Thursday, August 11, 2011

காண்ட்வி ரெசிப்பி & முன்கதை

தேவையான பொருட்கள்
கடலைமாவு -1/4கப்
தயிர்-1/4கப்
தண்ணீர்-1/2கப்
மஞ்சள்த்தூள்-1/8டீஸ்பூன்
பச்சைமிளகாய்-இஞ்சி பேஸ்ட்-1டீஸ்பூன்
சர்க்கரை-1/2டீஸ்பூன்
உப்பு
தாளிக்க
எண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
வெள்ளை எள்-1 டீஸ்பூன்
மேலே தூவ
தேங்காய்த்துருவல்-11/2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்துமல்லி இலை -11/2டேபிள்ஸ்பூன்

செய்முறை
அகலமான எவர்சில்வர் தட்டு (அ) அலுமினியம் ஃபாயில் பேப்பரில் எண்ணெய் தடவி தயாராக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நன்றாக கடைந்த தயிர், கடலைமாவு, தண்ணீர், மஞ்சள்தூள்,பச்சைமிளகாய்-இஞ்சி பேஸ்ட்,உப்பு,சர்க்கரை இவை அனைத்தையும் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும்.

அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கடலைமாவுக் கலவையை கை விடாமல் கிளறவும். மாவு கட்டி தட்டிவிடாமல் கிளறிட்டேஏஏஏ இருக்கணும். :)

சுமார் 10-15 நிமிடங்களில் கடலைமாவு வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும். அப்பொழுது மாவை எடுத்து எண்ணெய் தடவிய தட்டின் ஒரு ஓரத்தில் வைத்து, தோசை திருப்பி(அ) flat-ஆன கரண்டியால் மெல்லியதாக ஒரே சீராகத்தடவி விடவும்.

2-3 நிமிடங்களில் மாவுக்கலவை ஆறிவிடும். கத்தியால் 11/2" அகலமுள்ள துண்டுகளாக நறுக்கிவிடவும்.

நறுக்கிய துண்டின் ஓரத்தை எடுத்து பாய் சுருட்டுவது போல சுருட்டவும்.

கீழுள்ள படத்தில் இருப்பது அலுமினியம் ஃபாயில் பேப்பரில் தடவிய கடலைமாவு கலவை. எவர்சில்வர் தட்டுகளில் தடவி சுருட்டுவதுதான் ட்ரெடிஷனல் முறையாம். ஆனா நம்ம கிட்ட அவ்வளோ பெரிய தட்டுக்கள் இல்லாததால் இப்படி எண்ணெய் தடவிய ஃபாயில் பேப்பர் (அ) எண்ணெய் தடவிய கிச்சன் டேபிள் டாப்லயும் தடவி கட் செய்து எடுக்கலாம்.

சுருட்டிய காண்ட்விகளை பரிமாறும் தட்டில் அடுக்கவும்.

எண்ணெய் காயவைத்து கடுகு-எள் தாளித்து காண்ட்வி மீது ஊற்றிவிட்டு, தேங்காய்த்துருவல்-கொத்துமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

சுவையான காந்த்வி/கான்ட்வி/காண்ட்வி :))) ரெடி!

குறிப்பு
  • கடலைமாவை கட்டியில்லாமல் கரைப்பது முக்கியம். மாவை சலித்து உபயோகிக்கலாம்.
  • மாவு வேகும்போது ஒரு செக்கன்ட் அங்கே இங்கே திரும்பினீங்கன்னாலும் கட்டி விழுந்திரும், ஜாக்கிரதையாக் கிண்டுங்க! இதான் கொஞ்சம் கஷ்டமான பார்ட்டு! (மைசூர்பாவே கிண்டறவங்க, இதைக் கிண்டமாட்டோமா என்ன? ;) )
  • அதே போல கடலைமாவு நன்கு வந்திருந்தால்தான் ஃபாயில் பேப்பரில் இருந்து சுருட்ட முடியும். வேகாம இருந்தா மாவு பேப்பரைவிட்டு வராது! ஆல் த பெஸ்ட்டூஊஊஊ!
/செஞ்சது சரி...!!!! அது நல்லா இருந்துச்சுன்னு சொன்னாறா அதான் கேள்வியே ஹி...ஹி..!!/ என்று டவுட்டு கேட்ட ஜெய் அண்ணாவுக்காக சுடச்சுட இப்ப பத்து நிமிஷம் முந்தி செய்த காண்ட்வி! ருசி நல்லா இல்லைன்னா அடுத்தவாரமே மறுபடி செய்திருக்கமாட்டேன்! கர்ர்ர்ர்ர்ர்! அடுத்தமுறை செய்யும்போது காலியான தட்டையும் போட்டு எல்லாரையும் கடுப்பேத்தறேன், இப்போ டவுட்டு கேட்டு டைமை வேஸ்ட் பண்ணாம,இங்க இருக்கிறத கண்ணால சாப்பிட்டுட்டு, சட்டுபுட்டுன்னு கிச்சனுக்குப் போயி காண்ட்விய செய்து சாப்பிடுங்க! ;)


***************
கடந்த பதிவில் சொல்லியிருந்த கோயிலுக்கும் எங்க வீட்டுக்கும் இடையில் சின்னதாக(!) ஒரு லிட்டில் இண்டியா ஏரியா இருக்கிறது. நகைக்கடை-துணிக்கடை-பாத்திரக்கடை-மளிகைக்கடை-உணவகங்கள் என்று எல்லாக் கடைகளும் இருக்கு அங்கே. முதல்முறை போனபோது ஆஹா,இந்தியாவுக்கே போயிட்டோமோ என்று தோன்றியது! :)

கோயிலுக்குப் போகையில் பெரும்பாலும் இந்த லிட்டில் இண்டியாவுக்கும் போய் (ஷாப்பிங் செய்தது ஒரு காலம், இப்பல்லாம் பக்கத்திலிருக்கும் இண்டியன் ஸ்டோர்லயே தன்னிறைவு அடைந்தாச்சு.ஹிஹி) உணவை முடித்துக்கொண்டு வருவோம்.

நாங்கள் பெரும்பாலும் செல்வது "ராஜ்தானி" என்ற ரெஸ்டாரன்டுக்கு. ராஜ்தானி ரெஸ்டாரன்ட் செய்ன் டெல்லி, மும்பை,பெங்களூர்லயும் இருப்பதா கேள்விப்பட்டேன். இது குஜராத்தி உணவகம். வெங்காயம்-பூண்டு இல்லாத சமையல், ப்ரேக்ஃபாஸ்ட்-லன்ச்-டின்னர் என்று இல்லாமல் நாள் முழுவதும் ஒரே மாதிரியான சிஸ்டம் அங்கே. ஜெனரலாக ஒரு thali, ரீசனபிள் விலை,சூடான உணவுகள், நல்லகவனிப்பு! ஹைவேயின் ட்ராஃபிக்கில் நொந்து நூடுல்ஸாகி பசியோடு அங்கே போய் உட்கார்ந்தம்னா...உணவு ஐட்டங்கள் இந்த ஆர்டர்லே தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்!
1. தண்ணீர் + நீர்மோர்
2. சுட்ட அப்பளம் + தக்காளி-வெங்காயப் பச்சடி ,ஸ்வீட் சட்னி,க்ரீன் சட்னி, ஊறுகாய்
3.டோக்ளா (அ) காந்த்வி
4. வடை(அ) பஜ்ஜி (அ) கச்சோரி இப்படி ஏதாவதொரு ப்ரைட் ஐட்டம்
5.ஐந்து வித சைட் டிஷஸ்
i).khadi (வட இந்திய மோர்க்குழம்பு)
ii).தால்(அ) சாம்பார்
iii).பீன்ஸ்
iv).எதாவது ஒரு காய்கறி
v).பனீர் (அ) ஏதாவதொரு ரிச் க்ரேவி
6.ஆம் ரஸ் (இனிப்பூட்டப்பட்ட மாம்பழக்கூழ்)
7.சூடான சப்பாத்தி-பூரி
8.சூடான சோறு-கிச்சடி
9.உப்பு,எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கிய பச்சைவெங்காயம், பொரித்த பச்சைமிளகாய்
10. இனிப்பு
i).கேரட் ஹல்வா
ii).சுரைக்காய் ஹல்வா
iii).மோகன்தால்(கடலைமாவு ஹல்வா)
iv).ஸ்ரீகண்ட் (அ) பால் ஹல்வா
v).குலாப்ஜாமூன்
இதுதாங்க ராஜ்தானியின் 24/7 மெனு! சைட் டிஷ் வகைகள் அவ்வப்பொழுது மாறும்,ப்ரைட் ஐட்டங்களும் அவ்வப்பொழுது மாறும். இனிப்பு வகைகள் தவிர எல்ல்ல்ல்ல்ல்ல்லாமே அன்லிமிட்டட்!! ;) விலையும் ரொம்பவுமே ரீசனபிள்தான். பஃபே எல்லாம் இல்லை, நம்ம பாட்டுக்கு போனதும் டேபிள்ள உக்காந்திரலாம், தட்டு + 5 பவுல் வச்சிருப்பாங்க. எல்லா ஐட்டங்களும் சுடச்சுட கொண்டுவந்து பரிமாறுவாங்க. நீங்க போதும்னு சொல்லறவரை பரிமாறுவதை நிறுத்த மாட்டாங்க.

இன்டர்நெட்டிலிருந்து கிடைத்த சிலபடங்கள் உங்கள் பார்வைக்கு..

என்ன ஐட்டம் பரிமாறுகிறோம் என்று பெயரைச் சொல்லிச்சொல்லித்தான் பரிமாறுவாங்க. சர்வர்ஸ்ல நிறையப் பேர் மெக்ஸிகன்ஸ் இருப்பதால், அவங்க கஷ்டப்பட்டு உணவுவகைகளின் பேரைச் சொல்வது பாராட்டப்படவேண்டிய ஒன்று!

ருசி பற்றி சொல்லணும்னா டோக்ளா,காந்த்வி, சப்பாத்தி இந்த மூணும் ரொம்ப ரொம்ப ஸாஃப்ட் அன்ட் டேஸ்ட்டியா இருக்கும். சப்பாத்தி பூ மாதிரியே இருக்கும், சுடச்சுட வரும் வடை/பஜ்ஜி/பகோடாவும் நல்லா இருக்கும். நாலைந்து பேர் உணவுத்தட்டுக்களுடன் ஒவ்வொரு டேபிளா கவனித்தபடியே ரெஸ்டாரண்டினுள் சுத்திட்டே இருப்பாங்க. திருப்தியா சாப்ட்டுட்டு வரலாம்.

சைட்டிஷஸ்ல ரிச் க்ரேவி நல்லா இருக்கும்,Dry காய்கறி டிஷ்-ம் நல்லா இருக்கும்.,பீன்ஸ்கறி (பச்சைக்கலர் பீன்ஸ் இல்லீங்க..ட்ரை பீன்ஸ்..கொ.கடலை, வெள்ளை காராமணி, இப்படி!) ஓக்கேவா இருக்கும். தால்(சாம்பார்)- khadi (நார்த் இண்டியன் மோர்க்குழம்பு) இரண்டும் ரெம்ப சுமார்தான்! மே பி வட இந்தியர்களுக்கு பிடிக்குமா இருக்கலாம். ;)
பலமுறைகள் போனதால் எல்லா இனிப்புவகையும் ருசி பாத்தாச்சு. ;) அங்கிருக்கும் இனிப்பு வகைகளில் எனக்கு மிகவும் பிடித்தது ஃபலூடாதான்! :P :P ராஜ்தானி பற்றி மேலும் தகவல்கள் தெரிந்துக்க ஆர்வமா இருந்தீங்கன்னா இங்கே மற்றும் இங்கே க்ளிக் செய்து பாருங்க. ரசிச்சு ரசிச்சு எழுதிருக்காங்க. :)

நாங்க அங்கே சாப்பிடப்போன நேரங்களில் எல்லாம் அபெடைஸராக டோக்ளாதான் இருந்திருக்கிறது. கடைசி முறை இந்த khandvi பரிமாறினாங்க. என்னவருக்கு ரெம்ப ரெம்ப ரெம்ப பிடிச்சிருச்சு. "நீ ஏன் இதெல்லாம் செய்யறதில்ல?"ன்னு கேட்டார். கிடைச்சது சான்ஸுன்னு ரெசிப்பிய தேடிப்பிடிச்சு செய்தாச்சு! :))))

54 comments:

  1. //மாவு வேகும்போது ஒரு செக்கன்ட் அங்கே இங்கே திரும்பினீங்கன்னாலும் கட்டி விழுந்திரும், ஜாக்கிரதையாக் கிண்டுங்க! இதான் கொஞ்சம் கஷ்டமான பார்ட்டு// அட என்ன ஒரு தன்னடக்கம் உங்களுக்கு ச்சே அப்புடியே புல் அரிச்சிடிச்சு ஒடனே மாடு ஏதும் அனுப்பிடாதேங்கோ .. நான் தான் firstuu போல இருக்கு

    ReplyDelete
  2. i thought this was a difficult dish to make...but u made it so easy for all of us very well explained as usual...

    ReplyDelete
  3. மைசூர்பாகு கிண்ரவர்களுக்கு இது சுலபமா. செய்து பார்த்தால் தெறியும்-
    செட்டியார் வாழ்வுன்னு வொரு பழமொழி ஏன் நினைவுக்கு வரதூன்னு தெறியலே. கட்டாயம் செய்து பார்க்கிறேன். சாப்பிட்டிருக்கேன். தேடிப்பிடித்து போட்டதற்கு செய்து பார்த்து எல்லாரும் பாராட்டணும்.

    ReplyDelete
  4. காண்ட்வி ரெஸிப்பிக்கு நன்றி மகி.அவசியம் ஒரு முறை செய்து பார்த்து விடவேண்டும்.

    இங்கும் கூட ராஜ்தானி தாளி ஏகப்பட்ட சைட் டிஷ் களுடன் கிடைக்கின்றது.அது போன்று வெங்காயம்,பூண்டு போன்றவை சேர்க்கப்படாமல் பதார்த்தங்கள் செய்யும் ரெஸ்டாரெண்டுகளும் உள்ளன.

    ReplyDelete
  5. சுருட்டிய காண்விகளை மீண்டும் ஸ்டீம் பண்ணத் தேவை இல்லையா?

    ReplyDelete
  6. கிரிஜா,நீங்கதான் இன்னிக்கு firstuu! லன்ச் ப்ரேக்ல கமென்ட் போட்டீங்க போல? ;) ஆளைக்காணோம் அதுக்கப்புறம்?

    /அட என்ன ஒரு தன்னடக்கம் /ஹிஹிஹிஹி! ரெம்ப நன்றிங்க! ;)

    /ஒடனே மாடு ஏதும் அனுப்பிடாதேங்கோ ../சரி,அப்ப மான்,முயல் இப்படி புல் சாப்பிடும் சாதுவான பிராணி எதாச்சும் அனுப்பட்டா? :) :)

    நன்றிகிரிஜா!
    ~~
    /i thought this was a difficult dish to make../சித்ரா,இது டிஃபிகல்ட் டிஷ் இல்லங்க,ஆனா கொஞ்சம் tricky டிஷ்! ட்ரை பண்ணிப்பாருங்க.நன்றி!
    ~~
    காமாட்சிம்மா,நீங்களும் கிரிஷா அம்முணி கூட சேர்ந்துட்டீங்க போலருக்கே? எதோ பயமொயி;) எல்லாம் சொல்றீங்க,இதுவரைக்கும் நான் கேள்விப்படல,பழமொழிய முழுசா சொல்லுங்களேன், தேவைப்படும்போது நானும் யூஸ் பண்ணிக்குவேன்! ;) ;)
    நன்றிம்மா!
    ~~
    //சுருட்டிய காண்விகளை மீண்டும் ஸ்டீம் பண்ணத் தேவை இல்லையா?// கடலைமாவு வெந்தபிறகுதானே காண்ட்வியா சுருட்டறோம்,அதனால இன்னொருமுறை வேகவைக்கத் தேவையில்லை ஸாதிகாக்கா!

    டிஸ்கி.;): நான் ரெஃபர் செஞ்ச தளங்களில் இப்படித்தான் இருந்தது.

    நோன்பு திறக்க ஒருநாள் இதுவும் செய்து பாருங்க.நன்றி ஸாதிகாக்கா!

    ReplyDelete
  7. /வெங்காயம்,பூண்டு போன்றவை சேர்க்கப்படாமல் பதார்த்தங்கள் செய்யும் ரெஸ்டாரெண்டுகளும் உள்ளன./குஜராத்தி ஜெயின் கம்யூனிட்டில வெங்காயம் பூண்டு சேர்த்துக்கமாட்டாங்கள்ல? அவங்க ரெஸ்டாரன்ட்ஸ்ல அப்படித்தான் இருக்கும்போல.

    அங்கே சாப்பிடும்போது வெங்காயம்-பூண்டு இல்லைன்றது தெரியறதே இல்ல, ஆனா நம்ம வீட்டில் சமைக்கைல வெங்காயம் போடாம ஒரு நேரம் கூட சமைக்க முடில ஸாதிகாக்கா! ;)

    ReplyDelete
  8. சுவையான காந்த்வி/கான்ட்வி/காண்ட்வி :))//

    என்ன இது பேரே புதுசா இருக்கு
    ம் பார்த்துட்டு போகவேண்டியதுதான் :)

    ReplyDelete
  9. //"நீ ஏன் இதெல்லாம் செய்யறதில்ல?"ன்னு கேட்டார். கிடைச்சது சான்ஸுன்னு ரெசிப்பிய தேடிப்பிடிச்சு செய்தாச்சு! :)))) //

    செஞ்சது சரி ...!!!! அது நல்லா இருந்துச்சுன்னு சொன்னாறா அதான் கேள்வியே ஹி...ஹி... !!!

    ReplyDelete
  10. ////சுருட்டிய காண்விகளை மீண்டும் ஸ்டீம் பண்ணத் தேவை இல்லையா?// கடலைமாவு வெந்தபிறகுதானே காண்ட்வியா சுருட்டறோம்,அதனால இன்னொருமுறை வேகவைக்கத் தேவையில்லை ஸாதிகாக்கா! //

    இதை உடைச்சு சாப்பிடனுமா..? இல்லை கிரைண்டர்ல போட்டு அரைச்சு சாப்பிடனுமா...? :-))

    ReplyDelete
  11. ///கிரிஜா,நீங்கதான் இன்னிக்கு firstuu! லன்ச் ப்ரேக்ல கமென்ட் போட்டீங்க போல? ;) ஆளைக்காணோம் அதுக்கப்புறம்? //

    ஒரு வேளை பயந்து போய் மயக்கம் போட்டு விழுந்த்துட்டாங்களோ என்ன வோ..ஹா..ஹா.. !! :-))

    ReplyDelete
  12. மகி, இப்ப தான் இந்த ரெசிப்பி கேள்விப்படுறேன். பார்க்க அழகா இருக்கு. ஒரு நாளைக்கு செய்து பார்க்கணும்.
    கிரிசா மானேஜருக்கு பயந்து அன்டர் தி டேபிள் இருந்து தான் கமன்ட் போடுவாங்களாம். மானேஜர் கண்டு பிடிச்சுட்டார் போலிருக்கி.. கிக்க்க்க்க்க்
    அப்படியே தேம்ஸில் டிஸ்போஸ் பண்ண சொன்னதாக பட்சி சொல்லிச்சு.

    ReplyDelete
  13. /மானேஜர் கண்டு பிடிச்சுட்டார் போலிருக்கி.. கிக்க்க்க்க்க்
    அப்படியே தேம்ஸில் டிஸ்போஸ் பண்ண சொன்னதாக பட்சி சொல்லிச்சு./அப்பூடியா?? அப்ப பூஸார் அட்ரசையும் அந்த நல்ல மானேஜர் கிட்ட குடுத்துடலாமே வானதி? வாட் ஸே? ;) ;) ;)

    ReplyDelete
  14. //சப்பாத்தி பூ மாதிரியே இருக்கும்,// கோர்த்து கூந்தல்ல சூடிக்கலாமா!!

    ReplyDelete
  15. Very tempting recipe,luks delicious...

    ReplyDelete
  16. மகி..அறுசுவையில் படித்து இந்த காண்ட்வியை இருமுறை முயற்சித்தேன்.சுருட்டவே வரவில்லை.உங்கள் செய்முறை எளிதாக உள்ளது.நன்றாக வரும் என்ற நம்பிக்கையில் செய்து பார்க்க போகிறேன்.

    ReplyDelete
  17. அடடா... அம்கிட பூவா இது இல்ல மாறி வந்திட்டனோ?:)) சும்மா ஒரு டவுட்டூஊஉ.. ஏன் டவுட்டெல்லாம் ஜெய்க்குமட்டும்தான் கொபிரைட்டாஆஆ?? எனக்கெல்லாம் வரப்பிடாதோ?.

    பார்க்க ஆசையாக இருக்கு மகி, செய்ய விருப்பம், ஆனா கடைசில ஒரு ஸ்ரேட்மெண்ட்டை விட்டு என் ஊக்கத்தைக் கெடுக்கிறீங்க..... சரியான பதத்தில் கிண்டாவிடில் ஃபொயிலிங்கில ஒட்டிடும் என அவ்வ்வ்வ்வ்வ்வ்:)). எனக்கு இப்பவே தெரியுது, நான் செய்தா நிட்சயம் ஒட்டும்ம்ம்ம்ம்ம்:)).

    ReplyDelete
  18. அதிராவோ கொக்கோ.... உப்பூடியெல்லாம் படம் போட்டா நாங்க மிரண்டிடுவமாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).... ஒரு கையில கத்தியும், ஒரு கையில கமெராவையும் பிடிச்சுக்கொண்டு, “ரெண்டு விரலைச் சேர்த்துப் பிடிங்க” என மிரட்டினால்..... பாவம் அவர் என்ன செய்வார்:)), ஏன் எதுக்குப் பிடிக்கிறோம் என்று தெரியாமலே, ஏதோ முத்திரையாக்கும் பிடிச்சிட்டால் போச்சு, எனப் பிடிச்சிருப்பார்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))).

    ReplyDelete
  19. நானும் அதீஸ் சொன்ன ஸ்டேட்மண்ட்டை ஆமோதிக்கிறேன்ன்ன்ன். ;))))))

    ReplyDelete
  20. என்னாது... என்னைத்தேடித் தேடி இப்போ கிரிசா தெம்ஸ்ல குதிச்சிட்டாவோ? அவ்வ்வ்வ்வ்வ்:)).

    என்னைத் தேடிய கிரிசாவே....
    நான் தேம்ஸ் கரையில இருக்கிறேன்...
    உள்ளே இல்ல:)))). பத்திரமா “சுவிம்” பண்ணிக் கரையில வந்து ஒதுங்குங்க.. சே..சே என்னப்பா இது சேருங்க.

    ReplyDelete
  21. !! திரும்ப மேல போறதுக்கோ!!

    ReplyDelete
  22. ஆஆஆஆ... பார்த்தீங்களோ... ஏன் ஒருவருக்கும் இந்த உண்மை புரியேல்லை இதுவரைக்கும் என நினைச்சேன்..... நீங்களெல்லாம் உதடுவரை நினைப்பீங்க ஆனா சொல்ல மாட்டீங்க:)).. அதிரா பின் விளைவை எல்லாம் யோசிக்காமல் சொல்லிடுவன்... ஆராவது இமா மாதிரி, ஜெய் மாதிரி, கிரிசா, வான்ஸ்ஸ்(கர்ர்ர்:)), மாதிரி ஆட்கள்.. காப்பாத்தாமல் காக்கா போயிடுவினமோ என்ற த்தெகிரியம்தான் எனக்கு:)))

    ReplyDelete
  23. :)), 2012 க்கு முதல் ஆரையும் போகவும் விடமாட்டேன், அதுபோல 2012 இல தனியாகவும் போகமாட்டேன்... அவ்ளோ அம்பு சே..சே அன்பு எங்கட “கெட்ட கிருமிகளில்”:))).

    ReplyDelete
  24. மகி... சில சந்தேகங்கள்...
    1. இது டோக்ளா சுவையில்தானே இருக்கும்!
    2. ரெஸ்பான்ஸ்..!! கட்சி!! ;)

    எனக்கும் இது ட்ரை பண்ணப் பயமா இருக்கு. பார்ப்போம்.

    ReplyDelete
  25. //தனியாகவும் போகமாட்டேன்... அவ்ளோ அம்பு சே..சே அன்பு எங்கட “கெட்ட கிருமிகளில்”// ;))))) யாருக்குத் தெரியும்; அன்பா வன்பா என்று! ;)) நம்பி வைப்போம்.

    ReplyDelete
  26. என்னை நம்பி நம்பி கிட்டத்தட்ட 3 வருசத்தை ஓட்டிட்டீங்க... இன்னும் ஒரே ஒருவருசம்தானே?:))(2012)... நம்பிக்கையோட ஓட்டிடுங்க... மகீஈஈஈஈஈஈஈ கெதியா வாங்க, றீச்சர் அதிராவை சந்தேகப்படுறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).

    ReplyDelete
  27. என்னாது மகிக்கும் கனவு வந்திட்டுதோஓஓஒ அவ்வ்வ்வ்வ்:)))), இன்னும் ஆராருக்கெல்லாம் வரப்போகுதோ? அதென்னது அதிராவுக்கு வந்தால் உடனேயே எல்லாருக்கும் வருது அவ்வ்வ்வ்வ்வ்வ்:))(கடவுளே.. நான் கனவைச் சொன்னேனாக்கும்:)).

    ReplyDelete
  28. இது இமாவுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *10
    (ஏன் அலி:))ச்சிட்டீங்க அவ்வ்வ்வ்:))))

    ReplyDelete
  29. Mahi, அருமையான காண்ட்வி, சுருட்டி எடுக்கப்பட்ட படங்கள் மிக அழகு. அதற்க்கு உங்களைவரின் சைகை பாராட்டு சூப்பர்!

    ReplyDelete
  30. ;( அதீஸ்... நான் டிலீட் பண்ணுற மாதிரி கனவு வந்ததெண்டெல்லோ நினைச்சன்! இல்லையா!! உண்மையாவே கொமண்ட்டைக் காணேல்லயே!! ;)))

    ReplyDelete
  31. //மானேஜர் கண்டு பிடிச்சுட்டார் போலிருக்கி.. கிக்க்க்க்க்க்// என்னைய இந்த மாதிரி க்ளோஸ் பண்ண ஒரு கூட்டமே பாசமா அலையும் போது நான் ஏன் தேம்ஸ் ல எல்லாம் விழுறேன்...அவ்ளோ ஈசி கெடயாது ஆல் கெட்ட கிருமிஸ்.. உக்கும் :))
    //
    //சப்பாத்தி பூ மாதிரியே இருக்கும்,// கோர்த்து கூந்தல்ல சூடிக்கலாமா!! // ஹலோ டீச்சர் வந்துட்டீங்களா ?? பூஸ் துப்பாக்கியில புல்லெட் இல்லேன்னு நான் அனுப்பின கொசு மெயில் வந்திச்சா??

    ReplyDelete
  32. எனக்கு ரொம்ப‌ பிடித்த காந்த்வி ரெசிபி..இதே மாதிரி ஒட்ஸில் செய்திருக்கேன்...

    ReplyDelete
  33. //ஆளைக்காணோம் அதுக்கப்புறம்? // அது ஒண்ணும் இல்லேங்க நேத்திக்கு தூங்க போறதுக்கு முன்னே பார்த்து ஒரு கமெண்ட் போட்டேன் அப்புறம் தூக்க கலக்கத்துல ஏதாச்சும் உளறி(??) வெக்க போறேன்னு போய் சமத்தா தூங்கிட்டேன். இப்போ ஆஸ் யுஷூவல் லஞ்ச் டைம் ட்ய்பிங் என்னே ஒரு கடமை உணர்ச்சி எனக்கு ...என் கூட வேலை செய்யுற இந்த ஊர் காரவுங்களையும் உங்க எல்லா ப்ளோக்ல யும் போல்லோவேர் ஆகிடலாமான்னு பார்க்குறேன் : ))

    ReplyDelete
  34. //ஒரு வேளை பயந்து போய் மயக்கம் போட்டு விழுந்த்துட்டாங்களோ என்ன வோ..ஹா..ஹா.. !! :-)) // ஐயோ என்ன காணோமுன்னா எப்புடில்லாம் கற்பனை கொசு பறக்குது ஜெய் அண்ணாவுக்கு ??

    ReplyDelete
  35. //ரெண்டு விரலைச் சேர்த்துப் பிடிங்க” என மிரட்டினால்..... பாவம் அவர் என்ன செய்வார்:)), // நா...னும் ஆ..மோதிக்கிறேன் :))

    //என்னைத் தேடிய கிரிசாவே....
    நான் தேம்ஸ் கரையில இருக்கிறேன்...
    உள்ளே இல்ல:)))). பத்திரமா “சுவிம்” பண்ணிக் கரையில வந்து ஒதுங்குங்க.. சே..சே என்னப்பா இது சேருங்க// ஐயோ பூஸ் இப்புடி பாசமா கூப்பிட்டாலே பயம்ம்ம்மா இருக்கே? இவ்ளோ அருமையா சமையல் சொல்லி கொடுக்குற என்னைய காப்பாத்த இந்த ப்ளாக் உலகில் யாருமே இல்லையா? காதுல விழுந்தா கூட ஏன் எல்லாம் மூஞ்சைய திருப்பி கிட்டு போறாங்க ... சரி போவட்டும் என் அருமை என்னிக்கோ ஒரு நாள் இந்த உலகுக்கு தெரியும்ம்ம்ம் ஹீ NPK ( ஓகே ஆல் பாட் கிருமிஸ் Have a good week end)

    ReplyDelete
  36. காண்ட்வி சூபரா இருக்கேன்னுஅதுக்கப்புரம் பின்னூட்டம்லாம் படிச்சா அது காண்ட்விக்கு மேல சூப்பரா இருக்கே.
    படமும் செய்முறை விளக்கமும்கலக்கல்.

    ReplyDelete
  37. போன பதிவில் இந்த காந்த்வி பார்த்ததும், இதுக்கான செய்முறையை கூகிள் ல தேட ஆரம்பிச்சுட்டேன். பார்க்கவே செய்யணும் போல ஆசையா இருக்கு மகி. கூடிய விரைவில் ட்ரை பண்ணி பார்க்கறேன்.

    ReplyDelete
  38. வாவ்...கலக்குறிங்க...ரொம்ப ரொம்ப சூப்பராக இருக்கு....

    அந்த restaurant இந்த பக்கமும் இருந்தால் நன்றாக இருக்குமே...மெனு எல்லாம் கலக்கல்...

    ReplyDelete
  39. athira said...

    அதிராவோ கொக்கோ.... உப்பூடியெல்லாம் படம் போட்டா நாங்க மிரண்டிடுவமாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).... ஒரு கையில கத்தியும், ஒரு கையில கமெராவையும் பிடிச்சுக்கொண்டு, “ரெண்டு விரலைச் சேர்த்துப் பிடிங்க” என மிரட்டினால்..... பாவம் அவர் என்ன செய்வார்:)), ஏன் எதுக்குப் பிடிக்கிறோம் என்று தெரியாமலே, ஏதோ முத்திரையாக்கும் பிடிச்சிட்டால் போச்சு, எனப் பிடிச்சிருப்பார்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))).

    இமா said...

    நானும் அதீஸ் சொன்ன ஸ்டேட்மண்ட்டை ஆமோதிக்கிறேன்ன்ன்ன். ;))))))

    En Samaiyal said...

    //ரெண்டு விரலைச் சேர்த்துப் பிடிங்க” என மிரட்டினால்..... பாவம் அவர் என்ன செய்வார்:)), // நா...னும் ஆ..மோதிக்கிறேன் :))
    ********************************** கடவுளே,கடவுளே,கடவுளே!! காண்ட்வியைப் பார்த்து சந்தோஷமா சாப்புடப்போனவரை நிறுத்திவைச்சு போட்டோ புடிச்சேனே,எனக்கு இதுவும் வேணும்,இன்னமும் வேணும்! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* இன்ஃபினிட்டி டு அதிரா,இமா & கிரிசா! இந்த கமென்ட்ட மட்டும் என்ர ஊட்டுக்காரர் பாத்தாரு, எனக்கு ஆடியிலயே தீபாவளிதேன்!!!!! போட்டோவ அலேக்கா எடுத்து பத்திரமா கம்ப்யூட்டருக்குள்ளயே ஒழி;)ச்சு வச்சிட்டேன் மக்கள்ஸ்! இப்பம் என்ன செய்வீங்க?! ;) :)
    **********************************
    கான்ட்வி நல்லாஇருக்குதான்னு டவுட்டு இருக்கிறவுங்க எல்லாரும் அவிங்கவிங்க சொந்தச் செலவில டிக்கட்டைப் போட்டு எங்க வீட்டுக்கு வாங்கோ.மூணு நேரமும் கான்ட்வியா போட்டு உங்க சந்தேகத்தை தீர்த்துவைக்கீறேன்,வசதி எப்படி? ;) ;)

    ReplyDelete
  40. /என்ன இது பேரே புதுசா இருக்கு
    ம் பார்த்துட்டு போகவேண்டியதுதான் :)/சிவாத்தம்பி,என்ன இப்பூடி சொல்லிப் போட்டிங்க? சீஈஈஈஈஈஈரக றால் செய்யுற மன்னையின் மைந்தனுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்? நல்லபுள்ளையா சீக்கிரம் செய்து ப்ளாக்ல போஸ்ட் பண்ணிரணும்,ஓக்கை? :)))
    ~~
    /செஞ்சது சரி ...!!!! அது நல்லா இருந்துச்சுன்னு சொன்னாறா அதான் கேள்வியே ஹி...ஹி... !!!/அதெல்லாம் சொன்னாருங்க்ணா! அதை அப்பூடியே வீடியோ எடுத்து யூட்யூப்ல போடலாம்னு நினைச்சேன்,ஆனா பாருங்க,அவர் கொஞ்சம் கூச்ச சுபாவி! போட்டோ புடிக்கறதே கஷ்டம்,அதனால வீட்டுக்கு வந்தீங்கன்னா நீங்களே நேர்ல பார்த்துடலாம். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    /இதை உடைச்சு சாப்பிடனுமா..? இல்லை கிரைண்டர்ல போட்டு அரைச்சு சாப்பிடனுமா...? :-))/ஹிஹி! உடைப்பு,அரைப்பு எல்லாம் தேவையில்லீங்! உங்க ஸ்பெஷல் "கொசுரத்தம், டயனோசர் முட்டை,நண்டு ---- எல்லாம் சேர்த்து செஞ்ச சட்னி"ல தோச்சுதோச்சுத்தோச்சு சாப்புடணும் ஜெய்அண்ணா!
    /ஒரு வேளை பயந்து போய் மயக்கம் போட்டு விழுந்த்துட்டாங்களோ என்னவோ..ஹா..ஹா!! :-))/ ஹா..ஹா..ஹா! இது வாஸ்தவமான சந்தேகங்ணா! மயக்கம் போட்டது நெசமாம், ஆனா அது பயமில்லையாம்,தூக்கமாம்! குப்புற விழுந்தாலும் மீசைல மண்ணே ஒட்டலைன்னு சமாளிக்கிறாங்கோ. சீக்ரமா பல்லிமுட்டை-பீட்ரூட்ல ஊரி;)ய மண்புழு இதெல்லாம் போட்ட கஷாயத்தை பார்சல் பண்ணுங்க அந்தக்காவுக்கு! ;)
    ~~
    ///சப்பாத்தி பூ மாதிரியே இருக்கும்,// கோர்த்து கூந்தல்ல சூடிக்கலாமா!!//வாங்க ரீச்சர்! வரும்போதே டவுட்டோடயே வாரீங்களே!!அவ்வ்வ்வ்வ்! ஆங்...சப்பாத்திய லேடீஸ் எல்லாம் 2 முழமாத் தொடுத்து கூந்தலில் சூடிக்கலாம், ஜென்ஸ் எல்லாம் தலா 4 சப்பாத்திய ரெண்டு காதிலயும் வச்சுக்கலாம். ;) ;)

    ReplyDelete
  41. ப்ரேமா,தேங்க்ஸ்ங்க! லேட்டஸ்ட்டா எங்க வீட்டில் ஃபேவரிட் ஆகிடுச்சு கான்ட்வி! :)
    ~~
    /காண்ட்வியை இருமுறை முயற்சித்தேன். சுருட்டவே வரவில்லை./ராதா,மாவு வேகாம இருந்திருக்கும்ங்க. ஆரம்பத்தில் தண்ணி மாதிரி இருக்கற மாவுக்கரைசல் வெந்து கொஞ்சம் திக் பேஸ்ட்டா ஆகிடணும். அதுக்கு மினிமம் 20 நிமிஷமாவது ஆகுங்க! ட்ரை பண்ணிப்பாருங்க. குட்லக்! [ஆண்டவா,இந்தமுறை ராதாக்காவுக்கு ஏமாத்தத்தை குடுத்து,அதை நான் படிச்சு வருத்தப்படாம இருக்கோணும்! காப்பாத்து!:)]
    ~~
    /Mahi, அருமையான காண்ட்வி, சுருட்டி எடுக்கப்பட்ட படங்கள் மிக அழகு. அதற்க்கு உங்களைவரின் சைகை பாராட்டு சூப்பர்!/ மீரா,ரொம்ப சந்தோஷங்க! நீங்களாவது இந்த கெட்ட கிருமிக கூட சேராம நல்லவிகளா இருக்கீங்க! தேங்க்யூ வெரிமச்!

    சைகை பாராட்டை வச்சு எனக்கு வில்லி ரேஞ்சுக்கு இமேஜ க்ரியேட் பாக்குது ஒரு கூட்டம்,அதனால் அந்தப்படத்தை எடுத்துட்டேன்,ப்ளீஸ் டோன்ட் மைண்ட்! ;)
    ~~
    மேனகா,அதான் உங்க ப்ளாக்ல பார்த்த மாதிரியே இருந்தது எனக்கு. தேங்க்ஸ்ங்க!
    ~~
    /காண்ட்வி சூபரா இருக்கேன்னுஅதுக்கப்புரம் பின்னூட்டம்லாம் படிச்சா அது காண்ட்விக்கு மேல சூப்பரா இருக்கே./ஆ...அவ்வ்! லஷ்மிம்மா,யூ டூ?!! ஒரு அப்பாவிப்புள்ள மயில்குட்டி மாதிரி:) சமத்தா தூங்கிட்டிருந்த வேளையிலே ஒரு கும்பலே வந்து கதகளி ஆடிருக்குது,அதையப் படிக்க சூப்பர்ர்ர்ர்ரா இருக்குன்னு சொல்லிட்டீங்க! கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
    இருந்தாலும் /படமும் செய்முறை விளக்கமும்கலக்கல்./னு சொல்லி புண்பட்ட மனச ஆத்திட்டீங்க,ரெம்ப நன்றிம்மா! :) ;)
    ~~
    /பார்க்கவே செய்யணும் போல ஆசையா இருக்கு மகி. கூடிய விரைவில் ட்ரை பண்ணி பார்க்கறேன்./நீங்க சொன்னா நம்பலாம் ப்ரியா! சீக்கிரமா செய்து போஸ்ட் பண்ணுங்க. அப்பவாவது இந்த கெ.கி.கூட்டம் நம்புதான்னு பார்ப்போம். நன்றி ப்ரியா!
    ~~
    கீதா,தேங்க்ஸ் கீதா! உங்க ஊர்ப்பக்கம் ராஜ்தானி இல்லையா என்ன? பரவால்ல, நீங்க லாஸ்வேகாஸ் வரப்ப இங்ஙன வந்து ஹாலிவுட் எல்லாம் ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு ராஜ்தானிலயும் சாப்பிட்டு போலாம்,வாங்க! :)

    ReplyDelete
  42. கெட்ட கிருமிகளுக்காக ஒரு பெரீய்ய பாட்டில்ல எக்ஸ்ட்ரா ஸ்ரோங்,ஆல் இன் ஒன் லைஸோல் எடுத்திட்டு ஸ்ரெடியாஆஆஆஆஆ வந்திருக்கன். இப்ப அதிராக்கா கொமென்ட்ல இருந்து ஆரம்பிப்போம்.
    @அதிரா
    /சரியான பதத்தில் கிண்டாவிடில் ஃபொயிலிங்கில ஒட்டிடும் என அவ்வ்வ்வ்வ்வ்வ்:)). எனக்கு இப்பவே தெரியுது, நான் செய்தா நிட்சயம் ஒட்டும்ம்ம்ம்ம்ம்:))./ கி கி கி!! அது எனக்கும் தெரியுது.பூஸ் (கை)கால்லே செய்யாம மனுஷக்கையாலே ட்ரை பண்ணிப் பாருங்கோ அதிரா! நிட்சயம் ஒட்டாம வரூம்! ;) ;)
    ~~
    @இமா
    1. இது டோக்ளா சுவையில்தானே இருக்கும்!--கிட்டத்தட்ட ஆமாங் ரீச்சர்.ஆனா டோக்ளா மாதிரி fluffy-யா இருக்காது.ஹிஹிஹி!
    2. ரெஸ்பான்ஸ்..!! கட்சி!! ;) -- நாங்கள்லாம் ஆல்டைம் சோத்துக்கட்சிங்க் ரீச்சர்.
    ~~
    @அதிரா
    /என்னாது மகிக்கும் கனவு வந்திட்டுதோஓஓஒ அவ்வ்வ்வ்வ்:)))/உங்க கனவிலதான் எனக்கு கனவு வந்திருக்கோணும் அதிரா! நேத்து கனவில்லாத அருமையான தூக்கம்! ;)
    ~~
    @கிரிஷா
    /நான் ஏன் தேம்ஸ் ல எல்லாம் விழுறேன்...அவ்ளோ ஈசி கெடயாது ஆல் கெட்ட கிருமிஸ்.. உக்கும் :)) /ம்க்கும்!அதுதான் எங்களுக்கும் தெரியுமே. ஒரு நல்லவரு,வல்லவரு,உங்க மேனேசருதான் அந்த நல்ல காரியத்தை பண்ணிருக்காருன்னு நினைச்சம்,ஆனா நடக்கலியேஏஏஏஏஏ! ;) ;)

    /என் கூட வேலை செய்யுற இந்த ஊர் காரவுங்களையும் உங்க எல்லா ப்ளோக்ல யும் போல்லோவேர் ஆகிடலாமான்னு பார்க்குறேன் : ))/ வாவ்! ஹை-பைவ் கிரிஷா! இப்பத்தான் உருப்படியா ஒரு பார்வ பார்த்திருக்கறீங்க! அல்லாரும் நம்மள க்ளோஸா பொல்லோவ்;) ;) பண்ணோனும்,அந்த மாதிரி பண்ணுங்க. ---- தாங்கெட்டதும் இல்லாம வனத்தையும் அழிச்சிதாம்-னு எங்கம்மா ஒரு பயமொளி;) சொல்லுவாங்க,அது எதுக்கு எனக்கு இப்ப ஞாபகம் வருதுன்னு தெரிலையே! ஞேஏஏஏஏ! ;) ;)
    ~~
    @மகி, குட் ஜாப் மகி! இப்பூடித்தான் கெட்ட கிருமிகள tackle பண்ணோனும், கீப் இட் அப்! [என்னை நானே பாராட்டிக்கறேன்,வேற வழி?!!;)]
    ~~
    கமென்ட் போட்டு காம்டி,ச்சே,காமெடி பண்ணிய அல்லாருக்கும் மிக்க நன்டி,ச்சே,நன்றி! [என்ன பாக்குறீங்க, மீ ஆல்வேஸ் ஸ்ரெடி யா!;) ;)]

    Have a great weekend everybody!

    ReplyDelete
  43. மேனகா செய்ததிலிருந்து எப்படியாவது செய்து பார்க்கனும் என்று
    இன்னும் செய்து பார்ககல
    இத பார்த்ததும் இன்னும் ஆவலாக இருக்கு பார்க்கலாம் நோன்பு கழியட்டும்.

    ReplyDelete
  44. Here is the link for oats khandvi
    http://sashiga.blogspot.com/2009/09/oats-khandvi-gujarat-spl.html
    thx u mahi!!

    ReplyDelete
  45. I have tasted Handwa once from a Gujarati friend.No idea if that is the same as khandvi.Anyways as someone said 'If it looks good, eat it' :-))

    ReplyDelete
  46. I too wanted to make kandvi for long time,its in my hand written cookbook,looks too good,you had made it with ease!

    ReplyDelete
  47. //அல்லாரும் நம்மள க்ளோஸா பொல்லோவ்;) ;) பண்ணோனும்// ஏன் நாமெல்லாம் என்ன கொலை இல்லே கொள்ளை கூட்டமா என்ன ??

    //தாங்கெட்டதும் இல்லாம வனத்தையும் அழிச்சிதாம்-.// ஹா ஹா நெஜம்மா நல்லா சிரிச்சுட்டேன் என்னைய மேனேஜர் அம்மணி கிட்டே போட்டு குடுக்காம இந்த கூட்டம் விடாது போலே இருக்கே ?? தேம்சுல தள்ளி விடுற உங்க ஆசை நடந்திடுமோ அப்படின்னு எனக்கு பயம்மா இருக்கு ( அலைபாயுதே மாதவன் ஸ்டைல் ல..)::))

    ReplyDelete
  48. வில்லி ரேஞ்சுக்கு இமேஜ க்ரியேட் பாக்குது ஒரு கூட்டம்// இனிமேத்தான் create பண்ண வேணுமாக்கும் க்கும் !அதாச்ன் உலகத்துக்கே தெரியுமே நீங்க மயில் குட்டி எலி குட்டி ன்னு பாவம் காமாட்சி அம்மா கிட்டே அளந்தத ::))

    //அதனால் அந்தப்படத்தை எடுத்துட்டேன்,ப்ளீஸ் டோன்ட் மைண்ட்! ;) // வீ மைன்ட்.. இதுக்கெல்லாம் கோச்சுகிட்டு போட்டவ எடுத்திட்டா அப்புறம் வாட் இஸ் தி fun யா ?? கே.கி. ல ஒருத்தங்களா இருந்திட்டு ஸ்டெடி யா இருக்க வேணாமோ இன்னும் எத்தன பதிவு நீங்க போடணும் இன்னும் எவ்ளோ நாங்கெல்லாம் கலாய்கோனும்ம் ??

    ReplyDelete
  49. //டவுட்டு இருக்கிறவுங்க எல்லாரும் அவிங்கவிங்க சொந்தச் செலவில டிக்கட்டைப் போட்டு எங்க வீட்டுக்கு வாங்கோ.மூணு நேரமும் கான்ட்வியா போட்டு உங்க சந்தேகத்தை தீர்த்துவைக்கீறேன்,வசதி எப்படி? ;) ;) // அப்போ stuffed இட்லி கெடையாதா நான் stuffed இட்லி கொடுப்பீங்கன்னு சத்தியம் செஞ்சு சொன்னாத்தான் அப்பாவியையும் கூட்டி கிட்டு வருவேன் :))

    ReplyDelete
  50. //குப்புற விழுந்தாலும் மீசைல மண்ணே ஒட்டலைன்னு சமாளிக்கிறாங்கோ. சீக்ரமா பல்லிமுட்டை-பீட்ரூட்ல ஊரி;)ய மண்புழு இதெல்லாம் போட்ட கஷாயத்தை பார்சல் பண்ணுங்க அந்தக்காவுக்கு! ;) // யாரது என்னைய தூக்கத்துல இருந்து எழுப்பினது பத்தாதுன்னு எனக்கு மீசை எல்லாம் போட்டு அழகு பார்க்குறது??

    ReplyDelete
  51. ஜலீலாக்கா,நோன்பு முடிந்ததும் செய்து பாருங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    மேனகா,லிங்க் குடுத்ததுக்கு தேங்க்ஸ்! :)

    சௌம்யா, நீங்க சொல்ற பேர் நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    ராஜி,ஹேண்ட் ரிட்டர்ன் குக்புக் எல்லாம் வைச்சிருக்கீங்களா? சூப்பர்! :)
    செய்து பாருங்க. நன்றி ராஜி!

    கிரிசாக்கா, ஊருக்குப் போயிட்டு வந்து பேசித் தீர்த்துப்போம், இப்ப வாணாம்,ஓக்கை?! ;)

    ReplyDelete
  52. போன முறை ராஜஸ்தான் போயிருந்த் அபோது நாங்க தங்கி இருந்த பிக் பஜார் எதிரில் சூப்பர் வெஜ் ரெஸ்

    ராஜஸ்தானி தாளி தான் சாப்பிட்டோம்

    அருமை..

    லிஸ்ட் படிச்சதும் ஞாபகம் வந்துடுச்சி

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails