Thursday, October 7, 2010

த்ரீ-இன்-ஒன்!

டைட்டிலையும்,இந்த போட்டோவையும் பார்த்து குழம்பிப் போய் இங்கு வந்த அனைவருக்கும் நல்வரவு! இந்தப் பதிவில் மூன்று விஷயங்களை சொல்லப் போறேன்,அதான் த்ரீ இன் ஒன்!! :)

1.சமீபத்தில் ஒருநாள் என்னவரின் ஆஃபீஸ் கலீக்ஸ்-க்கு நான்செய்த குக்கீ கொடுத்தனுப்பினேன். ஆபீஸில் எல்லாருக்கும் மிகவும் பிடித்திருக்கு என்று சொன்னாங்க என்று போனில் சொல்லிட்டு, ஒரு மெய்ல் அனுப்பியிருக்கேன்,செக் பண்ணு-ன்னு சொன்னார். மெய்ல்-ல சப்ஜெக்ட் "Everyone says,,,," உள்ளே இருந்த மெசேஜ், 'Mahi's cookie is.....' இது மட்டும்தான். ஒண்ணும் புரில எனக்கு! மேல்மாடில இடம் நிறைய இருந்தா(!!??!) இப்படித்தான் ஆகுமாம். ஒரு சில நிமிஷம் கழிச்சுதான் அட்டாச்மெண்ட்ல வந்த இந்த படத்தைப் பார்த்தேன்.ஹிஹி! எனக்கு பாராட்டை வாங்கித் தந்த ரெசிப்பியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.

கோக்கனட் பிஸ்கட்
இதன் ரெசிப்பியை ஆங்கிலத்தில் வியூ(!) பண்ண,இங்கே க்ளிக்குங்க..தமிழில் காண(!) இங்கே க்ளிக்குங்க. :)))))
~~~~~
2.தீபாவளி வருதில்ல,இப்ப இருந்து ட்ரையல்&எர்ரர் பாத்தாத்தானே பலகாரம் பண்ணமுடியும்? அதுக்காக பலநாட்கள் கழித்து குலாப்ஜாமூன் பண்ணினேன். அதற்கான ரெசிப்பி இங்கே. இதுவரை குலாப்ஜாமூன்,காலா ஜாமூன் பண்ணியிருக்கேன். இந்த முறை புதுசா ட்ரை பண்ணியது,இதோ! ரெசிப்பி விரைவில்..

Dry ஜாமூன்

3.லர்னிங் டு குக் என்று ஹம்பிளா பெயர் வைத்துக்கொண்டு சைவ சமையலில் கலக்கிட்டு இருக்கும் அகிலா எனக்கு இந்த சன்ஷைன் அவார்டை தந்திருக்காங்க. நன்றி அகிலா!

முதன்முதலாக அவார்டு வாங்கினப்ப,திருவிழா-ல காணாமப்போன குழந்தை மாதிரி முழிச்சேன். இப்ப மட்டும் என்ன பண்ணிட்டு இருக்கேங்கறீங்களா? இப்ப கொஞ்சம் பரவாயில்லை. :) இந்த அவார்டை 15 பேருடன் பகிர்ந்து கொள்ளச் சொல்லிருக்காங்க. எனவே இந்த சன்ஷைன் அவார்டை,
1.ஆசியா அக்கா
2.விஜி சத்யா
3.கிருஷ்ணவேணி
4.அப்பாவி தங்கமணி
5.வானதி
6.சந்தனா
7.இமா
8.நித்துபாலா
9.மேனகா
10.சாருஸ்ரீராஜ்
11.ஜெய்லானி அண்ணா
12.ஃபாயிஸா
13.தெய்வசுகந்தி
14.ப்ரியா
15.ஆனந்தி
இவர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டால் பலமடங்காகும் என்பார்கள்.விருது வாங்கிய நண்பர்களும் இதே போல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்/பகிர்ந்துகொள்ள முயற்சியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.:) :)
நன்றி!

36 comments:

  1. மகி try ஜாமுனா இல்ல dry ஜாமுனா ?? :)
    விருதுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாங்க எல்.எஸ்.,நல்வரவு!

    /try ஜாமுனா இல்ல dry ஜாமுனா ?? :)/அட,அட,அட!என்ன ஒரு டைமிங்,ரைமிங் சென்ஸுங்க உங்களுக்கு? அதிரடியா என்ட்ரி குடுத்திருக்கீங்க..:):) உங்க வீட்டு குட்டிப் பாப்பாகிட்ட கேளுங்களேன்,கரெக்ட்டா சொல்லுவா!

    ஸ்ஸ்...அப்பா! கொஞ்சம் யோசிக்காம டைப் பண்ணிட்டா கப்புன்னு புடிச்சிர்ராங்கப்பா!!இருங்க போஸ்ட்ல எடிட்டிங் பண்ணிட்டு வந்தர்ரேன். :)

    நன்றிங்க,வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  3. //அதற்கான ரெசிப்பி இங்கே.//

    எங்கே?

    அந்தப் போட்டோ கொஞ்சமா அண்ணாத்த சாயல்ல இல்ல? :))

    ReplyDelete
  4. எல்லாரும் கண்ணுல வெளக்கெண்ணை விட்டுட்டு இந்தப்பக்கம் வராங்களே இன்னிக்கு??!!!அவ்வ்வ்வ்...
    /எங்கே?/ இப்ப சரி பண்ணிட்டேன்.அங்கேயேதான் இருக்கு சந்தனா!;)

    /அந்தப் போட்டோ/ஹிஹி! தங்கச்சி நீ சொன்னா சரியாத்தான இருக்கும்? எனக்கென்னமோ கன்னமெல்லாம் உன்னைய மாதிரியே இருக்கறமாதிரி தெரியுது.:-)

    ReplyDelete
  5. Meeeeeeeeee
    theeeeeeeeeeeeeeee
    firstuuuuuuuuuuuu.


    valthukkal....virthu vangaiamaikku and pagirthamaikku..

    sweet kalakkal...

    ReplyDelete
  6. :-) Congrats on your award..Thanks for sharing it with me..

    I'm just excited on seeing dry gulab jamun..when will you post the recipe? plz. post it soon..want to try it b4r diwali.

    ReplyDelete
  7. மகி, வாழ்த்துக்கள். ரெசிப்பிகள் எல்லாமே அருமையா இருக்கு. அந்த ஜாமுன் படம் சூப்பர். இப்ப கொஞ்சம் பிஸியா இருக்கு. 2 வாரங்களுக்கு பிஸிதான். கட்டாயம் குக்கீஸ் & ஜாமூன் ட்ரை பண்ணிப் பார்க்க வேண்டும்.
    விருதுக்கு மிக்க நன்றி. இதை நானும் 15 பேருக்கு குடுக்க வேணுமா அல்லது நானே வைச்சுக் கொள்ளலாமா???

    ReplyDelete
  8. விருது கொடுத்த உங்களுக்கும், விருது வாங்கிய நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்..,.

    ReplyDelete
  9. டிரை குலோப் ஜாமுன் அருமை.
    விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ஜெய்லானீஈஈஈஈஈஈஈஈஈஈஈ.......?


    எஸ் மேடம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...!!

    ReplyDelete
  11. முதலில் வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..இன்னும் இதைப்போல நிறைய கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. //. ஆபீஸில் எல்லாருக்கும் மிகவும் பிடித்திருக்கு என்று சொன்னாங்க//

    வட்டமா அழகா , கலரா இருப்பது பிடித்திருக்குன்னு சொன்னாங்களா..?

    இல்லை சாப்பிட்டு பார்த்து பிடித்திருக்கு சொன்னாங்களா...?


    சாப்பிட்டவங்க எல்லாம் அடுத்த நாள் ஆஃபீஸ் கரெக்டா வந்தாங்களா..?ஹி..ஹி.. ஒன்னுமே சொல்லைலையே நீங்க ..!!

    ReplyDelete
  13. //இப்ப இருந்து ட்ரையல்&எர்ரர் பாத்தாத்தானே பலகாரம் பண்ணமுடியும்? //

    மாம்ஸ் பாவம்...!! இன்னும் எத்தனை கண்டங்களை தாண்ட வேண்டி வருமோ தெரியலை ..!! ((மறக்காம என்னோட கவலையை சொல்லிடுங்க ))

    ReplyDelete
  14. //அதுக்காக பலநாட்கள் கழித்து குலாப்ஜாமூன் பண்ணினேன்.//


    //இந்த முறை புதுசா ட்ரை பண்ணியது,இதோ! ரெசிப்பி விரைவில்..//

    மாவு போடாம , சீனீ போடாம , புதுசா ஒரு ரெஸிபி சொல்லுங்களேன் பிளிஸ் , மேனகாக்கா கிட்டே கேட்டேன் ..பதிலே வரல ..

    ReplyDelete
  15. எனக்கு கொடுத்துக்கு நன்றிகள் பல , விருது பெற்றவர்களுக்குக்கு வாழ்த்துக்கள் ..!! :-))

    ReplyDelete
  16. மகி,சூப்பர்.பதிவும் ,விருதும்,ரெசிப்பிக்களும்.மெதுவாத்தான் பார்க்கணும்,வெள்ளிக்கிழமைன்னால் கொஞ்சம் பிஸி.ஏற்கனவே இந்த அவார்டை நான் பலபேருக்கு கொடுத்து விட்டேனே.மீண்டும் தந்தமைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  17. விருது வாங்கிய நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  18. விருதுக்கு வாழ்த்துக்கள்!! எனக்கும் பகிர்ந்தமைக்கு மிக்க சந்தோஷம்+நன்றி மகி!! ஆசியாக்கா சொன்னது போல் நானும் ஏற்கனவே வாங்கி பகிர்ந்தளித்து விட்டேன்..

    ட்ரை ஜாமூன் சூப்பர்..நானும் இதைதான் தீபாவளிக்கு செய்யலாம்னு இருக்கேன்...

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள்! நன்றி மகி!! dry jamoon நல்லா இருக்குது!. hot breads குக்கீ மாதிரியே இருக்குது. எனக்கு அது ரொம்ப பிடிக்கும். இந்த குக்கீ சீக்கிரமே செஞ்சு பாக்கணும்.

    ReplyDelete
  20. உங்கள் அன்பான விருதிற்கு நன்றி மகி :-))))

    ReplyDelete
  21. உங்களுக்கும் வாழ்த்துக்கள் மகி :-))

    ReplyDelete
  22. விருதுக்கு வாழ்த்துக்கள்... அதனை எனக்கும் பகிர்ந்தமைக்கு மிக்க சந்தோஷம்

    ReplyDelete
  23. வாவ்... cookie / ஜாமூன்... ஒரே ட்ரீட் தான் போங்க... சூப்பர் மகி...

    ஐ எனக்கும் அவார்ட்... தேங்க்ஸ் மகி

    ReplyDelete
  24. விருதுக்கு வாழ்த்துக்கள் , பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி மஹி ஒரு வாரம் டைம் கொடுங்க சிக்கிரம் பதிவு போடுறேன்.

    ReplyDelete
  25. congrats on your award Mahi and thanks for sharing, gulab jamun is my fav, cookies look yummy

    ReplyDelete
  26. thnanks mahi. Your cookie,kaala jamun very yummy.

    thanks for nice awards. byw I already got the same award.
    Once again I want to say thanks to share nice moemnts with everybody.

    ReplyDelete
  27. will definitely try your cookies dear...

    ReplyDelete
  28. 'சன்ஷைன்' விருது பெற்ற மகிக்கும், மகி கையால் விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    மிக்க நன்றி மகி. ;)

    ReplyDelete
  29. மஹி! எல்லாம் நல்லா இருக்குங்க! தேங்காய்பூ வாங்கிட்டு வந்தேன்... வெண்ணை மறந்திட்டேன் :((

    அப்படியே வெண்ணைக்கு பதிலா அவகாடோ போட்டு எதாவது குக்கி செய்து காமிங்களேன்.

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள்.படங்கள் அனைத்தும் சூப்பர்.

    ReplyDelete
  31. படங்கள் மிக அழகா வந்து இருக்கு மகி!

    உங்களின் அன்பான விருதுக்கு மிக்க நன்றி & சாரி மகி கொஞ்சம் வெளி நாட்டு பயணம் எல்லாம் சுற்றிக்கொண்டிருந்ததால் ரொம்ப தாமதமா வந்து விருதை பெற்றுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  32. மண்டே ப்ளூஸ் முடிந்து கொஞ்சம் லேட்டா அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி சொல்கிறேன்.அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க எல்லாரும்.:)

    @ப்ரியா,தாமதமெல்லாம் ஒண்ணுமில்லைங்க. விருதைப் பெற்றுக்கொண்டதுக்கு என் நன்றிகள்.

    @ஸாதிகாக்கா,மிக்க நன்றி!

    @இலா,முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி! /வெண்ணைக்கு பதிலா அவகாடோ போட்டு எதாவது குக்கி செய்து காமிங்களேன்./ஹிஹி! இப்படி எனக்கு பதில் தெரியாதா கேள்வியா கேட்டுப்புட்டீங்களே?? நீங்க இதே அளவுல குக்கீ பண்ணி,எல்லாருக்கும் டிஸ்ட்ரிப்யூட் பண்ணிடுங்க,அப்ப நம்ம கொஞ்சமாதானே சாப்பிடுவோம்?? ;)

    ரொம்ப சந்தோஷம்,உங்க கருத்தை இங்கே பார்த்தது.:)

    @இமா,நன்றி இமா!

    @அகிலா,நன்றிங்க!

    @விஜி,அது Dry ஜாமூன் விஜி..இப்பூடி கவுத்துட்டீங்களே?? கர்ர்ர்ர்! :)
    /byw I already got the same award./am getting this award for the 3rd time.I too wanted to share the happiness with everybody.Thats why I distributed the award viji.thanks again!

    ReplyDelete
  33. @வேணி,வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    @இண்டியன் ஸ்பைஸ் மேஜிக்,முதல்வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

    @சாரு,நேரம் கிடைக்கும்போது போஸ்ட் பண்ணுங்க.நன்றி சாரு!

    @புவனா,நன்றி புவனா! ஹேப்பி மொமெண்ட்ஸ்-ஐ ஸ்வீட்டுடன் பகிர்ந்தா தானே நல்லாருக்கும்? அதான்.:)

    @சிநேகிதி,நன்றி ஃபாயிஸா!

    @ஆனந்தி,வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    @சுகந்திக்கா,ஷார்ட் ப்ரெட் குக்கீ-யவா சொல்றீங்க? இது நம்ம ஊர் பேக்கரிகள்ல கிடைக்கும் பிஸ்கட் மாதிரி இருக்கும்.செய்து பாருங்க..நன்றி!

    @மேனகா,நன்றிங்க./ஆசியாக்கா சொன்னது போல் நானும் ஏற்கனவே வாங்கி பகிர்ந்தளித்து விட்டேன்../முடிந்தால் பகிருங்கள்னு போஸ்ட்ல மாத்திட்டேன்.:)

    @புதுவை சிவா,முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  34. @ஆசியாக்கா./ஏற்கனவே இந்த அவார்டை நான் பலபேருக்கு கொடுத்து விட்டேனே.மீண்டும் தந்தமைக்கும் மிக்க நன்றி./ஐ..நீங்கதானே எனக்கு முதல்முதலா இந்த அவார்ட குடுத்தது? எனக்கும் ஞாபகம் இருக்கே? இது பதில்மரியாதை!:) நன்றி ஆசியாக்கா!

    @ஜெய் அண்ணா,/மாவு போடாம , சீனீ போடாம , புதுசா ஒரு ரெஸிபி சொல்லுங்களேன் பிளிஸ்/என்னதிது,இப்பூடி கேட்டுட்டீங்க? எத்தனை விதமா சட்னி,சாதம்,குழம்பு வகைகள் குடுத்திருக்கேன்? அதெல்லாம் பாருங்க.ஹிஹி!
    தெளிவா சந்தேகம் கேக்கோணும் ஜெய் அண்ணா /மாவு போடாம,சீனி போடாம ஸ்வீட் ரெசிப்பி சொல்லுங்களேன்/-னு கேளுங்க சரியா? கர்ர்ர்...எங்கிட்ட கேக்ககூடாது,ஏன்னா நாந்தான் உஙக்ளுக்கு இந்த ஐடியாவே தந்திருக்கேன்,ஓக்கை?

    /மாம்ஸ் பாவம்...!! இன்னும் எத்தனை கண்டங்களை தாண்ட வேண்டி வருமோ தெரியலை ..!!/ஹாஹா..உங்கள மாதிரியே(!) அவருக்கும் நித்யகண்டம்,பூரண ஆயுசு!டோன்ட் வொரி!

    குக்கீ சாப்ட்ட எல்லாரும் பரம சுகமா இருக்காங்க,ஒரு பிரச்சனையும் இல்ல,போதுமா??

    சரவெடி கமெண்ட்ஸுக்கு நன்றி ஜெய் அண்ணா!

    @ஜலீலாக்கா,மிக்க நன்றி!

    @வானதி,டைம் கிடைக்கைல செய்யுங்க..குட்டீஸுக்கு ரொம்ப பிடிக்கும்.நன்றி வானதி!

    @எல்கே,வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க!

    @நித்து,இதோ அடுத்த பதிவு Dryஜாமூன்தான்.:) நன்றி நித்து!

    @மீ த பர்ஸ்ட் சிவா,வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிப்பா!

    ReplyDelete
  35. //ஜெய் அண்ணா /மாவு போடாம,சீனி போடாம ஸ்வீட் ரெசிப்பி சொல்லுங்களேன்/-னு கேளுங்க சரியா? கர்ர்ர்...எங்கிட்ட கேக்ககூடாது,ஏன்னா நாந்தான் உஙக்ளுக்கு இந்த ஐடியாவே தந்திருக்கேன்,ஓக்கை? //

    ஸ்வீட் ரெஸிபியில ஸ்வீட்டை பத்திதானே கேப்பேன் ஹி..ஹி.. சாம்பாரையா கேப்பேன்..அவ்வ்வ்

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails