Saturday, December 24, 2011

சேமியா பாயசம்

சத்திய முத்திரை கட்டளையிட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்டது
பாலகன் ஏசுவின் கீதம்

அது வானகம் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
மெரி மெரி கிறிஸ்மஸ்! ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்!

மேய்ப்பன் அவனே ஆடுகளெல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேரி மாதா தேவ மகனைக் காப்பது எப்படியோ
தேவதூதன் நம்மையெல்லாம் காப்பது அப்படியே!
அவன் ஆலயம் என்பது நம் வீடு
மணி ஓசையைக் கேட்பது பண்பாடு
மெரி மெரி கிறிஸ்மஸ்! ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்!

வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்
வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்
ராஜவாழ்வு தேவ அமைதி தோன்றும் சிலுவையிலே
நாளை அல்ல தேவனின் கருணை இன்றே கைகளிலே
மெரி மெரி கிறிஸ்மஸ்! ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்!
அவன் பாதங்கள் கண்டால் அன்போடு
ஒரு பாவமும் நம்மை அணுகாது
மெரி மெரி கிறிஸ்மஸ்! ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்!

-------------------------------------------------------------------------
உலகமெங்கும் ஏசுபாலன் பிறந்தநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
-------------------------------------------------------------------------
ஊரில் இருக்கையில் ஒவ்வொரு வருஷமும் க்றிஸ்மஸ் தினத்தில் இந்தப்பாடல் ரேடியோவில் போடுவாங்க..எனக்கு மிகவும் பிடிக்கும், இணையத்தில் தேடியபோது பி.சுசீலா அவர்களின் தளத்தில் இந்தப் பாடல் இருக்கிறது,வேறெங்கும் கிடைக்கவில்லை..ஒலி வடிவில் பாடலைக் கேட்க விரும்பினால், இங்கே க்ளிக் செய்யுங்க, பாடல்கள் லிஸ்டில் 1400-வது பாடலாக இருக்கிறது, கேட்டுப்பாருங்க.

தேவையான பொருட்கள்
வறுத்த சேமியா -1/2கப்
பால்-11/2கப்
எவாப்பரேடட் மில்க்-1/4கப்
சர்க்கரை-1/2கப் (இனிப்புக்கேற்ப)
ஏலக்காய்-2 (அ) ரோஸ் எஸ்ஸன்ஸ்-சிலதுளிகள்
திராட்சை முந்திரி
நெய்-1டேபிள்ஸ்பூன்


செய்முறை
சேமியாவைத் தனியே வேகவைத்து,குளிர்ந்த நீரில் அலசி வடித்து வைக்கவும்.
பாலை காய்ச்சவும். பால் பொங்கியதும் அடுப்பை குறைத்து 4-5நிமிடங்கள் சுண்டவைக்கவும்.
வேகவைத்த சேமியாவை சேர்த்து ஒரு கொதி வந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.
சர்க்கரை கரையும்வரை சூடாக்கி, எவாப்பரேடட் மில்க்-ஐ சேர்க்கவும்.
குறைந்த தீயில் சிலநிமிடங்கள் கொதிக்கவிட்டு பாயசத்தை அடுப்பிலிருந்து இறக்கவும்.
ஏலக்காய்ப் பொடி அல்லது ரோஸ் எஸ்ஸன்ஸ் சேர்த்து கலந்து வைக்கவும்.
நெய்யில் திராட்சை-முந்திரி வறுத்து வைத்துக்கொள்ளவும்.
பரிமாறும் கப்புகளில் பாயசத்தை விட்டு, வறுத்த முந்திரி,திராட்சை தூவி பரிமாறவும்.


சூடாகவும் நன்றாக இருக்கும்,அல்லது பாயசத்தை ஃப்ரிட்ஜில் குளிரவைத்து பரிமாறும் நேரம் வெளியே எடுத்து கப்புகளில் ஊற்றி முந்திரி திராட்சை தூவி சுவைத்தாலும் சூப்பரா இருக்கும், உங்க வசதிப்படி சாப்புடுங்க. :)

முதல் படம் இங்கே பக்கத்து வீட்டில் க்றிஸ்மஸ் லைட் டெகரே ஷன்.

15 comments:

 1. முதல் கப் பாயசம் எனக்குதான்

  ReplyDelete
 2. சேமியாபாயசம் எல்லாருக்குமே பிடித்த இனிப்பு. கிறிஸ்துமஸ் பண்டிகை பாயசம் போல் இனிக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. Mahi. this year also this song is decasted.
  Nice picture of light decaration dear.
  viji

  ReplyDelete
 4. அழகான பாடல் அருமையான பாயாசம்.

  எனக்கு இந்தப் பாயாசம் ரொம்ப பிடிக்கும்.. ஆனால் அடுத்தவர்கள் செய்து தந்தால் மட்டுமே...

  ReplyDelete
 5. // siva said...
  முதல் கப் பாயசம் எனக்குதான்//

  கப் சிவாவுக்கு பாயாசம் எனக்கு... உஸ்ஸ்ஸ்ஸ் மீ எஸ்ஸ்ஸ்:)).

  ReplyDelete
 6. /கப் சிவாவுக்கு பாயாசம் எனக்கு... உஸ்ஸ்ஸ்ஸ் மீ எஸ்ஸ்ஸ்:))./ :))))))) சிவா,ஓக்கேவா?!

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா!
  ~~
  லஷ்மிம்மா,ஆமாம்,ஈஸி & டேஸ்ட்டி இனிப்பு.கருத்துக்கு நன்றிம்மா!
  ~~
  விஜிம்மா,இந்த வருஷமும் ரேடியோவில் பாடல் வந்ததா??நானும் இப்பதான் இந்தப்பாடலை கேட்டேன்!அப்படியே பழைய நினைவுகள் அலைமோதுது! ;)
  நன்றிமா!
  ~~
  அதிரா,/ஆனால் அடுத்தவர்கள் செய்து தந்தால் மட்டுமே.../என்னது இது?இப்படி ஈஸி ரெசிப்பியெல்லாம் நீங்க செய்யமாட்டீங்களா? ;)

  இந்தப்பாடல் எனக்கும் மிகப்பிடித்த பாடல்! யுட்யூபிலே கிடைக்கல..ஆடியோவுக்கு லிங்க் இணைத்திருக்கேன்,கேளுங்க.:)

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  ReplyDelete
 7. நல்ல பாடல் மகி. எங்க வீட்டுல ஸ்வீட் சாப்பிடனுமுன்னு நெனைச்சவுடன் இதுதான் செய்வேன். ரொம்ப சுலபம் & ரொம்ப ரிச் ஆவும் இருக்காது. எல்லா எடத்திலயும் இந்த சிவாவும் பூசும் சண்டை போட்டு கிட்டே இருக்காங்களே. டீச்சர் உம கண்டுக்க மாட்டேங்குறாங்க !

  உங்களுக்கும் உங்களவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. /எல்லா எடத்திலயும் இந்த சிவாவும் பூசும் சண்டை போட்டு கிட்டே இருக்காங்களே./
  அது,அக்கா-தம்பி பாசம் கிரிஜா! எவ்வளவு சண்டை புடிக்கறாங்களோ,அவ்வளவு அன்பு இருக்குமாம்! ;)

  ஆமாங்க,நினைச்சவுடன் செய்து சாப்பிடலாம்..இதிலே எவாப்பரேடட் மில்க் சேர்த்திருப்பதால் ரிச்சா இருந்தது,வெறும் பால் மட்டும்னா சிம்பிளா இருக்கும். கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்தா செம ரிச்ச்சா இருக்கும். :P:P

  ReplyDelete
 9. //இதிலே எவாப்பரேடட் மில்க் சேர்த்திருப்பதால் ரிச்சா இருந்தது,வெறும் பால் மட்டும்னா சிம்பிளா இருக்கும். கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்தா செம ரிச்ச்சா இருக்கும். :P:P//

  ஆஹா அசத்தலாக இருக்கு.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. சட்டுன்னு ் உடனே இனிப்பு சாப்பி்னும்னு தோனுச்சி நான் ஒன்று சேமியா பாயாசம்,. 2 கேச்ரி.

  இனைத்திருக்கும் பகக்த்து வீட்டு கிறிஸ்மஸ் படம் அருமை..
  பாயாசமும் நல்ல இருக்கு

  ReplyDelete
 11. மகி,
  சேமியா பாயசம் நன்றாக உள்ளது. 'சேமியாவை வேகவைத்து வடிப்பது, எவாப்பரேடட் மில்க் சேர்ப்பது', இது இரண்டும் இல்லாமல் செய்வேன். இப்படியும் ஒருதடவை செய்துபார்க்க வேண்டும்.

  சில சமயம் இந்த க்றிஸ்மஸ் லைட் டெகரேஷனைப் பார்க்கவென்றே இரவு நேரத்தில் தெருவில் சுற்றி வருவதுண்டு.

  ReplyDelete
 12. அழகான பாடல்!!!
  சூப்பர் பாயாசம்!!!

  ReplyDelete
 13. @ஆசியாக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  @ஜலீலாக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  @சித்ரா மேடம்,நாங்களும் அப்பப்ப க்றிஸ்மஸ் லைட்டிங் பார்க்கப்போவதுண்டு! :)
  சேமியாவை தனியே வேகவைத்து வடித்து செய்துபாருங்க,சூப்பரா இருக்கும்.
  கருத்துக்கு நன்றி!

  @ப்ரியா,க்றிஸ்மஸ்-க்கு நீங்க என்ன பலகாரம் செய்தீங்க?
  நன்றி ப்ரியா!

  ReplyDelete
 14. போன வாரம் இந்த பாயாசம் செய்தேன். சூப்பரோ சூப்பர். குளிருக்கு சாப்பிட மிகவும் நன்றாக இருந்தது.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails