Tuesday, October 26, 2010

சேனைக்கிழங்கு பொரியல்

தேவையான பொருட்கள்
சேனைக்கிழங்கு-340கிராம்
வெங்காயம்(சிறியது)-1
பச்சைமிளகாய்-2
கறிவேப்பிலை-சிறிது
தேங்காய்த்துருவல்-1டேபிள்ஸ்பூன்
கடுகு-1/2ஸ்பூன்
கடலைப்பருப்பு-1/2ஸ்பூன்
உளுந்துபருப்பு-1/2ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
உப்பு

செய்முறை
சேனைக்கிழங்கை ப்ரீஸரில் இருந்து எடுத்து டீஃப்ராஸ்ட் செய்யவும்.(இங்கே சேனைக்கிழங்கு ப்ரோஸனில்தான் கிடைக்கிறது)
பின்னர் கிழங்கை சிறுதுண்டுகளாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு-க.பருப்பு-உ.பருப்பு தாளித்து நறுக்கிய வெங்காயம்-மிளகாய்,மஞ்சள்தூள்,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய கிழங்கை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.

கிழங்கு வெந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

சிம்பிளான சேனைக்கிழங்கு பொரியல் ரெடி. சாம்பார் சாதம்,ரசம் சாதம்,தயிர் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.(வேறு எதனுடனும் சாப்பிடக்கூடாதான்னு கேக்காதீங்க..விருப்பப்படி சாப்பிடுங்க.:))
சேனைக்கிழங்கை பொறுத்தவரை ஊரிலே, இப்படி முழு கிழங்காக அல்லது துண்டுகளாக நறுக்கி விற்பார்கள்.
அதனை தோல் சீவி நறுக்குவதுக்குள் கை அரிப்பு தாங்கமுடியாது. கைக்கு தேங்காய்எண்ணெய் தடவிக்கொண்டு நறுக்கினால் அரிப்பு இருக்காது என்று சொல்வார்கள்.இந்த பொரியலுக்கு கிழங்கை நறுக்கி, உப்பு-மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து வடித்து தாளிப்பார்கள்.

சேனையிலே 2 வகை உண்டு..ஒரு வகை கிழங்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
இன்னொன்று பாலக்காட்டு சேனை. அது கிழங்கு கொஞ்சம் சிவப்பு நிறமாக இருக்கும்,டேஸ்ட்டும் மிகவும் நன்றாக இருக்கும்.இந்த கிழங்கை பாருங்க,கலர் டிபரன்ஸ் தெரியுதா?
இங்கே கிடைப்பது இதிலே எந்தவகைன்னு நான் யோசிக்கறதே இல்லை..ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை மாதிரி,something is better than nothing!! என்ன சொல்றீங்க?? :)

கடைசி 2 படங்கள் உதவி:கூகுள் இமேஜஸ்

20 comments:

 1. Senai kizhangu poriyal is a great side dish for rasam saadham, my fav, looks very nice Mahi

  ReplyDelete
 2. ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை மாதிரி,something is better than nothing!!// aana suthama suvaye illaye frozen yam-il...

  enakku rombha pidicha veg aana eppo entha frozen use panni seiyum podhu avlova pidikarathey illai..

  btw, poriyal nandraka irukirathu..

  ReplyDelete
 3. nice recipe. Trust me or not I did the same poriyal yesterday.
  The same frozen kizangu. I love it.
  wow what co insitent.
  I will make masiyal from this kizangu too.

  ReplyDelete
 4. senai kizhangu poriyal luks awesome...lovely step vise pics.

  ReplyDelete
 5. நல்லாயிருக்கு மகி.நான் கிழங்கை வெந்து விட்டு தாளிப்பேன். சிம்பிளாக சூப்பர்.

  ReplyDelete
 6. சேனைகிழங்கில் வறுவல் இல்லை பொடிமாஸ் தான் செய்வேன் , பொறியல் செய்தது இல்லை, போன தடவை நீங்க சொன்ன ரெசிபி நல்லா இருந்தது , இதையும் டிரை பண்ணுகிறேன் ,கடைசில ஒரு பழமொழி சொன்னீங்க பாருங்க சூப்பர்...

  ReplyDelete
 7. ;(
  எனக்கு இந்த முறை ஃப்ரோஸன் கூட கிடைக்கேல்ல.

  இது 'சட்டிக்கருணை' மாதிரி இருக்கே!!

  ReplyDelete
 8. Hi Mahi,

  Nalla supera irrukku Mahi...:)

  Dr.Sameena@

  www.myeasytocookrecipes.blogspot.com

  ReplyDelete
 9. சேனையில் 2 வகை இருப்பது இப்போதான் தெரியும்.எது கிடைக்குதோ வாங்கி சமைக்கிறது..எனக்கும் இந்த பொரியல் பிடிக்கும்,நல்லாயிருக்கு மகி!!

  ReplyDelete
 10. Mahi senai poriyal superba seythu irukkeega...naan mudhalil kilangai vegavaithuttu appuramdhaan porithu irukken.but neenga appidiye seythu irukkeenga.superb.try seyyuren.Thanks mahi.

  ReplyDelete
 11. Mom used to make it back home, never tried it here. Looks tasty.

  ReplyDelete
 12. இது இது இது தான் ஜிமிகன்.. சரியா? :) எனக்கு இந்த சேனை/சேப்பன் பாத்தாலே பழசெல்லாம் நினைவு வருது :)

  ReplyDelete
 13. Rarely buy this veggie,recipe sounds good Mahi!

  ReplyDelete
 14. எனக்கு இந்த பொரியல்னா ரொம்ப பிடிக்கும்...இவருக்கு பிடிக்கிறதில்லேன்னு செய்றதே இல்லை. ஆனா விடப்போறதில்ல..சாப்பிட்டா சாப்பிடுங்கன்னு இல்லேன்னா போங்கன்னு இந்த தடவை செஞ்சே ஆகனும்ற அளவுக்கு நாக்கு ஊற வச்சிட்டீங்க...

  ReplyDelete
 15. hi mahi,
  first time to your blog. romba nalla irukku. tasty recipes irukku. step by step presentation azhaga irukku. wish to follow your blog. pl do visit mine when u find time.


  cheers:)
  shalini

  ReplyDelete
 16. ஹாய்
  மீ தி 17th...

  ReplyDelete
 17. இவருக்கு பிடிக்கிறதில்லேன்னு செய்றதே இல்லை. ஆனா விடப்போறதில்ல..சாப்பிட்டா சாப்பிடுங்கன்னு இல்லேன்னா போங்கன்னு இந்த தடவை செஞ்சே ஆகனும்ற அளவுக்கு நாக்கு ஊற வச்சிட்டீங்க.///

  சோ பல குடும்பத்தில சண்டைகளை போடா நீங்க காரணம் ஆகிடீங்க...ஹஹஅஹா எப்படியோ வந்த வேலை முடிந்தது போல (செந்தில் ஒரு படத்தில சொல்லுவாரு )
  நல இருங்க...

  அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..(மீ தி பிரஸ்ட் )

  ReplyDelete
 18. இது 'சட்டிக்கருணை' மாதிரி இருக்கே!---அதே கார கருணை அப்படின்னு orrupakkam சொல்லுவாங்க

  ReplyDelete
 19. கருத்து கூறிய அனைவருக்கும் என் நன்றிகள்!
  ***
  @நித்து,ப்ரோஸன் டேஸ்ட் கம்மிதான்,ஆனா அப்பப்ப வாங்குவேன்.இப்படி செஞ்சுபாருங்க,நல்லாஇருக்கும்.

  @இமா,சட்டிக் கருணை??? நான் கேள்விப்பட்டதே இல்லைங்க. :)

  @விஜி,இந்த பொரியல் செய்து பலநாளாச்சுங்க,இப்பதான் போஸ்ட்பண்ணேன்.ஹிஹி!

  @ஷாலினி,நல்வரவு!

  @சந்தனா,எனக்கும் சேப்பங்கிழங்குக்கும் ஏழாம் பொருத்தம்,வாங்கறதே இல்ல,இப்பல்லாம்!:)
  ***

  அனைவருக்கும் என் நன்றி!!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails