைன்னு ஒண்ணு எங்க மாமியார் வாங்குவாங்க, சூப்பரா இருக்கும். அந்த உப்மா சாப்ட்டமாதிரியே ஒரு பீலிங் இருந்தது. இப்பல்லாம் வெள்ளைரவை வாங்கறதே அபூர்வமாகிடுச்சு. :)

உப்மால உங்க கற்பனைத்திறன யூஸ் பண்ணி பலவிதமா செய்யலாம்..அதாவது தக்காளி சேர்த்து/சேர்க்காம செய்யறது, தேங்காய்த்துருவல் சேர்த்து/சேர்க்காம செய்யறது...பைனல் டச்சா, ஒரு ஸ்பூன் தேங்காயெண்ணெய்/நெய் ஊற்றி கிளறுவது..இப்படி. சரி,நான் செய்வது எப்படின்னா...
{அப்பாடி,மொக்கை ஓவர்..ஓவர் டு தி ரெசிப்பி!! :) ---ன்னு நினைச்சா...நீங்க ரொம்ப பாவம்!!}

தேவையான பொருட்கள்
கோதுமை ரவை-1டம்ளர்
தண்ணீர்-2டம்ளர்
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-3
இஞ்சி-சிறுதுண்டு
வரமிளகாய்-2
கடுகு-1/2ஸ்பூன்
கடலைப்பருப்பு-1ஸ்பூன்
உளுந்துப்பருப்பு-1ஸ்பூன்
சர்க்கரை-1/2ஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை-சிறிது
எண்ணெய்
உப்பு

செய்முறை
வெங்காயம்-மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். (இது முக்கியமான ஸ்டெப்..வெங்காயம் நீளமான துண்டுகளா இருந்தாதான் நல்லாருக்கும்.இதுக்கு பேரு உப்மா கட்..ப்ரியாணி கட்,சாம்பார் கட் இப்படி வெங்காயம் வெட்டறதுல பலவகைகள் இருக்குது,அதெல்லாம் மெதுவா சொல்லறேன்.)

கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு-க.பருப்பு-உ.பருப்பு தாளித்து பருப்புகள் பொன்னிறமானதும் வெங்காயம்-மிளகாய்-இஞ்சி-வரமிளகாய்-கறிவேப்பிலை-உப்பு-சர்க்கரை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிவந்ததும்,ரவையை கொட்டி கிளறவும்.(டோன்ட் வொரி..இது கட்டி தட்டாது,டென்ஷன் இல்லாம கிளறலாம்.;))

அடுப்பினை சிறுதணலில் வைத்து 3 நிமிடங்கள் வைக்கவும்.
இறுதியாக கொத்தமல்லி இலை,தேங்காயெண்ணெய் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான உப்மா ரெடி!
கடைசியா தேங்காயெண்ணெய் சேர்க்கிறோம் பாருங்க,அது உப்மாவை இறக்கி மேலால ஒரு ஸ்பூன் எண்ணெய ஊத்தி 2 நிமிஷம் மூடி வச்சுட்டு,அப்புறமா கிளறிவிட்டு பரிமாறணும். நல்லா வாசனையா இருக்கும். ஒருமுறை,கைவசம் தேங்காயெண்ணெய் இல்ல,அதனால வெங்காயம் வதக்கும்போதே ட்ரை தேங்காய் பவுடர் ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து வதக்கினேன்.டேஸ்ட் ரொம்ப நல்லா இருந்தது.

உப்மா செய்தப்புறம் ஒரு இம்பார்டன்ட் பார்ட் இருக்கே..சாப்பிடறது!! :P :P இது தக்காளி சேர்த்து செய்த உப்மாங்க. தேங்காசட்னி வச்சு சாப்பிடலாம்.

கூட சர்க்கரை தொட்டும் சாப்பிடலாம்.
உப்மா-சாம்பாரும் நல்லா இருக்கும். உப்மாவும்-வாழைப்பழமும் சாப்ட்டிருக்கீங்களா? இல்லன்னா அடுத்தமுறை கட்டாயம் ட்ரை பண்ணுங்க..செம காம்பினேஷன்!!
ஒரு சில நேரங்கள்ல வீட்டுல ரவை-சேமியா ரெண்டுமே கொஞ்சம்-கொஞ்சமா இருக்கும்..அப்ப ரெண்டையும் கம்பைன் பண்ணி உப்புமா செய்யலாம். வெள்ளைரவை-கோதுமை ரவை எதுனாலும், சேமியா நல்லா மேட்ச் ஆகும். இந்த போட்டோவை பாருங்க,பார்த்தாலே சாப்பிடணும் போல இல்ல? :) உப்மாவுக்கு வெங்காயம்-க.பருப்பு-உ.பருப்பு-எண்ணெய் இது எவ்வளவு போடறீங்கறதுலதான் டேஸ்ட்டே இருக்குது. இவையெல்லாம் தாராளமா போட்டா சுவை ஏராளமா இருக்கும். :)
ஓக்கே..மொக்கை கம் ரெசிப்பி இத்தோட முடிஞ்சது. அடுத்த வாரம் பாக்கலாம். ஹேவ் எ நைஸ் வீக்எண்ட் எவ்ரிபடி!

20 comments:

  1. Upma nalla irukku mahi, my fav too, upma + banana combination enakku romba pidikkum, very nice photos, great

    ReplyDelete
  2. // அம்மா வீட்டுலல்லாம் உப்மா-ன்னா..என்னது?உப்ப்ப்ப்ப்ப்புமாவா??ன்னு கேட்டதெல்லாம் போயி, ஒரு நாளாவது கோதுமை ரவை உப்மா சாப்பிடமாட்டோமான்னு ஏக்கமா இருக்கும். //
    அதேதான் மகி!! //கோவைல "மயில்"மார்க் ரவைன்னு ஒண்ணு // இப்பவும் ஒவ்வொரு முறையும் ஊருக்கு போயிட்டு வர்ரப்ப இந்த மயில் மார்க் ரவைதான் 10 - 15 கிலோ எடுத்துட்டு வந்து, freezerல போட்டுருவேன். //உப்மாவும்-வாழைப்பழமும் // எனக்கு பிடித்த காம்பினேஷன். ஆனா இந்த் ஊரு வாழைப்பழம் பிடிக்காது. நம்ம ஊரு பூவன் பழமா இருந்தா நல்லாருக்கும். உப்புமா குருமா காம்பினேஷன் மறந்துட்டியா மகி!

    ReplyDelete
  3. /உப்புமா குருமா காம்பினேஷன்/இந்த காம்பினேஷன் புதுசா இருக்கே சுகந்திக்கா??அடுத்த முறை ட்ரை பண்ணிடறேன்.:)

    ப்ரீஸர்ல ஸ்டோர் பண்ணிப்பீங்களா? ஐடியா நல்லாதான் இருக்கு! என்கணவர் கிட்ட பர்மிஷன் வாங்கி(!!) ஊர்லருந்து க்ரோசரி கொண்டுவரதுக்குள்ள எனக்கு கண்ணாமுழி பிதுங்கிடும்.:) போனதடவை ஒருகிலோ ரவை எடுத்துட்டு வந்தேன்.

    வேணி,நம்மூர்லல்லாம் இது சூப்பர் காம்பினேஷன்! சுகந்திக்கா சொன்னமாதிரி பூம்பழம் பிசைஞ்சு சாப்ட்டா சூப்பரா இருக்கும்.

    நன்றிங்க வேணி&சுகந்திக்கா!

    ReplyDelete
  4. Nice pics...குறிப்பும் சுலமா இருக்கு மகி!

    ReplyDelete
  5. படத்துல கடுகுல்லாம் பெருசு பெருசாத் தெரியுது மஹி. யார் கண்ணிலாவது பட்டுரும் பத்திரம். ;))

    ReplyDelete
  6. இது பத்தின கதை கொஞ்சம் இருக்கு.. பொறவு வாறன்..

    //யார் கண்ணிலாவது பட்டுரும் பத்திரம்.//

    இமா.. இவிங்க ரெண்டு பேருமே அந்தச் சின்னஞ்சிறு கடுகுக்கு எதிரிங்க.. பாவம் கடுகு..

    ReplyDelete
  7. super Mahi, brings back CBE memories :)

    ReplyDelete
  8. எனக்கு உப்புமா பிடிக்காது
    ஆனாலும் உங்க போடோஸ்ல உள்ள உப்புமாவை PAARKKUMPOTHU அப்படீய சாப்டனும் போல இருக்கு..
    சிறந்து உணவு ..

    PLEASE ONE PLATE PARCEL....

    ReplyDelete
  9. எனக்கு மிகவும் பிடித்தது, உப்புமா+வாழைப்பழம் புது காம்பினேசன் அப்புறம் ரவை+சேமியா கேசரி தான் பண்ணீருக்கேன் உப்புமா டிரை பண்ணுகிறேன்.

    ReplyDelete
  10. ருசியாக இருக்கு தவவலும்... ரவையும்

    ReplyDelete
  11. Unga blog padichuttu upma sapta feeling vandiruchu. Super..

    ReplyDelete
  12. Hai Mayu.....

    Upma-va vida nee solra vitham nalla irukku.... Why don't u try Rice rava (sweet) upma.....

    ReplyDelete
  13. மகி உங்கள் வலை பூ மற்றும் உப்புமாவும் நன்றாக உள்ளது . தெய்வ சுகந்தி சொன்னதுபோல் மயில் மார்க் ரவை நன்றாக் இருக்கும் .

    http://kurinjikathambam.blogspot.com/

    ReplyDelete
  14. I love godhuma rava upma very much,used to hate when I was kid,but ippo I am really loving it! Filling+healthy too!

    ReplyDelete
  15. மகி, உப்புமாவில் இவ்வளவு வெரைட்டியா? நான் எபோதும் வெள்ளை ரவை மட்டுமே வாங்குவேன். படங்கள் நல்லா இருக்கு. உப்புமாவும் வாழைப்பழமும் நல்ல காம்பினேஷனா? இருங்க என் கணவருக்கு குடுத்து செக் பண்ணி பார்க்கிறேன் ( உப்புமா என்றாலே வீட்டுக்கு வரமாட்டார் என் ஆ.காரர் ).

    ReplyDelete
  16. Hi mahi uppuma decoraions super.ennadhunga pudhusaa irukku banana comination.upma photo nalla irukku.antha onion kalanthu irukkuradhu superaa irukku.ennvo ponga upmavai paarthadhum ayyo seyyanum pola irukku.but naan intha ravai vaangi ganakaalam aaguthu.en hussai vaangi vara sonnaa avarukku pudikkaadhu enpadhaal kaadhula pottukkave maatturaar manushan.konja naal maranthirunthen intha ravaiyai.ippo naabagapaduthitteenga.intha week grocery listla idamperum.but hus manasu vaikkanum adhai thedi edukkaradhula avarukku avvalo somberithanam.mm.

    ReplyDelete
  17. ஆஹா..சம்பா ரவை உப்புமாவை காட்டி இப்படி நாவூற செய்து விட்டீர்களே மகி.அதிலும் முன் குறிப்பு இன்னும் சூப்பர்.படங்களுமழகு.

    ReplyDelete
  18. மகி இந்த உப்மாவை எப்மா போஸ்ட் செய்தே,அருமை,நான் ஒரு உப்மா ப்ரியை தெரியுமோ!

    ReplyDelete
  19. ப்ரியா,நன்றிங்க!
    ~~~
    /யார் கண்ணிலாவது பட்டுரும் பத்திரம். ;))/உப்புமால கடுகு இருக்கலாம் இமா! அதுவும் இல்லாம அப்படி தேடிப்பிடிச்சு பார்க்கறவங்க தீபாவளி சில்க் வாங்கறதுல பிஸீ!;)
    ~~~~
    /இவிங்க ரெண்டு பேருமே அந்தச் சின்னஞ்சிறு கடுகுக்கு எதிரிங்க.. பாவம் கடுகு../ஒண்ணுமே புரில சந்தனா?என்ன சொல்லவரே??? :)
    ~~~
    சாரு&கொயினி, கோவையல்லாத ஊர்க்காரங்களுக்கு உப்புமா-வாழைப்பழம் புது காம்பினேஷன்தான்!:) ட்ரை பண்ணிப் பாருங்க!
    ~~~~
    காயத்ரி,உப்புமா சாப்பிட்ட பீலிங்கே வந்துருச்சாங்க?? ரொம்ப சந்தோஷம்!:)
    ~~~
    குறிஞ்சி,ஆமாங்க..மயில் மார்க் ரவைதான் ஊரிலே வாங்குவோம். முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~~
    மஹேஸ்,சிவா,பாயிஸா நன்றிங்க!

    ReplyDelete
  20. நான் இருக்கும் இடத்தில் கோதுமை ரவையை லாப்சி என்று சொல்வார்கள்.
    அதை வறுத்து, நீங்க சொன்னபடி செய்யும்போது சுவை அபாரமாக வரும்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails