அழகாய் இருந்தது. எவர்சில்வர் பாத்திரம் நல்ல கனமாய், க்யூட்டான ஆறு சிறிய கிண்ணங்களுடன் இருந்தது. அதைப் பார்த்ததும் முதலில் மனதில் வந்தது "இதிலே சூப்பரா மினி இட்லி செய்யலாமே!" என்ற எண்ணம்தான்! வாங்கலாமா வேண்டாமான்னு கொஞ்சம் குழம்பி வெற்றிகரமா வாங்கிட்டு வந்துட்டோம். :) :)
பொதுவா egg poach செய்ய 3-4 நிமிடங்கள்தான் வேகவைப்பாங்க. ஆனா இட்லி அந்நேரத்தில் வேகாதே? கிண்ணங்களில் கொஞ்சம் எண்ணெய் தடவி, இட்லி மாவை முக்கால்வாசி நிரப்பி, (கொஞ்சம் பயத்துடன்.. :) ) பத்துநிமிடம் வேகவைத்தேன்..
கிண்ணங்களை வெளியே எடுத்து வச்சு ஒரே நிமிஷத்தில் பூ மாதிரி அழகா, பிஞ்சு போகாம, முழுசா வந்தது இட்லி..கிண்ணம் எவ்வளவு க்ளீனா இருக்குன்னு போட்டோலயே தெரியுது பாருங்க! :)
நார்மல் இட்லிய விட கொஞ்சம் சின்னதா, மினி இட்லியைவிட கொஞ்சம் பெரிசா, அழகான இட்லிகள் செய்யமுடியுது. இட்லித்தட்டா இருந்தா தட்டிலிருந்து முழுசா இட்லிய எடுக்க 'கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத மாதிரி' காத்திருக்கணும். இதிலே அந்தத் தொந்தரவு இல்லை! ;)
ஆக மொத்தம் இம்பல்ஸிவ் பையிங் வேஸ்ட்டாப் போகலைன்னு என்னவர் காலரைத் தூக்கி விட்டுக்கிறார்! :) மினி இட்லி -சாம்பார் காம்பினேஷன் நல்லா இருக்கும், சாம்பார் வைக்க டைமில்லாததால் சட்னியுடன் சாப்ட்டோம்.
மினிஇட்லி - தேங்காய் சட்னி, சாப்பிடலாம் வாங்க! :)
சொல்லப்போனா, ஒரு வார இறுதியை காஸ்ட்கோவில் leisure-ஆகக் கழிக்கலாம். கடை முழுக்க சுத்திட்டு, அங்கங்கே ஸாம்பிள் கொடுக்கப்படும் தின்பண்டங்களையும் ருசித்துட்டே உலாவுனம்னா, இந்தமாதிரி சாமான்கள் கண்ணில் படலாம். ஸ்டோரிலிருந்து வெளியே வருகையில் அட்லீஸ்ட் 3-4 மணிநேரம் காலியாகிருக்கும்! ஆல் த பெஸ்ட்! :)
சூப்பரா இருக்கு. நாங்க BJ's க்கு தான் ரெகுரலா போவோம். காஸ்ட்கோ போனால் ஏதோ கொள்ளைக்காரர் ரேஞ்சுக்கு வாசலில் ஆயிரம் கேள்விகள். இந்த முறை கூரை வழியா போயாவது பார்க்கணும் போல இருக்கு.
ReplyDeleteரொம்ப க்யூட்டா பார்க்கவே அழகா இருக்கு இட்லி....அந்த எவர்சில்வர் பாத்திரமும் அழகா இருக்கு!
ReplyDeletecute idis mahi
ReplyDeleteneenga solra madhri min iidlies vida konjam perusa,normal idlies a vida chinnadha irukku,ntu above all the shape is so cute and different from our normal idlies :) No doubt,worth buying it :)
ReplyDeleteபாத்திரம் செம அழகா இருக்கு மகி!!
ReplyDeleteVery cute idlis, Mahi. Costco - desis' paradise :)
ReplyDeleteஆ... மகி, போனகிழமைதான் இதே சாமானைக் கண்டேன், வாங்கலாமா என நினைத்தவேளை, ஒட்டுமோ எனப் பயமாக இருந்ததால் யோசிச்சு வாங்கலாம் என விட்டுவிட்டேன், இதே முட்டை அவிக்கும் பாத்திரம்தான், ஆனா நான் பார்த்தது இதே குழிகள், அதிலேயே இருக்கு தூக்கி எடுக்க முடியாது.
ReplyDeleteஎனக்குத் தேவை குண்டுச் சட்டி, குண்டுத்தோசை(எண்ணெய் விட்டு பொரிப்பதுபோல செய்வதுக்கு), நீங்க அதைக் குழிப்பணியாரம் என்பீங்களென நினைக்குறேன், அதுக்குத்தான் தேடுறேன் கிடைக்குதில்லை:(.
உங்களுடையது சூப்பர்... அதுக்காக டெய்லி இட்லியே அவிக்காதீங்க... :((.
குழிப்பணியாரம் என்பீங்களென நினைக்குறேன்,//ஆமாம் அதிரா. குழிப்பணியாரம்னுதான் சொல்லுவோம். அந்த பாத்திரம் நான் ஊரில் வாங்கலை,இங்கேதான் வாங்கினேன். கிச்சன் திங்ஸ் மட்டுமே விற்கும் ஒரு கடையில் கிடைத்தது. இந்த ஊரிலே அதை "pan cake puff's pan" என்று சொல்றாங்க.
