அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!ஸ்வீட் ஷெல்ஸ் -தேவையான பொருட்கள்
மைதா மாவு-1கப்
ரவை-1/4கப்
வெண்ணெய்- 2டேபிள்ஸ்பூன்
தண்ணீர்
எண்ணெய்
சர்க்கரை-1/2கப்
தண்ணீர்-1/4கப்
மைதா,ரவை,வெண்ணெய் சேர்த்து பிசறிக் கொள்ளவும்.
கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்துக்கு (மாவு ரொம்பவும் தளரவும் இல்லாமல், டைட்டாகவும் இல்லாமல்) பிசைந்து 20 நிமிடங்கள் மூடிவைக்கவும்.
மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
ஒவ்வொரு உருண்டையாக எடுத்து முள்கரண்டி அல்லது சீப்பின் மீது வைத்து தட்டையாக அழுத்தவும். பிறகு மாவின் ஒரு முனையிலிருந்து எடுத்து லேசாக வளைத்து தனியே எடுக்கவும்.
அழகான ஷெல் /சிப்பி/சங்கு வடிவம் கிடைக்கும்.
இங்கே இன்னொரு விஷயம்..முள்கரண்டியில் அழுத்தினால் ஷெல் பெரியதாக வரும்..சீப்பில் அழுத்துகையில் சிறிய வரிகளுடன் அழகாக வரும். (கொலாஜில் 3வது படம் பாருங்க) இரண்டில் எது செய்யலாம் என்று என்னவரிடம் வோட்டெடுப்பு நடத்தியதில், சீப்புக்கே அவரது வோட்டு கிடைத்தது. :) அதனால் சீப்பிலேயே எல்லா உருண்டைகளையும் ஷெல் செய்துவிட்டேன்.
அழுத்திய ஷெல்களை காற்றுப்புகாமல் மூடி வைத்துக்கொள்ளவும். மிதமான சூட்டில் எண்ணெய் காயவைத்து ஷெல்களைப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.வேறொரு பாத்திரத்தில் சர்க்கரை, அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
பாகு நன்கு கொதிவந்ததும்(21/2 கம்பி பதம்..!!) அடுப்பிலிருந்து இறக்கி, பொரித்துவைத்த ஷெல்களைப் பாகில் போட்டு கலந்து, எல்லா ஷெல்களிலும் பாகு படும்படி குலுக்கி வைக்கவும்.
சர்க்கரைப்பாகுக்கு பதமெல்லாம் அவசியமில்லை..சர்க்கரை கரைந்து நல்லா பபுள்ஸ் வந்ததும் ஷெல்களைப் போட்டு கிளறிவிடலாம். ஆறியதும் ஷெல்கள் மீது வெள்ளைவெளேர்னு பாகு பூத்து நிற்கும்.இந்த இனிப்பு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால் ஒருவாரம் வரை இருக்கும். ஆனா அதுவரைக்கும் நம்ம காலி பண்ணாம இருப்போமான்னு சொல்லமுடியாது! ;)
2009-ல் செய்த இனிப்பு சிப்பிகளைப் பார்க்க இங்கே க்ளிக் பண்ணுங்க! :))
மீண்டும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!















