
வீட்டிலேயே பொடிவகைகள் அரைத்து வைக்கும் திறமை எல்லாம்
எனக்கு கிடையவே கிடையாது. ஊரில் அம்மா மிளகாய்த்தூள் அரைத்துவைப்பார்கள். மெஷினுக்கு கொண்டுபோய் அரைத்துக்கொண்டு வந்து கொடுப்பதுடன் நம்ம வேலை முடிந்தது..அதிலே என்னென்ன சாமான்கள்,என்னென்ன ப்ரபோர்ஷன் எல்லாம் நான் ஒரு முறை கூட பார்த்ததில்ல. அதுக்கு மெயின் ரீஸன்,இந்த மிளகாப்பொடிக்கு எல்லாம் வறுத்து எடுத்துவைப்பதற்குள்ள அம்மா ஒரு ஆயிரத்தெட்டு தும்மலாவது போட்டுடுவாங்க..இதுக்கப்புறமும் அந்த டேஞ்சரஸ் ஜோனுக்கு நம்ம எட்டிப்பாப்பமா என்ன??
திருமணத்தின் பின்னரும் என் கணவர் எம்.டி.ஆர்.-இல் எத்தனை பொடிவகைகள் உண்டோ,அத்தனையும் வாங்கி கிச்சனை நிறைத்து வைத்திருந்தார். அதனால் என் சமையலும் சுமாரா:) ஓடிக்கொண்டு இருந்தது.காமெடி என்னன்னா, எனக்கு சாம்பார் பொடிக்கும்,ரசப்பொடிக்கும் வித்யாசம் தெரியாது..இரண்டும் ஒரே கலர்ல இருக்கும். இவரானா பிக்பஸார்ல அழகழகா ஒரேமாதிரி டப்பா(வித் ஸ்பூன்) வாங்கி கிச்சன் கப்போர்ட் எல்லாம் அடுக்கி வைச்சிருந்தார்.
அட்லீஸ்ட் பேக்கட் இருந்தாலாவது கண்டு பிடிச்சிருப்பேன்னு வைங்க.ஏதோ சமைத்துட்டு இருந்தேன். அப்புறம் ஒருமுறை மாமியார் வந்தப்ப அவங்ககிட்ட கேட்டேன்..கொஞ்சம் லைட் கலர்ல இருப்பது ரசப்பொடி,டார்க் கலர்ல இருப்பது சாம்பார் பொடின்னு சொன்னாங்க. (எனக்கு எல்லாமே ஒரே கலர்ல தெரிந்தது!!ஹிஹி)
வீட்டிலிருந்த இட்லிப்பொடி தீர்ந்துடுச்சு. திருமணத்துக்கு முன் அம்மா பொடிக்கு வறுத்து தந்தா,அம்மியில் நுணுக்கி எடுப்பது என் வேலை. அந்த அனுபவத்திலே(!!) ஒருமுறை நானே இட்லிப்பொடிக்கு வறுத்துஅரைப்போம்னு முடிவு செய்து, து.பருப்பு, க.பருப்பு,உ.பருப்பு,கொள்ளு,அரிசி,ப.பயிறு,வரமிளகாய்,பெருங்காயம் இப்படி வீட்டிலிருந்த எல்லா பொருட்களையும் வறுத்து எடுத்துவைச்சேன்.இவையெல்லாமே அம்மா இட்லி பொடிக்கு போடுவாங்க..ஆனா, ப்ரபோர்ஷன்-னு ஒண்ணு இருக்கில்ல? அதுபத்தி யோசிக்காம நான்பாட்டுக்கு ஏதோ வறுத்து,என்னமோ அரைத்தும் விட்டேன். வாசனை எல்லாம் நல்லாவே வந்தது..பக்கத்துவீட்டு ஆன்ட்டி இட்லிப்பொடிக்கு வறுத்தாயா?-ன்னு கேட்கும் அளவுக்கு சூப்பர் வாசனை. ஆனா டேஸ்ட்டுதான் கொஞ்சம் காமெடியாடிடுச்சு.காரம்,உப்பு இரண்டும் தூக்கலா தெரிந்தது.அத்தோட விட்டேன்,இந்த இட்லி பொடி அரைப்பதை!!
அதுக்கப்புறம் நேரா ரோட் ஐலேண்ட் வந்து இறங்கினோம்..எனக்கும் சமையல்ல இன்ட்ரஸ்ட் வந்தது.இருந்தாலும், எல்லாம் ரெடிமேட் மசாலா பொடிகள்தான்! சாம்பார் பொடி,ரசப்பொடி,எம்.டி.ஆர்.மெட்ராஸ் கறி பவுடர் இவை மூன்றும் என் ப்ரீஸரில் எப்பொழுதும் இருக்கும்.இட்லி பொடி அப்பப்ப வாங்கிப்போம்..போனவருஷத்தில ஒருமுறை அறுசுவை.காம்-ல உலவிட்டு இருக்கும்போது இந்த இட்லிப்பொடி கண்ணுல பட்டது..1:1 கடலைப்பருப்பு,உளுந்துப்பருப்பு, கூட மிளகாய்,பெருங்காயம்,உப்பு!! வறுத்து அரைத்தா அவ்ளோதான்..ரொம்ப சிம்பிளா இருக்கே,ட்ரை பண்ணிப்பார்ப்போம்னு கொஞ்சமா செய்தேன்..ரொம்ப நல்லா வந்தது.அதிலிருந்து வீட்டிலேயேதான் இட்லிப்பொடி அரைத்துக்கொள்வது.
ஒரிஜினல் ரெசிப்பியின் லிங்க்-ஐ கொடுக்கலாம்னு தேடிப்பாத்தேன்.கண்டுபிடிக்க முடியவில்லை..அதனால அந்தப்பிரிவின் லிங்க்
இதோ. இந்த ரெசிப்பியை கொடுத்தவருக்கும்,
அறுசுவைக்கும் என் நன்றிகள்!
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு-1/4கப்
உளுந்துப்பருப்பு-1/4கப்
வரமிளகாய்-12(காரத்திற்கேற்ப)
பெருங்காயத்தூள்-3/4 ஸ்பூன்
உப்பு
செய்முறை கடலைப்பருப்பு,உளுந்துப்பருப்பை தனித்தனியாக வெறும் கடாயில் வாசனை வரும்வரை வறுத்து ஆறவைக்கவும். மிளகாயையும் கருகாமல் வறுத்து எடுத்து வைக்கவும். இவை அனைத்தும் நன்கு ஆறியதும் மிக்சியில் கொறகொறப்பாக பொடித்து,உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
பலமுறைகள் இதனை செய்த பின்னர் கான்பிடென்ஸ் வந்து இப்ப இதே பொருட்களுடன் 2 டேபிள்ஸ்பூன் வெள்ளை எள்ளையும் வறுத்து அரைக்க ஆரம்பித்திருக்கேன்.கூடவே சிறு துண்டு வெல்லமும்.

என்
அன்புக்கணவருக்கு(இமா&சந்தனா,நோட் திஸ் பாயின்ட்:)) இந்த இட்லிப்பொடி மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால் நான் இட்லிப்பொடி அரைப்பதே அவருக்குத்தான்!(எனக்கு இட்லிப்பொடி அவ்வளவா பிடிக்காது.) இதோ,அதற்கான சாட்சி..:))))))

இட்லிப்பொடியை எப்பவும் நான் ப்ரிட்ஜில்தான் வைப்பது.மற்ற பொடிவகைகள் எல்லாம் ப்ரீஸர்ல..இதுமட்டும் ப்ரிட்ஜ்ல.(அது ஏன்னு யாரும் கேட்டுடாதீங்க,எனக்கே தெரியாது!ஹிஹி)
ப்ரிட்ஜ்/ப்ரீஸர்ல வைச்சா பொடிகள் ப்ரெஷ்ஷா இருக்கும் என்று படித்த ஞாபகம்.

இந்த இட்லிப்பொடியுடன் இதயம் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து சாப்பிட்டால் அருமையா இருக்கும்,இதயத்துக்கும் நல்லது. நல்லெண்ணெய் இல்லயா? இட்ஸ் ஓக்கே, பாராசூட் தேங்காயெண்ணெய் கூட ஊற்றி சாப்பிடலாம்..அதுவும் இல்லையா, அப்ப சமையல் எண்ணெய்,ஆலிவ் ஆயில் இதுல ஒண்ணு கண்டிப்பா உங்க கிச்சன்ல இருக்கும்ல?அதை ஊற்றி சாப்பிடுங்க.:)
இட்லிப்பொடியில் செய்த பொடிதோசை..(தோசைய தோசை மாவில் சுட்டு,இந்த இட்லிப்பொடிய தூவணுங்க:) )

பொடிதோசை &இட்லிப்பொடி (சாம்பார்,சட்னியெல்லாம் செய்யலை..பொடியேதான்! அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க:))
பின்குறிப்பு
இந்த மைண்ட்வாய்ஸ்(நன்றி
அப்பாவிதங்கமணி:)) தொந்தரவு தாங்க முடீலங்க.
"வெள்ளிக்கிழமயும் அதுவுமா காலங்காத்தால,
/அட்லீஸ்ட் பேக்கட் இருந்தாலாவது கண்டு பிடிச்சிருப்பேன்னு வைங்க./ன்னு பொய் சொல்லறியே,நீயெல்லாம் உருப்படுவியா? இன்னும் ப்ரீஸருக்குள்ள எல்லா பொடியும் பேக்கட்,பேக்கட்டா தானே வைச்சிருக்கே? உண்மைய ஒத்துக்கோ"-ன்னு டிஸ்டர்ப் பண்ணுது. ஸோ..ஒத்துக்கிறேன்!ஹிஹிஹி!!
இந்த போஸ்டிங்-ஐ சமையல் குறிப்புல போடுவதை விட 'மொக்கை'ல போட்டா பொருத்தமா இருக்குமேன்னு லேபிள்ஸ்லயும் மாத்திட்டேன்.