ReplyDeleteஇந்த லிங்க்-ஐ பாருங்க,நான் சொல்வது இந்த பணியாரக்கல் தான்! http://mahiarunskitchen.blogspot.com/search?q=paniyaram
//அதுக்காக டெய்லி இட்லியே அவிக்காதீங்க...//இதுவும் சரிதான். தொடர்ந்து 2-3 முறை செய்தேன்,போரடிச்சுடுச்சு.பத்திரமா எடுத்து வச்சிருக்கேன்.;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா!
மகி,
ReplyDeleteமினி இட்லி சூப்பர் ஆ இருக்கு. Impulsive buying definitely woth it!
இட்லி பார்க்கவே சாப்ட் டா இருக்கு. இப்போவே சாப்பிட வந்துடலாம் போல இருக்கு....
ReplyDeleteவானதி,ஈஸ்ட் கோஸ்ட்டில் இருக்கையில் ஒருமுறை BJ's-க்கு போயிருக்கேன். நாங்களும் பெரும்பாலும் காஸ்கோ போவதில்லை. கொஞ்சநாளாத்தான் இப்படி இம்பல்ஸிவ் பையிங் நடக்குது! ;)
ReplyDeleteஇந்தப்பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்துப்போய் வாங்கினேன்! நன்றி வானதி!
~~~
ப்ரியா,ஆமாங்க, பளிச்னு கண்ணுல படறமாதிரி வேற டிஸ்ப்ளே பண்ணியிருந்தாங்க.லபக்-னு எடுத்துட்டு வந்துட்டேன்!;) தேங்க்ஸ் ப்ரியா!
~~~
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெயஸ்ரீ!
~~~
ராஜி,ஆறு இட்லிதான் செய்யறதால் லேட் ஆகும்னு நினைச்சேன்,ஆனா சீக்கிரம் வேலை ஆகிடுது,பார்க்கவும் அழகா இருக்கு.
/No doubt,worth buying it :)/நீங்க இப்படி வேற சொல்லிட்டீங்களா,இதை என்னவர் படிச்சா இன்னும் கொஞ்சம் பெருமைப்பட்டுப்பார்! :):)
தேங்க்ஸ்ங்க!
~~~
மேனகா,நன்றி மேனகா!
~~~
மஹேஸ்அக்கா, அப்படியா சொல்றீங்க? ரெண்டுபேர் இருக்க குடும்பத்துக்கு காஸ்ட்கோல என்ன வாங்கறதுன்னே புரில. ;)நன்றி!
~~~
என் சமையல், தேங்க்ஸ்ங்க!
~~~
ப்ரியா,சாப்பிடவாங்க! :) தேங்க்ஸ் ப்ரியா!
wow
ReplyDeleteNice purchase at Castco.
Iddiyapartha appidiye sapidanam pola irrukku.
viji
looks perfect and cute dear :)
ReplyDeleteஅடபோங்கப்பா... நானும் வகை வகையா இட்லி தட்டு மாத்தியாச்சு.... இட்லி வந்துட்டாலும்... ஹ்ம்ம்... ஆட தெரியாதவ மேடை கோணல்னு சொன்னாளாம்னு பேச்சு வாங்கினது தான் மிச்சம்... :)).... நீங்க மினி, மைக்ரோ, மேஜர், ஜூனியர்னு எல்லா இட்லியும் கலக்குங்க அம்மணி...:))
ReplyDelete// ஸ்டோரிலிருந்து வெளியே வருகையில் அட்லீஸ்ட் 3-4 மணிநேரம் காலியாகிருக்கும்! // அப்படியே ஆகிற செலவையும் சொல்லியிருக்கலாம் :-))
ReplyDelete@அப்பாவி, உங்கள வெறுப்பேத்தவே பதிவு போட்டுருப்பாங்களோ மகி :-))
nalla idea! mini idli is reminding me of rasagolla too. So perfectly shaped! Chutney and round idlies :- perfect feast.
ReplyDeleteanga exercise machine-um irukaa? sample patharthangal saapitu erina calories-um korachukalaame! ;-)
ReplyDeleteவிஜிம்மா,சாப்பிடலாம் வாங்க. :)
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
தேங்க்ஸ் அருணா!
பழமொழி ஜூப்பர் அப்பாவி! வீட்டுக்கு வாங்க,நீங்க சொன்ன எல்லா இட்லியும் செய்துதரேன். :)
//அப்படியே ஆகிற செலவையும் சொல்லியிருக்கலாம் :-))//சுகந்திக்கா,நான் பெரும்பாலும் விண்டோ ஷாப்பிங்தான் அங்கே. ;) ஹிஹிஹி!
நல்லாவே நாரதர் வேலை பார்க்கறீங்க.:) நீங்க சொன்னதை அப்பாவி பார்க்கவேஏஏஏ இல்லியாம்! :)
நன்றி!
மீரா,சாம்பிள் எல்லாம் குட்டிக்குட்டி பீஸாதான் தருவாங்க,சாப்ட்டுட்டு கடைக்குள்ள நடக்கறதுலயே ஜீரணமாகிடும்.டோன்ட் வொரி! BTW,அங்கே எக்ஸர்ஸைஸ் மெஷின்ஸும் இருக்கு.:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!