Wednesday, February 13, 2013

என்னதிது?!...

என்னதிது? உருண்டையா இருக்கு, ஆனா லட்டு இல்லே..வேற என்ன? என்று கேள்விப்புழுக்கள் மண்டையைக் குடைய இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். புழு-பூச்சினு மனசை அலைபாயவிடாம இந்த அழகான பூவைப் பாருங்க. மனசு அமைதியாகும். :)
கடந்த சிலவார இறுதிகளில் இங்கே நடக்கும் ஃபார்மர்ஸ் மார்கெட்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறோம். அப்படியான ஒரு சந்தையில் வாங்கிய பூக்கள்தான் இவை. மம்ஸ்-என்று சுருக்கமாக அழைக்கப்படும் க்ரைசாந்திமம்(செவ்வந்தி) குடும்பத்தைச் சேர்ந்தவை. மார்க்கட்டில் பூக்களைச் சுற்றி ப்ளாஸ்டிக் வலை கட்டி மொட்டுக்கள் போல வைத்திருந்தார்கள்.  இனிமேல்தான் மலரும் என்று நினைத்துக்கொண்டு வாங்கிவந்து வீட்டில் ப்ளாஸ்டிக் வலையை நீக்கியதும், விடுதலையான சந்தோஷத்தில் பளீரென விரிந்து  கொல்லென்று சிரித்தன மலர்கள்! :) 
அடுத்து ஒரு சனிக்கிழமைச் சந்தைக்குப் போனோம். ஞாயிற்றுக்கிழமை சந்தை போலல்லாமல் இது கொஞ்சம் அளவில் சிறிய ஆனால் கடைகள் அதிகமுள்ள சந்தை, பார்க்கிங் லாட்டில் நடப்பது. காய்கள் எல்லாம் ப்ரெஷ்ஷாக வைச்சிருந்தாங்க. நல்ல கூட்டமாகவும் இருந்தது.
முதல் கடையில் நுழைந்ததும் கண்ணில் பட்டன இந்த டிசைனர் காலிஃப்ளவர்? ப்ரோக்கலி? என்னவென்று புரியலை, பக்கத்திலேயே பேரும் எழுதி வைச்சிருந்தாங்க. வாங்கலாம்னு கொஞ்சம் ஆர்வம் வந்தாலும், எதுக்கு ரிஸ்க்-னு போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டு வயலட் காலிஃப்ளவர் & ப்ரோக்கலி வாங்கிக் கொண்டோம்.

வீடு வந்து கூகுளாரை வேண்டிவிரும்பி:) கேட்டுக்கொண்டதில்  அது Romanesco broccoli என்று விக்கி-மூலம் தெரியவந்தது. பார்ப்பதற்கு மிகவும் அழகாய் இருக்கிறது அல்லவா அந்த பூக்களின் வடிவம்?
முழுப் பூவைப் பார்க்க மட்டுமே எனக்குப் பிடித்திருக்கிறது. அதைப் பிச்சு பிச்சு சமைப்பது என்பது என் மனசுக்கு ஒத்துவரவில்லை. சில விஷயங்களைப்  பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வேன், ரோமனெஸ்கோ ப்ரோக்கலியும் அப்படியே! :)

என்னவருக்கு மிகவும் பிடித்த மஷ்ரூம் கடை..ஆர்வமாய் அவரே செலக்ட் பண்ணி, கவரில் போட்டு, எடை போட்டு..
வாங்கிவந்த மஷ்ரூம்கள்...
வீடு வந்தவுடன் முதலில் சமைக்கப்பட்டவையும் இவையே. அது ஒரு காமெடி கதை! தனியாப் பேசிக்கலாம் அதைய! :) ;) 

ரோமனெஸ்கோ இருந்த கடையிலேயே சின்ன ஆரஞ்சுப் பழங்கள் 8, ஒரு டாலருக்குக் கிடைத்தன. அதையும் வாங்கிக்கொண்டோம். 
அப்படியே சுற்றிவந்து கத்தரி-சுரைக்காய்-பீன்ஸ்-கீரை-கொத்துமல்லி-வெங்காயம்-தக்காளி என ஷாப்பிங்கை முடித்துவிட்டு, கடைசியாக ஒரு பாப்கார்ன் கடையில் ஒரு பேக்கட் கெட்டில் கார்ன் வாங்கி கொறித்தவாறே வீடு வந்து சேர்ந்தோம்.
பை நிறைய காய்கள் வாங்கியாச்சு இந்தமுறை! :)

