Thursday, July 7, 2011

அரைத்துவிட்ட சாம்பார்-சுலப முறை

பொதுவாக அரைத்துவிட்ட சாம்பார் என்றால் கடலைப்பருப்பு,வரமிளகாய்,தனியா,சீரகம்,தேங்காய் இன்ன பிற பொருட்களை தனியாக வறுத்து அரைத்து சேர்த்துத்தான் செய்வது வழக்கம். மசாலா வதக்கி, அரைத்து,கரைத்து செய்ய நேரமும் பொறுமையும் இல்லாத சமயங்களில் அதே சுவையுடன் குறைந்த நேரத்தில் சாம்பார் வைப்பது எப்படின்னு பார்க்கலாமா?

0000*****0000
இந்த இடத்தில ஒரு முப்பது செகன்ட் விளம்பர இடைவேளை..யூட்யூப் போயி அவிங்கவிங்களுக்குப் புடிச்ச ஜிங்கிள்ஸ்-ஆ கேட்டுட்டு மறக்காம வந்துருங்க,சரியா?
அவ்வளவு பொறுமை இல்லையா..அப்ப இங்கயே பாருங்க..மொளகாப்பொடி விளம்பரம்தானேன்னு கோக்குமாக்காக் கேக்கக்கூடாது,இது சும்மா ஒரு சாம்பிள்தான்! ஹிஹிஹி!0000*****0000

தேவையான பொருட்கள்
வேகவைத்த துவரம்பருப்பு -1/4கப்
புளிக்கரைசல்-1/4கப்
தக்காளி(பெரியதாக)-1

சின்ன வெங்காயம்-10 (அல்லது பெரியவெங்காயம் -1)
பச்சைமிளகாய்-1
நடுத்தரதுண்டுகளாக நறுக்கிய (விருப்பமான) காய்-1/2கப்
மிளகாய்த்தூள்-11/2டீஸ்பூன்
மஞ்சள்த்தூள்-1/4 டீஸ்பூன்
சர்க்கரை-1/2டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்

கடுகு-1/2டீஸ்பூன்

பெருங்காயத்தூள்-1 சிட்டிகை
சீரகம்-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்தமல்லி இலை -சிறிது


அரைக்க

தேங்காய்-கால்மூடி

தனியா-11/2டீஸ்பூன்

செய்முறை

பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு-சீரகம்-பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம்-ப.மிளகாய்,தக்காளி சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் காயைச் சேர்த்து புளித்தண்ணீர்-மஞ்சள்த்தூள்-மிளகாய்த்தூள்-உப்பு சேர்த்து வேகவைக்கவும்.


தேங்காய்-கொத்துமல்லி விதையை கொஞ்சமாகத்தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து வெந்த காயுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.

வேகவைத்த பருப்பு,சர்க்கரை சேர்த்து ஒரு கொதி விட்டு, கொத்துமல்லி இலை தூவி இறக்கவும். கம-கம வாசனையுடன் சுவையான அரைத்துவிட்ட சாம்பார் ரெடி!

சாதம்-இட்லி-தோசை எல்லாவற்றுடனும் சூப்பராக மேட்ச் ஆகும் இந்த ஈஸி சாம்பார்.

*************

என்ன இது இம்புட்டு பவ்யமா(!) ஒரு போஸ்ட்டுன்னு நீங்கள்லாம் மூக்கு மேல விரல் வைச்சுரக்கூடாதேன்னு... அடுத்த போஸ்ட்டுக்கு ஒரு முன்னோட்டம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!

:))))))))))))

24 comments:

 1. சாம்பார் வைச்சு நாலுமணி நேரம் ஆகியும் ஒரு ஈ-காக்கா கூட வந்து கமென்ட் போடாத காரணத்தால் நானே கமென்ட் போட்டுக்கிறேன்.டோண்ட் மைண்ட் மக்கள்ஸ்!
  ;) ;) ;)

  ReplyDelete
 2. நான் வந்துட்டேன் மகி

  ReplyDelete
 3. வேறொண்னுமில்லை,உஙகள் முறைப்படி உங்கள் பிளாகில் பார்த்து பார்த்து சாம்பார் செய்து சாப்பிட்டுட்டு,ஒரு ஏவ்வ்வ்வ்வ்வ்..உடன் வருவாங்க நம்ம மக்கா.பொறுத்தருள்க.

  ReplyDelete
 4. எனக்கு சுத்தியலைப்பார்த்தால் பயமா இல்லை.தேங்காய் முழிக்கற் முழியை பார்த்தால் பயமாக இருக்கு.உங்கள் ஊர் தேங்காய் இப்படித்தான் டெரரா இருக்குமா மகி?

  ReplyDelete
 5. ஸாதிகாக்கா,வாங்க,வாங்கோ! நீங்க ஏப்பம் விட்ட சத்தம் கேட்டுது.டாங்க்ஸ்! ;)

  /தேங்காய் முழிக்கற் முழியை பார்த்தால் பயமாக இருக்கு/அவ்வ்வ்வ்! தேங்காயப்பாத்து பரிதாபப்படுவீகன்னு நினைச்சா பயப்படறீகளே?!

  //உங்கள் ஊர் தேங்காய் இப்படித்தான் டெரரா இருக்குமா மகி?//இது எந்த நாட்டில் காய்த்து இங்க வந்துதுன்னு நான் கவனிக்கல,அடுத்தமுறை பாத்து கரீக்ட்டா சொல்லிடறேன். ;)

  தேங்காய் இங்கே இப்புடித்தான் இருக்கு ஸாதிகாக்கா. முதல்ல பாத்து எனக்கு கொஞ்சம் சிரிப்பா வந்துது,இப்ப பழகிப்போச்சு. சுத்தியலுக்கு பயப்பட மாட்றீங்க,பெரிய வஸ்தாதா இருப்பீகளோ??!;) ;) ;)

  மூணு கமென்ட்டு போட்டு என்னை மகிழ்ச்சிக்கடலில் முத்துக்குளிக்க வைத்த ஸாதிகா அக்காவுக்கு நன்றி,நன்றி,நன்றி!
  [ஆரது அங்க? கொண்டாங்கப்பா ஒரு கோலி ஜோடா!!!]

  ReplyDelete
 6. I do some times with 50 50 mahi,both powders, but this is a nice idea,will try next time and see..

  ReplyDelete
 7. no no no mee the firstu....

  ReplyDelete
 8. noted with thank you,

  very good idea...

  ReplyDelete
 9. easy idea vaa irukke.... naanga thaniyaa and vara milagaai varuththu powder panni vachchuppom. adha konjam thengaai kooda pottu araiththu vendha paruppu koodave serththu mix panni sambar la kalandhu viduvom.

  thideernu blog open aachchu adhaan takkunu vandhu comment podaren.
  tamil la type pannaadhadhukku sorry mahi...

  ReplyDelete
 10. //Mahi said...

  சாம்பார் வைச்சு நாலுமணி நேரம் ஆகியும் ஒரு ஈ-காக்கா கூட வந்து கமென்ட் போடாத காரணத்தால் நானே கமென்ட் போட்டுக்கிறேன்//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால் மட்டும்தான் அழுவாங்க, மற்றவைக்கு வரும்போது காக்கா போயிடுவினம் கர்ர்ர்ர்ர்ர்ர்:)).

  பிறர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளருமாம்... பெரியவங்க சொல்லியிருக்காங்க:)).. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்.. நான் ரொம்ப நல்ல பொண்ணு... 6 வயசிலிருந்தே...:)))).

  ReplyDelete
 11. ஸாதிகா அக்கா சென்னையிலதானே இருக்கிறா..:)) சும்மா ஒரு எட்டு வந்து 3 பதிவு போட்டால் என்னவாம்? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))). கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க மகி.... அவ பார்த்தாவோ... காத்தில்லாட்டிலும் பறவாயில்லை என பின்னாலே வந்திடுவா... விண்வெளிக்கு அவ்வ்வ்வ்வ்வ்:))).

