முட்டை - 2
*பஃப் பேஸ்ட்ரி ஷீட்
வெங்காயம்-1
தக்காளி -1
பச்சைமிளகாய்-1
கரம் மசாலா -1 டீஸ்பூன்
எண்ணெய்-1டீஸ்பூன்
பால்-1டேபிள்ஸ்பூன்
உப்பு
செய்முறை
தண்ணீரை கொதிக்கவிட்டு,கால் டீஸ்பூன் உப்புப் போட்டு, முட்டைகளை 8 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். வெந்த முட்டைகளை குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைத்து, உரித்து இரண்டாக நறுக்கிக்கொள்ளவும்.
பேஸ்ட்ரி ஷீட்டை ஃப்ரீஸரில் இருந்து அரைமணி நேரம் முன்பாக வெளியே எடுத்துவைக்கவும்.
வெங்காயம்,மிளகாய்,தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும்.
கடாயில் காயவைத்து நறுக்கியவற்றை சேர்த்து வதக்கவும். தக்காளி குழைந்ததும் உப்பு,கரம்மசாலா சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
பேஸ்ட்ரி ஷீட்டை சப்பாத்திக்குழவியால் லேசாகத் தேய்த்து சதுரங்களாக நறுக்கவும். ஒவ்வொரு சதுரத்திலும் கொஞ்சம் வெங்காயமசாலாவை வைத்து முட்டைகளை (நறுக்கிய பக்கம் கீழே இருக்கும்படி) வைக்கவும்.
பேஸ்ட்ரி ஷீட்டின் ஓரங்களை தண்ணீர் தடவி, ஸ்டஃபிங் வெளியே தெரியாதவாறு ஒட்டவும். ஒட்டிய பஃப் மீது கொஞ்சம் பாலைத் தடவி, 400F ப்ரீஹீட் செய்த அவனில் சுமார் 20நிமிடங்கள்
பேக் செய்து எடுத்தால் முட்டை பஃப்ஸ் ரெடி!
வெங்காய மசாலா வைப்பது ஆப்ஷனல்..வெறுமனே வேகவைத்த முட்டை மீது உப்பு - மிளகாய்ப்பொடி தூவி bake செய்தாலும் எக் பஃப்ஸ் நல்லாவே இருக்கும்.
பேஸ்ட்ரி ஷீட் இங்கே ரெடிமேடா கிடைப்பது ரொம்ப ரொம்ப வசதியா இருக்கு!
நினைச்ச அரைமணி நேரத்தில சுடச்சுட பஃப்ஸ் செய்து சாப்பிடலாம்! :P :P ஸ்டஃபிங் எல்லாம் ஒரு விஷயமே இல்ல..வெறுமனே பேஸ்ட்ரி ஷீட்டை bake செய்தாலே டேஸ்ட் சூப்பரா இருக்கும்,அதனால் ஸ்டஃப்பிங் நம்ம வசதிப்படி பண்ணலாம்.
ஒருமுறை பேஸ்ட்ரி ஷீட்டை வெளியே எடுத்து வைச்சப்புறம் ஸ்டஃபிங் செய்ய சோம்பலா இருந்ததால் டின்னருக்கு செய்த ப்ரோக்கலி பொரியலை (!) ஸ்டஃப் பண்ணி bake பண்ணினேன். "ப்ரோக்கலியில பஃப்ஸ்-ஆ??? சூப்பரா இருக்குது..வெரி இன்னொவேட்டிவ்!"-னு என்னவர் புகழ்ந்துகிட்டே சாப்ட்டார்! ;) நம்ம லேஸி கதையெல்லாம் சொல்லிடுவோம என்ன?? கெத்தா பாராட்டை வாங்கிட்டு பஃப்ஸ் சாப்பிட்டேன்! :D
அதேபோல பேஸ்ட்ரிஷீட்டை நீட்டா சதுரமா,முக்கோணமா,வட்டமா எல்லாம் ஷேப் செய்ய எனக்கு பொறுமை இருப்பதில்லை..அப்படியே கைக்கு வந்தமாதிரி இழுத்து தண்ணியவைச்சு ஒட்டிடுவேன், என்னமாதிரி ஒட்டினாலும், ஸ்டஃபிங் வெளியே தெரியாம இருந்தாச் சரி! bake ஆகி வரப்ப பஃப்ஸ் பார்க்கவே சூப்பரா இருக்கும். நீங்களே சாப்பிட்டுப் பாருங்களேன், எப்படி இருக்கு பஃப்ஸ்...ஓக்கேவா?? :)
மகி,
ReplyDeleteஎக் பஃப்ஸ் நன்றாக உள்ளது. பக்கத்திலிருக்கும் டீயும் நுரையுடன் சூப்பராக உள்ளது. தெளிவான நடையுடன் சுவையான ஸ்நாக்ஸ்.நன்றி.
ப்ரோக்கொலி பஃப்ஸ் எனக்கு தான்
ReplyDeleteபேஸ்ட்ரி ஷீட்ஸ் asda வில் கிடைக்குமா ?
ReplyDelete(வால்மார்ட் இங்கே asda)
ப்ரோக்கொலி பஃப்ஸ் எனக்கு தான்
ReplyDelete//no no enakuthan..
wow i like to eat pups now.....
ReplyDeleteso nice..
சூப்பர் ஸ்நாக்ஸ்.மகி.குளிர் காலத்தில் இப்படி யாராவது செய்து தந்தால் சாப்பிட்டு அசத்தலாம்.
ReplyDeleteரொம்ப நல்லாயிருக்கு...
ReplyDeletenice combo, puffs looks so tempting...
ReplyDeleteSpicy Treats
Ongoing Event : Bake Fest # 2
Do participate in My 300th Post Giveaway
மகி நன்றிம்மா .நன் போஸ்ட் போட்டேன் .செக் பண்ணல.இப்ப சரி செய்திட்டேன் .
ReplyDeleteஎக்லஸ் அச்சுமுறுக்கு லிங்க் இப்ப சரியாக போட்டுட்டேன்
ஆஆ.. மகியை எப்பூடி மிஸ் பண்ணினேன்... நேரம் கிடைக்குதில்ல மகி...
ReplyDeleteசூப்பர் பஃப். இது பேஸ்ட்ரி ஷீட்ல செய்தால் மட்டும்தான் இப்பூடி வருமாக்கும், நான் மாவில் செய்து பன்னாக்கியிருக்கிறேன், ஆனாலும் கடையில் வாங்குவதுபோல் வருவதில்லை.
அஞ்சு பேஸ்ட்ரி ஷீட்... பாகிஸ்தான் கடைகளில் கிடைக்குது, ரெஸ்கோவில் இருப்பதாக ஆரோ சொன்னார்கள், நானும் கேட்க நினைப்பேன், கிழமையில் 4 நாட்களாவது போவேன், ஆனா தினமும் கேட்க மறந்திடுவேன் அவ்வ்வ்வ்வ்வ்:)))
சித்ரா மேடம்,முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.:)
ReplyDeleteஏஞ்சல் அக்கா,பேஸ்ட்ரி ஷீட் Asda-ல கண்டிப்பா கிடைக்கும்,ப்ரோஸன் செக்ஷனில் பாருங்க.பஃப் பேஸ்ட்ரி என்று இருப்பதா பாத்து எடுங்க. :)
நன்றி!
சிவா,உங்களுக்கு எக் பஃப்ஸ் இருக்கில்ல,அதை ஏஞ்சல் அக்காவே சாப்பிடட்டும்,ஓக்கை? :)
நன்றி சிவா!
ஆசியா அக்கா, இங்கே வாங்கோ,சுடச்சுடச் சாப்பிடலாம்! ;)
நன்றி ஆசியாக்கா!
நன்றி மேனகா!
சங்கீதா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
ஏஞ்சல் அக்கா,இட்ஸ் ஓகே..நீங்க முறுக்கை ஒரு பார்ஸல்லே போட்டுவிடுங்கோ,தேங்க்ஸ்! :)
அதிரா,பேஸ்ட்ரி ஷீட்டில்தான் இப்பூடி லேயர் லேயரா வரும். பேஸ்ட்ரி ஷீட் உங்க Asta,Tesco இந்தக்கடைகளிலுமே கிடைக்குதுன்னு கூகுளாண்டவர் சொல்றாரே..விசாரிச்சுப் பாருங்க.
நன்றி அதிரா!
//பேஸ்ட்ரி ஷீட்ஸ் asda வில் கிடைக்குமா // ஏஞ்சல் & அதீஸ் pastry sheet asda வில் கண்டிப்பா இருக்கு. பட்டர் section இல் இங்கு இருக்கு. Puff pastry sheets ஓர் normal sheets ரெண்டுமே இருக்கு
ReplyDeleteநம்ம லேஸி கதையெல்லாம் சொல்லிடுவோம என்ன?? கெத்தா பாராட்டை வாங்கிட்டு பஃப்ஸ் சாப்பிட்டேன்! :D // ஒரு வேளை இந்த பதிவ படிச்ச உங்க குட்டு உடைஞ்சிடாதோ ?? இல்லே அதுக்கும் ஐடியா வெச்சு இருக்கீங்களோ?
ReplyDeleteNice recipe . நான் கட்லெட் உக்கு செஞ்ச stuffing use பண்ணி puff செஞ்சு இருக்கேன் பட் அவ்ளோ நல்லா வரலே.உங்க recipe பார்த்து திரும்பவும ஒரு தடவ ட்ரை பண்ணனும்
/ஒரு வேளை இந்த பதிவ படிச்ச உங்க குட்டு உடைஞ்சிடாதோ ?? இல்லே அதுக்கும் ஐடியா வெச்சு இருக்கீங்களோ? ///// ஹாஹா!நீங்க வேற,அவர் இந்தப்பக்கமெல்லாம் வந்தே பலநாளாச்சு.படிக்கமாட்டாருங்கற தைரியத்திலதானே குட்டெல்லாம் உடையுது! ;)
ReplyDeleteகட்லெட் ஸ்டஃபிங் நல்லாதானே இருக்கும்?? ம்ம்ம்..எந்த ஸ்டஃபிங்கா இருந்தாலும் காரம் கொஞ்சம் தூக்கலா இருக்கறமாதிரி பாத்துக்குங்க.bake ஆகி வரும்போது பேஸ்ட்ரில இருக்க பட்டரி லேயருக்கு காரம் கரெக்ட்டா ஆகிரும். :)
கருத்துக்கு நன்றிங்க கிரிஜா!
வெங்காயத்துக்கு சீனி போடக் காணமே?
ReplyDeleteப்ரோக்லி பஃப் க்ரேட். கொசுறாக கொடுத்து இருக்கிற ஐடியாவும் க்ரேட் மஹி.