Thursday, December 2, 2010

ஸின் சிட்டி...

சமீபத்தில் நாங்கள் சென்றுவந்த ட்ரிப்பினைப் பற்றி சொல்வதற்கு இந்தப்பதிவு.(அதாவது,அடுத்த மொக்கை ரெடி..ஹிஹி!!) நீங்களும் ரெடியாகிக்கோங்க.:)

டைட்டிலைப் பார்த்த யு.எஸ்.வாசிகளுக்கு எந்த நகரம்னு கண்டுபிடிச்சிருப்பாங்க. மற்றவர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம்...

லாஸ் வேகாஸ், யு.எஸ்.ஸில் நெவெடா(Nevada) மாநிலத்தில் ஒரு பிரபலமான நகரம்.இதனை ஸின் சிட்டி(sin city) என்றும் குறிப்பிடுவார்கள்..அரிஸோனா மற்றும் நெவெடா இரு மாநிலங்களின் எல்லைப்பகுதியில்,கொலராடோ நதியில் உள்ள ஹூவர் டேம் கட்டப்படும்பொழுது அங்கு வேலை செய்ய ஆட்கள் யாருமே வரமறுத்தார்களாம்,காரணம் அது எந்த வசதிகளும் இல்லாத ஒரு பாலைவனப்பகுதி!! எனவே அங்கே வேலைக்கு ஆட்களை கவர்ந்து இழுக்கும் பொருட்டு, அருகில் இருந்த லாஸ் வேகாஸில் பல்வேறு கேளிக்கை மற்றும் சூதாட்ட விடுதிகள் நிறைந்ததாக உருவாக்கப்பட்டதுதான் லாஸ் வேகாஸ் ஸ்ட்ரிப்.

லாஸ்வேகாஸில் இருக்கும் பிரபலமான கேஸினோக்களில் பார்த்த சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள நினைத்து இதனை எழுத ஆரம்பிக்கிறேன். இரவு நேரத்தில் இந்த ஸ்ட்ரிப்பில் கேஸினோக்களில் ஜொலிக்கும் விளக்குகளும்,அவ்வப்பொழுது செய்யப்படும் அலங்காரங்களும் மிகவும் அழகாக இருக்கும். ஒவ்வொரு கேஸினோக்களிலும் டேபிள் கேம்ஸ்,ஸ்லாட் மெஷின்ஸ்,உணவு விடுதிகள்,பல்வேறு கடைகள், பார்கள்,மாஜிக் ஷோ-சர்க்கஸ் இப்படி எல்லா தரப்பு மக்களையும் கவரும் அனைத்து அம்சங்களும் இருக்கும்.லாஸ்ட் இன்-பர்ஸ்ட் அவுட் மாதிரி கடைசில இருந்து ஆரம்பிச்சு அப்படியே முன்னாடி போலாம்,ரெடியாகிட்டீங்களா? ஓக்கே,ஆல் த பெஸ்ட்!
*****
இந்தப்பதிவில் நாம் பார்க்கப்போவது MGM க்ராண்ட் கேஸினோ.
பார்க்கிங் லாட்டில் காரை நிறுத்தும்போது மறக்காம, எந்த லெவல்,என்ன நம்பர்ல நிறுத்திருக்கோம்னு பாத்து வச்சுக்கணும்.கேஸினோல மட்டுமில்ல,பார்க்கிங் லாட்லயும் நாம் தொலைந்து போக வாய்ப்புகள் அதிகம்.எங்கே திரும்பினாலும் ஒரே மாதிரி இருக்கும்.:)
இது கேஸினோவின் என்ட்ரன்ஸ்ல கம்பீரமாகக் காட்சி தரும் சிங்கம்.பிரம்மாண்டமா இருக்கில்ல?

பார்க்கிங் லாட்டின் வழியாக கேஸினோவின் உள்ளே நுழைந்தால்...முதலில் கண்ணில் பட்டது 'முத்துக்களுடன் சிப்பிகள் விற்பனைக்கு' என்று ஒரு கடை..

