தேவையான பொருட்கள்
சேமியா - 1 கப்
கேரட் - 1 (சிறியது)
பட்டாணி(ப்ரோசன்) - 1/4 கப்
வெங்காயம் - பாதி
பச்சைமிளகாய் - காரத்திற்கேற்ப
மிளகாய் வற்றல் - 2
இஞ்சி - சிறு துண்டு
கடுகு - 1/2 ஸ்பூன்
கடலைப் பருப்பு, உளுந்துப்பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை , கொத்துமல்லி இலை - சிறிதளவு
சர்க்கரை - 1/2 ஸ்பூன்
எண்ணெய்
உப்பு
செய்முறை
சேமியாவை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
கேரட்டை பொடியாக நறுக்கி அரை கப் தண்ணீர் சேர்த்து மைக்ரோவேவில் நான்கு நிமிடங்கள் வேக வைத்துக்கொள்ளவும்.
சேமியாவை ஒரு மைக்ரோவேவ் ஸேப் பாத்திரத்தில் போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி நான்கு நிமிடங்கள் வேகவைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து, கடுகு,க.பருப்பு,உ.பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை இவற்றை வதக்கவும். தேவையான உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
வேகவைத்த கேரட் மற்றும் ப்ரோசன் பட்டாணி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
இறுதியாக வேக வைத்த சேமியாவை சேர்த்துக் கிளறி மூன்று நிமிடங்கள் குறைந்த தணலில் வைக்கவும். நறுக்கிய கொத்துமல்லி இலை தூவவும்.
சுவையான,உதிர்-உதிரான சேமியா உப்மா ரெடி! தேங்காய் சட்னி/ ஊறுகாய் இதற்கு பெஸ்ட் காம்பினேஷன்.
குறிப்பு
மைக்ரோவேவ்-ல் சமைக்கும் பொழுது ஸ்டேண்டிங் டைம் மிக முக்கியம்..உதாரணத்துக்கு நான்கு நிமிடங்கள் வேக வைத்தால், நான்கு நிமிடம் முடிந்து மைக்ரோவேவ் ஆப் ஆனவுடனே மைக்ரோவேவ்-ஐத் திறக்கக் கூடாது. இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்த பின்னரே திறக்க வேண்டும்.
சேமியாவை தனியாக வேக வைத்து சேர்ப்பதால் குழைந்து போகாமல் பொல-பொலவென்று இருக்கும்.
இந்த உப்மாவில் உங்கள் கற்பனைத்திறனை உபயோகித்து:) பல்வேறு விதமாகச் செய்யலாம்.
- தாளிக்கும்போது சிறிது சீரகம், கொஞ்சம் தேங்காய்த் துருவல் சேர்க்கலாம்.
- காய்கறிகள் சேர்க்காமல் ப்ளைன் சேமியா உப்மா செய்யலாம்.
- பச்சை மிளகாய் அளவைக் குறைத்துக்கொண்டு மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து கலர்புல்லாக செய்யலாம்.
- காய்கறிகளில் பீன்ஸ், கார்ன்,குடை மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.
- இறுதியாக சிறிது லெமன் ஜூஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
- பட்டை-கிராம்பு சேர்த்து சேமியா பிரியாணியாகவும் செய்யலாம்.
என் சமையலில் பெரும்பாலும் எல்லாவற்றிலும் இறுதியாக சர்க்கரை சேர்த்துவிடுவேன்..இது என் மாமியாரிடமிருந்து என்னைத் தொற்றிக்கொண்ட பழக்கம். சாம்பார் முதல், உப்மா வரை எல்லாவற்றிலும் கொஞ்சம் சர்க்கரை சேர்த்தால் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.
மஹி நன்றாக இருக்கு கிச்சடி. நல்ல உதிரியா இருக்கு. நானும் அடிக்கடி இதே போல் தான் செய்வேன்.
ReplyDeleteநன்றி விஜி!
ReplyDeleteநீங்களும் அடிக்கடி செய்வீங்களா? மார்னிங் டிபனுக்கு ஈசியா செய்துடலாம்... :)
எப்பவாவது மதியம் டிபனுக்கு செய்து பார்க்கலாம் என்று இருக்கிறேன். பார்க்கலாம்.
ReplyDeleteமஹி என் பசங்களுக்கு பிடித்தது அதனால் வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் இருக்கும் , இனிமேல் நானும் சர்க்கரை சேர்த்து பார்கிறேன்
ReplyDeleteநல்ல உதிரி உதிரியா இருக்கு மஹி.. நானொரு வாட்டி ட்ரை பண்ணி கொழ கொழ ந்னு ஆயி, அத்தோட அத விட்டுட்டு இப்பவெல்லாம் சேமியா பகளாபாத் மட்டுந்தான்.. இது ட்ரை பண்ணற மாதிரி தான் இருக்கு.. செஞ்சுட்டு சொல்றேன்..
ReplyDeleteசொல்லனும்னு நினைத்தேன்.. ஆர்கைவ் அமைப்பை வேறு மாதிரி மாற்ற முடியுமா? நாலு நாள் கழித்து வந்து பார்த்தால் புதிதாக என்னவென்று உடனே தெரிவதில்லை..
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி சந்தனா! நானும் நிறைய முறை "கொழ-கொழ" சேமியா செய்திருக்கேன்.கிட்னிய யூஸ் பண்ணி இப்ப இந்த மெத்தட் கண்டுபுடிச்சிருக்கேனாக்கும்!!:)
ReplyDeleteசெய்து பார்த்து சொல்லுங்கோ!
//நாலு நாள் கழித்து வந்து பார்த்தால் புதிதாக என்னவென்று// நான் லேட்டஸ்ட்டா சேர்க்கும் மூன்று குறிப்புகள் "புதிது" என்ற தலைப்பில் போட்டோவோடு அப்டேட் ஆகிகொண்டிருக்கு..மகி கிச்சனுக்கு தூங்காம வரோணும்,சரியா?? :D
அட நல்ல நல்ல ஐடியாலாம் இருக்கே.. வாழ்த்துக்கள்...
ReplyDeleteமகி ரொம்ப நல்ல உதிரியாக வந்திருக்கே... செய்துபார்க்கிறேன்
ReplyDeleteமஹி உங்களுடைய ப்ளாகை இப்பொழுதுதான் பார்த்தேன்..
ReplyDeleteவெஜிடபிள் உப்புமா நன்றாக இருக்கு.
இமா,சாரு மிக்க நன்றி! வெள்ளியன்று உங்க கருத்துகளுக்கு பதில் சொல்லிட்டேன் என்று நினைத்திருக்கேன்! இப்போதான் பார்க்கிறேன்...ஹி,ஹி!!!
ReplyDeleteஅல்லிராஜ்ஜியமா :) இருந்த மகி'ஸ் கிச்சனை குடியரசாக்கிய திரு.அண்ணாமலையான்,வாங்க! நல்வரவு..கருத்துக்கு நன்றி!
ஃபாயிஸா, நன்றி!
தர்ஷினி, வாங்க,வாங்க! நல்வரவு. கருத்துக்கு நன்றி!
செஞ்சாச்சு மஹி. நேத்து காலையில. நல்லா வந்தது. எவிடன்ஸ் காட்ட படம் எடுத்து மெயிலுக்கு அனுப்பியிருக்கேன். ஒரு கடன் கழிஞ்சது.. அப்பாடா :))))
ReplyDeleteகடன் முழுக்கக் கழியல, இன்னும் நிறைய பாக்கி இருக்கு..உன்கிட்ட மீட்டர் வட்டி:) வசூல் பண்ணலாம்னு இருக்கேன்..உங்கண்ணாதான் என் கைய கட்டிப் போட்டு வைச்சிருக்கார்!
ReplyDeleteநான் சொன்ன மாதிரியே:) சுவையாக சமைத்து புகைப்படமும் அனுப்பியதுக்கு நன்றி!!
மகி அக்கா.. நான் உங்க ரெசிபியையும் பார்த்து (வேமிசிலி வறுத்து) நீங்க சொன்ன மாதிரி //உப்மாவில் என் கற்பனைத்திறனை உபயோகித்து :)//... லஞ்ச் ஆச்சு. யம். தாங்க்ஸ்.
ReplyDeleteதீய்ஞ்சு போனால்தானே புகை வரும்!!!! சுவையாகச் சமைத்தாலும் வருமா!! எனக்கு வரல. அதான் படம் எடுக்கல. ;)
செய்து பாத்து பின்னூட்டமும் தந்ததுக்கு நன்றி இமா!
ReplyDelete