Sunday, March 7, 2010
கார சட்னி-1
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
வெங்காயம் - பாதி
தக்காளி - 1
தனியா (கொத்தமல்லி விதை) - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
புளி - சிறிய கொட்டைப்பாக்களவு
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
உப்பு,எண்ணெய்
கறிவேப்பிலை,கொத்தமல்லி இலை - சிறிது
செய்முறை
வெங்காயம்,தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
எண்ணெய் காயவைத்து கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். தனியா,சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
காய்ந்த மிளகாய்,வெங்காயம்,கறிவேப்பிலை,புளி,தக்காளி இவற்றை வரிசையாக சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கிய பின்னர் தேங்காய்த் துருவல் சேர்த்து மிதமான தீயில் மூன்று நிமிடம் வதக்கவும்.
இறுதியாக கொத்துமல்லி இலை சேர்த்து இறக்கி ஆறவைக்கவும். தேவையான உப்பு சேர்த்து நைசாக அரைத்தெடுக்கவும்.
காரசாரமான சட்னி ரெடி. இது இட்லி,தோசைக்கு நன்றாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
எங்க வீட்ல எல்லோர்கும் பிடித்த சட்னி ,கொத்தமல்லி விதை சேர்த்தது இல்லை , அடுத்த முறை டிரை பண்ணுறேன்
ReplyDeleteSuper chutney. Idli looks so soft and fresh to devour.
ReplyDeleteநன்றி சாரு..தனியா சேர்த்துப் பாருங்க..நல்லா இருக்கும்
ReplyDeleteThanks very much for ur appreciation Ms.Chitchat..feel free n have it! :)
தனியா சேர்த்து இன்னைக்கு அரைத்தேன் , ரொம்ப நல்லா இருந்தது
ReplyDeleteTried this kaara chutney and pudhina chutney today.Came out really good.Thanks.
ReplyDeleteThanks Anony for trying out and the comment! :)
ReplyDelete