இன்று காலை திறந்த சிப்பிகள் என்று அங்கங்கு சிப்பிகளை தண்ணீருள்ள கண்ணாடிக் கிண்ணத்தில் வைத்திருந்தாங்க. எனக்கென்னமோ நம்பிக்கையே வரல..போட்டோ எடுத்துக்கட்டுமா என்று கேட்டதும், அங்கிருந்த பெண்மணி தாராளமா எடுத்துக்கோங்கன்னு சொல்லிவிட்டார். க்ளோஸ்-அப் போட்டோல பார்த்தா,,முத்துக்கள் சரங்களாகக் கோர்க்கப்பட்ட அடையாளம் நன்றாகவே தெரிந்தது!! எப்படியெல்லாம் நம்மை ஏமாத்தறாங்க பாருங்க!!

அப்புறம் அப்படியே கேஸினோல உலவி ஒரு முக்கியமான இடத்துக்கு வந்து சேர்ந்தோம்(கேஸினோவின் உள்ளே போட்டோஸ் எடுக்கக்கூடாது).
Lion habitat என்று ஒரு இடத்தில் சிங்கங்களை,உயரமான கண்ணாடி அறைக்குள் வைத்திருக்கிறார்கள். கண்ணாடியின் வெளிப்புறம் இருந்து அவற்றை பார்க்கலாம்.
இரண்டு சிங்கங்கள் இருந்தன,மனிதர்களைப் பார்த்து பார்த்து போரடித்துப் போய்விட்டது போலும்,இரண்டுமே நல்ல தூக்கம். ஒன்று மட்டும் லைட்டா தலைய தூக்கிப்பார்த்துவிட்டு மீண்டும் தூக்கத்தை தொடர்ந்தது.
கண்ணாடி அறையின் கீழிருந்து வெளியே வந்தால்..சிங்கக்குட்டிகளுடன் போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்றும், ஆனால் அங்கே நமது கேமராவில் சிங்கக்குட்டியை படமெடுக்கக்கூடாது என்றும் போர்டு எச்சரித்தது.அடுத்த அறையில் போட்டோ எடுக்கலாம் என்று சொன்னாங்க..அங்கே போனா,இன்னொரு சிங்கக்குட்டி விளையாடிட்டு இருந்தது. பூனைக்குட்டி-நாய்க்குட்டிகள் போல பொம்மைகளுடன் அப்படி ஒரு விளையாட்டு! :) ரொம்ப அழகா இருந்தது.

வெளியில் இருந்த எல்லாரும் எக்ஸைட் ஆகி கத்துவதும், போட்டோ எடுப்பதுமா இருந்தாங்க. தான் அப்படி ஒரு லைம்லைட்ல இருப்பது கண்ணாடியின் அந்தப்புறம் இருந்தவருக்கு தெரில,அவர் பாட்டுக்கு ஜாலியா விளையாடிட்டு இருந்தார். திடீர்னு அறையின் கதவு திறந்து,முன்னறையில் போட்டோக்கு போஸ் குடுத்துட்டு இருந்தவர் இங்கே வர,இவர் போஸ் கொடுக்கப் போய்விட்டார். அங்கிருந்து வரவே மனதில்லாம சிங்கக்குட்டியை வீடியோ எடுத்துட்டு இருந்தேன். சில நிமிடங்கள் பொறுமை காத்த என்னவர்,போலாம் வா என்று வெளியே போய்விட்டார்.நானும் கிளம்பிட்டேன்.குழப்பமான சத்தங்களுக்கு நடுவில் ஒருவரி தமிழும் கேட்கும்,கவனமாப் பாருங்க! :)



இன்னும் அதிகத் தகவல்கள் வேண்டுவோர்,அங்கங்கு கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்புகளை படித்துப்பாருங்க.மீண்டும் அடுத்த பதிவில் வேறு ஒரு கேஸினோ பற்றிய விவரங்களுடன் சந்திப்போம்.நன்றி!

21 comments:

  1. இதெல்லாம் பாக்கனும்னா அமெரிக்காவுக்கே போக வேண்டாம் போல இருக்கே. போட்டோக்கள் எல்லாமே தத்ரூபமா இருக்கு.

    ReplyDelete
  2. பகிர்வு அருமை.வீடியோ சூப்பர்.உன் வாய்ஸ் தவிர எல்லாருடைய வாய்ஸும் இருக்கு போல.சிங்கக்குட்டி பெரிய டீத்தர் வைத்து விளையாடுவது போல் இருக்கு.

    ReplyDelete
  3. ஹாஹ்ஹா!!ஆசியாக்கா,எப்பவுமே வீடியோ எடுக்கும்போது நான் பேசவே மாட்டேன்! :) இவர்தான் பேசிட்டேஏஏஏ இருந்தார்.வீடியோ எடு,க்ளோஸ்-அப்ல எடு,நாய்க்குட்டி மாதிரி வெளையாடுது..இப்படி ஏதாவது சொல்லிட்டே இருப்பார் பாருங்க.
    ~~
    நித்து,உடனடியா படித்து கருத்தும் தந்ததுக்கு நன்றி!
    ~~
    லஷ்மிஅம்மா,உங்க கருத்தைப் பார்த்து சந்தோஷம்.இப்படி ப்ளாகில் எழுதி வைத்தால்,படிப்பவர்களுக்கும் புது இடங்களைப் பாத்த மாதிரி இருக்கும்,எனக்கும் சில காலங்கள் கழித்துப் பார்க்கவும் வசதியா இருக்கும்.நன்றிம்மா!

    ReplyDelete
  4. வீடியோவும்,புகைப்படமும் அழகாயிருக்கு மகி....தொடருங்கள்!!

    ReplyDelete
  5. //கவனமாப் பாருங்க! :)// கவனமா கேட்டேன்ன்ன்ன். ;))

    குட்டி சிங்கங்கள் க்யூட். மெட்டல் சிங்கமும் அழகா இருக்கு மகி. சிங்கம்ல! ;)

    ReplyDelete
  6. Nice pics, Mahi. So much did you win/lose?

    ReplyDelete
  7. ஆஹா...அருமையாக இருக்கு மகி...நாங்களும் இங்கு யூஸ் வந்த புதிதில் July weekend சென்று இருந்தோம்...

    எங்களுக்கு மிகவும் பிடித்து இருந்தது...இன்னொரு முறை போகலாம் என்றால் அக்ஷ்தாவினை யார் பார்த்து கொள்வது என்பதால்...அப்படி இருக்கின்றோம்....

    இன்னும் நிறைய எழுதுங்க...

    ReplyDelete
  8. ஒரு புது இடத்தைப் பத்தி தெரிஞ்சிக்கப் போறேன்.
    விரிவாக எழுதுங்கள் மகி! படங்கள் மிக அருமை!
    //அந்த முது மேட்டர் //
    என்னமா புரூடா விடுறானுக :)

    ReplyDelete
  9. ரொம்ப நல்லா இருக்கு மஹி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    ReplyDelete
  10. nice photos and good write up dear... thanks for sharing...

    Learning-to-cook
    Event: Dish Name Starts with D

    Regards,
    Akila

    ReplyDelete
  11. http://asiyaomar.blogspot.com/2010/12/blog-post_02.html
    உங்களை தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்.

    ReplyDelete
  12. wow, beautiful place, will visit sometime

    ReplyDelete
  13. மஹி.. சிங்கக் குட்டி ரொம்ப அழகு :) ஒரு சந்தேகம்.. குட்டிக்கு பல்லு முளைச்சிடுச்சா இல்லையா? :))) ஆனா அந்த பெரிய சிங்கங்களைக் கண்டதும் கஷ்டமா இருக்கு..

    வீடியோ நல்லா வந்திருக்கு.. இனியும் எங்கயாவது நல்லதா பார்க்கக் கிடைத்தால் எடுத்துக் கொண்டு வந்து போடுங்கோ..

    ReplyDelete
  14. மகி,பாஸ்போர்ட்,விசா,டிக்கட்,செலவு எதுவும் இல்லாமல் அழைத்து சென்றுவிட்டீர்கள்.நன்றி!

    ReplyDelete
  15. மகி, நல்லா இருக்கு.
    //முத்துக்கள் சரங்களாகக் கோர்க்கப்பட்ட அடையாளம் நன்றாகவே தெரிந்தது!! எப்படியெல்லாம் நம்மை ஏமாத்தறாங்க பாருங்க!!//
    அதுவும் நம்ம மகி கிட்ட! எந்த பாச்சாவும் பலிக்காதுன்னு தெரியாது போல.
    படங்கள் சூப்பர். பாவம் அந்த மிருகங்கள். இப்படியே அடைபட்டு இருக்கணும்னு விதி போல.
    கேஸினோல எவ்வளவு பணம் சம்பாதிச்சீங்க!!

    ReplyDelete
  16. மேனகா,இமா நன்றிங்க.
    மஹேஸ்,இந்த முறை சொல்லிக்கிற மாதிரி வின்-லாஸ் எதுவும் இல்லைங்க!;)

    கீதா,அஷதாவையும் கூட்டிட்டே போலாமே..கேஸினோஸ்-ல டெகரேஷன்ஸ்,ரைட்ஸ்,ரெஸ்டாரன்ட்ஸ் எல்லாமே கிட்ஸ் அலவ்ட் தானே! கேம்ப்ளிங் போறதுதான் கொஞ்சம் கஷ்டம்!நாம என்ன ரொம்பவா விளையாடப் போறோம்..போயிட்டு வாங்க.:)

    கட்டாயம் எழுதறேன் பாலாஜி.முத்து கதை அப்படிதான்..நம்மள்லாம் உஷாரான ஆளுங்கள்ல? :)

    சாரு,அகிலா,காயத்ரி,வேணி மிக்க நன்றி!

    சந்தனா,சிங்கக்குட்டிக்கு பல்லு முளைச்சதான்னு தெரியலையே.போட்டோ எடுக்கப் போயிருந்தா வாயத் திறந்து பாத்திருப்பேன்.சிங்கக்குட்டியோட வாயைத்தான்.ஹிஹி!

    ஸாதிகாக்கா,இது ஆரம்பம்தான்!இனிமேல் பல இடங்களுக்கு கூட்டிட்டுப்போறேன் உங்கள!:)

    வானதி,ஹாஹா!நல்லாவே காமெடி பண்ணறீங்க போங்க!அந்த கடைகள்ல எல்லாம் டூரிஸ்ட்டுங்க யாரும் எதுவும் வாங்கறாமாதிரி தெரில.மே பி,அங்கே வரும் பில்லியனர்ஸ்-மில்லியனர்ஸ் ஏதாவது வாங்குவாங்களா இருக்கும்.
    சிங்கங்கள் பாவம்தான்..சிங்கக்குட்டிகளை இப்படி நாய்க்குட்டி மாதிரி வளர்த்தா அவை வளரும்போது இயற்கை குணமே இருக்காதேன்னு நாங்களும் வருத்தப்பட்டோம்.:-|

    சிவா,அட்டனஸ் ரெஜிஸ்டர் க்ளோஸ் பண்ணிட்டேனேப்பா,நீ கொஞ்சம் லேட்டு!:)

    ReplyDelete
  17. நான் கேக்க நினைத்த மேட்டரையெல்லாம் சகோஸ் எல்லாரும் கேட்டு விட்டதால் ஒரு

    ””உள்ளேன் டீச்சர் “”

    ReplyDelete
  18. // siva said...

    present...mami.//

    என்னாது மாமீயாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails