Tuesday, June 7, 2011

கார்ல்ஸ்பெட் ஃப்ளவர் ஃபீல்ட்ஸ் & Maze

பூக்கள் மேல் எனக்கிருக்கும் ஈர்ப்பு எவ்வளவு என்பது இந்த வலைப்பூவை ரெகுலராகப் படிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்! :) இந்த வருடத்தின் வசந்தத்தில், இங்கே அப்பார்ட்மென்ட்டில் நான் ரசித்த ரனன்குலஸ் பூக்கள் பற்றி ஒரு தனிப்பதிவே போட்டிருந்தேன். Carlsbad என்ற இடத்தில் சுமார் 50ஏக்கர் பரப்பில் அந்தப்பூக்களாலான ஒரு பெரீய்ய ஃப்ளவர் ஃபீல்ட் இருக்கிறது என்ற விஷயம் தெரிந்ததும் போகாமல் இருக்க முடியுமா?? வெற்றிகரமாக அங்கே சென்றுவந்தோம். மிகவும் அழகாக இருந்தது.

பூந்தோட்டம் மற்றும் இல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கான தோட்டக்கலைப் பயிற்சி வகுப்புகள், அன்னையர்தின சிறப்பு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், இன்ட்ரஸ்டிங்கான விளையாட்டுக்கள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் என்று நிறைய விஷயங்கள் அங்கே இருந்தது. அதைப்பற்றிய ஒரு சிறு கட்டுரை அவள்விகடனுக்கு அனுப்பியிருந்தேன்.
இந்தத் திங்கள் (21.06.2011) தேதியிட்ட இதழில் 'கண்களில் விரியும் கவிதைப்பூக்கள்' என்ற தலைப்பில் அது வெளியாகியிருக்கிறது. :)

சஸ்பென்ஸாக இருக்கட்டுமே என்று இதைப்பற்றி நான் யாருக்குமே சொல்லவில்லை. ஆன்லைனில் புதுப்புத்தகம் செவ்வாய்க்கிழமைதான் வரும்,அதனால் ஃப்ளவர் ஃபீல்ட் கட்டுரை பிரசுரமானதும் எனக்கு தெரியவில்லை,ஊருக்குப் போன் செய்யும்போது அம்மா சொன்னார்கள். அவர்களுக்கு பெங்களூரில் இருக்கும் அக்காவின் ஃப்ரெண்ட் அக்கா சொல்லித்தான் தெரிந்திருக்கிறது. :) :)

என் கட்டுரையைப் பிரசுரித்த அவள்விகடன் குழுவிற்கும், அன்பாகத் தொலைபேசிய தலைமை நிருபர் ப்ரியா அவர்களுக்கும், அவள் விகடன் புத்தகத்தின் பக்கங்களை ஸ்கேன் செய்து அனுப்பிய பிரியாவுக்கும் என் மனமார்ந்த நன்றி!

~~~~~~~
பள்ளி நாட்களில் சிறுவர் மலர் புத்தகம் படித்த காலங்களில்(இப்பவும்தான் படிக்கிறேன்.:)) அதில் வரும் படங்களை கலர் பண்ணுவது, மேஸ்(maze)-க்கு வழி கண்டுபிடிப்பது இவையிரண்டும் என் ஃபேவரிட் டைம்பாஸ்! இது போன்ற மேஸ்கள் நிஜமாவே இருக்குமா, காகிதத்தில் இருக்கும் மேஸில் வழி கண்டுபிடிப்பதே சிரமமா இருக்கே,நேரில் எப்படி இருக்கும் என்று நினைத்துக்கொள்வேன். எப்படி இருக்கும்னுதெரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் சமீபத்தில் கிடைத்தது.

கார்ல்ஸ்பெட் ஃப்ளவர் பீல்டில் இனிப்பு பட்டாணி (sweet peas) செடிகளால் ஆன ஒரு மேஸ் இருந்தது. மேஸ் இருந்தது குழந்தைகள் ப்ளே ஏரியாவில்! அதனால் கொஞ்சம் கெத்தாவே(!) உள்ளே நுழைந்தோம். ஒரே வழியாய்க் கொஞ்ச தூரம் போனது, ஒரு இடத்தில் 6 வழிகளாகப் பிரிந்தது. அதுக்கப்புறம் எந்தப்பக்கம் போனாலும் சுத்தி சுத்தி ஒரே இடத்துக்கு வந்து சேர்வதாய் இருந்தது. ஒவ்வொரு வழியாய் எக்ஸ்ஃப்ளோர் பண்ணி, கொஞ்ச நேரத்தில் நான் ஒருவழியிலும் என்னவர் ஒரு வழியிலும் பிரிந்து சுற்ற ஆரம்பித்தோம்.

குழந்தைகள்-பெரியவங்க இப்படிப் பலபேர் உள்ளே வழிதெரியாமல் சுத்திட்டு இருந்தாங்க. எல்லாருக்கும் சிரிப்போ சிரிப்பு!! யார் முதலில் எக்ஸிட்-ஐ கண்டுபிடிப்போம்னு வேகவேகமா ஓடறோம்,எங்கே ஓடினாலும் முதலும் முதலும் நீ,முடிவும் முடிவும் நீ மாதிரி அதே 6 வழிப்பாதைக்கு கொண்டுவந்து விட்டுடுது!
என்னவர் பைனாகுலர் எல்லாம் வைச்சு வழிதேடி கண்டுபிடிச்சார். ஒருவழியா வெளியே வந்துசேர்ந்தோம். அதுக்கப்புறம்தான் நிறையப்பேர் இந்த மஞ்சக் கலர் நோட்டீஸக் கையில் வைச்சிருப்பதைப் பாத்தேன். ஒரு குட்டிப்பையன் தான் வைச்சிருந்த எக்ஸ்ட்ரா காப்பிய எனக்குக் குடுத்தான். வீட்டுக்கு வந்து நிதானமா, மேஸில் நுழைந்து வெளியே வரும் வழியை ஒரே அட்டெம்ப்ட்டில் கண்டுபிடிச்சேன். :)

~~~~~~~
ஃப்ளவர் ஃபீல்ட் புகைப்படங்கள் இன்னும் சில இந்த ஆல்பத்தில்..

Carlsbad Flower fields

21 comments:

  1. வாழ்த்துகள் மகி..அப்படிடா இப்போ உங்களை பார்த்தாச்சு..

    ரொம்ப அழகாக இருக்கின்றது இந்த மலர் தோட்டம்..முதல் தடவையாக இந்த மலர்களின் பேரினை கேட்கிறேன்...

    பூக்களின் படங்கள் அனைத்துமே கொள்ளை அழகு..

    இங்கேயும் இது மாதிரி maze இருக்கின்றது...நான் தான் இதுவரை சென்றது இல்லை..

    நீங்க californiaயாவிலா இருக்கின்றிங்க...

    ReplyDelete
  2. Nice post Mahi, and good to see you in the vikatan page :)

    ReplyDelete
  3. முதலில் அவள்விகடனில் உங்களின் கட்டுரை வந்ததற்கு வாழ்த்துக்கள்...! அழகான மலர் தோட்டம்... ரசித்தவைகளை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி! இதை எல்லாம் காணும் போது நீங்க சொன்னது போல இறைவன் நமக்களித்த பரிசாக இந்த பூமியை இன்னும் நேசிக்க தூண்டுகிறதுதான்!

    ReplyDelete
  4. உஸ் அப்பாஆஆஆ... மஹி.. எப்படியோ பாதை கண்டுபிடித்து(இது வேற கண்டுபிடி:)) வீட்டுக்கு வந்து சேர்ந்தீங்களே..அது போதும்...

    பூந்தோட்டம் அழகோ அழகு....

    ReplyDelete
  5. ஓ மஹி... எனக்கது ஆரம்பத்தில புரியவே புரியேல்லை, பெரிதாக்கிப் பார்க்க நேரமும் இருக்கேல்லை ஏன் விகடன் படம் போட்டிருக்கென நினைத்தேன், இப்போதான் பிரியாவின் பதிவு பார்த்தேன்... ஆவ்வ்வ்வ்வ்வ்வ் இதுதான் மஹியோ?.. ஐஐஐஐ நான் மஹியைப் பார்த்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
    வாழ்த்துக்கள் ஃபிரெண்ட்...

    ReplyDelete
  6. Congrats Mahi! Awesome, so happy for you. You are a celebrity now :)

    ReplyDelete
  7. wow!!!!!!!!!!
    Congratesda kanna.
    Nan mahiya parthittana!!!!!!!
    The flowers are so beauti.
    You too......
    The write is so interesting.
    You too......
    Keep writing kanna.
    vijimma.

    ReplyDelete
  8. படங்களும் பகிர்வும் அருமை மகி.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் மகி. எல்லா படங்களும் அதன் விளக்கங்களும் அருமை மகி.
    சூப்பரா இருக்கிங்க.

    ReplyDelete
  10. I enjoyed the adventure mahi. nicely narrated. Felt that i am too roaming endless in the maze with you. Glad to know you had a great time. Puzzles are my favourite too. When i read the 'inipu pattani' my foodie thought wandered for a aromatic dish aha.h.a... nice blog. will go through other postings soon. Happy to follow you :-)

    ReplyDelete
  11. Congratulations! nice to see your article published in a leading magazine. Wish you many more achievements like this. You look pretty.

    ReplyDelete
  12. மகி முதலில் மனதில் கற்பனை பண்ணிய மகியை போட்டோவில் பார்க்க முடிந்தது. இரண்டாவது, பெயரே தெறியாத பூந் தோட்டத்தில் மானஸீகமாக உன்னோடு சுற்ற முடிந்தது. படங்களும் எல்லாம் எவ்வளவு அருமையாகவும் விளக்கத்துடனும் அமைந்துள்ளது. எங்கேயோ போய்விட்டு வந்தமாதிரி ஒரு உணர்வு. பாராட்டுகள்மகி.

    ReplyDelete
  13. கீதா,நீங்கதான் போட்டோ பார்க்கணும்னு சொல்லிட்டே இருந்தீங்க,இப்ப சந்தோஷமா? :)

    ரனன்குலஸ் பூக்கள் நானும் இங்கேதான் முதல்முறை பார்த்தேன்.மேஸ் போய்ப்பாருங்க,நல்ல அனுபவமா இருக்கும். நான் கலிஃபோர்னியாலேதான் இருக்கேன்.

    தேங்க்ஸ் கீதா!

    ராஜி,தேங்க்ஸ் ராஜி!

    ப்ரியா,உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி! அழகாக இருக்கும் எதைப்பார்த்து ரசிக்கையிலும், அந்த வாய்ப்பை நமக்குத்தந்த இறைவனுக்கு நன்றி சொல்லணும் என்றுதான் தோணும். நன்றி ப்ரியா!

    தொடர்பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி ஸாதிகாக்கா,கட்டாயம் தொடர்கிறேன்.

    ஆமாம் அதிரா,குழந்தைகளுக்கான மேஸ்தானேன்னு போனா,நல்லா சுத்தவைச்சுடுச்சு!! :) பூக்களை ரசித்ததுக்கு தேங்க்ஸ்!

    மேனகா,நன்றி மேனகா!

    ReplyDelete
  14. /எனக்கது ஆரம்பத்தில புரியவே புரியேல்லை,/கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதிரா விகடனைப்பற்றி எதுவுமே சொல்லலையேன்னு என் ஹார்ட் சுக்குநூறா உடைந்துபோச்சு! மீண்டும் உங்க கமென்ட் பாத்ததும் ஹார்ட்டை பெவிகால் போட்டு ஒட்டி சந்தோஷப்பட்டுகிட்டேன். :):):)
    ரொம்ப சந்தோஷம் & தேங்க்ஸ் அதிரா!

    மஹேஸ் அக்கா,அவ்வ்வ்வ்வ்! ஏதோ உள்குத்தோடதான் இப்பல்லாம் கமென்ட்டே போடறீங்க நீங்க! செலிபரிட்டின்றீங்க,ஹவ் எபவுட் எ ரோட் ட்ரிப்ன்றீங்க..பயம்ம்ம்மா இருக்கே?!! ;) ;)
    BTW,தேங்க்ஸ் பார் தி கமென்ட்!

    விஜிம்மா,சென்னை போனதும் மறக்காம புக் வாங்கிப்பாருங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ஸாதிகாக்கா,நீங்களும் விகடனைக் கவனிக்கலையோன்னு நினைச்சேன்,தேங்க்ஸ் ஸாதிகாக்கா! ;)

    விஜிஅக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    மீரா,முதல்வருகைக்கும் ரசித்துப்படித்தமைக்கும் மனமார்ந்த நன்றி! பட்டாணி செடிகள்ல காயை விட பூக்கள்தான் கலர்கலராத் தெரிந்தது.நாங்கதான் மேஸில் சுத்திட்டு இருந்தோமே,ரெசிப்பிக்கெல்லாம் எங்கே நேரம்? :)
    உங்க பாராட்டுக்கு மீண்டுமொருமுறை நன்றி!

    MCF சார்,உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி!

    காமாட்சிமா,ரசித்துப்படித்து கருத்தும் தந்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் மகி.

    ReplyDelete
  16. நேத்தே மகியைப் பாத்துட்டேன் !!!! பிஸியோபிஸி, அதனால எழுந்ததும் இங்கே வந்தாச்சு.

    ReplyDelete
  17. wow kudos.. I was about to ask where in west coast you are located. Now I am assuming you must be in seattle area.. I m calif. you rock !!

    ReplyDelete
    Replies
    1. Thanks for stopping by Srividhya! I am living in SoCal, not Seattle! :)

      Delete

LinkWithin

Related Posts with Thumbnails