பச்சைப் பயறு - 1/4 கப் (சுமார் 60 கிராம்)
வெங்காயம் - பாதி
தக்காளி - 1
பச்சைமிளகாய் - காரத்திற்கேற்ப
பூண்டு - 2 பல்
கொத்துமல்லி விதை - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு
செய்முறை
பச்சைப் பயறை வெறும் கடாயில் மிதமான சூட்டில் வாசனை வரும்வரை வறுத்து ஆறவைக்கவும்.
குக்கரில் எண்ணெய் காயவைத்து கொத்துமல்லி,சீரகம், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய், பூண்டு,தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
பச்சைப்பையறை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஐந்து விசில் வரை வேக விடவும்.
ப்ரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரை திறந்து தேவையான உப்பு மற்றும் கொத்துமல்லி இலை சேர்த்து பச்சைப்பையறை கடையவும்.
சுவையான பச்சைப்பயறு கடைசல் ரெடி!
குறிப்பு
- சூடான சாதத்துடன் தேங்காயெண்ணெய் அல்லது நெய் சேர்த்து, இந்தப் பச்சைப்பயறு சேர்த்துப்பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இதற்கு மோர் மிளகாய் / ஊறுகாய் பெஸ்ட்காம்பினேஷன்.
- இதே போல் துவரம் பருப்பு, தட்டைப் பயறு,கொள்ளு,பச்சைத் துவரைவிதை, லென்டில் போன்ற தானியங்களையும் கடையலாம்.
- பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயம் சேர்த்து செய்தால் இன்னும் சுவை மிக நன்றாக இருக்கும்.
கோவை ஸ்பெஷல் எல்ல்லாம் நிறைய செய்யுங்க மஹி.. புண்ணியமாப் போகும் ஹி ஹி..:)
ReplyDeleteநல்லா இருக்கு மஹி
ReplyDeleteSuper green gram dal. Goes well with garam rotis as well as hot rice. Recipe and the pics are very tempting.
ReplyDeleteChitchat
http://chitchatcrossroads.blogspot.com/
நல்லா இருக்கு மகி
ReplyDeleteபுண்ணியம் கிடைக்கும்னு வேற சொல்லிட்டே.. கண்டிப்பா கோவை ரெசிப்பிகளை சேர்க்கிறேன் சந்தனா.:D
ReplyDeleteசந்தனா, சாரு, சிட்சாட் (உங்க பேரென்னன்னு சொல்லுங்களேன்..:) ) , ஃபாயிஸா உங்கள் அனைவர் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி!