Monday, January 30, 2012

ஏழு காய் சாம்பார்

பொங்கல் குழம்பு/ திருவாதிரை கூட்டு/ 7 கறி குழம்பு/கதம்ப சாம்பார் இப்படி பலபேரில் திருவாதிரை சீஸன்ல இருந்து அங்கங்கே வலைப்பூக்களில் வந்த ரெசிப்பிகளைப் பார்த்து நாமும் செய்து பார்ப்போமேன்னு நிதானமா(!) இப்பச் செய்துபார்த்தேன். :)
தேவையான பொருட்கள்

நறுக்கிய காய்கள் -1 கப் (அ) 11/2 கப்
துவரம் பருப்பு -1/4 கப் (தேவையான நீர், மஞ்சள்தூள் சேர்த்து வேகவைச்சுக்குங்க)
புளிக்கரைசல்-1/4கப்
மஞ்சள்த்தூள் -1/8டீஸ்பூன்
வறுத்து பொடிக்க
சீரகம்-1டீஸ்பூன்
மிளகு-1டீஸ்பூன்
தனியா-1டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்-3 (அ) 4
கடலைப்பருப்பு-1டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் -1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க
எண்ணெய்-2 டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை-ஒரு கொத்து

செய்முறை (படங்களில் இருக்கும் நம்பருக்கு ஏற்ற வரிசையில் ரெசிப்பியும் இருக்கு. கரெக்ட்டாப் படங்களைப் பார்த்துக்கலாம். :) )

1.வறுக்க வேண்டிய பொருட்களை துளி எண்ணெயில் கருகாமல் வறுத்து, ஆறவிட்டு..

2. மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.

3.காய்களை ஒரே அளவில் இருக்குமாறு நறுக்கி பாத்திரத்தில் போட்டு, மஞ்சள்தூளுடன் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு வேகவிடவும்.

4.காய்கள் வெந்ததும் புளிக்கரைசலைச் சேர்க்கவும்.

5.வெந்த பருப்பு, தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

6.குழம்பு கொதிவந்ததும் மசாலாப் பொடியைச் சேர்த்து, தேவையான அளவுக்கு தண்ணீரும் சேர்த்து கொதிக்கவிடவும்.

7. ஐந்து நிமிடங்கள் கொதித்ததும் அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து இறக்கவும்.

8.தாளிப்புகரண்டியில் எண்ணெய் காயவைத்து கடுகு,சீரகம்,கறிவேப்பிலை,வரமிளகாய் தாளித்து குழம்பில் ஊற்றவும். காரசாரமான கமகம சாம்பார்/ 7 கறி கூட்டு ரெடி! :)

பொங்கல் முடிந்து பலநாள் கழிச்சு இந்தக் குழம்பை செய்ததால் பொங்கலுடன் சாப்பிடவில்லை, ஓட்ஸ்+கோதுமைமாவு தோசையுடன் சாப்பிடுங்க. :)

ஏழு காயிலே குழம்பு செய்யணும்னு முடிவு செய்துட்டேன்,ஆனா (முதல் படத்திலே) பாருங்க...
1.அரசாணிக்காய்(மஞ்சள் பூசணி/பரங்கி)
2.ப்ரோக்கலி
3.உருளை
4.கேரட்
5.பட்டாணி
6.பீன்ஸ்
....ஆஹா ஆறு காய்தானே இருக்குது?? இன்னொரு காயும் வேணுமில்ல?? ஃப்ரிட்ஜை குடைஞ்சதில மாட்டினது முட்டைக்கோஸ்,அதையும் கொஞ்சம் எடுத்து கழுவி நறுக்கி போட்டா ஏழு காய் ஆகிருச்சு! :)

ப்ரோக்கலியும் முட்டைக்கோஸும் பட்டாணியும் சாம்பார்ல போடறதான்னு புருவத்தை உயர்த்தறீங்களா?? ஹிஹிஹி..என்ன செய்ய? ஃப்ரோஸன் முருங்கை இருந்தது,ஆனா அதை தனியா வேகவிட்டு சேர்க்க பொறுமை இல்ல, அதுவும் இல்லாம அப்பவும் காய் குறையும்ல? இந்தக் கூட்டுக்கு முக்கியமான காய் பரங்கி/அரசாணி...அது இருந்தது. இருந்த காய்களைச் சேர்த்து 7-ங்கற லக்கி நம்பரை மிஸ் பண்ணிரக்கூடாதேன்னு அஜீஸ்;) பண்ணிகிட்டேன். இன்னொரு காமெடி என்னாச்சுன்னா சாம்பார்ல ப்ரோக்கலி + அரசாணிக்காய் ரெண்டுமே கரைஞ்சு(!) போயிருச்சு..ஹிஹி!!! நீங்க பார்த்து கரெக்ட்டா வேகவிடுங்க,சரியா? ;)
~~~
சாம்பாருக்கு போட்டது போக மீதியிருந்த பரங்கிக்காயில் ஒரு மதியம் பத்து நிமிஷத்திலே இந்த தயிர்குழம்பு செய்தேன். ரெசிப்பி ப்ராப்பரா பார்க்கணும்னா இங்கே இருக்கு..

ஷார்ட்கட்ல போனம்னா, "அரசாணிக்காயை கொஞ்சமா தண்ணி, தேவைக்கு உப்பு சேர்த்து வேகவிடணும். சிறு துண்டு இஞ்சி,ஒரு பச்சைமிளகா சேர்த்து ஒரு கப் தயிருடன் சேர்த்து மிக்ஸில அரைச்சு, காயில சேர்த்து லோ ஹீட்ல ஒரு கொதி விடணும். கடுகு , சீரகம், ஒரு வரமிளகா தாளிச்சு கொட்டினா சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு சூப்பர் குழம்பு ரெடி! :) " Thanks to Faseela for the quick n easy recipe!
~~~
இது இங்கே கிடைக்கும் அரசாணிக்காய்/பரங்கிக்காய்/pumpkin..

இன்னொரு வியூ...
இது கூகுளாரின் இமேஜஸ்..முழுக்காய்!!
படம் கேட்ட ஆட்கள் காமெடி கீமெடி(!) பண்ணாம சீரியஸாக் கேட்டிருக்கிறீங்கள் என்ற நம்பிக்கையில் படங்கள் இணைத்திருக்கிறேன். :) ;)

34 comments:

  1. இப்படியா சமையலில் பின்னி பெடல் எடுக்கிறது? சூப்பர் மகி.

    ReplyDelete
  2. ஆஹா.. அருமையாக இருக்கு. கதம்ப சாம்பார் சூப்பர்... மஹி

    ReplyDelete
  3. ஏஏஏஏஏஏழு காயில் சாம்பாரா...!நான் அதிக பட்சம் ரெண்டு காயில் மட்டும்தான் வைத்து இருக்கிறேன்.டிரை பண்ணுகிறேன் மகி,.

    ReplyDelete
  4. 7 காய் சாம்பார் சூப்பர்.... இந்த சாம்பார் சாதத்தில் போட்டு பிசைந்து, தொட்டுக்க ரோஸ்ட் காய், சிப்ஸ் தொட்டுண்டு சாப்பிட்டா சூப்பர் ரா இருக்கும். எங்க மாமியார் கூட எனக்கு கல்யாணம் ஆனா புதுசுல நிறைய தடவை பண்ணி இருக்காங்க.... ரொம்ப நாள் ஆச்சு......

    ReplyDelete
  5. இந்த ஏழுகறி கூட்டுதான் எங்க திருன வேலிபக்கம் தாளகம்னு சொல்லுவோம் திருவாதிரைக்களிகூட பெஸ்ட் காம்பினேஷன்.

    ReplyDelete
  6. மகி நீங்க ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் சொல்லுவீங்க. நான் செய்வது மிக மிக குறைவு, ஆனா எப்பவாவது செய்தால்... ஃபிரிஜ்ல எத்தனை மரக்கறி இருக்கோ அத்தனையும் போட்டு(10,12 உம்ம் போடுவேன்), அரைச்சுப் போடுவதில்லை, தாளிப்பேன்... இதே முறையிலேயே செய்வேன்.. சூப்பராகத்தான் வரும். சாம்பாறென்றல் இப்படித்தான் இருக்கும் எங்கட வீட்டில், இதை விட வேறு விதமாக எல்லாம் செய்வதில்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).

    இன்று ஓசை சுடப்போகிறேன், சாம்பாறைத்தான் நினைச்சுக்கொண்டிருக்கிறேன்.... சட்னியோடு:).

    ReplyDelete
  7. பரங்கிக்காயில் தயிர்க்குழம்போ... அவ்வ்வ்வ் நல்ல ஐடியா.. நான் இதுவரை தயிரை வெறும் சொதியாக நீங்க வைத்திருப்பதுபோல வைத்ததுண்டு, ஆனா அதுக்கு காயேதும் சேர்த்ததில்லை, இப்போ சேர்க்கப்போகிறேன்... பறங்கிக்காய் என்றால் எப்பூடி இருக்கும் என படம் போட்டிருக்கலாமெல்லோ.

    நாங்கள் மிளகாய்த்தூள் அல்லது ஏதும் ஸ்பைசஸ் சேர்ப்பின் அதைக் குழம்பு என்போம். உப்படி வெள்ளையாக இருப்பதை எல்லாம் சொதி, அல்லது திக்காக இருப்பின் வெள்ளைக்கறி என்போம்.

    ReplyDelete
  8. 7 காய் சாம்பாரைவிடவும் நீங்கள் எழுதியிருக்கும் பாணி அருமையாக உள்ளது

    ReplyDelete
  9. mahi...all vegges are so fresh....ennaku sapidanum pola irruku...super neenga :)

    ReplyDelete
  10. சீமை காய்கறியாகப் போட்டு ,பொடியும் புதுசாக வறுத்துப் பொடித்துப் போட்டு,பிட்லைகளையெல்லாம் முந்திக்கொண்டு ருசியில் முந்திக் கொள்கிறது மகியின் 7காய் ஸாம்பார்.ரொம்பரொம்ப ருசிதான்.

    ReplyDelete
  11. ஐ ஏழு காய் ஆம்பாறு போஸ்ட் வந்திடிச்சு. ப்ரோக்லி போட்டு சாம்பார் செஞ்சதில்லே. ஆனா கரைஞ்சிடுதுன்னா செஞ்சு பார்க்க வேண்டியதுதான். என் பையன் ப்ரோக்லி சாபிட்ட்ருவான் அவங்க அப்பாதான் அழிச்சாட்டியம் பண்ணுவாரு. அதனால இப்புடி disguise பண்ணி கொடுத்துற வேண்டியதுதான்

    ReplyDelete
  12. //முட்டைக்கோஸும் பட்டாணியும் சாம்பார்ல போடறதான்னு புருவத்தை உயர்த்தறீங்களா??//

    முட்டை கொசும் பட்டாணியும் உருளை கிழங்கும் சேர்த்து சிறு பருப்பு இல்லே பாசி பருப்பு போட்டு சாம்பார் வெச்சு இருக்கேன் நல்லா இருக்கும்.

    ReplyDelete
  13. //இன்று ஓசை சுடப்போகிறேன், சாம்பாறைத்தான் நினைச்சுக்கொண்டிருக்கிறேன்//



    அப்போ சமைக்க போறதில்லே சாம்பார வெறும் நெனைப்போட சரி போல இருக்கு:))

    ReplyDelete
  14. இந்த தயிர் கொழம்பு இஸ் மை பேவரெட் யு நோ...;) அந்த ஏழு காய் கொழம்பு செஞ்சதில்ல... நல்ல ரெசிபினு தோணுது as it is more nutritious... will try sometime... thanks Mahi...:)

    ReplyDelete
  15. Super sambar. nice addition of broccoli and cabbage

    ReplyDelete
  16. //அப்போ சமைக்க போறதில்லே சாம்பார வெறும் நெனைப்போட சரி போல இருக்கு:))//

    அவ்வ்வ்வ்வ்வ் காணல்லியே என நினைச்சேன்:))... நான் ஆம்பாறு வைக்கும்போது கீரைகூடச் சேர்ப்பேன் தெரியுமோ?

    முதலில் அவியும் காய்கறிகளைப் போடவேணும், கடசியாகத்தான் கீரை பட்டாணி(புரோசின் எனில்) போன்றவற்றைப்போடோணும்... ஆனா நிறைய மரக்கறி இருப்பின் பட்டாணி தேவைப்படாதெனக்கு, தவிர்த்திடுவேன்.

    இல்ல சாம்பாறு வச்சாச்சூஊஊஊஊஊஉ.. தோசைக்கும் சட்னிக்கும்கூட தாளிதம் செஞ்சிட்டேன்ன்ன்ன்ன் எங்கிட்டயேவா.. 4 மணிக்கு சட்னி, 5 -6 ஓசை:)).

    ReplyDelete
  17. காய் சாம்பாரும்,ஈஸி மோர் குழம்பும் சூப்பர்ர்!!

    ReplyDelete
  18. இதுதானா பறங்கிக்காய் அவ்வ்வ்வ்வ்வ்... எமனைக் கூப்பிடுங்க.. எமனைக் கூப்பிடுங்க முடியல்ல சாமீஈஈஈஈஈஈ:))

    இதை நாங்க சிகப்பு பூசணி அல்லது சக்கரைப் பூசணி என்போம். இதேபோல butter nut இருக்கே.... அவரை... டுபாய் பூசணி என்போம்.

    படத்துக்கு நன்றி மகி.

    ReplyDelete
  19. மகி... என் பக்கத்தில படங்கள் வரப் பண்ணிட்டேன்ன்ன்ன்ன்ன்:)).

    ReplyDelete
  20. /என் பக்கத்தில படங்கள் வரப் பண்ணிட்டேன்ன்ன்ன்ன்ன்:))./அதானே..பூஸா,கொக்கா? சூப்பர் அதிரா!:)

    ReplyDelete
  21. wow lovely combo of veggies,the most healthy sambar...luks delicious.

    ReplyDelete
  22. அவ்வ்வ்வ்வ்வ் காணல்லியே என நினைச்சேன்:))... // நீங்க நெனச்சப்புறம் வரலேன்னா நல்லா இருக்காதில்லே :))



    //5 -6 ஓசை:)). என்னது 5 -6 தோசையா ஆஆஆ ஹீ ஹீ சும்மா சொன்னேன் நீங்க மணியத்தான் சொன்னீங்கன்னு தெரியும் ம்ம்ம்.

    நேத்திக்கு நானும் மசாலா ஓசை சாப்பிட்டேன். ப்ரோக்லி பொரியல் வெச்சு மசாலா ஓசை. எங்க வீட்லயும் 6 - 6.30 மணிக்குள் டின்னர் முடிஞ்சிடும் அதனால ஈவினிங் ஸ்நாக்ஸ் கெடையாது

    ReplyDelete
  23. நல்லா இருக்கு ரெசிப்பி. என் அம்மா 10க்கும் மேல் காய்கறிகள் போட்டு சாம்பார் செய்வார்கள் சூப்பரோ சூப்பர்.

    சரியா எண்ணிப்பார்த்தேன் 6 தான் இருந்தது. பிறகு தான் முட்டைக்கோஸ் இருந்ததை கவனித்தேன்.
    பூஸார் ஸ்பெல்லிங்கு மிஸ்டேக்கு.... டீச்சரையும் காணோம். இனிமேல் நான் குச்சியை கையில் எடுத்திட வேண்டியது தான்.

    ReplyDelete
  24. மகி,

    தோசைக்குப் பக்கத்திலுள்ள கதம்ப (எழுகறி) சாம்பார்,கரண்டியிலுள்ள சாம்பார் பார்க்கவே சூப்பராக உள்ளது. சில விசேஷ தினங்களில் 21 காய்கறிகள்கூட‌ சேர்த்து செய்வார்கள். அரசாணிக்காய்_பெயரை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.சர்க்கரை சேர்ப்பதும் புதிதாக உள்ளது.