சரி..இனி முதல் படத்தில் இருக்கும் மர்ம;) உருண்டைக்கு வருவோம். பயப்படாதீங்க, ரெசிப்பியெல்லாம் தரமாட்டேன்..ஏனா எனக்கே தெரியாது, ஹிஹி!! தமிழகத்தில் பால்வாடிகளில் தினமும் சத்துமாவு உருண்டை  குழந்தைகளுக்கு விநியோகிக்கப்படும். சிறுவயதில் சித்தி ஊருக்குப் போகையில்(அங்கே பெரியவங்களுக்கும் தருவாங்க) சித்தி வாங்கிவந்து எனக்குத் தருவார். அந்தச் சுவை பசுமரத்தாணியாய் மனதில் பதிந்திருந்தது.  இப்பொழுதெல்லாம் என்னென்னவோ சத்துமாவுகள் மார்க்கெட்டில் வந்துவிட்டாலும், அரசாங்க சத்து உருண்டை ருசியை அடிச்சுக்கவே முடியாதுங்க! :)) 

கடந்தமுறை ஊருக்குப் போனபோது என் தோழிவீட்டுக்குப் போயிருந்தேன், அவள் வீட்டில் இந்த சத்துமாவு இருந்தது. [எப்படின்னு கேட்கும் நீளமூக்கு ஆட்களுக்குப் பதில் கட்டாயம் தேவையென்றால் கமென்ட்டுங்கோ, ரகசியமாய்க் காதைக் கடிக்கிறேன், டீல்?] கும்புடப் போனதெய்வம் குறுக்கே வந்தமாதிரி கிடைச்ச சத்துமாவை பத்திரமாப் பொட்டலம் கட்டி, இங்க கொணாந்து ஐஸ்பொட்டில வைச்சிருக்கேன். நீ என்ன சத்துமாவு சாப்ட்டு ஒடம்ப தேத்தற அளவுக்கு ஒல்லியாவா இருக்கே? -னு என் உடன்பிறப்புகளே கிண்டலடித்தாலும் அதையெல்லாம் இந்தக்காதில வாங்கி அந்தக் காதில விட்டுட்டு சந்தோஷமா இருக்கோணும் அப்படின்னு ஞானோதயம் வந்து பலநாளாகிருச்சுங்க. ;)
இந்த உருண்டைய செய்வது ரொம்ப சுலபம்..கொஞ்சம் தண்ணிய சூடு பண்ணிக்கணும், கொதிக்க கொதிக்க இல்ல, ஆனா தண்ணி சூடா இருக்கணும். [நான் மைக்ரோவேவ்-ல ஒரு நிமிஷம் வச்சு எடுத்துகிட்டேன்.]  தேவையான அளவு சத்துமாவை ஒரு கிண்ணத்தில எடுத்துகிட்டு, கொஞ்சம் கொஞ்சமா தண்ணி தெளித்து பிசைந்து உருண்டை பிடிக்க வேண்டியதுதான். லேசான இனிப்புச் சுவையுடன் சூப்பராக இருக்கும். வாய்ப்புக் கிடைச்சால் ருசித்துப் பாருங்க. நன்றி!

20 comments:

  1. intha mushroom naan try panniyathillai.. taste eppadi irukum mahi? photos super.. easy healthy urudai super..

    ReplyDelete
  2. muthal picture ai partha vudan mudalil sathu maavu urundai endru neenai theen.. apparam ethoo spl chappathi orundai pidithu irukeega endru neenaithen..

    ReplyDelete
  3. பொருள்விளங்கா உருண்டைன்னு நினைச்சேன் மகி :)))
    அந்த ப்ரொக்கொலி இங்கும் கிடைக்குது ..நான் வாங்கல்லை ..
    ,சாமநதி பூக்கள் அழகு ....... சத்து மாவு உருண்டைல அஸ்கா சக்கரைன்னு சேர்த்திருப்பாங்க நான் அதை தனியா எடுத்து சாப்பிடுவேன் ..

