Thursday, July 21, 2011

அமுதென்பதா,விஷமென்பதா?

அமுதென்பதா,விஷமென்பதா...அமுதவிஷமென்பதா?

காதலைப் பற்றி தொடர்பதிவு எழுதச்சொல்லி அதிரா அன்பாக அழைத்திருந்தார். என்ன எழுதுவது, எங்கே ஆரம்பிப்பது, எங்கே முடிப்பது எதுவும் தெரியவில்லை! :)

ஒருநாள் காலை டூயட்-படத்தில் இருந்து பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தேன்..அஞ்சலி செய்து, மெட்டுப்போட்டு, குண்டுக்கத்தரிக்காயாகி, கடைசியாக "என் காதலே என் காதலே என்னை என்ன செய்யப்போகிறாய்?" என்று எஸ்.பி.பி. கேட்க ஆரம்பித்தார்.

எனக்குத் தெரிந்த வட்டத்தில் சிலுவைகள் தந்த காதலை அதிர்ஷ்டவசமாக நான் இதுவரை பார்க்கவில்லை. எங்கள் குடும்பம்/நண்பர்கள் பலருக்கு சிறகுகளைதான் காதல் தந்திருக்கிறது. எல்லாரும் சந்தோஷமாகப் பறந்துகொண்டிருக்கிறோம். :)

சிலவிஷயங்களை "இது நல்லது, இது கெட்டது" என்று அறுதியிட்டு கூற முடியாது..காதலும் அவற்றில் ஒன்று. காதல் தவறான விஷயம் என்றால் சங்ககாலம் தொட்டு இன்றைய ஹைடெக் யுகம் வரை சிரஞ்சீவியாக எப்படி அது வாழ்ந்துகொண்டிருக்கிறது? இல்லை, காதல் மட்டுமே சரியானது என்றால், மொட்டிலேயே கருகும் இளைஞர்களின் வாழ்வுக்குப் பொருள் என்ன?

ஒவ்வொருவர் வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகள், அனுபவங்கள், இன்பதுன்பங்கள் இவையே காதல் பற்றிய அவர்களின் அளவுகோலாக இருக்கிறது. இதனால் காதல் ஏமாற்றம் தருமா-தராதா,சரியா-தவறா, செய்யலாமா-கூடாதா என்று ஆராய்ச்சி செய்யாமல் அது பாட்டுக்கு இருக்கட்டும் என்று விட்டுவிடுவோமே! ;)

என்னைப் பொறுத்தவரை காதல் அமுதாகத்தான் இருந்திருக்கிறது,இருந்துகொண்டிருக்கிறது, இருக்கும்! (அதற்காக விஷமில்லை என்று நான் சொல்லவில்லை.;)) பெற்றோர் பார்த்து இணைத்தாலும் சரி, பிள்ளைகள் பார்த்து முடிவு செய்தாலும் சரி, இன்னார்க்கு இன்னார் என்று எழுதிவைத்தானே தேவன் அன்று! அதுதான் நடக்கும். அமைந்த வாழ்க்கையை வளமாக வைத்துக்கொள்வது அவரவர் கையில்!உங்களுக்குக் காதல் பிடித்தாலும்,பிடிக்காவிட்டாலும் இந்தப் பாட்டைப் பாருங்க..ஸோனு நிகம், அனுராதா ஸ்ரீராம் குரல்கள் -ஏ.ஆர்.ரஹ்மான் இசை-ஐஸ்வர்யா ராய் நடனம் எல்லாமே அழகா இருக்கும்! :)

இதுவரை என்னை அழைத்த தொடர்பதிவுகள் எல்லாவற்றையும் முடிந்தவரை எழுதியிருக்கிறேன், இதையும் ஒரு மாதிரியா எழுதிப் பூசி மெழுகிவிடலாம்னு எழுதிட்டேன். என் மனதில் பட்டதைச் சொல்லியிருக்கேன், படித்துப் பிடித்தால் சந்தோஷம், பிடிக்கலைன்னா அது உங்க உரிமை! ஒவ்வொருவருக்கும் values வித்யாசப்படும் இல்லையா? ;)

நன்றி!

14 comments:

 1. //இதையும் ஒரு மாதிரியா எழுதிப் பூசி மெழுகிவிடலாம்னு எழுதிட்டேன்// பூசி மெழுக மகி கிட்டேதான் டியூஷன் எடுத்துக்கணும்.சூப்பர்ப்.

  ReplyDelete
 2. பாட்டில் வந்ததுதானானாலும் உங்கள் சிறகுகள், சிலுவைகள்... சுபர்ப்.

  பூசி மெழுவெல்லாம் இல்லை. உங்கள் எண்ணத்தை உள்ளது உள்ளபடி சொல்லி இருக்கிறீர்கள். அழகாக எழுதி இருக்கிறீர்கள் மகி, பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. சாரி நான் சின்ன பிள்ளையாக்கும்
  ...

  ReplyDelete
 4. கிரிக்கெட்டில ஓவர் த்ரோன்னு ஒன்னு இருக்கும் . அந்த கேப்பில ஒரு ரன் ஓடி எடுத்துடுவாங்க .. என்ன சொல்ல வறீங்கன்னு சொல்றது மாதிரி சொல்லாம எஸ்கேப்... :-))

  தாள் பட பாட்டு சூப்பர்..
  ஆனா அதில அனில் கஃபூர் நிலைமைதான் பரிதாபம் ...அவ்வ்வ்
  (( ஏமாற்றியது ஐஸ் ))

  ReplyDelete
 5. //அமைந்த வாழ்க்கையை வளமாக வைத்துக்கொள்வது அவரவர் கையில்!//Love is like a mustard seed;
  planted by God
  and watered by men.

  உங்கள் கருத்தை தெளிவா அழகா சொல்லியிருக்கீங்க மகி .

  ReplyDelete
 6. சிலவிஷயங்களை "இது நல்லது, இது கெட்டது" என்று அறுதியிட்டு கூற முடியாது..காதலும் அவற்றில் ஒன்று. காதல் தவறான விஷயம் என்றால் சங்ககாலம் தொட்டு இன்றைய ஹைடெக் யுகம் வரை சிரஞ்சீவியாக எப்படி அது வாழ்ந்துகொண்டிருக்கிறது? இல்லை, காதல் மட்டுமே சரியானது என்றால், மொட்டிலேயே கருகும் இளைஞர்களின் வாழ்வுக்குப் பொருள் என்ன?

  புரிதல் தவறானால் எதுவுமே பிழையாகும் .

  பகிர்வுக்கு நன்றி சகோ

  ReplyDelete
 7. சிலருக்கு அமுதம். சிலருக்கு விஷம். நல்லா இருக்கு.
  நானும் எழுதணும் கொஞ்சம் தயக்கமா இருக்கு. என் உறவின்ரகளும் என் ப்ளாக் பார்ப்பதால் எதையாவது எழுதி தொலைக்க, அவர்கள் என் வாழ்க்கை கதையாக இருக்குமோ என்று நினைக்க....

  ReplyDelete
 8. //பெற்றோர் பார்த்து இணைத்தாலும் சரி, பிள்ளைகள் பார்த்து முடிவு செய்தாலும் சரி, இன்னார்க்கு இன்னார் என்று எழுதிவைத்தானே தேவன் அன்று! அதுதான் நடக்கும். அமைந்த வாழ்க்கையை வளமாக வைத்துக்கொள்வது அவரவர் கையில்!//  ரொம்ப ரொம்ப கரீக்டா சொன்னீங்க. " வேரென நீ இருந்தால் வீழ்ந்திடாது நான் இருப்பேன்னு" ஒரு பாட்டிலே வரும். இது எனக்கு ரொம்ப பிடிச்ச வரி.


  ஈகோ வ கோ கோ அப்படின்னு வெரட்டி விட்டு, ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுத்து வாழ்ந்தாலே இன்ப லக்ஷ்மி நம்மள விட்டு அங்க இங்க இன்ச் நகர மாட்டா :))


  ஜீன்ஸ் படத்துல S V சேகர் " எனக்கு ஒரு பொண்ணுன்னா ஒரு பொண்ணு ரெண்டு பொண்ணுன்னா ரெண்டு பொண்ணுன்னு " கொழப்பி இருப்பாரு. உங்க பதிவு படிச்சிட்டு எனக்கு ஏன் இது ஞாபகத்துக்கு வருதுன்னு தெரியலையே ?? உங்களுக்கு ஏதாச்சும் தெரியுது ??

  ReplyDelete
 9. ஸாதிகாக்கா,டியூஷன்தானே? எடுத்திடறேன்,எப்ப வரீங்க? ;) நன்றி ஸாதிகாக்க்கா!

  இமா,எழுத நினைப்பதை எழுதிட்டேன்,படிப்பவர்கள் அவரவர்க்கு தேவையானதைப் புரிந்துக்க வேண்டியதுதான்!;) பாடல் உங்களுக்குப் பிடித்ததில் சந்தோஷம்,நன்றி இமா!

  /சாரி நான் சின்ன பிள்ளையாக்கும்
  .../உங்க ப்ரொஃபைல் போட்டோவைப் பாத்தாலே தெரியுதே,போற இடத்திலெல்லாம் இதையும் வேற சொல்லணுமா சிவா? :)


  //என்ன சொல்ல வறீங்கன்னு சொல்றது மாதிரி சொல்லாம எஸ்கேப்... :-))//ஹிஹிஹி! ஜெய் அண்ணா,குறிப்பறிதல்-னு சொல்லுவாங்களே, அப்புடித்தான் இதுவும்!

  எனக்கு பாடல் மட்டுமே பரிச்சயம்,படம் பார்க்கலை ஜெய் அண்ணா! நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். :)
  நன்றி!

  ஏஞ்சலின்,உங்க பொன்மொழி நல்லாஇருக்குங்க.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  கருத்துக்கு நன்றிங்க திரு.M.R.!/புரிதல் தவறானால் எதுவுமே பிழையாகும்/ காதல் பற்றிய புரிதல் தவறு என்பதை எப்படித் தீர்மானிக்கிறீர்கள் என்பது ஒவ்வொருவரின் மனநிலைக்கு ஏற்ப வித்யாசப்படும் இல்லையா? அதைத்தான் பதிவில் சொல்லமுயற்சித்தேன்.

  நீங்க எதைப்பற்றிய புரிதலை சொல்றீங்கன்னு எனக்கு தெரியல,நன்றிங்க! :)

  /என் உறவின்ரகளும் என் ப்ளாக் பார்ப்பதால் எதையாவது எழுதி தொலைக்க, அவர்கள் என் வாழ்க்கை கதையாக இருக்குமோ என்று நினைக்க..../ :))) அப்ப ஜாக்கிரதையா எழுதுங்க வானதி! ;) நன்றி!

  கிரிஜா,//ஈகோ வ கோ கோ அப்படின்னு வெரட்டி விட்டு, ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுத்து வாழ்ந்தாலே இன்ப லக்ஷ்மி நம்மள விட்டு அங்க இங்க இன்ச் நகர மாட்டா :)) //அட,அட,அட!ஒரு வாசகம்னாலும் திருவாசகமா சொல்லிட்டீங்க! :)

  //உங்க பதிவு படிச்சிட்டு எனக்கு ஏன் இது ஞாபகத்துக்கு வருதுன்னு தெரியலையே??// :)

  நன்றிங்க!

  ReplyDelete
 10. நல்லாயிருக்கு

  ReplyDelete
 11. ஆ..... மஹி... பூசி மெழுகினாலும் அழகாக மெழுகிட்டீங்க.. என் அழைப்பை ஏற்றுத் தொடர்ந்தமைக்கு முதலில், மிக்க நன்றிகள்.

  தலைப்பு சூப்பர்.

  ஒரு மரத்தில் பூக்கும் எல்லாப் பூவும் காய்ப்பதில்லை, காய்ப்பதெல்லாமே பழமாவதில்லை, பழமாகியதெல்லாம் பயன்படுவதில்லை.... சிலதை அணில், வெளவால் கச்சுப்போடும்....:))(இது விதி).

  உங்கள் பார்வையிலிருந்து அழகாக எடுத்துச் சொன்னமைக்கு ஒரு ஜேஏஏஏஏஏஏஏ.

  ReplyDelete
 12. வான்ஸ்ஸ் //என் உறவின்ரகளும் என் ப்ளாக் பார்ப்பதால் எதையாவது எழுதி தொலைக்க, அவர்கள் என் வாழ்க்கை கதையாக இருக்குமோ என்று நினைக்க.... ///

  நாம் எழுதுவதெல்லாம் நம் வாழ்க்கையாகிடுமோ.... பயப்படாதீங்க... அடுத்தவர்கள் நினைப்பதை நாம் தடுக்க முடியாது. நானும் முன்பு பயப்படுவதுண்டு, இப்போ கொஞ்சம் ஞானம் பிறந்திருக்கு:), அதனால இப்படியான பயம் குறைஞ்சிருக்கூஊஊஊஊஊஉ:)).

  ReplyDelete
 13. ரியாஸ்,நன்றி!

  அதிரா,நன்றி! சூப்பர்-டூப்பர் தத்துவங்களா சொல்றீங்க! :) பார்ப்போம்,நீங்க குடுத்த தைரியம் வான்ஸ்-ஐ எழுத வைக்குதான்னு! :)

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails