Thursday, June 14, 2012

முருங்கைகீரை பருப்பு

முன்பே ஒருமுறை பச்சைப்பயறு-கீரை கடைசல் என்று ஒரு ரெசிப்பி போஸ்ட் செய்திருக்கிறேன். இதுவும் அதே செய்முறைதான், பச்சைப்பயறுக்குப் பதில் துவரம்பருப்பு, பாலக்கீரைக்குப் பதில் முருங்கைக் கீரை. ஆகமொத்தம் பருப்பில கீரை போட்டு மொளகா வேவிச்சுக் கொட்டி கடைஞ்சிருக்கேன், சாப்புட வாங்க! :)

தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு -1/4கப்
ஆய்ந்த முருங்கைக் கீரை இலைகள் - 2 கைப்பிடி
சின்னவெங்காயம் -10
தக்காளி-2
வரமிளகாய் -5 (காரத்துக்கேற்ப)
கொத்தமல்லி விதை (தனியா)-1டீஸ்பூன்
சீரகம் -1டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/8டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு

செய்முறை
பருப்புடன் துளி எண்ணெய், மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைத்து எடுக்கவும்.
சின்னவெங்காயம், தக்காளியை நறுக்கிவைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கொத்தமல்லி, சீரகம் தாளித்து சின்ன வெங்காயம், கிள்ளிய வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி மசிந்ததும் கொஞ்சம் மஞ்சள்தூள், கீரை சேர்த்து அரைகப் தண்ணீர் விட்டு சிலநிமிடங்கள் கொதிக்கவிடவும்.
கீரை வெந்து நீர் சுண்டியதும் வெந்த பருப்பைச் சேர்த்து, உப்பு- கால்கப் தண்ணீரும் சேர்த்து ஒரு கொதிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
கீரை-பருப்பு கலவை கொஞ்சம் ஆறியதும் மத்தை வைத்து கடைந்துவிடவும், அல்லது கரண்டியால் நன்றாக மசித்துவிடவும்.
சுவையான முருங்கைகீரை-பருப்பு தயார். சூடான சாதம் + நெய் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

21 comments:

  1. murunga keerai sapitu romba nallu aguthu, looks tempting.

    ReplyDelete
  2. ஆமாங்க அனு! நானும் எப்பவாவதுதான் வாங்குவேன், அதனாலதான் ரெசிப்பியெல்லாம் ஸ்பெஷலா ப்ளாகுலயும் போட்டு வைச்சுக்கறேன்! ;)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    ReplyDelete
  3. அவ்வ்வ்வ்வ்வ்வ்.... இம்முறை நான் நாலாவது.. பறவாயில்லை.. 4தான் எனக்குப் புடிச்ச நெம்பரூஊ:)) நில்லுங்க படிச்சிட்டு வாறேன்ன்ன்ன்...

    ReplyDelete
  4. // ஆகமொத்தம் பருப்பில கீரை போட்டு மொளகா வேவிச்சுக் கொட்டி கடைஞ்சிருக்கேன், சாப்புட வாங்க! :)//

    றீச்சர்ர்ர்ர் ஓடிவாங்கோ.. ஸ்பெல்லிங் மிஸ்ஸிங்கூஊஊஊஉ:))) நொட் மிசுரேக்கூஊஊஊஊ:)))

    ReplyDelete
  5. சூப்பராத்தான் இருக்கு, ஆனா ஃபிரெச்ச்ச்ச்ச்சா முருங்கை இலை கிடைச்சால் மட்டுமே சூப்பர். எமக்கு பார்சலில் நேற்று வந்துது, வாடிவிட்டது, உடனே சுண்டல்தான் செய்தேன்.

    ReplyDelete
  6. ப்ரீத்தி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~
    அதிரா, உங்க லக்கி நம்பர் 4? /நில்லுங்க படிச்சிட்டு வாறேன்ன்ன்ன்... / நிக்க சொன்னீங்க, படிச்சுட்டு வந்து உட்காருங்க-ன்னு சொல்லவே இல்ல? கர்ர்ர்ர்ர்ர்ர்! :))))

    /ஸ்பெல்லிங் மிஸ்ஸிங்கூஊஊஊஉ:))) நொட் மிசுரேக்கூஊஊஊஊ:))) / இதில என்ன மிஸ்ஸிங்கூஊஊ அதிராவ்? நல்லாக் குயப்புறீங்களே குட்டைய? மீன் எதுவும் கிடைக்காது, இப்பவே சொல்லிட்டேன்! ;)

    /பார்சலில் நேற்று வந்துது, வாடிவிட்டது,/ பார்சலா? ங்ங்ங்ங்கருந்து வரும் அதிரா? கனடா? இலங்கை? இந்தியா? அவ்வ்வ்வ்...கீரையும் பார்சலில் வருமா? ஆச்சரியமா இருக்கிறது!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா!

    ReplyDelete
  7. அருமையான முருங்கைக்கீரை பருப்பு.

    ReplyDelete
  8. My all time favy dish... Thanks for sharing Mahi...

    http://recipe-excavator.blogspot.com

    ReplyDelete
  9. மஹி நான் சென்னை போனபோது இந்த முருங்கைக் கீரை செய்ய விலைக்கு கீரை கிடைக்கலே. எங்கே பார்த்தாலும் மரம் பூவும் பிஞ்சுமா பூத்தும், காய்த்தும்
    குலுங்கிக் கொண்டிருந்தது. யாரும் ஒரு கொத்து முருஙகை இலைகூட பறிக்கத் தயாரில்லை. பரவாயில்லை. இப்போது கீரை சாப்பிட்ட திருப்தி வந்து விட்டது. நன்றாக இருக்கு முருங்கைக்கீரைபருப்பு. இன்னும் ஒரு கரண்டி போடு. அன்புடன்

    ReplyDelete
  10. முருங்கைக்கீரை சாம்பார் என்றாலே தனி சுவைதான். முதல் ஃபோட்டோவைப் பார்க்கும்போதே சீக்கிரமாப் போய் கீரை வாங்கிவர வேண்டுமாய் உள்ளது.ஆனால் ஃப்ரெஷ்ஷாகக் கிடைக்க வேண்டுமே.கொத்துமல்லி விதையைத் தாளிப்பதுதான் வித்தியாசமாக உள்ளது.

    ReplyDelete
  11. சூப்பர் ரெசிபி மகி. நான் இதே போல கடைசல் பண்ணுவேன் ஆனா என்ன முருங்கை கீரை கிடைக்காது ஸோ பாலக் இல்லேன்னா வெந்தய கீரை கடைசல் தான். கொத்தமல்லி தாளிக்க சொல்லி இருக்கீங்க நான் இது வரை அந்த மாதிரி பண்ணியதில்லை

    ReplyDelete
  12. //நிக்க சொன்னீங்க, படிச்சுட்டு வந்து உட்காருங்க-ன்னு சொல்லவே இல்ல// பூஸ் எப்போ பாரு நிக்க மட்டும் தான் சொல்லுவாங்க உக்கார சொல்லுறது இல்லே நான் எல்லாம் இப்போ அவங்க பதிவ எல்லாம் உக்கார்ந்துதான் படிக்குறது மரியாதை எல்லாம் மனசுல இருந்தா போதும் மகி:))

    ReplyDelete
  13. ஸாதிகாக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிக்கா!
    ~~
    சங்கீதா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    காமாட்சிம்மா, நல்ல வசந்தகாலத்தில் ஊர்ல இருந்திருக்கீங்கன்னு சொல்லுங்க! :) ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா உங்க கருத்தைப் படிச்சு.மிக்க நன்றி!
    ~~
    சித்ராக்கா, ரான்ச்-சுக்கு ஒரு நடை போயிட்டு வந்துருங்களேன்! மோஸ்ட்லி ப்ரெஷ்ஷாதான இருக்கு? /கொத்துமல்லி விதையைத் தாளிப்பதுதான் வித்தியாசமாக உள்ளது./ ஆமாம், அதான் எங்க கோயமுத்தூர் டச்! ;) செய்துபாருங்க.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    கிரிஜா, நானும் பாலக்கீரைல இப்படி செய்வேன். வெந்தயக்கீரையும் நல்லா இருக்கும், இந்த முறை முருங்கை கிடைச்சதால் செய்தேன். கொத்துமல்லி தாளிச்சு கடைஞ்சா நல்லா மணமா இருக்கும் கிரிஜா,செஞ்சு பாருங்க!

    /அவங்க பதிவ எல்லாம் உக்கார்ந்துதான் படிக்குறது மரியாதை எல்லாம் மனசுல இருந்தா போதும் மகி:))/ ச்சே...புதிய தத்துவம் 10009!! இனிமேட்டு நானும் அப்படியே பண்ணிடறேன் கிரிஜா! தேங்க்யூ! ;)))))

    ReplyDelete
  14. முருங்கை கீரை /பாசி பருப்பு காம்பினேஷன் நல்லா இருக்கும் போலிருக்கே .செய்துவிட்டு சொல்கிறேன் மகி ,
    ஒரு ப்ராப்ளம் எங்க வீட்ல என் ஆத்துக்காரர் ஒரு கட்டு வாங்க சொன்ன
    கிலோ கணக்கில் வாங்கி வருவார் .ஆசியா ரெசிபி பார்த்து வாங்கி வந்த கிலோ கீரையை ஒரு வாரம் அடை /சூப் /சுறாமீன் புட்டு /கீரை பொரியல் எல்லாம் செய்தேன் :))))

    ஆமா பூஸ் எதோ சுண்டல்னு சொல்றாங்களே ..கீரை !!!!! சுண்டல் ... ENIGMA

    ...மியாவ் எனக்கு கண்ணு ஒயுங்கா தெரியுதான்னு தானே செக் பண்றீங்க ??:)))
    கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் கண்ணு தெரியுது

    ReplyDelete
  15. சுப்பரா இருக்கு. ஆனால் நான் எங்கே போவேன் கீரைக்கு.

    அதீஸ், கீரை பார்சலில் வந்ததா????? கனடியன் கஸ்டம்ஸில் காய்கறிகள், பழங்கள் எல்லை தாண்டி கொண்டுவந்தா நயகரா அருவியின் மேலே தொங்கவிட்டு அடிப்பாங்களே?????!!!!!எப்பூடி பார்சல் வந்திச்சு??????

    ReplyDelete
  16. Healthy and comforting food .
    I love it very much and prepare it mostly on holidays

    ReplyDelete
  17. பார்க்கவே சூப்பர்.இன்று தான் ஒரு கவர் நிறைய மு.கீரை என் வீடு தேடி வந்திருக்கிறது.பகிர்ந்து சாப்பிடத்தான் பக்கத்தில் யாரும் இல்லை.

    ReplyDelete
  18. //ஒரு கட்டு வாங்க சொன்னா கிலோ கணக்கில் வாங்கி வருவார் .// கட்டிட்டு வரச் சொன்னா வெட்டிட்டே வந்துருவார் என்கிறீங்க! :))))) கீரைய ஃப்ரீஸ் பண்ணிவைச்சிருங்களேன் ஏஞ்சல் அக்கா?
    ஒரு முறை நான் ஸ்பினாச் இப்படித்தான் வாங்கிட்டேன். படாதபாடு பட்டு தீர்த்தேன், இனிமேல் சிலமாதங்களுக்கு ஸ்பினாச் பக்கமே போகமாட்டேன்ல...அவ்வ்வ்வ்வ்வ்!

    /எதோ சுண்டல்னு சொல்றாங்களே ..கீரை !!!!! சுண்டல் ... ENIGMA/ :) அதிரா சொல்லும் "சுண்டல்" நிஜமாவே உங்களுக்குத் தெரியலையா? நாம 'பொரியல்' என்று சொல்வதை சுண்டல் என்கிறார்! :)

    உங்களுக்கு கண்ணு தெரியுது, மேல் மாடில தான் இன்னும் ஃபுல்லா ஃபங்க்ஷனிங்;)))) ஆரம்பிக்கலை போலிருக்குது! ஹிஹ்ஹி!
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஏஞ்சல் அக்கா!
    ~~
    /எல்லை தாண்டி கொண்டுவந்தா நயகரா அருவியின் மேலே தொங்கவிட்டு அடிப்பாங்களே??/ :)) போனவாரம்தான் நயாகரா மேல கம்பியில் நடந்த ஆளைப் பார்த்தேன், இப்ப நீங்க இப்புடி! :)))) பூஸுக்கு எங்கிருந்து கீரை பார்ஸல் போச்சுது என்றுதெரிந்துக்க ஆவலாகத்தான் இருக்கு,ஆனா கமுக்கமா பதில் சொல்லாம இருக்காங்க பாருங்க!

    நீங்களும் கனடா போகும்போது டேஸ்ட் பண்ணுங்க வானதி! ஈஸ்ட்ல முருங்கை கீரை கிடைக்கற மாதிரி தெரில.
    நன்றி!
    ~~
    பது, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. கீரையைச் சுத்தம் செய்ய நேரமெடுக்கும்னு லீவு நாள்ல செய்வீங்களோ? ;)))
    ~~
    ஆசியாக்கா, குடுத்து வைச்சிருக்கீங்க, என்சொய்! கீரைவடை, சாம்பார், உங்க ப்ளாகில் விதவிதமா ரெசிப்பி போட்டிருக்கீங்களே, எல்லாம் செய்யுங்க, காலியாகிரும்! :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியாக்கா!
    ~~

    ReplyDelete
  19. Lovely invite:) That is a hearty meal. I miss 'murungai keerai plus lot of our native greens' here:(

    ReplyDelete
  20. Thanks for the comment Malar! :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails