
கடந்த பதிவில் கொழுந்து விட்டு எரிந்த
சந்தேகத்தீயைத்(!) தணிக்க கூலா ஒரு தயிர் பச்சடி!:)
தயிரில் வெங்காயத்தை அரிஞ்சு போட்டு,உப்பு சேர்த்து கலந்தா சரி..இதுக்கெல்லாம் ஒரு ரெசிப்பி வேணுமா?-ன்னு நீங்க கேப்பது எனக்கும் கேக்குது. ஆனா பாருங்க, ப்ளாக்னு ஒண்ணு ஆரம்பிச்சிருக்கோம்.அதுக்கு ஒரு அர்த்தம் வேணுமல்ல? அதனாலதான்!:)
ஒரு முறை என் கணவரின் கொலீக் வீட்டுக்கு போயிருந்தப்ப, அவங்க வீட்டில இந்த ரைத்தா சாப்ட்டேன். கொஞ்சம் வித்யாசமா இருந்தது..ரெசிப்பிய சொல்லுங்கன்னு கேட்டுட்டு வந்தேன்.ஆனா,சொன்னபடி கேக்கிற ஆளா இருந்தா,எங்கேயோ போயிருப்பேனே!:) அவங்க சொன்னதுல என் ருசிக்கேத்தமாதிரி மாற்றங்கள் பண்ணி செய்த ரைத்தா இது. மிகவும் சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்தயிர்-1/4கப்
பொடியாக நறுக்கிய வெள்ளரித்துண்டுகள்-1/4கப்
இது மெஷர் பண்ணலீங்க..குட்டிக்குட்டியா இருக்குமே,படம் இதோ(நன்றி:கூகுள் இமேஜஸ்)

இந்த வெள்ளரிக்கால 2 காயை தோல்சீவி, நறுக்கி போட்டிருக்கேன்.
மிளகுத்தூள்-1/4 டீஸ்பூன்
சர்க்கரை-1/2 டீஸ்பூன்
உப்பு
நறுக்கிய கொத்துமல்லி இலை-சிறிது.
*****எவர்சில்வர்/பைரக்ஸ் கிண்ணம்-1*****
செய்முறைஇது மிக,மிக சுலபமான ரெசிப்பி. சமைக்கத்தெரியாதவங்க(?!) கூட ஈஸியா,நொடியில செய்துடலாம்.
முதல்ல தேவையான பொருட்கள்-ல இருக்க தயிரைத்தவிர, மற்ற எல்லாப்பொருட்களையும் ஒரு கிண்ணத்துல போடுங்க.

அதனுடன் தயிரை சேருங்க..

எல்லாவற்றையும் ஸ்பூனால நல்லா கலக்குங்க..

அவ்ளோதான்..டேஸ்ட்டி ரைத்தா ரெடி!!
சப்பாத்தி,பிரியாணி இவற்றுடன் சாப்பிட நல்லா இருக்கும். அப்படியே சாப்ட்டாலும் நல்லா இருக்கும். :P :P
பி.கு.
இந்த தயிர்பச்சடில உபயோகித்த தயிர் ஹோம் மேட் தயிர். தயிர் பச்சடிக்கு ரெசிப்பி சொல்லிட்டு,தயிர் எப்படிப் பண்ணறதுன்னு சொல்லாம இருந்தா நல்லா இருக்குமா?
விட்டமின் D மில்க்(ஹோல் மில்க்,2% மில்க் இப்படிப் பல பெயர்கள் கொண்டது) ஒரு 2 கப் எடுத்து காய்ச்சணுங்க. பால அடுப்பில வச்சுட்டு, அங்க-இங்க போயிரக்கூடாது,பக்கத்துலயே நிக்கணும்.இல்லைன்னா,கரெக்ட்டா நீங்க அந்தப்பக்கம் போன நேரம் பாத்து, இங்க பால் பொங்கி வழிஞ்சுடும்,ஜாக்கிரதை!
பால் பொங்கினதும், அடுப்பை ஸிம்-ல வச்சு ஒரு அஞ்சு நிமிஷம் சுண்ட வைங்க. அப்புறம் அடுப்பிலிருந்து இறக்கி(இப்பலாம் உஷாராயிட்டமில்ல,அடுப்பை 'அணைங்க'-ன்னு சொல்லவே மாட்டேனே!!;)) ஆறவையுங்க.
பால் கை பொறுக்கற சூடுக்கு ஆறினதும்(அது என்ன சூடுன்னு அங்கே ஒருத்தர் கேக்கறது தெரியுது..அதாவதுங்ணா, பால் இருக்கற கிண்ணத்த வெளிப்பக்கமா தொட்டுப்பாருங்க. ஒரு 30 செகண்ட் உங்களால கிண்ணத்த தொட முடிஞ்சா,அதுதாங்க கை பொறுக்கற சூடு) 3 டேபிள்ஸ்பூன் தயிரை பால்ல சேர்த்து ஸ்பூனால நல்லா கலந்துவிடுங்க.
தயிர் உறை ஊத்தற கிண்ணம் எவர்சில்வர்/பைரக்ஸ்-ஆக இருந்தா நல்லது. ஏன்னா, இந்த பால்+தயிர் கலவை 100% தயிர் ஆகறவரைக்கும் அது நம்ம சமைக்கும் அடுப்பு பக்கத்துலயே இருக்கணும். ப்ளாஸ்டிக் எல்லாம் வச்சீங்கன்னா,டேஞ்சருங்க.உருகிடும்! இப்படி ஒரு warm-ஆன இடத்துல ஒரு 12மணிநேரம் வச்சீங்கன்னா, கட்டித்தயிர்..இதோ இது போல ரெடியாகிடும்.

தயிர் புளித்ததும்,பத்திரமா எடுத்து ப்ரிட்ஜ்(அதேதான்..போன பதிவுல வந்ததே,அதே
கருப்பு ப்ரிட்ஜ்தான்) உள்ளாற வச்சுடுங்க. தேவையானப்ப..இந்த பிரியாணி சமைக்கறப்ப, ரைத்தா பண்ணறப்ப, உங்க வீட்டுல யாராவது 'எனக்கு சின்ன பவுல்-ல தயிர், மேல ஷுகர் ஸ்ப்ரிங்கிள் பண்ணி குடுங்க'-ன்னு கேட்கும்போது,தேவையான அளவு எடுத்து யூஸ் பண்ணிட்டு, மீதியை ப்ரிட்ஜில வச்சுடுங்க.ஓக்கேவா?
பி.குறிப்புக்கு ஒரு பி.கு.இந்த உறை ஊத்தறதுக்கு தயிருக்கு என்ன பண்ணலாம்? கடைகள்-ல விக்கற ப்ளெய்ன் low fat யோகர்ட் வாங்குங்க ஒரு முறை. அது தீரும்போது இந்த மெதட்-ஐ பாலோ பண்ணி ஈஸியா வீட்டுலயே தயிர் பண்ணிக்கலாங்க.
அது எதுக்கு low fat யோகர்ட்வாங்கோணும்?நாங்க நார்மல் யோகர்டே வாங்குவம்னு சொன்னீங்கன்னா,அது நூறு சதவீதம் அது உங்க வசதி. நாங்க கொஞ்சம் டயட் கான்ஷியஸ்..அதனால low fat யோகர்ட்தான் வாங்கறது.ஹிஹிஹி ஹி(இந்த அசட்டு சிரிப்பு எதுக்குன்னா,நீங்க கேக்க நினைச்சு, டீஸன்ட்டா கேக்காம போவீங்க பாருங்க..ஒரு கேள்வி..அதுக்கான பதில். அந்த கேள்வி "low fat யோகர்ட் வாங்கற நீங்க பால் மட்டும் ஏன் low fat/fat-free வாங்கறதில்ல?")
இன்னொரு விஷயம்..இங்கே half&half -ன்னு திக் மில்க் கிடைக்கும்..அதை மைக்ரோவேவ்ல சூடு பண்ணி உறை ஊத்தினா தயிர் சூஊஊஊப்பரா இருக்கும்.ஆனா, டயட்ல இருக்கறவங்களுக்கு அதெல்லாம் வேணாம்ல?? :)
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...ஸ்ஸப்பா..முடீல! எனக்கே தாங்க முடீல.அப்ப உங்க நிலைம?!!!!! அதனால, மொக்கைய இப்போதைக்கு இத்தோட நிறுத்திடறேன்.நன்றி!
***** ===>தேவையான பொருட்களில் இந்த ஐட்டம் மிஸ் ஆனதாக கண்டுபிடித்த துப்பறியும் நிபுணருக்கு நன்றி!:)