  ReplyDelete
 12. விண்கலத்தில வலதுகாலைத் தூக்கி வச்சனா... மகியின் குரலும் சாம்பார் மணமும் வந்துது... இப்போ சந்திரனா முக்கியம் மகிதானே என நினைச்சு திரும்பி வந்திட்டேன்...2 நாளால போயிடலாம் ஒண்ணும் அவசரமில்லை.

  ஊசிக்குறிப்பு:
  தெய்வானை அக்காவின் மஞ்சள் சாறி சூப்பராக இருக்கு.... நான் கட்டினாலும் அப்பூடித்தானே இருக்கும்? மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).

  ReplyDelete
 13. Very gud idea mahi,will try this method...thanks for sharing...

  ReplyDelete
 14. //தெய்வானை அக்காவின் மஞ்சள் சாறி சூப்பராக இருக்கு....//:)))))))))))) தெய்வானை அக்கா!!!! நல்லா சிரிச்சுட்டேன் அதிரா!
  எப்பூடி இப்பூடி எல்லாம் எழுதறீங்க? :D

  //நான் கட்டினாலும் அப்பூடித்தானே இருக்கும்?// 6 வயசா இருந்தாலும் 60 வயசா இருந்தாலும் கர்ள்ஸ் சாறியெல்லாம் கட்ட ஆசைப்படுவது இயற்கைதான்! :):)
  சின்ன பொண்ணுக்கு சாறியெல்லாம் எதுக்கு? அதே கலர்ல ஃப்ராக்(தவளை இல்ல,frock!) தச்சு போட்டுடலாம், நீங்க கண்டிப்பா தெய்வானையக்கா பொண்ணுங்களை(அவிங்க வயசுதானே நம்மளுக்கெல்லாம்,ஹிஹி) விட க்யூஊஊஊட்டா இருப்பீங்கோ! ;) ;)

  ReplyDelete
 15. இந்த இடத்தில ஒரு முப்பது செகன்ட் விளம்பர இடைவேளை..யூட்யூப் போயி அவிங்கவிங்களுக்குப் புடிச்ச ஜிங்கிள்ஸ்-ஆ கேட்டுட்டு மறக்காம வந்துருங்க,சரியா?//

  அப்படியே தேவயானிய பார்த்துக்கிட்டு இருந்ததுல கமெண்ட் லேட் ஆயிடிச்சு.. மன்னிச்சுக்கோங்க(நம்பிட்டீங்கள்ள?)

  ReplyDelete
 16. என்ன இது இம்புட்டு பவ்யமா(!) ஒரு போஸ்ட்டுன்னு நீங்கள்லாம் மூக்கு மேல விரல் வைச்சுரக்கூடாதேன்னு... அடுத்த போஸ்ட்டுக்கு ஒரு முன்னோட்டம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//  ஆஹா மகி கெளம்பிட்டாங்கையா கெளம்பிட்டாங்க! மாம்பழம் நறுக்குவது எப்படின்னு பதிவு போட்ட மாதிரி தேங்காய் உடைப்பது எப்படின்னு பத்தி போட போறீங்களோ? அப்படி ஏதாச்சும் ஐடியா இருந்தா தேங்காய் துருவுவது எப்படி ன்னு நான்தான் பதிவு போடுவேன் ஓகேயா?

  ReplyDelete
 17. அரைத்து விட்ட சாம்பார் நல்லா இருக்குங்க. நான் இதுவரைக்கும் இந்த மாதிரி செஞ்சு பார்த்ததில்லை

  ReplyDelete
 18. ராஜி,இந்த மெதட் எனக்கு ஈஸி & handy-யா இருக்கு. நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்க. :)
  நன்றி!
  ~
  சிவா,இந்த வீகென்ட்க்கு இட்லியும் சாம்பாரும் செய்து ரூம்மேட்ஸை அசத்திடுங்க,சரியா?
  தேங்க்ஸ் சிவா!
  ~
  ப்ரியா,டேஸ்ட்டை காம்ப்ரமைஸ் பண்ணாம எப்படில்லாம் வேலையக் குறைக்கலாம்னு யோசிச்சு இந்த மெதட் கண்டுபுடிச்சேனாக்கும்! நீங்களும் செய்து பாருங்க. தேங்க்ஸ்ப்பா!
  ~
  /பிறர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளருமாம்... பெரியவங்க சொல்லியிருக்காங்க:))./எனக்கு இப்போ நீங்க சொல்லித்தான் அதிரா தெரியும்! ;)
  நானும் என்னால முடிந்தளவு எல்லார் ப்ளாக்லயும் வடை வாங்கிட்டுத்தான் இருக்கேன். :) நேத்து நானே சாம்பார் வடைய எடுத்துகிட்டேன்.

  /கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க மகி.../படிச்சுட்டேன்,ஸாதிகா அக்கா வரதுக்குள்ளே கிழிச்சுடறேன். டோன்ட் வொரீ!;)

  அட,அட,அட! சந்திரனா-சாம்பாரான்னு சாலமன் பாப்பையா ரேஞ்சுக்கு பட்டிமன்றமே நடத்திருப்பீங்க போல? திரும்பி வந்து ப்ளாகுலகை ரட்சித்ததுக்கு அனந்த கோடி நன்றிகள் அதிரா! ;)
  ~
  செய்து பாருங்க ப்ரேமா,தேங்க்ஸ்ங்க.
  ~
  என் சமையல்,தெய்வானை அக்கான்னா உங்களுக்கு ரெம்ப பிடிக்கும் போல இருக்கு? நிதானாமா பாத்துட்டு கமென்ட் போடுங்க,ஒண்ணும் அவசரமில்லை!
  /தேங்காய் துருவுவது எப்படி ன்னு நான்தான் பதிவு போடுவேன் ஓகேயா?/பை ஆல் மீன்ஸ்!!;)
  எங்கிட்ட தேங்காதுருவி இல்லை,அதனாலே அந்த பார்ட்டை நீங்களே போடுங்கோ!

  இப்படி சாம்பார் வைச்சுப் பாருங்க,நல்லா இருக்கும்.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  ReplyDelete
 19. இன்னிக்கு தோசைக்கு இந்த சாம்பார்தான் செஞ்சேன் (செஞ்சு பார்த்துட்டு கமென்ட் போடறதுதான் நம் வழக்கம் )சூப்பரா இருந்துச்சி .
  அப்புறம் அடுத்த பதிவு இது தானே
  . தேங்காயை சமமா இரண்டா உடைப்பது எப்படி ? LOL!!!!ROFL!!!

  ReplyDelete
 20. இவ்வளவு quick feedback-ஆ? ரொம்ப சந்தோஷமா இருக்குங்க ஏஞ்சலின்! தேங்க்ஸ் எ லாட்! :) :)

  /தேங்காயை சமமா இரண்டா உடைப்பது எப்படி ?/ ஆஹா..எனக்கு அவ்வளவு பர்ஃபெக்ட்டா எல்லாம் தேங்கா உடைக்கத் தெரியாதுங்க. ;)

  // LOL!!!!ROFL!!!// இதை கன்டினியூ பண்ணுங்க அடுத்த வாரம் வரைக்கும்! :)

  ReplyDelete
 21. ;))

  குறிப்பு, படம், பின்னூட்டம் எல்லாத்துக்கும் சேர்த்து. ;)

  அது என்னமோ ஷேவ் பண்ணிட்டு இருக்கிற குரங்காட்டம் இருக்கு, ;) நிஜமாவே சுதியலாலதான் போடுவீங்களா!! பாவம். ;)

  அடுத்து வள்ளி வரப் போறா. ;))

  ReplyDelete
 22. //சாம்பார் வைச்சு நாலுமணி நேரம் ஆகியும் ஒரு ஈ-காக்கா கூட வந்து கமென்ட் போடாத காரணத்தால் நானே கமென்ட் போட்டுக்கிறேன்.//

  மசாலா விளம்பரத்துக்கு தான் ஏதாவது (ஹி..ஹி.. ) கிடைச்சிருக்குமே

  ReplyDelete
 23. கடைசி படத்தை பார்த்தா ஏதாவது மந்திரவாதி கதை வரும் போல தெரியுதே ஹா..ஹா..

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails