
தேவையான பொருட்கள்
லென்டில் -1/4கப்
ப்ரோகலி - 150 கிராம்
வெங்காயம் - பாதி
பச்சைமிளகாய் -1
தக்காளி - 1
புளி - சிறிய கொட்டைப்பாக்களவு
இஞ்சி -1 இன்ச் துண்டு
மிளகாய்த்தூள் -1 1/4ஸ்பூன்
மல்லித்தூள் -1/2ஸ்பூன்
சீரகத்தூள் -1/2ஸ்பூன்
தேங்காய்ப்பால் பவுடர்- 1 1/2ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4ஸ்பூன்
சீரகம் -1/2ஸ்பூன்
நெய்-1/2ஸ்பூன்
உப்பு
செய்முறை
வெங்காயம்,தக்காளி இஞ்சி,பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் ப்ரோக்கலி,லென்டில்,நறுக்கிய தக்காளி,பச்சை மிளகாய்,இஞ்சி, வெங்காயம், சீரகம்,மஞ்சள்தூள்,புளி சேர்த்து முக்கால் கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வைக்கவும்.
பிரெஸ்சர் அடங்கியதும் குக்கரைத் திறந்து லென்டில் -பிராக்கலி கலவையை லேசாக மசித்து விட்டு,மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,சீரகத்தூள்,உப்பு,தேங்காய்ப்பால் பவுடர் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.
இறுதியாக அரை ஸ்பூன் நெய் சேர்த்து கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.
இது சப்பாத்தி, நாண் இவற்றுக்கு பொருத்தமான சைட் டிஷ்.
விரைவாக செய்துவிடலாம்..லென்டில்-இல் நார்ச்சத்து அதிகம்,ப்ரோக்கலியில் இரும்புச் சத்து அதிகம்...இரண்டையும் சேர்த்து செய்வதால் இது ஒரு டேஸ்ட்டி & ஹெல்த்தி டிஷ்.
குருமா நல்லா இருக்கு பிரக்கோலி கிடைக்கும் போது செய்து பார்கிறேன் , காலிபிளவரில் செய்யலாமா
ReplyDeleteமகி, //நான் போன்றவற்றுக்கு// மட்டும் தான் சமையல் குறிப்பா! 'என் போன்றவர்களுக்கு' கிடையாதா! ;)
ReplyDeleteஹெல்தியான சூப்பர் குருமா!!
ReplyDeleteVery nice and innovative dish. Loved the combo.
ReplyDeleteமகி, எனக்கு இந்த புரோக்கலி சும்மா ஸ்டீம் பண்ணி சாப்பிடவே விருப்பம். இதில் எந்த விதமான ரெசிப்பியும் ட்ரை பண்ணியதில்லை. உங்கள் ரெசிப்பி நல்லா இருக்கும் போல இருக்கு. ட்ரை பண்ணி பாக்கிறேன்
ReplyDeleteகாலிப்ளவர்ல லென்டில் சேர்த்து நான் செய்ததில்ல சாரு..செஞ்சு பாருங்க. புளி சேர்க்கத் தேவை இருக்காதுன்னு நினைக்கிறேன்.
ReplyDelete/'என் போன்றவர்களுக்கு' கிடையாதா! ;)/ அப்பப்பா,எப்படியெல்லாம் தப்பு கண்டுபுடிக்கறீங்க? :) ஸ்பெல்லிங்-ஐ மாத்திட்டேன் இமா டீச்சர்!
வானதி,எனக்கும் இவருக்கும் ப்ரோக்கலி அவ்வளவா புடிக்காது..அதனால இப்படியெல்லாம் ட்ரிக் பண்ணி சாப்பிடறோம்..நல்லாருக்கும்,செய்து பாருங்க.
நன்றி சாரு,இமா,வானதி.நன்றிங்க சிட்சாட்..நன்றி மேனகா!
good one mahi
ReplyDeleteThanks for the comment suganthikka!
ReplyDelete