Wednesday, January 20, 2010

தஹி பூரி


பூரி - தேவையான பொருட்கள்
ரவை - 1 கப்
மைதா மாவு / ஆல் பர்ப்பஸ் ப்ளோர் - 3 ஸ்பூன்
எண்ணெய்
உப்பு - ஒரு சிட்டிகை
தண்ணீர்

செய்முறை
ரவையுடன் எண்ணெய், உப்பு சேர்த்து கலக்கவும். தண்ணீரை சிறிதளவு தெளித்து நன்றாக பிசையவும்.

ரவையும் தண்ணீரும் நன்கு கலந்தவுடன் மைதாவை சேர்த்து ,தேவைப்பட்டால்,மிகக் குறைவான தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்துக்கு ( கெட்டியாக) பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை பத்து நிமிடங்கள் காற்றுப் புகாத பாத்திரத்தில் மூடி வைக்கவும்.

பத்து நிமிடங்கள் கழித்து மாவை சற்றே பெரிய உருண்டைகளாக உருட்டி, வட்டமாக தேய்த்துக் கொள்ளவும். குக்கீ கட்டர் அல்லது பாட்டில் மூடியைக் கொண்டு சிறிய வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

எண்ணெயை மிதமான சூட்டில் காய வைத்து பூரிகளைப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

கிரீன் சட்னி - தேவையான பொருட்கள்
புதினா - 1 கப்
கொத்துமல்லி இலை - 1 கப்
பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக்கேற்ப)
சீரகம் - 1/2 ஸ்பூன்
புளி - நெல்லிக்காயளவு
உப்பு
எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்

செய்முறை
எலுமிச்சை சாறு தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் நைசாக அரைத்துக்கொள்ளவும்.
இறுதியாக எலுமிச்சை சாறு கலக்கவும்.
கிரீன் சட்னி தயார்.

ஸ்வீட் சட்னி - தேவையான பொருட்கள்
உலர் திராட்சை - 15
பேரீட்சை - 10
வெல்லம் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 3/4 ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
புளிக்கரைசல் -1/4கப்
உப்பு

செய்முறை
அனைத்துப் பொருட்களுடன் 1 அல்லது 11/2கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வைத்து, ஆறிய பின்னர் மிக்சியில் அரைத்தெடுக்கவும்.

தஹி பூரி
தேவையான பொருட்கள்
பூரிகள் - 12
தயிர் - 1 கப்
ஸ்வீட் சட்னி - 1/4 கப்
கிரீன் சட்னி - 1/4 கப்
வேக வைத்த கொண்டைக்கடலை - 1/2 கப்
வேக வைத்த உருளைக் கிழங்கு - 1
பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி, கொத்துமல்லி இலை - 1/4 கப்
சாட் மசாலா - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/4 ஸ்பூன்
சீரகத்தூள் - 1/4 ஸ்பூன்
பூந்தி - சிறிதளவு
சர்க்கரை - 1 ஸ்பூன்

செய்முறை
தயிருடன் சர்க்கரை சேர்த்து சிறிதளவு நீரும் சேர்த்து நன்றாக கலக்கவும். தயிர் மீது மிளகாய்த்தூள் & சீரகத்தூளைத் தூவி வைக்கவும்.

வேகவைத்த உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு தட்டில் 6 பூரிகளை அடுக்கி, ஒவ்வொரு பூரியின் ஒரு பக்கத்தையும் சிறிதாக உடைத்து விட்டு சிறிது தயிர், உருளைக் கிழங்கு, கொ.கடலை,ஸ்வீட் சட்னி,கிரீன் சட்னி, வெங்காயம்,தக்காளி,கொத்துமல்லி இலை இவற்றை வைக்கவும்.

அதன் மீது மீண்டும் சிறிதளவு ஸ்வீட் சட்னி மற்றும் கிரீன் சட்னியை ஊற்றி, சாட் மசாலா தூவி, பூந்திகளைத் தூவி மேலும் சிறிது கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்.

ஸ்டஃபிங் இதே வரிசையில் இருக்க வேண்டியதில்லை..உங்கள் விருப்பப்படி பூரிகளை நிரப்பிக் கொள்ளலாம். :)






குறிப்பு
பூரிகள்,கிரீன் சட்னி,ஸ்வீட் சட்னி எல்லாவற்றையும் மொத்தமாகத் தயாரித்து வைத்துக்கொள்ளலாம். சட்னிகளை பிரிட்ஜில் ஒரு மாதம் வரை வைக்கலாம். பூரிகளையும் ஏர் டைட் டப்பாக்களில் வைத்து உபயோக்கிக்கலாம்.

Thanks to : http://vahrehvah.com/

6 comments:

  1. mahi romba nalla irukku , parkum pothe sapida thonuthu ,(he he tamil font etho akittu)

    ReplyDelete
  2. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சாரு!

    ஆமாம்,பாக்கும்போதே சாப்பிடத்தான் தோணும்..இந்த போட்டோ பாக்கும்போதெல்லாம் எங்க வீட்டு ஈவ்னிங் டிபன் இதான். :)

    ReplyDelete
  3. வாவ்! என்னென்னமோ பண்றீங்க மஹி.. :)

    ReplyDelete
  4. உப்பேரி பாளையத்துக்கு வந்தால் உனக்கும் எலிக்கு நடக்கற அதே கவனிப்பு கிடைக்கும்..எப்போ வரே எங்க வீட்டுக்கு? :)

    ReplyDelete
  5. ஹாய் மகி... தஹி பூரி பார்த்தவுடன் இன்னைக்கு செய்யலாம் என நினைக்க வைக்குது....ஈவ்னிங் செய்து கொடுத்தால் கண்டிப்பாக என்னவர்க்கு பிடிக்கும்னு நினைக்கிரேன்...என்னதான் இருந்தாலும் உங்க வீட்டு எலி கொடுத்து வைத்த எலிதான்...இப்படி சூப்பரா சமைக்கும் மகி கிடைத்ததால்....:)

    ReplyDelete
  6. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கொய்னி!

    /என்னதான் இருந்தாலும் உங்க வீட்டு எலி கொடுத்து வைத்த எலிதான்../ உங்களுக்குத் தெரியுது..ஆனா எங்க வீட்டு எலி
    அப்பப்ப இந்த யுனிவர்சல் ட்ரூத்-ஐ மறந்திடுதே!!;) :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails