கொளுத்தும் வெயிலை உபயோகமாகப் பயன்படுத்திக்கொள்ள வடாம் பண்ணலாம் என்று -- வருடப் பொதுவாழ்வில்(!) முதல்முறையாக வடாம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினேன். சொல்லுகிறேன் காமாட்சி அம்மாவிடம் பல்வேறு சந்தேகங்களை மெயிலில் தட்டிவிட்டேன், அவங்களும் பொறுமையா எல்லாத்துக்கும் விளக்கம் அனுப்பினாங்க. வெற்றிகரமாக கருவடாம் தயாரானது. சாப்புடுங்க..சாரி, செய்முறையப் படிங்க,அப்புறமா வீட்டில் செய்து சாப்புடுங்க! ;)
பூசணி கருவடாம்
தேவையான பொருட்கள்உளுந்து-அரைகப்வரமிளகாய்-5
மிளகு-சீரகம் -தலா ஒரு டீஸ்பூன்
உப்பு
பூசணிக்காய்-சிறுதுண்டு~150கிராம்
(காயைத் துருவிப் பிழிஞ்சா நாலு கைப்பிடி வந்தது. போட்டோவில் தோல் மட்டும் இருக்கும், அதை அளவா வைச்சுக்குங்க! ரொம்ப குழப்புறேனோ? :) )
செய்முறை
பருப்பை களைந்து 4 மணிநேரம் ஊறவைக்கவும்.
பூசணிக்காயைத் துருவிக்கொள்ளவும்.
மிளகு சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்து வைக்கவும்.
பருப்பை நீரில்லாமல் வடித்து மிளகாய் சேர்த்து அரைக்கவும். பூசணித்துருவலை தண்ணீரில்லாமல் ஒட்டப்பிழிந்து பருப்புடன் சேர்த்து அரைக்கவும்.
அரைக்கையில் தண்ணீர் சேர்கக்கூடாது, பருப்பு அரைபடாவிட்டால் பூசணித்துருவலை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து அரைத்தால் அரைபடும்னு சொன்னாங்க, ஆனா பருப்பும் மிளகாயும் சும்மாவே அரைப்பட்டது,கடைசியில் பூசணித்துருவலை சேர்த்து 2 சுற்று அரைத்தேன்.
அரைத்த பருப்பு +பூசணி கலவையுடன் உப்பு, மிளகு சீரகப்பொடி சேர்த்துப் பிசைந்துகொள்ளவும்.
அகலமான தட்டில் ப்ளாஸ்டிக் பேப்பரை விரித்து சிறிது தண்ணீரால் பேப்பரை துடைத்துவிடவும்.
தயார் செய்த வடகக் கலவையில் இருந்து சிறிது சிறிதாக எடுத்து பேப்பரில் வைத்து நல்ல வெயிலில் காயவிடவும்.
ஒரு நாள் காய்ந்ததும், அடுத்த நாள் வடாம்களை திருப்பிப்போட்டு காயவிடவும். இங்கே அடித்த வெயிலில் இரண்டே நாளில் காய்ந்துவிட்டது. மூன்றாம் நாள் வேறு தட்டில் வடாமை மாற்றி மேலும் ஒரு நாள் காயவைத்தேன்.
வடாம் ரெடி! கூட்டு-தால்-குழம்பு வகைகள் செய்யும்போது எண்ணெயில் வடாத்தை பொரித்துவிட்டு, கடுகு தாளித்து சமையலைத் தொடரலாம். சாப்பிடும்போது வடாம் குழம்பில் ஊறி உளுந்துவடை போல சூப்பராக இருக்கும். :)
//ஏன் இவ்வளவு கஷ்டம் ...!!பேசாம உளுந்து வடையே குழம்புக்குள்ளே பிச்சு..பிச்சு...போட்டுட்டாஆஆஆஆ..... ஹா..ஹா...//ன்னு நீங்களும் யோசிக்கிறவரா இருந்தா..வடை இதோ!
டைரக்ட்டா வடையப் பிச்சு பிச்சு பிச்சு பிச்சு பிச்சுப் போட்டு என்சொய் பண்ணுங்க. என்ன ஒண்ணு, வடாம் பண்ணினா மாசக்கணக்கில் வைச்சு குழம்பில் போடலாம், வடைய ஒரு நாள்தான் வச்சு போடமுடியும். உங்க வசதிப்படி பண்ணிக்கலாம்,ஒண்ணும் பிரச்சனையில்ல! ;) ;)
~~~~
எங்க வீட்டில் சாதம்-வரமிளகாய்-சீரகம்-உப்பு சேர்த்து அரைத்துக் கிள்ளி கிள்ளி வைத்து வெயிலில் காயவைத்து எடுப்போம்,அதுதான் இதுவரைக்கும் எனக்குத் தெரிந்து வீட்டில் செய்த வடகம். மற்றபடி கடைகளில் விதவிதமாக வெங்காய வடகம்-தக்காளி வடகம்-ஸ்டார் வடகம்-மஞ்சக்கலர் குடல்(!) வத்தல் என்று பலவகையில் கிடைக்கும்.ஸ்கொயர் ஸ்கொயரா இருக்கும் வெங்காயம்/தக்காளி வடகம் எனக்கு ரொம்ப பிடிக்கும், அது எதிலே செய்வது..எப்படி செய்வது என்று தெரியலை, தெரிந்தால் சொல்லுங்க. ஜவ்வரிசிதான் என்று நினைக்கிறேன்,ஆனா வடகத்தில் ஜவ்வரிசி இருப்பதே தெரியாது..அப்பளம் மாதிரி ப்ளெய்னா இருக்கும்,ஆனால் சதுர வடிவம். (நல்லா தெளிவாக் குழப்பியாச்சு, என்ன சொல்லவரேன்னு எனக்கு புரியுது..ஆனாப் படிக்கறவங்களுக்குப் புரியுதா????!)
அதனால் ஜவ்வரிசி வடாமில் தக்காளி சேர்த்து அடுத்த ட்ரையல்! :)
தக்காளி - ஜவ்வரிசி வடாம்
தேவையான பொருட்கள் ஜவ்வரிசி-1/2கப்
தக்காளி-2
எலுமிச்சம்பழம்-1
வரமிளகாய்-8
பெருங்காயத்தூள்-1/2டீஸ்பூன்
உப்பு-1/2டேபிள்ஸ்பூன்
செய்முறை
ஜவ்வரிசியை களைந்து முதல்நாள் இரவே ஊறவைக்கவும்.
தக்காளி-மிளகாயை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
எலுமிச்சம்பழத்தை பிழிந்து சாறுஎடுத்து வைக்கவும்.
தக்காளி-மிளகாய் கலவையுடன் 4 கப் தண்ணீர் கலந்து அடிகனமான பாத்திரத்தில் வைத்து கொதிக்கவிடவும்.
தக்காளி கலவை நன்கு கொதிவந்ததும் ஜவ்வரிசியை நீரில்லாமல் வடித்து சேர்க்கவும். அடிபிடிக்காமல் கிளறிவிட்டு சுமார் 12-15 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
ஜவ்வரிசி வெந்ததும் இறக்கி எலுமிச்சைசாறு, உப்பு,பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து, கலவையை வேறு பாத்திரத்துக்கு மாற்றி ஆறவைக்கவும்.
அகலமான தட்டில் ப்ளாஸ்டிக் ஷீட் விரித்து நீர் தடவி தயாராக வைக்கவும். வடாம் கலவை கை பொறுக்கும் சூடுக்கு ஆறியதும் கரண்டியால் (அ) ஸ்பூனால் சிறிய வட்டங்களாக ஊற்றவும்.
(வடாம் கலவையை முழுவதும் ஆறவிட்டால் இறுகிவிடும். அப்படி ஆகிவிட்டால் சிறிது நீர் விட்டு கரைத்து வடாமாக இட்டுக்கொள்ளலாம்)
வடாம் ஓரளவு (1-2 நாட்கள், உங்க ஊர் வெயிலைப் பொறுத்து! :)) காய்ந்ததும் கவனமாக உரித்து எடுத்து திருப்பிவிட்டு நன்றாக காயவிடவும். வழக்கம்போல எனக்கு 2 நாட்களில் காய்ந்துவிட்டது.வடகமெல்லாம் நன்கு காய்ந்ததும் காற்றுப் புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.
ஜவ்வரிசி வடாமை எண்ணெயில் பொரிக்கும்போது கவனமாகப் பொரிக்கவேண்டும். சட-சடவென்று சத்தம் போட்டுக்கொண்டு பொரியும்..எண்ணெய் தெறிக்கும் வாய்ப்பும் உண்டு. ஜாக்ரதையாப் பொரிச்சு சாப்டுங்கோ! :)
தக்காளிப் புளிப்பு பத்தாதோ என்று எலுமிச்சைச்சாறு சேர்த்தேன், வடாம் கொஞ்சூண்டு புளிப்பா இருந்தது போல இருந்தது. அடுத்தமுறை தக்காளி மட்டும் சேர்த்து செய்து பார்க்கவேண்டும்.
என்ன..எங்கே கிளம்பிட்டீங்க..வடாம் போடவா??வெரிகுட்...மறக்காம இங்கே ஒரு கமென்ட்டையும் போட்டுட்டுப் போங்க! நன்றி! ;) ;)
mee the firstu...
ReplyDeleteok ellam vadamum parcel panidungooo
ReplyDeletesathoromo,circlo ethuva erunthalum all 1kg parcel...
ReplyDeleteExcellent Vadam,using Pusanikkai really good idea...perfect Vadam.
ReplyDeleteசிங்கைக்குப் பக்கத்துலயா நியூசிலாந்து இருக்கு!! மீ தி செகண்ட். ;)
ReplyDelete//சிறிது தண்ணீரால் பேப்பரை துடைத்துவிடவும்.// இது எனக்குத் தோணுறதே இல்ல. அடுத்த தடவை நினைவு வச்சுக்கணும்.
//எனக்கு புரியுது..ஆனாப் படிக்கறவங்களுக்குப் புரியுதா????!) // புரியுது, புரியுது. ஜவ்வரிசி வடாம்தானே! என்னிடம் ஒரு கதையே இருக்கு வடகம் பற்றி. ;))
இவ்வளவு டீடெய்லா சொல்லிக் கொடுத்ததுக்கு நன்றி.
ஹும்! ஜஸ்ட் மிஸ்ட்!
ReplyDeleteமகி ஜீன் மாதம் அவள் விகடனில் "கண்களில் விரியும் கவிதை பூக்கள்"- நீங்க தானே ?
ReplyDeleteமகி..... வடாம் எல்லாம் சூப்பர் ரா இருக்கு. கத்தரிக்காய், கடலைக்காய் போட்டு கூட்டு பன்னரச்ச கடைசில கருவடாம் பொரிச்சு போட்டு செய்தால் உப்பு, காரம் ஒரச்சிண்டு சூப்பர் ரா இருக்கும். எங்க நாத்தனார் விட்டுக்காரர் கருவடாம் பொரிச்சு கொடுத்தா அப்படியே சாப்பிட்டுடுவார். வத்த கொழம்புக்கு கூட கருவடாம் போடலாம். தக்காளி வடாம் எல்லாம் எங்க வீட்டுல பண்ணது இல்லை. மாம்பலம் சாரதாஸ்-ல வடாம் எல்லாம் நல்லா இருக்கும். அங்க வாங்கி செய்து சாப்பிட்டு இருக்கேன். புதினா வடாம் கூட அங்க கிடைக்கும். ரொம்ப நல்லா இருக்கும். தக்காளி வடாம் நீங்க செய்து இருக்கீங்களே இதே மாதிரி தான் புதினா வடாம் பண்ணனும்னு நினைக்கிறேன். ரொம்ப நல்ல ட்ரை. நல்லா பண்ணி இருக்கீங்க.
ReplyDeleteஹர்ஷினி அம்மா,ஆமாங்க அது நானேதான்! புக்ல இருந்து ஸ்கான் பண்ணி ப்ளாக்ல போஸ்ட் பண்ணிருந்தேன்,நீங்க டைரக்ட்டா புக்ல பாத்திட்டீங்க போல? :)
ReplyDeleteதேங்க்ஸ்ங்க!
சிவா,ஒவ்வொரு டிஷ்-ம் பார்சல் பண்ணற காசுக்கு ஒரு டுவே டிக்கட்டே புக் பண்ணி குடுக்கறேன்,வீட்டுக்கு வந்துட்டுப் போங்க! ;) :) தேங்க்ஸ் சிவா!
ReplyDeleteப்ரேமா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
இமா,நீங்க ரெகுலரா வடகம் செய்வீங்க போல..நான் இதான் முதல்முறை,அதான் கவனமா செஞ்சிருக்கேன். :) கதை இருக்கா..எழுதுங்க எழுதுங்க!
நன்றி இமா!
ப்ரியா,அடுத்தமுறை குழம்பு செய்யும்போது போட்டுப்பார்க்கிறேன்..சூப்பரா கதை சொல்லிட்டீங்க போங்க! புதினா வடாம் கூட இருக்கா?? நான் இப்பதான் கேள்விப்படறேன்.
தேங்க்ஸ் ப்ரியா!
வடாம் வகைகளும் படங்களும் அருமை மக். இங்கு வெயில் காலம் போயே போச்சு.:-(
ReplyDeleteboth the recipes sounds interesting and nice effort u have made
ReplyDeleteமகி வடாம் அருமை...அதைவிட உங்களுக்கு ரொம்ப பொறுமை...எல்லாத்தையும் எப்படிப்பா அழகாக வைத்து போட்டோ எடுக்குரீங்க எப்போடா வேலை முடியும்னு இருக்கும்போது இதை போட்டோ எடுத்துவிட்டு அப்புரம் எல்லாத்தையும் செய்யுரீங்க.ரொம்ப பொருமைப்பா உங்களுக்கு.
ReplyDeleteவடாமை சில்வெர் ஃபாயில்ல போட்டு வெயில்ல வெச்சீங்களா இல்லை அவன்ல வெச்சீங்களா??? இல்லை எல்லாம் அவனோட ட்ரேவா இருந்ததா அதான் கேட்டேன்.
அடடா! இரண்டு நாட்களா வெயில் இல்லை.தூரல் போடுது,மகி எப்படியும் அடுத்த வாரம் பூசணி வடாம் செய்து பார்க்கனும்.படங்கள் அழகு.!!
ReplyDeleteமகி, உங்கள் வடாம் போஸ்ட் படித்ததும் என் மனது ஒரு இனிய பின்னோட்டம் செய்து பார்த்தது. குழந்தை மற்றும் விடலை பருவத்தில் காக்கை இடமிருந்து காப்பாற்ற என்னை காவலுக்கு வைக்க, அரைகுறையாய் காய்ந்த வடாம் / கருவடாம் எனது "Favourite " ஆனது. கரும்பு தின்ன கூலியா வேணும். இந்த அடுக்கு குடியிருப்பு வாழ்கையில் வடாம் காயவைக்க வசதி இல்லை என்றாலும் கனத்த வடாம் செய்து, அதில் சுட்டெண்ணை தடவி சாபிட்டுகொண்டே எனது பழைய நினைவுகளையும் அசைபோடுவேன். உங்கள் வடம் தயாரிப்பு பார்க்க பார்க்க நாக்கில் எச்சில் ஊற வைக்கிறது.
ReplyDeleteYou have so much patience mahi! Now u made me guilty, I grab few varieties from my mom and few from my MIL ;)
ReplyDelete//சாப்பிடும்போது வடாம் குழம்பில் ஊறி உளுந்துவடை போல சூப்பராக இருக்கும். :)//
ReplyDeleteஏன் இவ்வளவு கஷ்டம் ...!!பேசாம உளுந்து வடையே குழம்புக்குள்ளே பிச்சு..பிச்சு...போட்டுட்டாஆஆஆஆ..... ஹா..ஹா...
//(வடாம் கலவையை முழுவதும் ஆறவிட்டால் இறுகிவிடும். // கொஞ்சம் வாஸலைன் சேர்த்து பாருங்க அப்படியே அல்வா மாதிரியே இருக்கும் :-))))
ReplyDelete//தக்காளிப் புளிப்பு பத்தாதோ என்று எலுமிச்சைச்சாறு சேர்த்தேன், வடாம் கொஞ்சூண்டு புளிப்பா இருந்தது போல இருந்தது. அடுத்தமுறை தக்காளி மட்டும் சேர்த்து செய்து பார்க்கவேண்டும்.//
ReplyDeleteவினிகர் போட்டுப்பாருங்க :-))
வடாம்ன்னு சொன்னா பெரும்பாலும் வெங்காயம் இருக்குமேஏஏ....!! :-))
படங்கள், வடகம் சூப்பர். அடிக்கிற வெய்யிலுக்கு நாங்களே வடகம், வத்தல் ரேஞ்சுக்கு போயிடுவோம் போல இருக்கே. எங்க வீட்டில் இதெல்லாம் ட்ரை பண்ணவே முடியாது. வெய்யிலில் வைச்சுட்டு நானும் பக்கத்திலிருந்து காயணும். இல்லைன்னா முயல், skunk இப்படி பல ஜந்துக்கள், மிருகங்கள் புழங்கும் இடம் இது.
ReplyDeleteநிதானமா இப்பதான் பாத்தேன் மகி. உன் வடாம் மோதிரக்கையாலே பிரமாதமா எங்கேயோபோய் உட்கார்ந்து கருத்துகளை குவித்துக்கொண்டிருக்கிறது. செய்வன திருந்தச் செய்யும் பெண் என்றால் மகி என்று ஒரு அர்த்தம் இருக்கும் போலும்.
ReplyDeleteஉபசார வார்த்தை இல்லை இது. பல விதங்களில் வியப்பு எனக்கு.
ஜெவ்வரிசி, புளிப்பு காரம் இரண்டுமே அதிகம் தாங்காது. எலுமிச்சை சாறு வடாம்களுக்கு பளிச் என்ற வெண்மையையும் கொடுக்கவல்லது. வடாம் இட ஆரம்பித்து விட்டால் போதும் என்ற எண்ணமே தோன்றாது. மேலும் மேலும் இட ஆர்வம் தோன்றும்.
படங்கள் அருமை.
வடாம் எல்லாம் சூப்பரா இருக்கு...
ReplyDeleteபடங்கள் அருமை.
Wow Mahi, awesome! You are so talented.
ReplyDeleteஆஹா மகி !!!!வடாம் சூப்பரா இருக்கே .
ReplyDeleteஇங்கே வெயில் கண்ணாமூச்சி விளையாடுது .நல்லா வெயில் வரும்போது
செய்து பார்க்கிறேன் .
ஸாதிகாக்கா,வெயில் போன சோகத்தில் என் பேரைக் கொஞ்சம் கட் பண்ணிட்டீங்களோ? ;)
ReplyDeleteகோடைக்கொண்டாட்டத்தில் அடுத்த பகுதி உங்க தயவுதான்! :) அதுக்கும் சேர்த்து இப்பவே நன்றி சொல்லிடறேன்!
ஜெயஸ்ரீ,நன்றிங்க! :)
/எப்போடா வேலை முடியும்னு இருக்கும்போது இதை போட்டோ எடுத்துவிட்டு அப்புரம் எல்லாத்தையும் செய்யுரீங்க./கொயினி,எல்லாம் ஒரு ஆர்வம்தாங்க! ;)
எனக்கு சிலநேரம் நீங்க சொல்வது போல சலிப்பா இருக்கும்,அப்பல்லாம் போட்டோ எடுக்கமாட்டேன்! மத்தபடி அப்பப்ப எடுக்கிறதுதான்.
/ரொம்ப பொருமைப்பா உங்களுக்கு./நீங்க ரொம்ப தப்புக்கணக்குப் போடறீங்க! 24/7 எங்கூடவே இருக்கும் ஒரு ஆளைக்கேட்டாத்தான் உண்மை தெரியும்! ஹிஹி!
/வடாமை சில்வெர் ஃபாயில்ல போட்டு வெயில்ல வெச்சீங்களா இல்லை அவன்ல வெச்சீங்களா???/வடாம் காயவைத்தது எல்லாம் பேக்கிங் தட்டுக்கள்தான்,ஆனா வெயில்லதான் காயவைச்சு எடுத்தேன், அவன்-ல வைக்கலைங்க.
நன்றி கொயினி!
ஆமாங்க ராதா,கோவையிலும் மழை- சென்னையிலும் மழை-அருப்புக்கோட்டையிலும் மழை!:) மழை விட்டதும் செய்து பாருங்க.நன்றி!
மலரும் நினைவுகள் அருமைங்க மீரா! ;) வடாமுக்கு காவல் இருந்த அனுபவமெல்லாம் எனக்கு இல்ல. கருவடாம அப்படியே சாப்புடுவீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்!
ReplyDelete/கனத்த வடாம் செய்து, அதில் சுட்டெண்ணை தடவி சாபிட்டுகொண்டே /இது கொஞ்சம் புரில!சுட்டெண்ணை-ன்னா??!!
சிட்-அவுட், பால்கனிலல்லாம் வெயில் வராதா? அடுத்த சம்மருக்கு ட்ரை பண்ணிருங்க! நன்றி மீரா!
ராஜி,நான் கண்ணன் டிபார்ட்மென்ட் ஸ்டோர்ல இருந்துதான் வாங்கிட்டுவரணும் வடாம்! உங்களுக்கு ஹோம்-மேட் வடாம் கிடைக்குதே,அப்புறம் என்ன? :)
நன்றி ராஜி!
/ஏன் இவ்வளவு கஷ்டம் ...!!பேசாம உளுந்து வடையே குழம்புக்குள்ளே பிச்சு..பிச்சு...போட்டுட்டாஆஆஆஆ..... ஹா..ஹா.../வடை சுட்டு வைச்சுட்டேன் ஜெய் அண்ணா, பேஷ்,பேஷ்,ரொம்ப நன்னார்க்கா? ;)
ReplyDelete/கொஞ்சம் வாஸலைன் சேர்த்து பாருங்க அப்படியே அல்வா மாதிரியே இருக்கும் :-))))/கரீக்ட்டு,இருட்டுக்கடை அல்வா மாதிரியே வந்துது. வாழையிலைல சுத்தி துபாய்க்கு அனுப்பிருக்கேன்,பார்சல் வந்துட்டே இருக்கு,வாங்கி ருசியுங்க! :) :))))))
/வினிகர் போட்டுப்பாருங்க :-))/தமாஷ் இல்ல, குக்கிங் வினிகர் இருக்கு! :)
/வடாம்ன்னு சொன்னா பெரும்பாலும் வெங்காயம் இருக்குமேஏஏ....!! :-))/இருக்கும்,இருக்கு!! அது கோடைக்கொண்டாத்தில் அடுத்த ரிலீஸ்!
நன்றி ஜெய் அண்ணா!
/அடிக்கிற வெய்யிலுக்கு நாங்களே வடகம், வத்தல் ரேஞ்சுக்கு போயிடுவோம் போல இருக்கே./ஹாஹா!காமெடியில ஆளுக்கு ஆள் மிஞ்சறாங்கப்பா! :))))))
/இதெல்லாம் ட்ரை பண்ணவே முடியாது./மனமிருந்தால் மார்க்கமுண்டு! வடாம் மேல இன்னொரு ப்ளாஸ்டிக் ஷீட்டால் கவர்பண்ணி காயவைக்கலாம். ;)
அதுமில்லாம நீங்க சொல்ற ஆளுங்களுக்கெல்லாம் நம்ம உணவு டேஸ்ட் புடிக்காது. கொஞ்சமா ட்ரை பண்ணிப்பாருங்க வானதி!
நன்றி ப்ரியா!
ReplyDeleteமஹேஸ் அக்கா,ஹிஹி,ரெம்ப கூச்சமா இருக்கு! ;) தேங்க்ஸ்க்கா!
ஏஞ்சலின், வெயில் வந்ததும் செய்துபாருங்க. உங்க pet hamster சாப்ட்டுரப்போறார்,ஜாக்ரதையா செய்யுங்க! ;)
நன்றி!
//இருட்டுக்கடை அல்வா// ;)))
ReplyDeleteMahi your dish is delicious, I know of curry leaves, I'd love to have them, a prepración really good, I want to know which country you are? and how's your other writing, I like your kitchen, are very rich threads or donuts, hugs.
ReplyDeleteரொம்ப அருமை மகி...நானும் போன இரண்டு வருடங்களாக வாடம், வடகம் எல்லாம் மேனகாவின் தயவால் போட்டேன்....இந்த வருடம் அந்த பக்கமே போகவில்லை...
ReplyDeleteயாருமே எண்ணெயில் பொரித்த இதனை சாப்பிடுவதில்லை...அதனால் இந்த வருடம் no வடாம் என்று நினைத்தால்..இப்படி எல்லாம் ஆசையினை காட்ட கூடாது...
சரி..நானும் கிளம்புகிறேன்...எங்கேயா...எல்லாம் வடாம் செய்யலாம் என்று யோசனையில் தான்...
நான் இன்று காலையில் பார்க்கும் பொழுது வெரும் பூசிணிக்காய் தான் போட்டு இருந்திங்க....அப்பறம் மற்றதினை add செய்திங்களா....
ReplyDeleteநல்ல வேலை அப்பவே comment போட்டு இருந்தால்...எல்லாவற்றையும் மிஸ் செய்து இருப்பேன்....
Great job Mahi!
ReplyDeleteமொதல்ல வெளி நாட்டுல வந்தும் வடாம் எல்லாம் செஞ்சு பார்க்கிற உங்களுக்கு ஒரு சபாஷ்! நான் வடாம் எல்லாம் சாப்பிடுறதோட சரி..நீங்க நல்லா விளக்கமா குறிப்பு கொடுத்து இருக்கீங்க!
ReplyDelete//ரொம்ப பொருமைப்பா உங்களுக்கு./நீங்க ரொம்ப தப்புக்கணக்குப் போடறீங்க! 24/7 எங்கூடவே இருக்கும் ஒரு ஆளைக்கேட்டாத்தான் உண்மை தெரியும்! ஹிஹி! //
வீட்டுக்கு வீடு வாசப்படி விடுங்க. நான் என் வீட்டு வாசப்படிய சொல்லலங்க பக்கத்து வீட்டு வாசப்படிய சொன்னேன் ?? எனக்கு நெறைய்ய்ய எருமை ஒ ஓ சாரி அகைன் ஸ்பெல்லிங் mistake பொறுமை. பூமாதேவிக்கு ட்வின் சிஸ்டேராக்கும் நான் !!
காலையில ஒரு கமெண்ட் போட்டா அதுல பாதிதான் உங்க ப்ளோக்ல வந்து இருந்திச்சு அதனால அந்த கம்மெண்ட delete பண்ணிட்டேன். .
இமா,உங்களுக்கும் அல்வா அனுப்பணும்னா சொல்லுங்க,கொஞ்சம் மீதி இருக்கு,அனுப்பறேன். ;)
ReplyDeleteRosita,I am from India. Thanks a bunch for your lovely words. Nice to know that you like curry leaves. Curry leaves enhances the taste of Indian Recipes.keep visiting my kitchen. Thanks! :)
/நான் இன்று காலையில் பார்க்கும் பொழுது வெரும் பூசிணிக்காய் தான் போட்டு இருந்திங்க....அப்பறம் மற்றதினை add செய்திங்களா..../கீதா,அந்தக் காமெடிய ஏன் கேட்கறீங்க..முதலில் ஒரு வடாம்,அப்புறம் ரெண்டாவது, அப்புறம் உளுந்தவடைன்னு சேர்த்துட்டேஏஏஏ இருந்தேன். ;)
எண்ணையில் பொரிச்சு சாப்பிடணும்ங்கறது யோசிக்க வேண்டிய பாயின்ட்டுதான்,முதல்முறை செய்வதால் என்த்து-வா செய்யறேன்,பார்ப்போம்.
பொரிக்கிறதுக்கு எதாச்சும் குறுக்குவழி கண்டுபிடிக்கவேண்டியதுதான்.
தேங்க்ஸ் கீதா!
என் சமையல்,நன்றிங்க. நான் ஊர்ல இருக்கையில் இந்தப்பக்கமெல்லாம் போனதே இல்ல. இங்கேதான் ஆர்வக்கோளாறு வந்து உங்களை எல்லாம் காய்ச்சிட்டு இருக்கேன்.;)
குசும்பு கமென்ட்டெல்லாம் ப்ளாகரே பாதி கடிச்சு தின்னுருதோ..அதான் உங்க கமென்ட்டு காணாமப் போயிருச்சோ?!!!! பாருங்க இப்ப கூட ஏதோ எருமை,ட்வின் ஸிஸ்டேர்னெல்லாம் சொல்றீங்க,பாத்து பூகம்பம் வந்துரப்போகுது!:) :)
நன்றிங்க!