    ReplyDelete
  4. ஃபாயிஸா, முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    இந்த மஷ்ரூம் நல்லா இருந்ததுங்க. ரொம்ப குழைஞ்சு போகாம நல்லா ருசியா இருந்துச்சு. கிடைத்தால் வாங்கிப் பாருங்க.

    சத்துமாவு உருண்டைன்னு கண்டுபுடிச்சீங்களா? அவ்வ்வ்..அப்புறமும் குழப்பிட்டேன் இல்ல? அங்கதான் நான் நிக்கிறேன்! ஹஹஹா! :)))
    நன்றி ஃபாயிஸா!
    ~~
    என்னது சத்துமாவுல அஸ்காவா? வீட்டில் செய்யற சத்துமாவை சொல்றீங்களா ஏஞ்சல் அக்கா? இருக்கலாம். இந்த மாவில என்னென்ன சேர்த்திருப்பாங்களோ தெரிலை, ஆனா மணமும் ருசியும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    பொருள்விளங்காஉருண்டை எல்லாம் செய்யுமளவுக்கு நமக்கு மேல்மாடில ஸ்டாக் இல்லைங்கோ! ;))

    வருகைக்கும் ரசித்து கருத்துக்கள் தந்ததுக்கும் மிக்க நன்றி அக்கா!
    ~~

    ReplyDelete
  5. அரிசி உருண்டையோன்னு நெனச்சிட்டேன்.பூ அழகா இருக்கு.இதுவரை பச்சை&வயலட் காலிஃப்ள‌வரை நான் வாங்கியதில்லை.8 ஆரஞ்சு ஒரு டாலருக்கா!! ம்ம்,எஞ்சாய் பண்ணுங்க.இந்த மஷ்ரூம் வாங்கியதில்லை.அடுத்த தடவ வாங்கிடுறேன். ஆனாலும் நான் மட்டுமே சாப்பிடனும்.பை நிறைய காய்கறிகளுடனான‌ சமையல் வாசனை இங்குவரை வருது.

    "கிடைச்ச சத்துமாவை பத்திரமாப் பொட்டலம் கட்டி, இங்க கொணாந்து ஐஸ்பொட்டில வைச்சிருக்கேன்"_____வேண்டியவங்களுக்குப் போட்டுக் கொடுத்துட்டேன்.

    ReplyDelete
  6. ஆ..மகி. அது நம்ம ஊரில திரிபோஷா மாவுன்னு கடையில இருக்கு - இப்போ அது இங்கையும் ஏசியன் ஷொப்பில வாங்கிக்கலாம்- அதை வாங்கி நீங்க சொன்னதுபோல வெந்நீர் சேர்த்து இப்படிச் சாப்பிடுவோம். அதற்கு சீனி, துருவிய தேங்காய்ப்பூவு கொஞ்சூண்டு சேர்த்து இதுபோலச் சேர்த்துச் சாப்பிடுவோம். நல்ல வாசனையும் ருசியாவும் இருக்கும். அதுபோல இருந்தது.

    பூ, காய்கறி, பழம் எல்லாம் காட்டி ரொம்ப ஹெல்தியா சமையல் பண்ணி சாப்பிடுறீங்கன்னு சொல்றீங்க. நல்லது...:)

    மகி தம்பதிகளுக்கு என் இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  7. எங்க அம்மா பொரியரிசிமா உருண்டைன்னு செய்வாங்க. அதுவோ என நினைத்தேன்.(ஆளாளுக்கு ஒன்றை நினைக்கவைச்சாச்சு!!)
    ஆக சத்துமாத்தான்.ஹெல்தியா சாப்பிடனும் என இந்த பதிவு மெசேஜ் சொல்லுது.வெஜிடெபிள்ஸூம் சேர்த்து. பார்க்க பூவும் அழகு.
    குளிர் போனப்பறம்தான் மார்க்கட். அதுவரை supermarket தான்.


    ReplyDelete
  8. விடுதலையான சந்தோஷத்தில் பளீரென விரிந்து கொல்லென்று சிரித்தன மலர்கள்! :)

    மனம் கொள்ளை கொண்டது மலர்கள்..

    ReplyDelete
  9. சத்துமாவு லட்டு ஆசையை கிளப்பிட்டீங்களெ,இப்போ நான் எங்க போவேன்?? Romanesco broccoli இந்த ப்ரோக்கலியை நானும் பார்ப்பதோடு விட்டுடுவேன்,எதுக்கு ரிஸ்க்ன்னு....

    ReplyDelete
  10. Very healthy ladoo and the pics are excellent...

    ReplyDelete
  11. ஆஹா ஒரே மார்கட் பதிவா இருக்கே.. மகி ஏதும் ரெஸ்ட்டோரண்ட் நடத்துறாவோ?:) இல்ல ஒரு டவுட்டு:).

    அந்த ரோமண்ட:) புரோகோலி நானும் காண்கிறனான் ஆனா சமைக்கப் பயம், ஏனெனில் சிலதில் அலர்ஜியும் இருக்கலாம்.

    ReplyDelete
  12. அந்த மஸ்ரூம் உப்பூடிக் கொத்தாகக் கண்டதில்லை, ஒவ்வொரு மொட்டாகக் கண்டதுண்டு. மஸ்ரூம் மகி, கண்டதையும் சமைக்கப்பூடாதாம், ஏனெனில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு முறை இருக்காம், சிலது எங்கட முறைப்படி அதிகம் அவிச்சு சமைச்சால் நஞ்சுத்தன்மை உருவாகிடுமாம், என்பதால் நான் வெள்ளை நிறம் தவிர வேறெதையும் வாங்குவதில்லை.

    சத்துணவு உருண்டை:), மா கிடைச்சால் மீயும் செய்வதுண்டு.

    ReplyDelete
  13. மாவு லட்டு என்று தான் நினைத்தேன். உங்கள் மம்ஸ்
    மலர் கொள்ளை அழகு.
    நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete
  14. மஹி, நல்ல உரைநடை. சத்து மாவு ரெசிப்பி வேணும். என் காதுல மெதுவா சொல்லுங்க. அப்படியே அந்த காளான் டப்பா-வ என் பக்கம் தள்ளி விடுங்க. எனக்கும் உழவர் சந்தை ரொம்ப பிடிக்கும். இங்க வின்ட்டர் இன்னும் முடியல :(
    btw, சத்து மாவு photo-வ நான் wood apple-னு நினச்சேன்.

    ReplyDelete
  15. the flowers look beautiful Mahi, enga, enna urundainnu sollama vittudivingalonu ninaichen..

    ReplyDelete
  16. //கொதிக்க கொதிக்க இல்ல, ஆனா தண்ணி சூடா இருக்கணும். [நான் மைக்ரோவேவ்-ல ஒரு நிமிஷம் வச்சு எடுத்துகிட்டேன்.] தேவையான அளவு சத்துமாவை ஒரு கிண்ணத்தில எடுத்துகிட்டு, கொஞ்சம் கொஞ்சமா தண்ணி தெளித்து பிசைந்து உருண்டை பிடிக்க வேண்டியதுதான். லேசான இனிப்புச் சுவையுடன் சூப்பராக இருக்கும். வாய்ப்புக் கிடைச்சால் //saththu mavukku me enna seyyum.
    Farmers market is super

    ReplyDelete
  17. மார்கெட் போய் அந்த அனுபவத்தையும் பகிர்ந்திருப்பது அழகோ அழகு.

    ReplyDelete
  18. நல்ல பகிர்வு,நான் போற ஒரே அவுட்டிங் மார்கெட்டிங்..சோ இண்ட்ரெஸ்டிங்..

    //நீ என்ன சத்துமாவு சாப்ட்டு ஒடம்ப தேத்தற அளவுக்கு ஒல்லியாவா இருக்கே? -னு என் உடன்பிறப்புகளே கிண்டலடித்தாலும் அதையெல்லாம் இந்தக்காதில வாங்கி அந்தக் காதில விட்டுட்டு சந்தோஷமா இருக்கோணும் அப்படின்னு ஞானோதயம் வந்து பலநாளாகிருச்சுங்க. ;)// -அதே அதே!

    ReplyDelete
  19. இளமதி சொன்ன திரிபோஷாதான் நான் சாப்பிட்ட முதல் சத்துமா. :-)

    ஞாபகப்படுத்தீட்டீங்க. நாளைய விடுமுறை வேலைத்திட்டம்... சத்துமா செய்யுறது. :-)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails