Tuesday, December 28, 2010

கார்ன் ஃப்ளேக்ஸ்-க்ரெய்சின் குக்கீஸ்

காலை உணவுக்கு இட்லி-தோசை இவற்றுக்குத்தான் முன்னுரிமை என்றாலும் எப்பவாவது ஸ்னாக்-ஆக சாப்பிடவென்று கார்ன் ஃப்ளேக்ஸ் எப்பொழுதும் வீட்டில் இருக்கும். கொஞ்ச நாட்களுக்கு முன்பு கெலாக்ஸ் கார்ன் ஃப்ளேக்ஸ்-லிருந்து உலர் பழங்களை அறிமுகப்படுத்தினார்கள். கார்ன் ப்ளேக்ஸ் உடன் இன்ட்ரொடக்ஷன் ஆஃபராக குட்டிக்குட்டி பேக்கில் க்ரெய்சின்(உலர்ந்த க்ரான்பெரி பழங்கள்) வந்தன..பேக்கிலேயே அவற்றை உபயோகித்து ஒரு குக்கீ ரெசிப்பியும் இருந்தது.

ஒரு க்ரெய்சின் பேக் வந்ததுமே 'துறு துறு'ன்ன என் கை இரண்டாவது முறையும் அதே பழங்கள் வந்ததும் கம்முன்னு இருக்குமா? :) செய்து பார்த்துடலாம்னு களமிறங்கிட்டேன். ரெசிப்பியில் இருந்த அதே அளவுகள்,செய்முறை..வால்நட் மட்டும் கைவசம் இல்லாததால் சேர்க்கவில்லை. குக்கீஸ் மிகவும் நன்றாக இருந்தது.

தேவையான பொருட்கள்
ஆல் பர்ப்பஸ் ஃப்ளோர்-1கப்
பேக்கிங் பவுடர்-1/2டீஸ்பூன்
பேக்கிங் சோடா-1/2டீஸ்பூன்
உப்பு-1/4டீஸ்பூன்
சர்க்கரை-1/2கப்
(அறை வெப்பநிலையில்)வெண்ணை-1/3கப்
(அறை வெப்பநிலையில்)முட்டை-1
பால்-5டீஸ்பூன்
வெனிலா எஸன்ஸ்-1/2டீஸ்பூன்
கார்ன் ஃப்ளேக்ஸ் சீரியல்- 2 2/3கப்

செய்முறை
கார்ன் ஃப்ளேக்ஸை ஒன்றிரண்டாகப் பொடித்து வைக்கவும்.
மாவு,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா,உப்பு இவற்றை விஸ்கால் நன்றாக கலந்து வைக்கவும்.
ஒரு மிக்ஸிங் பவுலில் வெண்ணை-சர்க்கரை இவற்றை கலக்கவும்.சர்க்கரை கரையும் வரை கலக்கி, அத்துடன் முட்டை-பால்-வெனிலா எஸன்ஸ் சேர்த்து கலக்கவும்.
கலவை நன்றாக fluffy-ஆக வரும்வரை கலந்த பின் மாவு-பேக்கிங் பவுடர்-சோடா-உப்பு கலவையை சேர்த்து கலக்கவும்.
இறுதியாக உலர் பழங்களை சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
குக்கீ கலவையிலிருந்து சிறு உருண்டைகளாக எடுத்து பொடித்த கார்ன் ஃப்ளேக்ஸில் நன்றாகப் புரட்டி பேக்கிங் ட்ரேயில் போதுமான இடைவெளி விட்டு அடுக்கவும்.
375F ப்ரீஹீட் செய்த அவன்-ல் சுமார் 12 நிமிடங்கள் பேக் செய்து குக்கீ-க்களை நன்றாக ஆறவைக்கவும்.
ஸ்டெப்-பை-ஸ்டெப் படங்களுடன் ரெசிப்பியை காண இங்கே க்ளிக் பண்ணுங்க!

//
ஹாய் மகி எப்படி இருக்கிங்க.இந்த ரெசிப்பி பார்க்க ரொம்ப நல்லா இருக்கு..இந்த ரெசிப்பிய தமிழிலும் போடுங்களேன்//என்று சபீக்கா கேட்டிருந்தாங்க..அடுத்த வாரம் போடுகிறேன்னு சொல்லி,சொல்லி,சொல்லி.....ஒருவழியா இந்த வருஷமே(!!) போஸ்ட் பண்ணிட்டேன். :)
***********
Dry குலாப் ஜாமூன் ரெசிப்பியை அகிலாவின் "Dish Name Starts With D"ஈவன்ட்டுக்கு அனுப்புகிறேன்.


19 comments:

  1. This is a good one Mahi--crunchy crispy cookies !!

    ReplyDelete
  2. வழக்கம் போல் சூப்பர் மகி.

    ReplyDelete
  3. வரும்காலத்தில் பயன்படும்
    நோட் பண்ணிக்கிறேன்.

    எளிமையான பகிர்வு
    நன்றி மகி அக்கா

    ReplyDelete
  4. ஆஹா.. எது பின்னால ரெசிப்பி பாத்தாலும் அதைய சோதனை செய்து பாத்துடறதா? :)) பெரும்பாலான சோதனைகள்ல வெற்றி வாகை சூடிடறீங்க :)

    ம்ம்.. இது மாதிரி செஞ்சு வச்சுட்டா தினமும் சாயந்திரம் ஒன்னொன்னு சாப்பிடலாம் :) ஏக்கமா இருக்கு :)

    ReplyDelete
  5. மகி பார்க்கவே அத்தனை அழகாக இருக்கு குக்கீஸ்.கடையில் வாங்கியதைப்போல் ஒரே அளவாக..சூப்பர்.

    ReplyDelete
  6. நல்ல குறிப்பு. செய்துபாத்துடவேண்டியதுதான்

    ReplyDelete
  7. நல்லகுறிப்பு. வீட்ல பண்ணை வச்சுகிடா எப்ப வேணும்னாலும் கொறிச்சுகிட்டே இருக்கலாம்.

    ReplyDelete
  8. Mahi konjam engeyum anuppi vaiunga pls...
    Kurinji

    ReplyDelete
  9. மகி, நல்லா இருக்கு. என் அப்பாவுக்கு ஓட்ஸ் மீல் குக்கி மிகவும் பிடிக்கும். இந்த குக்கியும் அடுத்த முறை கனடா போகும் போது செஞ்சு குடுத்தால் மிகவும் சந்தோஷமா சாப்பிடுவார்.

    ReplyDelete
  10. http://asiyaomar.blogspot.com/2010/12/blog-post_29.html
    உங்களை தொடர் பதிவிற்கு அழைத்து இருக்கிறேன்.

    ReplyDelete
  11. மஹி.. குக்கீஸைப் பார்க்கும்போதே 'கறுக்கு மொறுக்குனு சாப்பிடற சத்தம் கேக்குது... அந்த அளவுக்கு க்ரிஸ்பி லுக்.. உங்கள மாதிரி ஒரு அண்டை வீட்டம்மா (அதாங்க நெய்பர்) கிடைச்சா நல்லாருக்கும்.. உங்க ட்ரை ஜாமூன் குறிப்பு எடுத்து வச்சிருக்கேன்.. செய்து பாக்கறேன்...நன்றி.

    ReplyDelete
  12. lovely cookies dear and thanks for sending the dry jamuns to my event mahi....

    ReplyDelete
  13. first time in your blog and it is wonderful...will be a regular from now on...great work.
    Reva

    ReplyDelete
  14. Cornflakes craisins combo sounds new to me! Nice cookies... :) Happy New Year :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails