Tuesday, June 1, 2010

வெஜிடபிள் குஸ்-குஸ்வானதி ப்ளாக்ல குஸ்-குஸ் உப்புமா ரெசிப்பி பார்த்ததில் இருந்து தேடி, குஸ்-குஸ்-ஐ ஒரு வழியா கண்டு பிடித்துட்டேன். முதல் முறை சாதாரண ரவா உப்புமா செய்வது போல செய்தேன்.ரொம்ப நல்லா இருந்தது. இந்த ஞாயிற்றுக் கிழமை மாலை, 'இன்று நான் சமைக்கிறேன், ஆனா உன் ப்ளாக்-ல நான் சமைத்த டிஷ் இதுன்னு போடணும்'னு என்கிட்டே உத்தரவாதம் வாங்கிட்டு என் கணவர் தானா கிச்சனுக்கு வந்தாரு(என் சமையல சாப்ட்டு நொந்து போய்த்தான் வந்தாருன்னு சரியா தப்பா நினைச்சுடாதீங்க..கர்ர்ர்..ர்ர்!)

வெஜிடபிள்ஸ் எல்லாம் சேர்த்து குஸ்-குஸ் உப்புமா செய்வதாதான் ப்ளான்..ஒரு ஹெல்ப்பா இருக்குமேன்னு,கேரட் பீன்ஸ் நறுக்கி, மைக்ரோவேவ்ல வைச்சுட்டேன்..அப்புறம் கிச்சனுக்கு வந்தவர், "என்னது இது? இப்படிப் பொடிப்பொடியா நறுக்கிருக்கே?"ன்னாரு..சரி, உங்க விருப்பம் போல செய்யுங்கன்னு நான் வந்துட்டேன். (அப்படியும் வர முடியுதுங்கறீங்க? இது எங்க இருக்கு..அது எங்க இருக்குன்னு நம்மள ஒரு நிமிஷம் உக்கார விட மாட்டாரு:) )

ஸ்டெப்-பை-ஸ்டெப் போட்டோ எடுக்கறதுன்னா, ஓடிப் போய் கார்ல இருக்க(!!) கேமராவை எடுத்துட்டு வந்துடு...சீக்கிரம்' -னு என்னை ஒரு நடை பார்க்கிங் லாட்டுக்கு நடக்கவைத்தார்.
சரி வாங்க..அவர் என்ன சொல்றாருன்னு அவர் வார்த்தைகள்லையே கேட்போம்.

முன் குறிப்பு
அதுல
பாருங்க, அவருக்கு கொஞ்சம் நகைச்சுவை உணர்வு அதிகம்..அங்கங்கே காமெடி தலை காட்டும்..சிரிச்சுட்டே படித்து,மறக்காம செய்து சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க..உங்க ரெசிப்பிக்கு இவ்ளோ கமெண்ட் வந்திருக்குன்னு சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவாரு எங்காளு.:) :)

தேவையான பொருட்கள்
குஸ்-குஸ் -1 1 /4 கப்
கேரட்-1
பீன்ஸ்-5
மஞ்சள் குடைமிளகாய்-1
மஷ்ரூம்(portabella )-பாதி
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-5
பூண்டு- 2 பல்லு
காய்களை துண்டு துண்டா நறுக்கக் கூடாது, பெருசு-பெருசா நறுக்கணும்..அப்பத்தான் கடிச்சு சாப்பிட ஈசியா இருக்கும்.
பச்சைப் பட்டாணி-ஒரு கைப்பிடி
கொத்தமல்லி இலை
முழு சீரகம்-1ஸ்பூன்
குறுமிளகு-நாலஞ்சு (ஆக்ச்சுவலி,அவர் சேர்த்தது அரை ஸ்பூன் பெப்பர் பவுடர்..இப்போ போட்டோ பார்க்கும் போதுதான் நானே கவனித்தேன். :) )
மல்லித்தூள்(!)-1 1 /2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2ஸ்பூன்
மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை
பிரியாணி மசாலா(!??!!) - எவ்வளவுன்னு சொல்ல மாட்டேன்னுட்டாரு..அது அவரோட சீக்ரெட் இன்க்ரிடியன்ட்டாம்!
இதயம் நல்லெண்ணெய்- சுமாரா மூணு ஸ்பூன் அல்லது,அதைவிடக் குறைவு.(சும்மா கண்ணுல காமிக்கணும்,நெறைய ஊத்தக் கூடாது)
உப்பு

செய்முறை எப்படின்னெல்லாம் சொல்ல மாட்டாராம்..நீ பாத்துட்டு தானே இருந்தே,நீயே எழுதுன்னு சொல்லிட்டாரு..நீங்களே சொன்னா உடனே போஸ்ட் பண்ணிடுவேன்.நானா எழுதி பண்ணனும்னா நாளாகும்னு ப்ளாக்மெய்ல் பண்ணி(!!) அவரையே சொல்ல வைச்சுட்டேன்.


செய்முறை

ஒரு கலனில்(ஊஹும்..சிரிக்கக் கூடாது,சிரிக்காம படிங்க) ரெண்டரை கப் தண்ணீரை கொதிக்கவைத்து,அதில் குஸ்-குஸ் -ஐப் போடணும்,ஆனா உப்பு போடக்கூடாது.

குஸ் குஸ் மூணு நிமிடங்களில் வெந்துவிடும்..அதை தனியாக இறக்கி வைத்து விட வேண்டும்.
~~
இன்னொரு அகலமான வாணலியில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் கடினமான காய்கறிகள்(கேரட்,வெங்காயம்,பச்சைமிளகாய்,பீன்ஸ்,பச்சைப் பட்டாணி) போட்டு, மேலே குறிப்பிட்டுள்ள பொடிகள்,மிளகு-சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, கொள்கலனின் (இங்கேயும் சிரிக்கக் கூடாது..ப்ளஸ் டூ-ல கெமிஸ்ட்ரி ரெக்கார்ட் எழுதின ஞாபகம் போல...அமைதியா படிங்க! ) மூடியை இறுக்கமாக மூடி ஆவியில் வேக வைக்கவேண்டும்.
~~
காய்கள் முக்கால் பாகம் வெந்தவுடன், மிருதுவான(எ.கொ.ச.இ? இப்பூடி தமிழ் துள்ளி விளையாடுதே..எங்க மாமியார் படித்தால், 'ஈன்ற பொழுதின் பெரிதுவந்தேன்னு' சொல்லிடுவாங்க..அவங்க தமிழ் ஆசிரியை:) ) காய்கறிகள்(மஷ்ரூம்,மஞ்சள் குடை மிளகாய்) சேர்க்கவும். சேர்த்த பின்னால் தண்ணீர் வற்றும் வரை மிதமானதீயில் வதக்கவும்.அதன் பிறகு இதயம் நல்லெண்ணெய் (இதயத்துக்கு நல்லது) மூன்று தேக்கரண்டி எடுத்து ஸ்ப்ரிங்கிள்(?!) செய்யவும்.

காய்கறிகளுடன் குஸ்-குஸ்-ஐ சேர்த்து, அடுப்பை குறைந்த தணலில் வைத்து மெதுவாக,மிதமாக, கிண்டவும்.

அலங்காரம் செய்வதற்காக(!!?) கொத்துமல்லி தழைகளைத் தூவி மறுபடியும் கிளறவும்.சுவையான,ஆரோக்கியமான வெஜிடபிள் குஸ்-குஸ் இப்பொழுது தயாராகிவிட்டது.
இதனுடன், தயிர்,ஊறுகாய்,சால்சா(இது கடையில வாங்கக் கூடாது , வீட்டுலே பிரெஷ்-ஆ பண்ணனும்) சேர்த்து பரிமாறவும்.
~~அப்பாடி..ஒரு வழியா வெற்றிகரமா பப்ளிஷ் பண்ணிட்டேன்! எனக்கு டைப் பண்ணும்போதே சிரித்து சிரித்து வயித்து வலி வந்துடுச்சு. :)))))
வெஜிடபிள் குஸ்-குஸ் நல்லா டேஸ்ட்டா இருந்தது.தயிர்,சால்சா,ஊறுகாய் இதெல்லாம் தேவைப்படலை..அப்படியே:) சாப்ட்டுட்டேன்.யம்ம்!

இருங்க,எங்கே ஓடறீங்க? டிசர்ட் சாப்ட்டுட்டு போங்க..ஸ்லைஸ்ட் ஏப்ரிகாட்&ஸ்ட்ராபெரி, கொஞ்சம் கோல்ட் மில்க்ல ஊறவைச்சு, கொஞ்சம் ஹனி ஸ்ப்ரின்க்கிள் செய்து, மேலால லைட்டா கொஞ்சம் சர்க்கரை தூவி சாப்ட்டா....

எப்படி இருக்கு?? சாப்பிட்டுப் பார்த்து சொல்லுங்க!

15 comments:

 1. delicious cous-cous. lovely write up. enjoyed your humour sence.

  ReplyDelete
 2. என்னாது! சிரிக்கக் கூடாதாமா!! அது தன்னால வருதே, என்ன பண்ண! ;)

  வார்த்தைப் பிரயோகம்லாம் சூப்பர். ;)
  மு.கு - அவங்களையே தட்டச்சு செய்ய விட்டிருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

  அது என்னாது, இதயம்லாம் கொட்டு.. கொட்டுன்னு கொட்டுது? இதயம் நல்லெண்ணெய் உங்கூர்ல இப்பிடி இருக்குமோ!

  (ஸ்கூல் கிளம்பற அவசரம். அதான் இத்தோட நிறுத்திக்கறேன். பொழச்சுப் போங்க ரெண்டு பெரும்.)

  ReplyDelete
 3. மகி, அண்ணாத்தைக்கு நல்ல பொறுமை & நகைச்சுவை உணர்வு. என் கணவர் வந்ததும் இதை படிக்க சொல்லி பார்க்கிறேன். ஏதாவது மாற்றம் வருதா என்று பார்ப்போம். டிசர்ட் உம் உங்கள் கணவர் செய்ததா??

  படங்கள் நல்லா இருக்கு. நான் செய்ததை விட சூப்பரா செய்து அசத்தி விட்டார். ( ம்ம்..ஐஸ் வைச்சுட்டோம்ல இனிமேல் அண்ணாச்சி அடிக்கடி சமையல் கட்டுப் பக்கம் வந்திடுவார் )

  ReplyDelete
 4. சூப்பராயிருக்கு,அண்ணா நல்லா சமைத்திருக்காங்க.அவருக்கு என் பாராட்டுக்கள்!!

  ReplyDelete
 5. ennathu ethu engha parthalum orey Hubby cooking-ga irukku..super-ra irukku..Mahi, daily avanghalaye samaika solli recipe podungha..avangha samayal than superb...(Enna Mahi, nengha solli kudutha matiriye type paniten..Ok va?)

  ReplyDelete
 6. காய் பெருசா கட் செய்தது தான் இதில ஸ்பெஷல் ,அருமையாக செய்திருக்கீங்க.வாசனை சும்மா கம்முன்னு இருக்கு,அப்படியே எனக்கு ஒரு ப்ளேட்.

  ReplyDelete
 7. ஹி..ஹி..ஒரு வழியா மாம்ஸையும் சமையல் செய்ய வச்சிட்டீங்களே!! வாசனை இங்கே வர வீசுது. ஆமா குஸ்-குஸ் ன்னா என்னது.

  படத்தை பாக்கும் போதே டேஸ்ட் சூப்பர்ன்னு தெரியுது...

  ReplyDelete
 8. மகி,உங்களுக்கு ஸ்மார்ட் ஃபுட் ப்ளாக்கர் விருது அன்புடன் கொடுத்திருக்கிறேன்,பெற்றுக்கொள்ளவும்.

  ReplyDelete
 9. மகி ரொம்ப கொடுத்துவச்சவங்க தான் நீங்க...முன்பு எல்லாம் இங்கேயும் இப்படி தான் நடக்கும் ....ஆனா இப்பொழுது எல்லாம் அவரே சமைக்கிறேன் என்றாலும் இங்கு என் பொன்னு, "டாடி, இது எல்லாம் அம்மா வேளை...Come lets go and play out"என்று கூப்பிட்டுகொண்டு ஒடிவிடுகிறாள்...பழைய நியபகம் வருகின்றதே...

  ReplyDelete
 10. Mahi, summa solla koodathu unga veetukarer kalakala panni irukar. I agree with him in cutting vegetables into big pieces. Appo than kuzhanchu pogathu athoda texture maintain aagum. Tasteku athu romba mukkiyam :). Apuram ella aambalainga samayal layum oru secret ingredient irukum, yena enna podarom, evlo podaromnu avangaluke theriyathu :D, aana antha samayaloda tastea thanithan. Romba arumaiyana cous cous upmanu sollunga anna (ille thanbiya ;)) kita :)

  ReplyDelete
 11. வேணி, முதல் ஆளாக வந்து கருத்து சொன்னதுக்கு மிக்க நன்றி! ஹ்யூமரஸா சொன்னது அவராம்,நான் டைப் மட்டும்தான் பண்ணிருக்கேனாம்!
  ~
  /அவங்களையே தட்டச்சு செய்ய விட்டிருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்./ நீங்க வேற இமா, இவர் இவ்வளவு சொன்னதே பெரிய விஷயம்..தமிழ்-ல டைப்பெல்லாம் பண்ணத் தெரியாது அவருக்கு..தங்க்லீஷ் வேணா பண்ணுவார்,பரவால்லையா?

  /இதயம்லாம் கொட்டு.. கொட்டுன்னு கொட்டுது? இதயம் நல்லெண்ணெய் உங்கூர்ல இப்பிடி இருக்குமோ!/முதல் முறை படித்தப்ப புரில..அப்புறம்தான் புரிந்தது..கர்ர்ர்ர்!!!

  உங்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றிய உங்க ஸ்கூல் வாழ்க!
  ~
  வானதி, டிசர்ட்டும் அவர் பண்ணதுதான்../என் கணவர் வந்ததும் இதை படிக்க சொல்லி பார்க்கிறேன்./ வெரி குட்..ஏதோ மகளிர் குலத்துக்கு என்னால முடிந்த சேவை.;)
  கட்டாயம் பார்க்கச் சொல்லுங்க.

  /படங்கள் நல்லா இருக்கு./அது நான் எடுத்த படங்கள்,அதான்!

  /அண்ணாச்சி அடிக்கடி சமையல் கட்டுப் பக்கம் வந்திடுவார் / ஹ்ம்ம்..அப்படியும் நடக்குமங்கறீங்க?பார்ப்போம்!
  ~
  உங்க பாராட்டுகளை அவரே படித்துட்டார்..நன்றி மேனகா!
  ~
  கவுண்டரே,அட்டனன்சுக்கு நன்றிங்க!:)
  ~
  Nithu, ungalukku thanglish-laye sollidaren,appothaaan niraiya per padikka maattaanga!:)
  /engha parthalum orey Hubby cooking-ga irukku../ nallathuthaane? oru naalaavathu ellaarum nalla saappaadu:) saappittattum vidungappaa!

  /Enna Mahi, nengha solli kudutha matiriye type paniten..Ok va?/ Nallavar maathiriye pesi, kadaisila ippadi kaalai vaari vidareengale? grrrrrr!!!!
  ~
  ஆசியாக்கா,தாராளமா வாங்க..சுட,சுட சாப்ப்டுட்டு போலாம். நீங்க சொன்னதை பார்த்ததும் காலரை தூக்கி விட்டுக்கிறார் என் அன்புக் கணவர்!:) விருதைப் பெற்றுக்கொண்டேன்..நன்றி,நன்றி!
  ~
  /குஸ்-குஸ் ன்னா என்னது./சில நாட்களுக்கு முன்பு நானும் இப்படியேதான் கேட்டேன் ஜெய்லானி அண்ணா..மேல இணைப்பு குடுத்திருக்கேன்..க்ளிக்கி பாருங்க. ஒண்ணுமில்ல, ப்ராசஸ் பண்ணப்பட்ட கோதுமை தான் இந்த குஸ்குஸ்.சூப்பர் மார்க்கட்ல பாஸ்டா செக்ஷன்ல பாருங்க..பல வடிவங்கள்-ல ( ரவை சைஸ்ல இருந்து பெரிய ஜவ்வரிசி சைஸ் வரை) கிடைக்கும்.
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
  ~
  உண்மைதான் கீதா! :) :)
  அக்ஷதா இவ்ளோ ஸ்மார்ட்டா:) இருக்காங்களா? உங்க பாடு சிரமம்தான்..இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும் அவளுக்கும் சமையல்ல இன்ட்ரஸ்ட் வந்துடும், உங்க பொண்ணாச்சே?
  ~
  மஞ்சு,ஆமாம்..நீங்க சொல்வது ரொம்ப சரி..எதை எவ்வளவு போடறோம்னு அவங்களுக்கே தெரியாமதான் செய்வாங்க!

  /anna (ille thanbiya ;)) kita :)/ என்னவரின் சன் ஷைன் ஜெமினி..உங்களோடது என்னன்னு சொன்னால் அண்ணாவா,தம்பியான்னு சொல்லிடுவேன்..ஒரு நாள் வித்யாசம் கூட கணக்குல வரும் தானே?;) :)

  ReplyDelete
 12. Ungha taglish padhil super..ungalukku illatha porumaya enkitta irukku..nengha nathaya ellam padam pidichavanghalachey:-)

  ReplyDelete
 13. //ஊஹும்..சிரிக்கக் கூடாது,சிரிக்காம படிங்க//

  முடியல.. சிரிக்காம இருக்க முடியல..

  காய்கறி பெருசா பெருசா இருந்தாத்தான் கடிக்க முடியுமா? எனக்கு எலி நியாபகம் வருது :))

  வருஷம் பூரா அவர் உங்களுக்கு எலியா இருக்கறப்ப, ஒரு நா நீங்க எலியா இருந்தா தப்பில்ல :))

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails