தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் -12
மீடியம் சைஸ் வெங்காயத்தில் கால்வாசி
தேங்காய்த்துறுவல் -2ஸ்பூன்
சீரகம் - 1/2ஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 1/2ஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை
வெண்டைக்காயின் முனைகளை நறுக்கி நீளவாக்கில் பிளந்து கொள்ளவும்.
தேங்காய்த்துறுவல்,சீரகம்,வெங்காயம் இவற்றை(தண்ணீர் சேர்க்காமல்) மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.
எண்ணெய் காயவைத்து வெண்டைக்காய்களை வதக்கவும்.
காய் முக்கால் பாகம் வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
பின்னர் பொடித்து வைத்த வெங்காயம்+சீரகம்+தேங்காய்த் துறுவலை சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.
பச்சை வாசனை அடங்கியதும் இறக்கவும்.
டேஸ்ட்டி வெண்டைக்காய் ஃப்ரை தயார். இது சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாய் இருக்கும்.சாதத்துடனும் மேட்ச் ஆகும்.
மஹி நல்லா இருக்குங்க வெண்டைக்காய் ஃப்ரை அடுத்த வாரம் செய்து பார்க்கிரேன்.
ReplyDeleteஆமாங்க கொய்னி..இது வித்யாசமா நல்லா இருக்கும்,செஞ்சு பாருங்க. நான் செஞ்சும் கொஞ்ச நாளாயிடுச்சு..இப்ப எங்க ஊர்ல பிரெஷ் வெண்டைக்கா வரதே இல்ல.
ReplyDeleteவருகைக்கு நன்றி கொய்னி.
மகி, வெரி நைஸ் ரெசிப்பி. வெண்டிக்காய் வாங்க வேண்டும். செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.
ReplyDeleteஏற்கனவே இருமுறை செய்து சுவைத்து விட்டேன்.
ReplyDeleteவெண்டக்காய் ஃப்ரை சூப்பர் மகி.. அசத்துங்க..
ReplyDeleteஆளையே மறந்துட்டீங்க இல்ல..
நீங்க அண்ணாத்தே நலமா..
வானதி,சாரு,மலிக்கா வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
ReplyDelete