தேவையான பொருட்கள்
ஆல் பர்ப்பஸ் ப்ளோர் - 1 கப்
முட்டை - 1
பால் - 1 டம்ளர் [ 270 ml.]
பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன்
சர்க்கரை - 1 1/2 ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்
செய்முறை
ஆல் பர்ப்பஸ் மாவு (அ) மைதாவுடன் சர்க்கரை, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக சலித்து வைக்கவும்.
முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும். அத்துடன் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பால் + முட்டை கலவையுடன் சலித்து வைத்த மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.
மாவுக்கலவை தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்..கெட்டியாக இருப்பதாகத் தோன்றினால் சிறிது பால் சேர்த்து கரைத்துக்கொள்ளலாம்.
தோசைக்கல்லை காயவைத்து இரண்டு (சிறிய) கரண்டி மாவை ஊற்றவும். மாவு தானே பரவிக்கொள்ளும். [தோசை ஊற்றுவது போல கரண்டியால் வட்டமாக தேய்க்கக்கூடாது.]
ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போடவும். பான் கேக் இரண்டு புறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
சூடான பான் கேக்குகள் மீது அரை ஸ்பூன் வெண்ணெய் வைத்து மேப்பிள் சிரப் (அ) தேன் ஊற்றி பரிமாறவும்.
சாஃப்ட்டான பான் கேக் தயார்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்..முட்டை, பால் சேர்ப்பதால் சத்துள்ளதும் கூட.
குறிப்பு
- பான் கேக் மிக்ஸ் [ மாவு + சர்க்கரை + உப்பு + பேக்கிங் பவுடர் ] மொத்தமாக தயாரித்துவைத்துக்கொண்டால் அவ்வப்பொழுது கரைத்து ஈஸியாக செய்துகொள்ளலாம்.
- இங்கு கொடுக்கப்பட்டுள்ள அளவுகளுக்கு படத்திலுள்ள அளவில் 8 பான்கேக்குகள் செய்யலாம்.
- மாவு மீந்துவிட்டால் பிரிட்ஜில் வைக்காமல் பான் கேக்குகளாகவே சுட்டு பிரீசரில் வைக்கவும். தேவையான போது எடுத்து சூடு செய்து சாப்பிடலாம்.
ரொம்ப ஈசியாக தான் இருக்கு.. செய்துபார்கிறேன்
ReplyDeleteஆகா மகி இப்பதாம்பா இந்த சைட்டே பார்கிறேன்
ReplyDeleteஇன்று மெயில் ஓப்பன்செய்தேன்னா அதிலுங்க வலைப்பூன்னு மெயில்பார்து ஓடிவந்தேன்.
சூப்பர் கலக்குங்க வாழ்த்துக்கள்.
எங்கபக்கமும்வந்து கொஞ்சம் பாருங்கப்பா..
ரொம்ப ஈசியாக இருக்கு மஹி
ReplyDeleteFirst timer to ur blog space and liked the easy and interesting recipes. Following u. Visit my space too when u find time.
ReplyDeleteChitchat
http://chitchatcrossroads.blogspot.com/
பான்கேக் சூப்பராயிருக்கு மகி.
ReplyDeleteஎன் பக்கமும் வந்து பாருங்க...
வருகைக்கு நன்றி மலிக்கா!
ReplyDeleteபொண்ணுங்களுக்கு செஞ்சு குடுங்க சாரு! நன்றி!:)
வருகைக்கு நன்றி மேனகா!
தங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி Ms.Chitchat!
குறிப்பு கலக்கலா இருக்கு மகி. கடைசி படத்துல இருக்கிறதுதான் எலி ட்ரை பண்ணினா மாதிரி இருக்கு. ;)
ReplyDeleteயம்மீ.. எதயும் படிச்சுப் பாக்கல.. பாத்தே சொல்றேன்.. நான் ஹோல் வீட் ஃப்ளோர் ல பண்ணியிருக்கேன்.. இந்த மாதிரியும் செஞ்சு பாக்கனும்..
ReplyDeleteஅடடே..மல்லி! வாங்க,வாங்க! வருகைக்கு நன்றி.
ReplyDeleteஹி,ஹி,ஆமாம் இமா..நான் போட்டோ எடுக்கும் வரை எலிக்குப் பொறுமை இல்லை. தங்கள் வருகைக்கு நன்றி.
படம் பார்த்தே புரிந்து கொண்டமைக்கு நன்றி சந்தனா! :)
மஹி இன்று சாய்ந்தரம் செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது பசங்க விரும்பி சாப்பிட்டாங்க , நான் இது மாதிரி வெல்லம், தேங்காய் பூ போட்டு செய்வேன் , இது மாதிரி ஈசியான குறிப்பு உங்களிடம் இருந்து வரவேற்கபடுகிறது
ReplyDeleteநன்றி சாரு! :)
ReplyDelete