Wednesday, June 5, 2013

என் வீட்டுத் தோட்டத்தில்..

டேலியா மலர்கள் சீஸன் எங்க வீட்டு பால்கனியில்! :) 
மஞ்சள் மற்றும் வாடாமல்லி நிறப் பூக்களுடன், தோழி தந்ததும் சிவப்பு கலந்த மஞ்சள் பூவாகவே மலர்ந்துவிட்டது. சரி விடுங்க, மஞ்சப்பூதான் என் ஃபேவரிட் பூவாச்சே! :) 
சில நாட்கள் முன் எங்கூரு உழவர் சந்தைக்குப் போனப்ப, லோக்கல் நர்ஸரி-காரங்க செடிகள் விற்பனை செய்தார்கள்.  கத்தரிச் செடி வளர்க்கவேண்டும் என்ற என் நெடுநாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டேன். கத்தரி நாற்று வாங்கி வந்து நட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது. :) 

அடுத்த படத்தில் இருப்பதுதான் தோழி தந்த டேலியா! டேலியாவிலுமே ஒவ்வொரு கிழங்கும் ஒவ்வொரு மாதிரி பூ தருகிறது. எங்க வீட்டு மஞ்சள் பூ பின்னணியில் இருக்கு, இரண்டிற்குமுள்ள வித்யாசம் நன்றாகத் தெரிகிறதல்லவா? 
அடுத்து கொஞ்சம் மனதை கனக்கச் செய்யும் நிகழ்வு..மரங்கள் சூழ்ந்த எங்க அபார்ட்மெண்டில் திடீரென மரங்களை வெட்ட ஆரம்பித்தார்கள். என்ன காரணம் என்று விசாரித்தபோது மரங்களுக்கு வயதாகி விட்டது, நோயுற்று இருக்கிறது, அது இது என காரணம் சொல்கிறார்கள். பலரும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்த பிறகு,  பழைய வயதான மரங்களை வெட்டிவிட்டு புது மரங்கள் நட்டு லாண்ட்ஸ்கேப்பை மெருகேற்றப் போகிறோம் என்ற அறிவிப்பு வந்திருக்கிறது. சொன்னது போல சிறு மரங்களை நடவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

பைன் மரங்கள் பெரும்பாலும் வெட்டப்பட்டு விட்டன. :( பைன் மரங்கள் விரைவில் வளர்ந்து விடும் என்று (நியூஸி.)கார்னடர் ஒருவர்;) கூறியிருக்கிறார். மற்ற மரங்களும் முழு வீச்சில் வெட்டப்பட்டுக் கொண்டிருந்தன, ஏனோ இந்த வாரம் ஆட்களைக் காணவில்லை! ஹூம்!!  எல்லா வீடுகளிலும் வெட்டப்பட்ட மரத்துண்டுகளில் சிலவற்றை (மரங்களின் நினைவாக இருக்கட்டுமே என) எடுத்து வைத்திருக்கிறோம். எங்க வீட்டய்யா வெயில் கொளுத்தும் ஒரு  உச்சி வேளையில் சென்று வியர்க்க விறுவிறுக்க எடுத்து வந்த மரத்துண்டுகள்..
அவற்றை பால்கனியில் வைத்து தொட்டிச் செடிகளை ஆர்கனைஸ் செய்து  இந்த வார இறுதியில் ஒரு நாள் இன்ட்ரஸ்டிங்-ஆகக் கழிந்தது. மும்முரமாக வேலை பார்க்கும் கார்டனர்(ஸ்)  இந்தப் படத்தில்.. :)
கொஞ்சம் கஷ்டப்பட்டு எல்லாச் செடிகளையும் ஃப்ரேமுக்குள்ள கொண்டு வந்துட்டமில்ல? ;) :) 
புதினா விளைச்சல் இது வரை அமோகமாக நடந்துவிட்டது.  இரண்டு முறை தோழிகளுக்கு கொடுத்துவிட்டேன்.
இது போனவாரம் பறித்து கொடுத்தனுப்பியபோது எடுத்த படம்.  என்னவருக்கு நான் இந்த முறை தக்காளி வளர்க்கவில்லை என மனக்குறையாக இருக்கிறதாம்.  நாற்று வாங்கித்தருகிறேன் என சொல்லியிருக்கார். தக்காளிக்கும் எனக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம்தான். அதனால்தான் வாங்காம எஸ்கேப்-பிட்டு இருக்கேன், ஹிஹி!! :) 

பொறுமையா எங்க வீட்டுத் தோட்டத்தை ரசித்தமைக்கு நன்றி! மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்! 

30 comments:

  1. மனதை கவருகிறது டேலியா மலர்கள்...

    உங்கள் வீட்டுத் தோட்டம் அட்டகாசம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வீட்டுத் தோட்டம் அருமை ..வாழ்த்துகள்..!

    ReplyDelete
  3. என் வீட்டுத்தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் - ன்னு பாடத்தோன்றுகிரது மகி... :).

    அருமையாக இருக்கு உங்க தோட்டம்.

    //மும்முரமாக வேலை பார்க்கும் கார்டனர்// மரக்குற்றியில் கண் வைச்சுட்டாரே.. அடுத்தது அதற்கு அபிடேகம்தான்...:))).

    அத்தனையும் அழகு. நல்ல பதிவு + பகிர்வு.
    மிக்க நன்றி மகி...

    ReplyDelete
  4. புதினா/மல்லி செடி வளர்ப்பது எப்படி என ஒரு பதிவு ப்ளிஸ்.

    ReplyDelete
  5. தனபாலன் சார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    இராஜேஸ்வரி மேடம், இந்த வருஷம்தான் எப்படியோ நிறையத் தொட்டிகள் சேர்ந்து ஓரளவுக்கு வந்திருக்கிறது. கருத்துக்கு நன்றிங்க! :)
    ~~
    //என் வீட்டுத்தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் - ன்னு பாடத்தோன்றுகிரது மகி... :).// அப்படித்தான் டைட்டில் வைத்தேன், நீளம் கருதி குறைந்துட்டேன்ங்க இளமதி! நீங்க பாடுங்கோ! :) :)

    //மரக்குற்றியில் கண் வைச்சுட்டாரே.. அடுத்தது அதற்கு அபிடேகம்தான்...:))).// ஹஹ்ஹா! இல்லல்ல! அபிஷேகமெல்லாம் நடக்காது. அதெல்லாம் வாக் போகும்போதுதான். வீட்டுக்குள்ள அவர் சமர்த்துக் குட்டி! :))

    கருத்துக்கு நன்றி இளமதி!
    ~~
    அனானி, நான் மல்லிச் செடி இதுவரை வளர்க்கலைங்க. முதல் முறை வரக் கொத்துமல்லியை பூரிக்கட்டையில் ஒன்றிரண்டாக தட்டி ஊன்றி வைத்தேன், ஆனால் துரதிர்ஷ்டவசமா அவை வறுத்த கொத்துமல்லியா இருந்த்தால் ஒன்று கூட முளைக்கவில்லை. நீங்க முயற்சித்துப் பாருங்க. மண் தரமானதா இருக்கணும். தண்ணீர் தேங்கி நிக்காம ஆனால் ஈரப்பதம் இருக்கும்படியான தொட்டி அல்லது மண்தரையில் விதையுங்க.

    புதினா..கடையில் வாங்கி வந்த புதினாவில் சற்று முற்றிய தண்டுகளை ரெண்டு மூன்று நட்டு விட்டேன், தழைந்து விட்டது. ரொம்ப சிம்பிள்! சீக்கிரம் உங்க வீட்டுத் தோட்டத்திலும் புதினா மல்லி வளர்க்க வாழ்த்துக்கள்!
    ~~

    ReplyDelete
  6. romba supera iruku. Flowers parthalae oru santhosham than. nanum tomatoes seed ppotu try panen, but bad luck suthama varala.
    neenga peas and red bell peppers try panunga, they come up quickly.
    your garden looks so beautiful, so much effort into this. nice. I too want to do such a patio, but dont have that much time in hand..someday :)

    ReplyDelete
  7. சுமி, நான் தக்காளி விதை போட்டேன், ஆனா அது சரியா வரலை. நாற்றுக்கள் வாங்கி நட்டப்ப பழைய வீட்டில் மண் -வெயில் இரண்டுமே சரியில்லாம காய்கள் வர்ல. போன வருஷம் தொட்டில செரி டொமாட்டோஸ் வாங்கி வச்சேன், ஆனா அது நல்ல சீஸனுக்கு வந்து காய் காய்க்கையில் இந்தியா போயிட்டேன்! :)

    பெல் பெப்பரும் ஒரு முறை வாங்கி வைச்சேன், பட் வரலங்க. வாங்கி நட்ட உடனே ஊருக்கு போக வேண்டியதாப் போச்சு. இனி எப்ப செடி வாங்க போவோம்னு தெரிலை, போகும்போது கண்டிப்பா நீங்க சொன்னதை ஞாபகம் வைச்சிக்கறேன்.

    கருத்துக்கு நன்றி சுமி! சீக்கிரம் உங்க தோட்டம் விரிவடைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. Super garden, mahi. I have some plants too. But not in the mood to click any. May be I will post them in July. You have a nice, big balcony area.

    ReplyDelete
  9. தோட்டம் நீட்டா,அழகா இருக்கு.கார்டனர் மரக் கட்டையின்மேல் உட்கார்ந்து ஒரு போஸ் கொடுத்திருக்கலாம்!!

    "அது இது என காரணம் சொல்கிறார்கள்" ________ அடிக்கிற வெயிலுக்கு ஏதாவது ஃபயர் ஆச்சுன்னா முன்னமேயே வெட்டியிருக்கலாம்பீங்க. அதுவுமில்லாம சின்ன குச்சி ஏதாவது மேலே விழுந்தாக்கூட மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு கோர்ட்டுக்கு போவீங்க.எதுக்கு வம்புன்னுதான் எல்லாத்தையும் வெட்டிட்டதா கேள்விப்பட்டேன்.

    போன வருஷம் எங்க வீட்டு எதிரில் இருந்த பெரிய மரத்தை வெட்டிட்டு 3 குட்டிகுட்டி மரங்கள் நட்டு இப்போ சூப்பரா இருக்கு.

    உங்க பதிவைப் பார்த்ததும்போய் பழைய பூக்கள் புகைப்படங்களைத் தேடி எடுத்திட்டோம்ல.ஃப்யூஸ் போன பல்பை எரிய(பத்த) வச்சதுக்கு நன்றி மகி.

    ReplyDelete
  10. எல்லா பூக்களும் கண்ணுக்கு குளுமையா அழகா இருக்கு.. புதினா அடர்த்தியா பச்சை பசேல் என்று நல்லா வந்திருக்கே.. எங்க வீட்டில் புதினா இலை எல்லாம் குட்டி குட்டியா வந்திருக்கு. இவ்வளவு பெருசா இலை வரது சந்தேகம்தான் மகி.. உங்க வீட்டு cute செல்லமும் நல்லா வளந்திருக்கார்.

    ReplyDelete
  11. 'பூமி பூக்களில் சிரிக்கிறது!' எமெர்சன் சொன்னது சரிதான் என்று சிரித்தபடி சொல்கின்றன உங்கள் தோட்டத்து மலர்கள்!

    ReplyDelete
  12. வீட்டுத் தோட்டம் அருமை ..வாழ்த்துகள் மகி...என் வீட்டில் புதினா இலை எல்லாம் குட்டி குட்டியா வந்திருக்கு மகி.

    ReplyDelete
  13. nice yellow flowers..so cute your small gardern..
    so nice photos tooo..

    ReplyDelete
  14. தோட்டத்தை அழகாக பராமரித்தமைக்கு வாழ்த்துக்கள் மகி,மலர்கள் கொள்ளை அழகு!!

    ReplyDelete
  15. அழகான டேலியா மலர்.friend கொடுத்த டேலியா ஷேடட் கலர்ல அழகாக இருக்கு. என்னிடமும் தனிமஞ்சள்தான் . எனக்கு அந்த பிங்க் பிடித்திருக்கு. கணனி இயங்காத இந்த 4வாரமும் நானும் வீட்டுத்தோட்டம் செய்தாயிற்று. உங்களோடது அழகான குட்டி பூந்(தொட்டிகள்) தோட்டம்.
    http://www.kousalyaraj.com/2012/06/2.html#axzz2VQL73kf7
    இந்த சைட்ல போய் பாருங்க. தெளிவா புரியவைத்திருக்கிறாங்க.

    ReplyDelete
  16. வானதி, சம்மர் ஹாலிடேஸ்ல உங்க வீட்டுப் பூக்களையும் காட்டுங்க! :) பால்கனி கொஞ்சம் பெரியதா இருக்கவேதான் இந்த வீட்டை டக்குன்னு செலக்ட் பண்ணோம். கருத்துக்கு நன்றி வானதி!
    ~~
    //கார்டனர் மரக் கட்டையின்மேல் உட்கார்ந்து ஒரு போஸ் கொடுத்திருக்கலாம்!!// அவருக்கு அவ்ளோ பொறுமைல்லாம் இல்லை சித்ராக்கா! இதுவே ஒரு மெத் மெத் சோஃபா அல்லது சேர்னா டபக்குன்னு ஏறி உட்கார்ந்திருப்பார். கரடு முரடான மரமில்ல? அதான் எச்சரிக்கையா செக் பண்ணிட்டு இருந்தார். ;) :)

    //அடிக்கிற வெயிலுக்கு ஏதாவது ஃபயர் ஆச்சுன்னா முன்னமேயே வெட்டியிருக்கலாம்பீங்க. அதுவுமில்லாம சின்ன குச்சி ஏதாவது மேலே விழுந்தாக்கூட மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு கோர்ட்டுக்கு போவீங்க.எதுக்கு வம்புன்னுதான் எல்லாத்தையும் வெட்டிட்டதா கேள்விப்பட்டேன்.// ஆஹா!! எங்க அபார்ட்மெண்ட் லாயரா இருக்கீங்கன்னு தெரியாமப் பதிவப் போட்டுப்புட்டனே! :)))) நீங்க சொல்வது சரிதான், ஆனா இங்கே கம்ப்ளெயின்ட் பண்ணும் ஆட்கள் இருப்பார்களா என எனக்குத் தெரியல. நான் பார்த்தவரை எல்லாரும் வருத்தப் பட்டுக்கொண்டுதான் இருந்தோம்.

    ஃபுயர் டேஞ்சர் இல்லன்னாலும், பைன் மரங்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு வேர்கள் பலமிழந்து விழுந்துவிடுமாம், அதற்குள் அவர்களாகவே வெட்டிவிடுவார்கள் என்றும் நேற்று ஒரு நட்பு மூலம் தெரிந்துகொண்டேன்.

    //போன வருஷம் எங்க வீட்டு எதிரில் இருந்த பெரிய மரத்தை வெட்டிட்டு 3 குட்டிகுட்டி மரங்கள் நட்டு இப்போ சூப்பரா இருக்கு.//ம்ம்ம்! புரிகிறது, ஆனாலும் அவ்ளோ வருஷம் வளர்ந்த மரத்தை வெட்டுவது என்பது இன்னமும் மனசின் ஓரத்தில் கொஞ்சம் வலிக்கிறது!
    இங்கேயும் சிறு மரங்கள் நட்டிருக்காங்க. பார்ப்போம்!

    //.ஃப்யூஸ் போன பல்பை எரிய(பத்த) வச்சதுக்கு நன்றி மகி.// :) தேங்க்யூ, தேங்க்யூ! படஙக்ள் பார்த்தேன், சூப்பரா இருக்கு.

    வருகைக்கும், விரிவான கருத்துக்கும் நன்றி சித்ராக்கா!
    ~~
    @ராதாராணி,//எங்க வீட்டில் புதினா இலை எல்லாம் குட்டி குட்டியா வந்திருக்கு. இவ்வளவு பெருசா இலை வரது சந்தேகம்தான் மகி..// ஓ!! மண், வெப்பநிலை, மற்றும் புதினாவின் ஆரிஜின் காரணமா இருக்கலாம்ங்க. நல்ல வளமான மண்ணா தொட்டியில் போட்டு வளர்த்துப் பாருங்க. அப்புறம் புதினாவைப் பறிக்கும்போதும் தண்டுகளை பாதிபாதியா கிள்ளாமல், ஒரு தண்டு முழுவதையும் கட் பண்ணிருவேன். ஸோ, அந்த தண்டிலேயே தழைய முடியாமல், புது தண்டுதான் வரும். அதுவும் ஒரு காரணமா இருக்கலாம். டிரை பண்ணிப் பாருங்க.

    //உங்க வீட்டு cute செல்லமும் நல்லா வளந்திருக்கார்.// :) நன்றி! அவரை வீட்டுக்கு அழைத்துவரும்போது இருந்த வளர்ச்சிதான் அவரது முழு வளர்ச்சி. ஹட்ச் விளம்பரத்திற்கு வரும் நாய்க்குட்டி பார்த்திருக்கீங்களா? அதுவும், இன்னொரு ப்ரீடும் கலந்த இனம் இவர். இவ்வளவுதான் இவரது அதிகபட்ச உயரம்! :) இவரை செலக்ட் பண்ண அதுவும் ஒரு காரணம்! :)

    நன்றிங்க!
    ~~
    @கே.பி.ஜனா, //'பூமி பூக்களில் சிரிக்கிறது!'// :) நிச்சயம்! பூமியின் சிரிப்பை ரசிக்க ரசிக்க அலுப்பதில்லைங்க எனக்கு! வருகைக்கும் ரசித்து கருத்துத் தந்தமைக்கும் மிக்க நன்றி!
    ~~
    @விஜி, //என் வீட்டில் புதினா இலை எல்லாம் குட்டி குட்டியா வந்திருக்கு மகி.// மேலே ராதாராணி அவங்களுக்கு சொல்லிருக்கேன் பாருங்க, அதையே நீங்களும் டிரை பண்ணிப் பாருங்களேன்.
    கருத்துக்கு நன்றி விஜி!
    ~~
    @சிவசங்கர், வாங்க வாங்க! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
    ~~
    @மேனகா, //வாழ்த்துக்கள் மகி,// நன்றி! அதெப்படி உனக்கு மட்டும் வாழ்த்துக்கள் சொல்லலாம், அப்ப எனக்கு? - என்று என்னவர் கேட்கிறார்! :) ;)
    ~~
    @அம்முலு, கணினி இல்லாத நேரத்தை பயனுள்ள முறையில் செலவளித்திருக்கீங்க,குட்! :)
    எனக்கு பிங்க்-ஐ விட மஞ்சள்தான் ரொம்ப பிடிச்சிருக்கு! ஷேடட் பூக்களில் சிவப்பு அதிகம் தென்படலை என்றாலும் அதுவும் ஒரு அழகாய்த்தான் இருக்கு.
    கௌசல்யாவின் ப்ளாக் நான் ஏற்கனவே பாத்திருக்கேன் அம்முலு, லிங்குக்கு நன்றி!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~

    ReplyDelete
  17. நோஓஓஓஓஓஓஓ இது என் “கொப்பி வலது” தலைப்பூஊஊஊஊஊஉ:) வழக்குப் போடுவேன்ன்ன்.. இதோ பூஸ் ஒன்று புறப்படுதே....:)

    ReplyDelete
  18. நம் வீட்டிலும் இன்று புதினா ஆய்ந்து சட்னி செய்தேன். எனக்கொரு டவுட்டு:) புதினாவை எப்படி மரத்திலிருந்து எடுப்பது. நான் தண்டை விட்டுவிட்டு இலையிலையாக ஒவ்வொன்றாக எடுப்பேன்... இது சரியா இல்லை தண்டோடு வெட்டி எடுப்பது முறையா?:)

    ReplyDelete
  19. மரத்துண்டுகள் சூப்பர். தோட்டம் அழகூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ:)..

    ReplyDelete
  20. இருக்கும் இடத்தில் அழகான பூச்செடிகள். எவ்வளவு அக்கரை வேண்டும் தெரியும். புதினா வீட்டில் வளர்த்தது பச்சென்று கமகம வாஸனை. ருசியும் கூட

    ReplyDelete
  21. நல்ல பகிர்வு மகி.தோட்டம் பார்க்க கொள்ளை அழகு.புதினா ஃப்ரெஷாக இருக்கு..

    ReplyDelete
  22. mahikku pudicha manjal poo ...deliays supera irukku mahi violat poo Kansas kavaruthu..eppadippa sinna balganilaye ivvalo supera garden seythurikkeenga alaga irukku paarkave aasaidyavum irukku....vaalthukkal mahi.

    ReplyDelete
  23. தாமதமான பதிலுக்கு முதலிலேயே ஒரு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்! ;)

    அதிராவ், //என் “கொப்பி வலது” தலைப்பூஊஊஊஊஊஉ:) வழக்குப் போடுவேன்ன்ன்.. இதோ பூஸ் ஒன்று புறப்படுதே....:)// புறப்பட்டு காணாமப் போயிட்ட மாதிரியில்ல இருக்கு, கோர்ட்டுக்குப் போன மாதிரி தெரியலையே? ஹஹஹா! :)

    //புதினாவை எப்படி மரத்திலிருந்து எடுப்பது. // என்னது...புதினா மரமா??! அய்ங்ங்ங்ங்ங்....!!!!
    //நான் தண்டை விட்டுவிட்டு இலையிலையாக ஒவ்வொன்றாக எடுப்பேன்...// அது தவறு அதிரா. அதன் பிறகு மரத்தில்;) தளிர்க்கும் இலைகள் சிறியதாகத்தான் வருமாக்கும்!
    //தண்டோடு வெட்டி எடுப்பது முறையா?:)// ஆமாம்..புதினா மரத்தின் வேரில இருந்து சில அங்குலம் விட்டுட்டு தண்டோடு வெட்டி எடுங்க. அப்பப் புது மரம் தளிர்க்கும். :)

    வருகைக்கும் ரயில் மாதிரி கூவி:) கமெண்ட் தந்ததற்கும் நன்றி அதிரா!
    ~~
    காமாட்சிம்மா, கரெக்டா சொன்னீங்க..தினமும் காலையில் கதவைத் திறக்கையிலேயே தலையாட்டும் பூக்கள் மனசுக்கு ரொம்ப இதமா இருக்கு. :) ரொம்ப கவனிப்புன்னு சொல்ல முடியாது, ஆனா நேரம் கிடைக்கும்போதெல்லாம் செடிகளுடன் பேசுவேன்! ;) :)
    கருத்துக்கு நன்றிம்மா!
    ~~
    ஆசியாக்கா, கருத்து(க்களுக்கு);) நன்றிகள்!
    ~~
    கொயினி, ஆமாங்க..டேலியா கிழங்கா வாங்கும்போது கொஞ்சம் சந்தேகத்துடன் வாங்கினேன், ஆனா இந்த வருஷ சீஸனின் டாப் ஹிட் ஆகிருச்சு! :)
    கருத்துக்களுக்கும் வாழ்த்துக்கும் நன்றி கொயினி!
    ~~

    ReplyDelete
  24. தோட்டம் ரொம்ப அழகாயிருக்கு..

    ReplyDelete
  25. தோட்டம் அருமையாக இருக்கு மகி.. ஒரு சிறிய சந்தேகம்.. புதினாவை எடுக்கும் பொழுது, வெறும் இலையை மட்டும் எடுக்க வேண்டுமா?

    ReplyDelete
  26. //புதினாவை எடுக்கும் பொழுது, வெறும் இலையை மட்டும் எடுக்க வேண்டுமா?// இல்லைங்க, அந்த முழுத் தண்டையும் கத்தரியால் கட் பண்ணி எடுக்கணும். பிறகு புது தண்டு தழைஞ்சுரும். இலையை மட்டும் பறித்தால் மறுபடி அதே தண்டில் துளிர்க்கும் இலைகள் அளவில் சிறியதாக இருக்கும்.

    கருத்துக்கு நன்றிங்க த்யானா!
    ~~
    ஷாந்தி அக்கா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~

    ReplyDelete
  27. ஜாதி மல்லி தொட்டியில் வளர்க்கும் முரை தேவை, வைத்தது வராது சொல்கிறார்கள், மனசு கேட்ட்க வில்லை, உங்கள் உதவி நாடி.........

    ReplyDelete
  28. நானும் இதுவரை தொட்டியில் வளர்ந்த ஜாதிமல்லியைப் பார்த்ததில்லைங்க. பார்த்தவரை மண்ணில்தான் கொடி வளர்ந்திருக்கு. ஆனால் தொட்டியில் வராது என என்னால் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. ஏனென்றால் இந்த வருஷம் இங்கே வின்டர் ஜாஸ்மின் என்ற வகைக் கொடி(ஏறத்தாழ ஜாதிமல்லி போலவேதான் இருக்கிறது) வாங்கிவந்தேன், அது தொட்டியில்தான் வளர்ந்து பூத்திருந்தது. இப்போதும் பெரிய தொட்டியில்தான் அதனை வளர்க்கிறேன். நன்றாகத் தழைகிறதே! பூவின் சீஸன் முடிந்ததால் மொட்டுக்கள், பூக்கள் இல்லை, ஆனால் செடி செழிப்பாகவே வளர்கிறது.

    நல்ல பெரிய தொட்டியாக வாங்குங்க, தொட்டியில் அதிகப்படி தண்ணீர் வெளியேற ஓட்டைகள் போட்டு, தரமான மண்ணாக நிரப்பி செடியை வைத்து பராமரிங்க. கண்டிப்பாக வரும் என நினைக்கிறேன். நான் இதுவரை உரங்கள் எதுவும் உபயோகித்ததில்லை, அதனால் அவை பற்றி தெரியவில்லை. இங்கே "Miracle grow Potting soil" என்ற பெயரில் கிடைக்கும் மண்ணிலேயே எல்லா சத்துக்களும் இருக்கிறது, அதைத்தான் நான் உபயோகிக்கிறேன். சென்னையிலும் இப்படியான பாட்டிங் சாயில் நர்ஸரிகளில் கிடைக்கும் என நினைக்கிறேன். முயற்சித்துப்பாருங்க அனானி! ஜாதிமல்லி நல்லபடியாக வளர வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  29. ரொம்ப அழகான தோட்டம்... நானும் வைத்திருக்கிறேன் சிறிய தோட்டம்... :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails