போன வாரம் பாட்லக்ல இவர் கொலீக் மனைவி ஒருத்தங்க நான்வெஜ் கொண்டுவந்திருந்தாங்க..(எங்க வீட்டுல நான் வெஜ்...இவர் நான்வெஜ்) அன்னிக்கு மட்டன் கிரேவிய ரொம்ப ரசித்து ருசித்து சாப்பிட்டு, அதோட கான்சிக்வென்ஸா இந்த வாரம் லேம்ப் வாங்கிட்டு வந்து அதே மாதிரி மட்டன் கிரேவி செய்யப்போறேன்னு எலி ரெடியாச்சு. மட்டனை மேரினேட் பண்ணி வைக்கப் போறேன்னு கைக்கு கிடைச்சதெல்லாம் எடுத்து ஒரு பவுல்ல போட்டப்புறம், திடீர் ஞானோதயம்..'நான் அந்தக்காக்கு போன் பண்ணி, எப்படி செஞ்சாங்கன்னு ரெசிப்பி கேட்டு அதே போல செய்யறேன்'-னு!! அந்தக்கா சொன்னது,
மசாலா அப்பப்ப ரெடி பண்ணிப்பேன்..நான்வெஜ்-க்கு தயிர் எப்பவுமே சேர்க்கமாட்டேன்..மசாலாக்கு லவங்கம்,ஏலக்காய்,பட்டை,கிராம்பு எல்லாம் சின்ன கிரைண்டர்ல அரைச்சுக்கணும்..வெங்காயம் தாளிச்சு,ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட் வதக்கி, அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கி மட்டன்,உப்பு சேர்த்து அரை மணி நேரம் வதக்கி, அப்புறம் தண்ணி ஊத்தி வேக வைப்பேன்.போன்ல பேசினது இவரேதான்..என்னை பேசவே விடல்ல..அந்தக்கா தெலுங்குகாரங்க, ஸோ எல்லா கான்வர்செஷனுமே இங்கிலிஷ்ல..பேசி முடிச்சிட்டு ஓகே,ஓகே-ன்னு சொல்லி போன்-ஐ கட் பண்ணிட்டார்..என்னங்க சொன்னாங்க?ன்னு கேட்டா ஙே-ன்னு
[நான் வெஜ் சாப்பிடறவங்க யாருக்கும் இந்த ரெசிப்பி யூஸ் ஆகுமேன்னு,விலாவாரியா சொல்லிருக்கேன்...செஞ்சு பாத்து சொல்லுங்க]
முழிக்கிறாரு! எ.கொ.ச.இ? ரேஞ்சுல கொஞ்சம் உலுக்கி இந்த உலகத்துக்கு கோண்டு
வந்து சொல்ல வைத்த ரெசிப்பிதான் மேல சொல்லிருப்பது.
பொதுவா எங்களுக்குள்ள என்ன ஒப்பந்தம்னா அவர் சமைக்கும்போது நான் கிச்சன்ல
நுழைய மாட்டேன்.( கிச்சன்ல அவர் பண்ணற அலப்பரைய பாத்து எனக்கு
பி.பி.எகிறிடும்..அதனால இந்த ஒப்பந்தம்!!)
இவருக்கு லவங்கம்னா என்னன்னு தெரில..சின்னமன் ஸ்டிக்னா என்னன்னு
தெரில..அதெல்லாம் எடுத்துக் கொடுத்துட்டு வந்துட்டேன்..மசாலா கூட
பச்சை மிளகாய்,புதினா இதையும் சேர்த்து அரைச்சிட்டார். அதுல தண்ணி ஊத்தி
அரைக்கனுமா,ஊத்தாம ட்ரையா அரைக்கனுமான்னு பத்து நிமிஷம் குழப்பம்.ஒரு
வழியா மசாலா அரைச்சாச்சு.
வெங்காயம், பொடியா(அநியாயத்துக்கு பொடியா இருந்தது!) நறுக்கி குக்கர்லையே வதக்கினார்..இவர் எப்படி அரைமணி நேரம் பொறுமையா மட்டனை வதக்கப் போறாருன்னு நானும் ஆர்வமா வேடிக்கை பாத்துட்டு இருந்தேன். பத்து நிமிஷம் வதக்கறதுக்குள்ளயே பொறுமை போயிடுச்சு..நான் போயி இன்னொரு அஞ்சு நிமிஷம் வதக்கிருப்பேன், நீ ஹாலுக்குப் போன்னு என்ன துரத்திட்டார். அதை கொதிக்க வைச்சு தண்ணியெல்லாம் கொஞ்சம் சுண்டவைச்சு...
மட்டன் கிரேவி ரெடி!! அந்தக்கா கொண்டு வந்த அதே கலர்,அதே டேஸ்ட்..இவருக்கு ஒரே குஷியாயிடுச்சு..அவங்களுக்கும் கொண்டுபோய் குடுத்துட்டு வந்திருக்கார். இதுல இன்னொரு காமெடி என்னாச்சுன்னா,மேரினேட் பண்ணப்போறேன்னு இவர் எடுத்து வைச்ச திங்க்ஸ்.அத என்ன செய்யறதுன்னு தெரில.
தயிரு,உப்பு,மிளகாப்பொடி,
சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட சூப்பரா இருந்தது. ஆகமொத்தம், ஒரே பதிவுல ரெண்டு ரெசிப்பி குடுத்துட்டேன்..செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி!
மகி, எலி முயற்சி செய்ததை பாராட்ட வேண்டும். அப்புறம் அந்த அக்கா உங்களோடு இன்னும் பேசுறாங்களா? ஹி ஹி.... சும்மா ஒரு ஆர்வம் தான்.
ReplyDeleteபுரோக்கலி நல்லா இருக்கு.
ஆஜர்.
ReplyDeleteம்.. ஒரு கதைல ரெண்டு கதை. ;) கதை நல்லாருக்கு மஹி. ;)
ReplyDelete//அந்த அக்கா உங்களோடு இன்னும் பேசுறாங்களா?// பேசுறாங்களா? எலியோட பேசுறாங்களா? எலி உங்க.. நீங்க எலியோட பேசுறீங்களா? ;) (இல்ல... கிச்சன்ல டிஷ்லாம் ஒழுங்கா இருக்குல்ல!)
//எ.கொ.ச.இ?//மஹி இது என்ன மஹி எனக்கு புரிலயே....வெளிய சொல்லகூடாததா என்ன இப்படி சுருக்கி போட்டிருக்கீங்க....அதெல்லாம் சரி எப்படியோ அவர் செய்த அந்த ரெசிபியை பொட்டோ எடுக்கலையா...?நல்லவேளை நீங்க நான்வெஜ் சாப்பிடமாட்டீங்க இல்லைன்னா அன்னைக்கு நீங்க சோதனை எலியாய் ஆகியிருப்பீங்க.....அந்த அக்கா அடுத்த பாட்லக்குக்கு எதுவும் எடுத்துகிட்டு வரமாட்டாங்கன்னு நினைக்கேன்....ப்ரோக்கலி சூப்பர்ப்..ப்ரோக்கலியை இன்னொரு முறையில் செய்ய நல்ல ஐடியா.நன்றி மஹி.
ReplyDelete//பொதுவா எங்களுக்குள்ள என்ன ஒப்பந்தம்னா அவர் சமைக்கும்போது நான் கிச்சன்ல
ReplyDeleteநுழைய மாட்டேன்.( கிச்சன்ல அவர் பண்ணற அலப்பரைய பாத்து எனக்கு
பி.பி.எகிறிடும்..அதனால இந்த ஒப்பந்தம்!!)
//^இங்கயும் அதே கதை தான் மகி.எனக்கு ரொம்ப டென்ஷனாயிருக்கும்.கிச்சன் தடபுடான்னு இருக்கும்.
உங்க ரெசிபி நல்லாயிருக்கு...
//சூப்பர் டேஸ்ட்ல ப்ரோக்கலி ரெடி! //
ReplyDeleteஅப்படியா? :)))
அண்ணாத்த மேரினேஷன்ல ப்ரொக்கோலிக்கே இந்த கதின்னா மட்டன்னெல்லாம் மோட்சமே அடைஞ்சிருக்கும் :)) சிரிப்பு தாங்கல மஹி..
//அப்புறம் அந்த அக்கா உங்களோடு இன்னும் பேசுறாங்களா?//
வானதி.. உங்க லொல்லு தாங்க முடியல.. ஹஹ்ஹா...
//அண்ணாத்த மேரினேஷன்ல ப்ரொக்கோலிக்கே இந்த கதின்னா மட்டன்னெல்லாம் மோட்சமே அடைஞ்சிருக்கும் :))// அண்ணாத்தைக்கு தப்பாமல் பிறந்த தங்காச்சின்னு:) நிரூபிச்சுட்டியே கண்ணு!! அவரும் இதே தான் சொன்னாரு.
ReplyDelete~~~
வானதி அந்தக்கா வீட்டுல இருந்து, மட்டன் சூப்பர்னு போனும் வந்தது..சிக்கன் குழம்பும் வந்திருக்கு. ;) இன்னொரு விஷயம்..இவர் புதுசா சமைக்கிரார்னு நினைச்சுடாதீங்க..பெங்களூர்ல ஏழு நண்பர்களுக்கு செஃப்-ஆ இருந்திருக்கார்..இப்பத்தான் தோசை ஊத்தறது கூட மறந்திடுச்சாம்!! :)
~~~
////எ.கொ.ச.இ?//// என்பது சொல்லக்கூடாத வார்த்தை எல்லாம் இல்லைங்க கொய்னி..என்ன கொடுமை சரவணன் இது? என்பதன் சுருக்கம்..சந்திரமுகி படத்துல சூப்பர் ஸ்டார் சொல்வாரே,அதே டயலாக்!கொய்னி,இவ்வளவு அப்பாவியா நீங்க? எ.கொ.ச.இ??
//அவர் செய்த அந்த ரெசிபியை போட்டோ எடுக்கலையா...?// இல்லை..மறந்துபோயி;) விட்டுட்டேன்!ஹி,ஹி!!
~~~
//இங்கயும் அதே கதை தான் மகி.எனக்கு ரொம்ப டென்ஷனாயிருக்கும்.கிச்சன் தடபுடான்னு இருக்கும்.// மேனகா, வீட்டுக்கு வீடு வாசப்படி!எப்பவாவது தானே வராங்க,மன்னிச்சு விட்டுடுவோம்! ;)
~~~
///அந்த அக்கா உங்களோடு இன்னும் பேசுறாங்களா?// பேசுறாங்களா? எலியோட பேசுறாங்களா? எலி உங்க.. நீங்க எலியோட பேசுறீங்களா? ;) (இல்ல... கிச்சன்ல டிஷ்லாம் ஒழுங்கா இருக்குல்ல!)// எல்லோரும் எல்லாரோடும் பேசறோம், டிஷ் எல்லாமே நல்லாத்தான் இருக்கு..உங்க அக்கறையான விசாரிப்புக்கு நன்றி இமா!
~~~
நன்றிங்க மசக்கவுண்டன்!
மஹி என்ன கொடுமை சரவணானா!!!! ....இதெல்லாம் எங்க நியாபகம் வருது....நான் ரொம்ப அப்பாவிதான் போல....
ReplyDeleteநோ கமெண்ட்ஸ் கொய்னி! :)
ReplyDelete