    ReplyDelete
  25. சாம்பாறு என்றாலே... பலது சேர்ந்ததுதான் ஆம்பாறு:)).. ஒன்றில, ரெண்டில வைப்பதெல்லாம் சாம்பாரல்ல:)) அது கறீஈஈஈஈஈஈ ஈஈஈஈஈஈஈஈஈ ஈஈஈஈஈஈஈஈஈஈ ஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஈஈஈஈஈஈஈஈ ஈஈஈஈஈஈஈஈ ஈஈஈஈஈஈஈஈஈஈ ஈஈஈஈஈ:)))).... ஹையோ உண்மையைச் சொன்னா இப்பூடிக் கலைக்கினம்... சே..சே.... பேசாமல் வான்ஸ்ட புதினா மரத்துக்குக் கீழ ஒளிச்சிட வேண்டியதுதான்:)).

    ReplyDelete
  26. Puthina .... I cut it last year. Ever green than irukku.

    ReplyDelete
  27. I really loved the clicks and recipe on the sambar. It looks soooo good. Hope you will post this recipe in English as well. :)

    ReplyDelete
  28. நான் வைக்கும் சாம்பாரில் கண்டிப்பாக குறைந்தது 5 காயாவது இருக்கும்... ஒரு காலத்தில முருங்கையை பருப்போடு வேகவைத்து சாம்பாரில் காய் இருக்காது... வெறும் குச்சிதான் இருக்கும் (வெறும் காத்துதான் வருது! ஞாபகம் வருதா...;)) ... அதுக்கப்புறம் முருங்கையும் சின்ன வெங்காயமும் தனியாக வேகவைத்து சேர்த்தேன்.... இப்ப அதுக்கு நேரமும் இல்ல... பொறுமையும் இல்ல... ஒண்ணா போட்டு ரொம்ப நேரம் அடுப்பில் வைக்காமல் எடுக்கும் டெக்னிக்கை (சூ..முடியலன்றீங்களா?!) என் மாமியிடமிருந்து தெரிந்து கொண்டேன்...

    பூசணீக்காய் தயிர் குழம்பு கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கிறேன்... அப்புறம் சொல்ல மறந்துட்டேன்... உங்களோட... அது பேரு... வந்து.... ஆ... காண்ட்வி.... செய்து பார்த்தேன்... 6 மாதம் முன்பு... நல்லா இருந்தது.. அதோட டேஸ்டே கொத்தம்ல்லியிலயும் தேங்காய்துருவலிலும் தான் இல்லியா... (அது செய்யும் போது ஒரு காமடி.. அது அப்றம் சொல்றேன் )worth more tries.. thanx for the recipe...

    ReplyDelete
  29. Kadhamba sambar is very flavourful I love it! Could smell it here ;) ;)

    ReplyDelete
  30. Love the sambhar with different vegetables. Happy 2 follow u

    ReplyDelete
  31. /பின்னி பெடல் எடுக்கிறது/ஹா.ஹ்ஹா..இதுக்கு பேரே பின்னி பெடலெடுக்குறதுனா.....நீங்க ஃப்ளைட்ல பறக்கறீங்க ஆசியாக்கா! ;) தேங்க்ஸ்! :)
    ~~
    ஃபாயிஸா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! :)
    ~~
    ஸாதிகாக்கா,நானும் மேக்ஸிமம் 3 காய் சேர்த்து சாம்பார் வைச்சிருக்கேன்,இந்தமுறைதான் இப்படி! ;)
    நன்றி ஸாதிகாக்கா!
    ~~
    ப்ரியா,செய்து பாருங்க! தேங்க்ஸ்பா!
    ~~
    லஷ்மிம்மா,புதுப்பேரா சொல்லறீங்க.களி தனியா,தாளகம் தனியாதான் செய்தேன் இந்தமுறை. அடுத்தமுறை ஒண்ணா செய்துபார்க்கிறேன்மா..நன்றி!
    ~~
    /சாம்பாறென்றல் இப்படித்தான் இருக்கும் எங்கட வீட்டில், இதை விட வேறு விதமாக எல்லாம் செய்வதில்லை/ஓஹ்..நான் ஸ்டான்டர்டைஸ் எல்லாம் பண்ணமாட்டேன் அதிரா..அப்பப்ப ரெடிமேட் சாம்பார் பொடி போட்டு,(அ) இப்படி பொடிச்சு (அ)அரைச்சு..(அ)பொடியே போடாம;) இப்படி கைக்கு வந்தா மாதிரி செய்யறதுதான். :)

    நான் சர்க்கரைப் பூசணிச் சொதி வச்சிருக்கன்..இப்ப சரியாச் சொல்லிட்டனா? ;)
    ~~
    வியபதி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    வர்ஷினி,வீட்டுக்கு வாங்கங்க..சாப்பிடலாம்!:)
    நன்றி கருத்துக்கு!
    ~~
    காமாட்சிம்மா,என்ன செய்யறது? இந்த சாம்பார் செய்த அன்னிக்குன்னு பார்த்து நாட்டுக்காய்ங்க எதுவுமே இல்ல! ;)
    நன்றிம்மா!
    ~~

    ReplyDelete
  32. கிரிஜா,ப்ரோக்கலிய குழைய வேகவிடக் கூடாதுல்ல? ;) பரவால்ல சாப்பிடாத ஆட்களுக்கு இப்படியாவது உள்ளே போனாச்சரின்னு குடுக்க வேண்டியதுதேன்! ;)

    /முட்டை கொசும் பட்டாணியும் உருளை கிழங்கும்//// எது??????? கொசுவா???அதுவும் முட்டைக் கொசுவா??? ஆஆஆஆஆஆஆஆங்!! ஆளவிடுங்க சாமீ!!நான் முட்டை சாப்புடுவனுங்க,ஆனா கொசுவெல்லாம்.,,,ம்ஹும்ம்ஹும்!!நானில்லே,நானில்லே! :D

    ஜஸ்ட் கிடிங்! இந்த காம்பினேஷன் செய்ததில்ல,செய்து பார்க்கிறேன். பூஸ் பாட்டுக்கு சிவனேன்னு போனாலும் விடாம வாலைப்புடிச்சு இழுக்கறதே உங்க வேலையாப் போச்சு. :)

    நன்றி கிரிஜா!
    ~~
    அப்பாவீ,பத்து நிமிஷத்திலே வைக்கற கொழம்புனா உனக்கு ஃபேவரிட்டாதானே அம்முணி இருக்கோணும்?;)

    /நல்ல ரெசிபினு தோணுது as it is more nutritious../ என்ன தமிழ்ழ பேசிட்டு இருக்க இருக்க பீட்டரு? அவ்வ்வ்வ்...சரி,try it n lemme know! Thanks! :)
    ~~
    ஜெயஸ்ரீ,நான் அவசரத்துக்கு யூஸ் பண்ண காய் இப்படி ஹிட் ஆகிடுச்சுங்க. :) தேங்க்ஸ்!
    ~~
    அதிரா,/அவ்வ்வ்வ்வ்வ் காணல்லியே என நினைச்சேன்:))./ஏன்,வாலைப் பிடிச்சு இழுக்கத்தானே?? வந்துட்டாங்க,வந்துட்டாங்க. :)

    நானும் நீங்க சொன்ன மாதிரிதான் அதிரா காய்களை வேகவைப்பேன்,ஆனா பாருங்க இந்த 7காய்-தான் என்னை குயப்பிடுச்சு! ஹிஹி!

    /. 4 மணிக்கு சட்னி, 5 -6 ஓசை:))./ஹ்ம்ம்..தோசையம்மா தோசை,அதிரா சுட்ட தோசை,தின்னத்தின்ன ஆசை! :))))))
    ~~
    மேனகா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!தயிர்குழம்பு செய்துபாருங்க.
    ~~
    /இதுதானா பறங்கிக்காய் அவ்வ்வ்வ்வ்வ்.../ தெரியும் எனக்கு..இப்புடிதான் சொல்லுவீங்கனு!!கர்ர்ர்ர்ர்ர்! படம் கேட்டீங்க,போட்டாச்! டுபாய் பூசணில்லாம் நான் வாங்கினதில்லே!;)
    தேங்க்ஸ் அதிரா!
    ~~
    ப்ரேமா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    /6 - 6.30 மணிக்குள் டின்னர் முடிஞ்சிடும் அதனால ஈவினிங் ஸ்நாக்ஸ் கெடையாது/ தூங்கறதுக்கு முன்னால ஒரு கேலன்(!) மில்க் குடிப்பாங்களாம் பூஸு..கிரிசா,நீங்க எப்புடி?? ஒண்ணரை டசன் குக்கீஈஈஈ-யா? ;)
    ~~
    /சரியா எண்ணிப்பார்த்தேன் 6 தான் இருந்தது./அதானே,வானதியா கொக்கா? :)

    /இனிமேல் நான் குச்சியை கையில் எடுத்திட வேண்டியது தான்./ ஓஹோ..அப்புடியா? ;) வாழ்த்துக்கள் (புது)றீச்சர்! :))))
    ~~
    சித்ரா மேடம்,21 காயா???ஆஹா!
    அரசாணிக்காய் கோவைல புழங்கும் பேருங்க. நீங்க சாம்பார்ல வெல்லம் சேர்ப்பீங்க,எனக்கு சர்க்கரை டப்பா பக்கத்தில இருக்கறதால அதை சேர்க்கறேன்,அவ்ளோதான்.:)
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
    ~~
    /ஒன்றில, ரெண்டில வைப்பதெல்லாம் சாம்பாரல்ல:)) அது கறீஈஈஈஈஈஈ ஈஈஈஈஈஈஈஈஈ/பாத்து,பாத்து!!பல்லுச் சுளுக்கிக்கப்போகுது அதிரா! நாங்கள்லாம் அப்ப கறீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈதான் வைக்கீறம்.எப்பவாவதுதான் ஆம்பாறு;) வைக்கிறம்.o.k.?

    புதினாமரம் இல்லையாம் இப்ப,உந்த கொத்துமல்லி மரத்தடியிலே ஒளியுங்கோ!;))))
    ~~
    வானதி,எவர் க்ரீனா? அவ்வ்வ்..பூஸ் ஒளிஞ்சிருக்கப்போகுது,பத்திரம்!;)
    ~~
    Rathai,thanks for the comment! I never thought you won't read Tamil! will post this recipe in English(for you)! :)
    ~~
    பானு,வாங்க வாங்க! மொத்தமா எல்லாப் பின்னுட்டமும் போட்டுடலாம்னு முடிவில வந்துட்டீங்க போல?! ;)

    எனக்கு இங்கே ப்ரோசன் முருங்கைதானுங்க.சும்மா எலும்பு(!!) மாதிரி கெடக்கும்..அவ்வ்வ்வ்! அதான் தனியா வேவிக்கறது!

    காண்ட்வி செய்து பார்த்து 6 மாசங்கழிச்சும் (பேரையும்) மறக்காமச் சொன்னதுக்கு ஒரு ஷொட்டு! ;) செய்து பாருங்க மறுபடி.அப்ப பேரை மறக்கமாட்டீங்க. அந்த டேஸ்ட் தாளிதத்திலதான் அதிகம்,கூட கொ.மல்லி & தேங்கா! பொரிஞ்ச எள்ளு சூஊஊஊஊப்பரா இருக்கும்! :P:P
    ~~
    ராஜி,/Could smell it here ;) ;)/ காமெடி கீமெடி பண்ணறீங்க?? இருக்காது,நீங்கள்லாம் நல்லவிங்க,சீரியஸாத்தான் சொல்லுவீங்க.:)))

    அமேரிக்காச் சாம்பார் சிங்கையில் மணக்குது..ச்சே,காலர் இருந்தா தூக்கிவிட்டுக்கலாம்,இப்ப ரவுண்ட்நெக் டி-ஷர்ட் போட்டிருக்கேனே!;))))

    தேங்க்ஸ் ராஜி!
    ~~
    அனு,வாங்க! நல்வரவு.வருகைக்கும் பின்தொடர்வதற்கும் நன்றிகள்!

    ReplyDelete
  33. First time here..Glad I reached here..Following you right away...This looks delicious.…Totally yummy..Thanks for sharing it dear…Should try it soon…If you have time do check my blog too…

    Aarthi
    http://www.yummytummyaarthi.com/

    ReplyDelete
  34. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆர்த்தி!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails