Saturday, December 31, 2011

ஸ்வீட் ஷெல்ஸ் & ஹேப்பி நியூ இயர்!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

ஸ்வீட் ஷெல்ஸ் -தேவையான பொருட்கள்
மைதா மாவு-1கப்
ரவை-1/4கப்
வெண்ணெய்- 2டேபிள்ஸ்பூன்
தண்ணீர்
எண்ணெய்
சர்க்கரை-1/2கப்
தண்ணீர்-1/4கப்

செய்முறை
மைதா,ரவை,வெண்ணெய் சேர்த்து பிசறிக் கொள்ளவும்.
கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்துக்கு (மாவு ரொம்பவும் தளரவும் இல்லாமல், டைட்டாகவும் இல்லாமல்) பிசைந்து 20 நிமிடங்கள் மூடிவைக்கவும்.

மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
ஒவ்வொரு உருண்டையாக எடுத்து முள்கரண்டி அல்லது சீப்பின் மீது வைத்து தட்டையாக அழுத்தவும். பிறகு மாவின் ஒரு முனையிலிருந்து எடுத்து லேசாக வளைத்து தனியே எடுக்கவும்.
அழகான ஷெல் /சிப்பி/சங்கு வடிவம் கிடைக்கும்.

இங்கே இன்னொரு விஷயம்..முள்கரண்டியில் அழுத்தினால் ஷெல் பெரியதாக வரும்..சீப்பில் அழுத்துகையில் சிறிய வரிகளுடன் அழகாக வரும். (கொலாஜில் 3வது படம் பாருங்க) இரண்டில் எது செய்யலாம் என்று என்னவரிடம் வோட்டெடுப்பு நடத்தியதில், சீப்புக்கே அவரது வோட்டு கிடைத்தது. :) அதனால் சீப்பிலேயே எல்லா உருண்டைகளையும் ஷெல் செய்துவிட்டேன்.

அழுத்திய ஷெல்களை காற்றுப்புகாமல் மூடி வைத்துக்கொள்ளவும். மிதமான சூட்டில் எண்ணெய் காயவைத்து ஷெல்களைப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

வேறொரு பாத்திரத்தில் சர்க்கரை, அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
பாகு நன்கு கொதிவந்ததும்(21/2 கம்பி பதம்..!!) அடுப்பிலிருந்து இறக்கி, பொரித்துவைத்த ஷெல்களைப் பாகில் போட்டு கலந்து, எல்லா ஷெல்களிலும் பாகு படும்படி குலுக்கி வைக்கவும்.

சர்க்கரைப்பாகுக்கு பதமெல்லாம் அவசியமில்லை..சர்க்கரை கரைந்து நல்லா பபுள்ஸ் வந்ததும் ஷெல்களைப் போட்டு கிளறிவிடலாம். ஆறியதும் ஷெல்கள் மீது வெள்ளைவெளேர்னு பாகு பூத்து நிற்கும்.

இந்த இனிப்பு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால் ஒருவாரம் வரை இருக்கும். ஆனா அதுவரைக்கும் நம்ம காலி பண்ணாம இருப்போமான்னு சொல்லமுடியாது! ;)
2009-ல் செய்த இனிப்பு சிப்பிகளைப் பார்க்க இங்கே க்ளிக் பண்ணுங்க! :))

மீண்டும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

14 comments:

 1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.அருமையான ரெசிப்பி.

  ReplyDelete
 2. ச்வீட் ஷெல்ஸ் சூப்பர். இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  சுவீட் ஷெல் சூப்பரா இருக்கு. சீப்பில் தலை வாரி விடுவது சூப்பரான ஐடியா.

  ReplyDelete
 4. இதை அப்படியே கடிச்சு சாப்பிடனுமா ..? இல்ல ஊற வச்சி சாப்பிடனுமா ஹி..ஹி.... :-)))

  ReplyDelete
 5. உங்களுக்கு குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் :-)

  ReplyDelete
 6. சுவீட் ஷெல்ஸ் சூப்பரா இருக்கு!!!இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!!!

  ReplyDelete
 7. wish you a very happy new year -2012

  ReplyDelete
 8. Happy new year Mahi & family. Thanks for the lovely wishes with a sweet. Nice shell creation. creative cooking season! so impressed with your shell invention. will soon going to try. will let you know how my shells turned up. :-)

  ReplyDelete
 9. Happy New Year Mahi to yourself and your family

  ReplyDelete
 10. மகி,
  புத்தாண்டு வாழ்த்துக்கள்.சீப்புக் கலகலா அருமையாக உள்ளது.செய்ய பொறுமை வேண்டுமே!

  ReplyDelete
 11. kamatchi.mahalingam@gmail.comJanuary 3, 2012 at 10:53 PM

  ரொம்பவே நன்றாக இருக்கு. பார்க்கவும்
  அழகாயிருக்கு. புதுவருஷ வாழ்த்துக்களுக்கு ஸந்தோஷம். யாவருக்கும் என் வாழ்த்துக்களும்.
  அன்புடன் காமாட்சி.

  ReplyDelete
 12. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆசியாக்கா! :)

  வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி லஷ்மிம்மா!:)

  சீப்பில் தலை வாரி விடுவது சூப்பரான ஐடியா.///அவ்வ்வ்வ்...உட்டா தலைவாரிப் பூச்சூட்டி ஸ்வீட் ஷெல்லை பள்ளிக்கூடத்துக்கே அனுப்பிருவீங்க போல இருக்கே வானதி?
  [தலைவாரிப் பூச்சூட்டி உன்னை
  பாடசாலைக்குப் போ என்று
  சொன்னாள் உன் அன்னை
  சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்? -னு ஒரு பாடல் உண்டு..தெரியும்தானே உங்களுக்கு?! ;)]
  வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி வானதி!

  சிவசங்கர்,நான் டைப்பிங் மட்டும்தான் படிச்சேன்,ஷார்ட்ஹேண்ட் படிக்கலையே??! ;) உங்களுக்கும் ஹே.நி.இ.2012!

  /இதை அப்படியே கடிச்சு சாப்பிடனுமா ..? //இல்லல்ல...உங்களுக்கு ஒரு ஜதை பல்செட்டு அனுப்பிருக்கேன், வெய்ட் பண்ணி வாங்கி அத வச்சு கடிங்ணா! ;)))))
  /இல்ல ஊற வச்சி சாப்பிடனுமா ஹி..ஹி.... :-)))///யப்..ஒரு லிட்டர் ஃபினாயில் +1/2லிட்டர் கிருஷ்ணாயில் + 1/4லிட்டர் எஞ்சின் ஆயில் இதையெல்லாம் கலக்கி அதிலே இதை ஊர;)வைச்சு சாப்டுங்கோஓஓஓஓ!
  :D :D ;D

  1 January 2012 23:59/

  ReplyDelete
 13. ப்ரியா,வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க!:)

  மங்கையர் உலகம்,வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க!:)

  மீரா,வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க!:) ரசித்துச் செய்யும் எல்லா வேலைகளுமே அழகுதானே? நீங்களும் செய்து பார்த்துசொல்லுங்க.ரொம்ப சந்தோஷம் உங்க பாராட்டுக்கு! :)

  கிரிஷாக்கா,பவ்யமா வாழித்திட்டுப் போயிட்டீங்க?? ;) வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க!:)

  சித்ரா மேடம்,பொறுமை ஒரு கிலோ பார்சல் அனுப்பவா? ;) வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க!:)

  காமாட்சிம்மா,கருத்துக்கும் ஆசிகளுக்கும் மிக்க நன்றி! :)

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails