நறுக்கிய ப்ரோக்கலிப் பூக்கள்-11/2 கப்
கடலைப்பருப்பு,துவரம்பருப்பு,பாசிப்பருப்பு மூன்றும் சேர்த்து-1/4கப்
வரமிளகாய்-6
பெருங்காயத்தூள்-1/4டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை-1கொத்து
உளுந்துப்பருப்பு-11/2 டீஸ்பூன்
எண்ணெய்(ஆலிவ் ஆயில்)-3 டேபிள்ஸ்பூன்
உப்பு
செய்முறை
பருப்புகளை அலசி ஒருமணி நேரம் ஊறவைக்கவும்.
ப்ரோக்கலிப் பூக்களை தண்ணீர் தெளித்து மைக்ரோவேவில் 3 நிமிடங்கள் வேகவைத்து, சிலநிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து தேவையான உப்பு சேர்த்து கலந்து மீண்டும் ஒரு நிமிடம் மைக்ரோவேவில் வேகவைத்து எடுத்துவைக்கவும்.
வரமிளகாய்-தண்ணீரில்லாமல் வடித்த பருப்புகள்-பெருங்காயத்தூள்-உப்பு சேர்த்து கொறகொறப்பாக அரைத்துக்கொள்ளவும். (தண்ணீரில்லாமல் அரைத்தால் நல்லது, அரைபடவில்லையென்றால் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து அரைக்கலாம்.)
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் காயவைத்து கடுகு,உளுந்து, கறிவேப்பிலை தாளித்து பருப்பு பொன்னிறமானதும் அரைத்த பருப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும்.
அடுப்பை குறைந்த சூட்டில் வைத்து, மீதியிருக்கும் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பருப்புக்கலவை வேகும்வரை வதக்கவும்.
வெந்த ப்ரோக்கலிப் பூக்களை சேர்த்துக் கிளறவும்.
பச்சைப்பயறு +சாதம்+ப்ரோக்கலி உசிலி...ஹெல்ப் யுவர்செல்ஃப்! ;)
இதுவரை பீன்ஸில்தான் உசிலி செய்து கொண்டிருந்தேன், ப்ரோக்கலியிலும் உசிலி செய்யலாம் என்று ஐடியா கிடைத்தது இங்கே. நன்றி வர்தினி! :)
Thanks Mahi!
ReplyDeleteHealthy and delicious..
ReplyDelete//நறுக்கிய ப்ரோக்கலிப் பூக்கள்//
ReplyDeleteஅப்ப ப்ரோக்கலி இல்லையா...ப்ரோக்கலி பூவா? அது எங்க ஊர்ல கிடைக்காதுங்க...:)) (எப்படி எல்லாம் சமையல்ல இருந்து தப்பிக்க வேண்டி இருக்கு...:))
//வரமிளகாய்//
நம்ம ஊர்ல இப்படி தானே மகி சொல்லுவோம்... இங்க எல்லாரும் கிண்டல் பண்றாங்க என்னை... காஞ்ச மொளகா, சிவப்பு மொளகானு சொல்லணுமாம்... :))
ப்ரோகலியிலும் உசிலி செய்தாச்சா?பேஷ்..
ReplyDeleteப்ரோக்கலி உசிலி சூப்பரா இருக்கு!!
ReplyDeletewow, nice way to use broccoli, appuram........idli panjaatta irukku, super
ReplyDeleteபிரொக்கோலி உசிலி சூப்பரா இருக்குங்க. எப்படி இந்த ஐடியா எல்லாம் தோணுது ...ரூம் போட்டு யோசிப்பீங்களோ??.
ReplyDeleteப்ரோக்கலி ரொம்ப ஹெல்தின்னு தெரியும்! அதற்காக பிரெஞ்சு சமையல் முறைபடிதான் அடிக்கடி செய்துகிட்டு இருப்பேன். இப்போ சாதத்தோடு சாப்பிட சூப்பர் குறிப்பு கொடுத்து இருக்கிங்க, நன்றி மகி!
ReplyDeleteஉசிலின்னு ஒரு டிபன் இருக்கு மகி.... செய்து பார்த்து இருக்கீங்களா. என்னோட தம்பிக்கு புடிச்ச டிபன் அது. காய் ல செய்யறது எல்லாம் பருப்பு உசிலினு சொல்லுவாங்கனு நினைக்கிறேன்.... உங்க ப்ரோக்கலி பருப்பு உசிலி காய் அருமையா இருக்கு....
ReplyDeletemaking usili with broccoli sounds interesting mahi.parkavae supera irruku
ReplyDeleteNice way to make broccoli... I still cant eat broccoli but my kid loves it!
ReplyDeleteVery nice recipe,luks so tempting...sure will try.
ReplyDeleteaha! pachai thotame okandhuturikara maathiri irukku. Perfectly cooked brocolli with the protein combination, yummy usili.
ReplyDeleteதேங்க்ஸ் கீதா!
ReplyDeleteநித்து,நன்றி நித்து!
/அப்ப ப்ரோக்கலி இல்லையா...ப்ரோக்கலி பூவா?அது எங்க ஊர்ல கிடைக்காதுங்க...//ஐ,பொய்,பொய்!! நேத்து உங்க தம்பி(வில்லியம்ஸ்)யப் பார்க்க அரையடி ஜரிகை போட்ட மயில் கழுத்துக்கலர்பட்டுப்பொடவை உடுத்திட்டு,மேட்சிங்கா தலைல வச்சுட்டு போனீங்களே,அதே பூ தான் புவனா! லைவ் டெலிகாஸ்ட் எங்கூர் டிவிலவந்துதே, நாங்கூட இங்கருந்து உங்களைப் பாத்து டாட்டா காமிச்சேனே,அப்ப லிப்ஸ்டிக் கலையாம சிரிச்சுட்டு இப்ப இப்பூடி சொன்னா எப்பூடி? :)))))
/நம்ம ஊர்ல இப்படி தானே மகி சொல்லுவோம்... /எக்ஸாக்ட்லி! :)
இங்கயும் யாரும் நம்மளமாதிரி சொல்லறதில்ல புவனா. ஆனா டைப் பண்ணும்போது நம்ம வழக்கமா சொல்றதுதானே வருது. சிரிக்கறாங்களா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லுங்க அவிங்ககிட்ட! ;)
நன்றீ !
ஸாதிகா அக்கா, ஒண்ணரை கிலோ ப்ரோக்கலி(முழுசா இல்ல) பூக்கள் மட்டுமே வாங்கிட்டு வந்தாங்கன்னா உசிலி உட்பட எல்லாமும் செய்யவேண்டியதுதான்,என்ன சொல்றீங்க? ;)
ReplyDeleteநன்றி!
நன்றி மேனகா!
வேணி உங்க கமென்ட்டைப் படிச்சதும் கோயமுத்தூரே போயிட்டு வந்தமாதிரி கூலா இருக்கு.:) நன்றி வேணி!
ரூமெல்லாம் போட்டு யோசிக்கலைங்க, போஸ்ட்லயே சொல்லிருக்கேனே..எல்லாம் அங்கங்கே உலவும் வலைப்பூக்கள்ல கிடைக்கற ஐடியாதேன்!;) நன்றீங்க!
ப்ரியா,இப்படியும் செய்துபாருங்க,நல்லா இருக்கும். தேங்க்ஸ் ப்ரியா!
/உசிலின்னு ஒரு டிபன் இருக்கு மகி./அப்படியா ப்ரியா? ரெசிப்பி தாங்களேன்.
/காய் ல செய்யறது எல்லாம் பருப்பு உசிலினு சொல்லுவாங்கனு நினைக்கிறேன்../ஓ..அதும் எனக்குத் தெரியாது,நீங்க சொன்னப்புறம் மாத்திட்டேன்.தேங்க்ஸ்!
ஜெயஸ்ரீ,டேஸ்ட்டும் நல்லா இருக்கும்,செஞ்சு பாருங்க.நன்றி!
ராஜி,சாப்பிட்டுப் பழகிட்டா ப்ரோக்கலி புடிச்சுரும் உங்களுக்கு. நம்ம ஊர் சமையல்ல செய்து பாருங்க,சூப்பரா இருக்கும்! தேங்க்ஸ் ராஜி!
ப்ரேமா,தேங்க்ஸ் ப்ரேமா!
மீரா,எனக்கும் இந்த மஞ்சள்-பச்சை கலர் காம்பினேஷன் ரொம்ப பிடிக்கும்.:)
நன்றிங்க.
Hi Mahi brocoli usili superb...ippodhaan seythu mudithen adhee soottoodu comment kodukkiren.romba nalla irukku ithuvarai intha brocoliyai vechu ippadilaam seyyanumnu thoniyadhee illai.nalla idea kodutheengka.Thanks thanks.
ReplyDeleteப்ரோக்கலி உசிலி செய்து பார்த்து கருத்தும் சொன்னதுக்கு மிக்க நன்றி கொயினி! உங்களுக்கு பிடிச்சிருந்தது ரொம்ப சந்தோஷம்! :)
ReplyDeleteநல்லா இருக்கு. ஆனா //ஹெல்ப் யுவர்செல்ஃப்! ;)// நல்லா இல்லை. ;( படத்தை வச்சு என்ன பண்றது!
ReplyDeleteMahi,
ReplyDeleteYou should have given the receipee when I was there.
Here no broceli.
Seeing your post nakku oouruthu.
Sapedanumpola irrukku.
viji
மகி என் ஆத்துக்காரர் ப்ரோக்கலி என்ன இன்னைக்கு புது அவதாரம் எடுத்து வந்து இருக்கு.எந்த ப்லாக்ல புடிச்ச இந்த ரெசிப்பியை ....அப்படின்னு கேட்டுட்டு நல்லா இருக்குன்னும் சொல்லிட்டார்.யாரு அந்த கார் ட்ரைவிங் லைசென்ஸ் பற்றி எழுதினாங்களே அவங்களோல ரெசிப்பியானு கேட்டு தெரிஞ்சுகிட்டார்.வெண்டைக்காய் காரக்குழம்பு வைத்துவிட்டு ப்ரோக்கலி உசிலி செய்தேன் காமினேடிஒன் நல்லா இருந்தது கொஞ்சம் ப்ரோக்கலியை நல்லா உதிர்த்தும் விட்டேன் மகி.
ReplyDeleteஉலகத்தின் ஒரு மூலைல நான் லைசென்ஸ் வாங்கினது யு.கே.வரையிலும் பிரபலம் ஆகிடுச்சா? :) ;) உங்க ஆத்துக்காரருக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்சொல்லிருங்க கொயினி! :)
ReplyDeleteப்ரோக்கலிய குழைய வேகவைச்சுடாதீங்க, கொஞ்சம் க்ரன்ச்சியா இருந்தா டேஸ்ட் நல்லா இருக்கும்,அதுல இருக்க சத்துக்களும் வீணாகாது.
நன்றி கொயினி!
Oh ok mahi Thanks.
ReplyDelete