Wednesday, March 17, 2010
தக்காளி சட்னி
தேவையான பொருட்கள்
தக்காளி-4
வெங்காயம் -பாதி
பச்சை மிளகாய்-2
மிளகாய்த்தூள் -1ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4ஸ்பூன்
கடுகு-1/2ஸ்பூன்
சீரகம்-1/2ஸ்பூன்
சர்க்கரை -1/2ஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்துமல்லி -சிறிது
உப்பு
எண்ணெய்
செய்முறை
தக்காளி,வெங்காயம்,பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும்.
எண்ணெய் காயவைத்து கடுகு சீரகம் தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து ஓரிரு நிமிடம் வதக்கவும்.
பின்னர் 1 1/2கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்து சட்னி பதம் வந்ததும் சர்க்கரை சேர்த்து இறக்கி கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்.
இந்த சட்னி கோதுமை தோசையுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். இட்லி,தோசைக்கும் நன்றாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
நேற்று செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது
ReplyDeleteசர்க்கரை சேர்க்க மறந்துட்டேன்
ReplyDeleteRomba suvaiyana thakaali chutney. Click is too good.
ReplyDeleteதக்காளி again!!
ReplyDeleteபரவாயில்லயே, நம்மூரு ரெசிபி எல்லாம் அமெரிக்காவுல நல்லா வெல போகுதாட்டம் இருக்குது! :-)
ReplyDeleteமகி, சூப்பராக இருக்கு.எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் என் கணவருக்கு தக்காளி சட்னி என்றாலே ஒரு வெறுப்பு.
ReplyDeleteசாரு,அடுத்த முறை மறக்காம சர்க்கரை போடுங்க..நல்லாருக்கும்!
ReplyDeleteதொடர்ந்த ஆதரவுக்கு நன்றிங்க சிட்சாட்.
/தக்காளி again!!/ இமா..என் சமையல்ல தவிர்க்க முடியாத பொருட்கள் தக்காளி & வெங்காயம்..சாரி!ஹி,ஹி!
/நம்மூரு ரெசிபி எல்லாம் அமெரிக்காவுல நல்லா வெல போகுதாட்டம் இருக்குது! :-)/ வாங்க கவுண்டரே..வெல போகுதான்னு தெரிலைங்க,ஆனா நான் சலிக்காம எழுதிட்டு இருக்கேன். வருகைக்கு நன்றிங்க!
நீங்களும் பசங்களும் செஞ்சு சாப்பிடுங்க வானதி..ஆமாம்,தக்காளி பிடிக்காதவர் எப்படி ஜாம் செய்யற அளவுக்கு தக்காளி வாங்கிட்டு வந்தார்?? :):)