கொண்டைக் கடலை குழம்பு..எப்பவும் வைக்கும் முறையிலிருந்து கொஞ்சம் வேறு மாதிரி முயற்சித்தேன். மிளகு-சோம்பு சேர்த்து அரைத்ததால் புது ருசியாய் இருந்தது. ஒரிஜினல் ரெசிப்பி இங்கே. நன்றி வனிதா!
ஸ்டெப் பை ஸ்டெப் படம் இதோ..
ஊரிலிருந்து கொண்டுவந்த அன்னபூர்ணா ரசப்பொடி தீர்ந்துபோய் ரசப்பொடி அரைக்கவேண்டிய நேரம் வந்தது. ஜலீலாக்காவின் குறிப்பைப் பார்த்து வறுத்து அரைத்துவைத்திருக்கேன். அந்நேரம் கறிவேப்பிலை இல்லாததால் அது மட்டும் சேர்க்கலை.
ரசப்பொடிக்கு படத்தில் உள்ள பொருட்களை (ஸ்பூனில் இருப்பது வெந்தயப்பொடி) எல்லாம் வறுத்து அரைச்சுக்கணும், தக்காளிபுளிக் கரைசலுடன் ஒரு டீஸ்பூன் ரசப்பொடிய சேர்த்து கொதிக்கவிட்டு, பருப்புத்தண்ணி சேர்த்து நுரைகட்டினதும் இறக்கி, கடுகு-சீரகம்-பூண்டு தாளிச்சுக் கொட்டி, கொத்துமல்லி தழையும் போட்டா கமகம ரசம் ரெடி! நான் அரை ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக்கறது வழக்கம். :)
~~
ராக்ஸ் கிச்சனிலிருந்து செய்த பூண்டு சட்னி..காரசாரமாய் சுர்ர்ர்ருன்னு சூப்பரா இருந்தது(அடுத்த முறை கொஞ்சம் காரத்தை குறைச்சுக்கணும்! ;)) . அவங்க சொல்லிருந்த அளவுடன் கொஞ்சம் புளி மட்டும் சேர்த்து அரைத்தேன், நன்றாக இருந்தது. நன்றி ராஜி!
~~
செலவு ரசம்,எங்க ஊர் ஸ்பெஷல்! :) வீட்டில் அம்மா வைக்கும்போதெல்லாம் திரும்பிக் கூடப் பார்த்ததில்லை, இங்கே வந்து சுகந்திக்கா ப்ளாகில் பார்த்து செய்தேன், அருமையாய் இருந்தது.ஸ்டெப் பை ஸ்டெப் படம் இதோ..
தூதுவளை இருந்தால் அதையும் அரைச்சு ரசத்துடன் சேர்த்து கொதிக்கவிடலாம்,
சளி-காய்ச்சல் இப்படி உடல்நலக்குறைவுக்கு இந்த ரசம் ரொம்ப நல்லது, . ரெசிப்பிக்கு இங்கே க்ளிக்குங்க.
~~சளி-காய்ச்சல் இப்படி உடல்நலக்குறைவுக்கு இந்த ரசம் ரொம்ப நல்லது, . ரெசிப்பிக்கு இங்கே க்ளிக்குங்க.
ரசப்பொடிக்கு படத்தில் உள்ள பொருட்களை (ஸ்பூனில் இருப்பது வெந்தயப்பொடி) எல்லாம் வறுத்து அரைச்சுக்கணும், தக்காளிபுளிக் கரைசலுடன் ஒரு டீஸ்பூன் ரசப்பொடிய சேர்த்து கொதிக்கவிட்டு, பருப்புத்தண்ணி சேர்த்து நுரைகட்டினதும் இறக்கி, கடுகு-சீரகம்-பூண்டு தாளிச்சுக் கொட்டி, கொத்துமல்லி தழையும் போட்டா கமகம ரசம் ரெடி! நான் அரை ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக்கறது வழக்கம். :)
நீங்களும் செய்துபாருங்க! ரெசிப்பி இங்கே.
வித்தியாசமாகத்தான் இருக்கு மகி.
ReplyDeleteபடபடன்னு அஞ்சு சமையல், குறிப்பெல்லாம் லின்க்ல. ம்... அதென்ன பேர்.. செலவு ரசம்னு!! கோவை ஸ்பெஷலா?
ReplyDeleteஒரே ரச வாசமா இருக்கே.. சூப்பர்.
ReplyDeleteகொண்டைக்கடலையில் சுண்டல் மட்டும்தேன் செய்வோம்... கறி செய்வதில்லை... ஆருக்குமே பிடிக்காது.
மியாவ்... எனக்குப் பிடிக்கும். ;)
ReplyDeleteரெசிபி நல்லா இருக்கு மகி. கொண்டைக்கடலை எனக்கு ரொம்ப பிடிக்கும். சப்பாத்திக்கு பாதி நாள் கொண்டைக்கடலை தான் சைடு டிஷ். ஊர்ல சரவண பவனில் சாப்பிட்ட புட்டு கொண்டைக்கடலை ssssssssssss ஊரு ஞாபகம் வந்திருச்சே
ReplyDeleteஎல்லா ரெஸிபிஸும் அருமை.....சூப்பர்ப்...
ReplyDeleteசூப்பரோ சூப்பர். செய்து பார்க்க வேணும்.
ReplyDeleteஎல்லாமே சூப்பர்ர் ரெசிபியா இருக்கு..
ReplyDeleteஐந்து ரெஸிபிகளும் அருமை.செய்து பார்கிறேன்.
ReplyDeleteரஸித்து ருசித்தவை அல்லவா. ரஸனையுடன் செய்து வேறுகாட்டியிருக்கிராய். இப்படி நடுநடுவே செய்து ருசித்தால் போகிரது.நல்ல தேர்வும், பகிர்வும்.
ReplyDeleteஎல்லாமே அருமை. மேலே கமென்ட்டும் என்னிதுதான்
ReplyDeleteஸாதிகாக்கா,நன்றி!
ReplyDelete/படபடன்னு அஞ்சு சமையல்,/ கர்ர்ர்ர்ர்! தலைப்புதான் 5-ஆம் பகுதி.உள்ளே 4 குறிப்புதான் இமா இருக்குது. படம்பார்த்து கதையா? கர்ர்ர்!
நன்றீ! :)
அதிரா,ரசம் உங்களுக்கும் பிடிக்குமா? செய்துபாருங்க. கருப்பு கொண்டைக்கடலைதான் என்னவருக்கு பிடிக்கும்,இப்படி கறி செய்து தோசை-இட்லிக்கு சைட் டிஷா சாப்பிட்டுப்பாருங்க,சூப்பரா இருக்கும்.நன்றி அதிரா!
/மியாவ்... எனக்குப் பிடிக்கும். ;)/ :)
நன்றீங்க கீதா!
கிரிஜா,பாதிநாள் சப்பாத்தி-கொ.க?? அவ்வ்வ்வ்! எங்க வீட்டில் மாதமொருமுறை செய்தாத்தான் குழம்பு காலியாகும்,அடிக்கடி செஞ்சா என்னவர் சாப்பிடமாட்டார்,கொ.க மேலே அவ்வ்வ்வ்வ்வளவு பிரியம் அவருக்கு! :)
ReplyDeleteநன்றிங்க!
கீதா,வானதி,மேனகா,ராதாராணி செய்துபாருங்க.நான் செய்து எனக்குப் பிடித்த சமையல்கள் மட்டுமேதான் ப்ளாகில் போடுவேன்,அதனால் தைரியமா முயற்சிக்கலாம்! ;)
நன்றிங்க
காமாட்சிம்மா, நீங்க பேரைச் சொல்லாட்டியும் உங்க எழுத்திலிருந்தே நான் கண்டுபிடிச்சிருவேன்,நன்றிம்மா!
வீங் எண்ட் ரஸம் ஸ்பெஷலா :-)) என் ஜாய் :-)
ReplyDeleteThanks for trying out Mahi... :)
ReplyDelete