Tuesday, March 2, 2010

கத்தரிக்காய் மசாலா கறி


தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் - 12
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி-பூண்டு விழுது- 1 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை-சிறிது
மிளகாய்த்தூள் - 1 1/2ஸ்பூன்
மல்லித்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2ஸ்பூன்
கடுகு -3/4 ஸ்பூன்
சீரகம் - 1/2ஸ்பூன்
புளிக்கரைசல் -1/4கப்
உப்பு
எண்ணெய் - 3டேபிள் ஸ்பூன்
அரைக்க
தேங்காய்த் துருவல் - 1/4கப்
தனியா(கொத்தமல்லிவிதை) - 1 1/2ஸ்பூன்
மிளகு - 1/2ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்

செய்முறை
கத்தரிக்காயை காம்பு நீக்கி, முழுவதும் நறுக்காமல் நான்காகப் பிளந்து கொள்ளவும்.
வெங்காயம்,மிளகாய்,தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் காயவைத்து நறுக்கிய கத்தரிக்காய்களை சில நிமிடம் வதக்கி எடுத்து ஆறவைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
அரைத்த விழுதை கத்தரிக்காய்களில் ஸ்டஃப் செய்யவும்.
கடாயில் மீதி எண்ணெயைக் காயவைத்து கடுகு,சீரகம் தாளித்து வெங்காயம்,கறிவேப்பிலை,பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின்னர் தக்காளி,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும், மிளகாய்தூள்-மல்லித்தூள் சேர்த்து எண்ணெய் மிதக்கும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து செய்த கத்தரிக்காய்களை சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும்.
மீதமுள்ள தேங்காய் விழுதை ஊற்றி கொதிக்க விடவும்.
நன்கு கொதி வந்ததும் புளிக்கரைசலை ஊற்றி, கொதிக்கவிடவும்.
எல்லாம் சேர்ந்தது கிரேவி பதம் வந்தது எண்ணெய் மிதக்க ஆரம்பித்ததும் மல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான கத்தரிக்காய் மசாலா தயார்..இது சப்பாத்தி,சாதம் இரண்டுக்குமே பொருத்தமாய் இருக்கும். இட்லி,தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம்.



குறிப்பு
  • சமைக்கும் நேரம் முழுவதுமே அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். (பொதுவாகவே ஸ்லோ குக்கிங் உணவின் சுவையை அதிகரிக்கும்)
  • கத்தரிக்காய்களை கழுவி, பேப்பர் டவலில் நன்கு துடைத்து நறுக்கியவுடன் வதக்கிஎடுத்துவைக்கவும். நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவேண்டாம்.

9 comments:

  1. இந்த மாதிரி நல்ல ரெசிபி எல்லாம் கொடுத்தா நிஜமாவே அங்க வந்து டேரா போட்டுருவேன். ;)

    ReplyDelete
  2. சூப்பர் கத்திரிக்காய் சண்டே செய்து பார்துட்டு சொல்லுறேன் , இமா அம்மா சொன்ன மாதிரி அங்கு நாங்க எல்லாம் வந்துடுவோம்

    ReplyDelete
  3. Kathrikka curry looks superb and sure to taste good. Loved ur version. Would try it soon.

    Chitchat

    ReplyDelete
  4. looking yummy! I do not have egg plants right now. I will try this recipe after buying some egg plants.

    ReplyDelete
  5. இமா,சாரு வாங்க,வாங்க! ஒரே எலிக்கு:) சமைச்சுப் போட்டு எனக்கும் போர் அடிக்குது..என் சமையலை டெஸ்ட் பண்ண..சாரி, டேஸ்ட் பண்ண புதுசா ரெண்டு எலிகள் தானாவே வருதுன்னா நான் வேணாம்னு சொல்லுவேனா?? :):)

    நன்றிங்க சிட்சாட்..செய்து பார்த்து சொல்லுங்க.

    வானதி,நன்றி!

    நன்றி சந்தனா..//may be sometime in march :))// என்னமோ மார்ச்சுக்கு இன்னும் அஞ்சாறு மாசம் இருக்கிற மாதிரி சொல்றே?? இன்னிக்கே தேதி மார்ச் 3. ;)

    ReplyDelete
  6. வாவ்! மகியின் சமையல் அறையில் ((சோதனைச் சாலை))3 எலிகள். எனக்கு ஒன்றை அனுப்புங்கோ??

    ReplyDelete
  7. //// இந்த மாதிரி நல்ல ரெசிபி எல்லாம் கொடுத்தா நிஜமாவே அங்க வந்து டேரா போட்டுருவேன். ;)///



    ஏலோய் யாருல அது எனக்கும் முன்னாடி இருக்குரவ? எனக்கு ஒரு துண்ட போடு அம்மனி நல்ல கத்தரிக்காய் செஞ்சு இருக்கு சாப்பிட்டு போகலாம்...

    ReplyDelete
  8. எலி 'சா', எலி 'இ' இந்த ரெண்டு எலில தாராளமா எந்த எலிய வேணாலும் உங்க சோதனைச்சாலைக்கு எடுத்துக்கோங்க வானதி!;) :)

    வரும்போதே நெல்லை தமிழ்-ல தடபுடலா வரீங்க,வாங்க பிரபா!
    கருத்துக்கு நன்றி!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails