Sunday, January 31, 2010

ஆப்பம்



தேவையான பொருட்கள்
பச்சரிசி(சோனா மசூரி அரிசி) - 2 கப்
தேங்காய் - கால் மூடி
சர்க்கரை - 2 ஸ்பூன்
பழைய சாதம் - 2 கைப்பிடி
உப்பு

செய்முறை

பச்சரிசியை நான்கு மணி நேரம் ஊறவைத்து, பழையசாதம் தேங்காயுடன் சேர்த்து நைசாக அரைக்கவும்.

சர்க்கரை, உப்பு சேர்த்து கரைத்து மாவைப் புளிக்க வைக்கவும்.(12 மணி நேரம்)

ஆப்ப சட்டியை காயவைத்து இரண்டு கரண்டி மாவை ஊற்றி சட்டியை சுழற்றவும். மாவு சீராகப் பரவியதும் மூடி போட்டு வேக விடவும்.



ஆப்பம் வெந்தவுடன் எடுத்து சூடாக பரிமாறவும்.

இதற்கு தேங்காய்ப்பால் மிகவும் பொருத்தமான சைட் டிஷ். காரம் விரும்புவோர் தேங்காய் சட்னி, வெஜிடபிள் ஸ்டூ உடன் சாப்பிடலாம்.



4 comments:

  1. மகி,
    ஆப்பம் குளித் தாச்சியில் ஊற்ற மாட்டீங்களா!!! தட்டையாத் தெரியுதே!

    ReplyDelete
  2. இமா,வருகைக்கு நன்றி!

    என்கிட்டே குழித்த தாச்சி இல்லை..கொஞ்சம் குழிவான தோசைக்கல் தான் இருக்கு..அதிலே தான் ஆப்பமும் ஊற்றுவேன். இதுவரை பெரிய வித்தியாசம் தெரியல, இப்ப நீங்க கேட்டப்புறம்தான் யோசிக்கிறேன்...அடுத்த முறை ஊருக்கு போயிட்டு வரும்போது வாங்கிட்டு வரணும்னு!:)

    ReplyDelete
  3. இங்கிலிபீச் ல வேற ஒரு ப்ளாக் இருக்கும் போல?

    நானும் வாங்கியாரனும்.. என் தோசைக்கல் நல்ல ஃப்லாட்டா இருக்கு.. ரொம்ப சிம்பிளா இருக்கே.. ரொம்ப கஷ்டமான வேலைன்னு இல்ல நினைச்சிருந்தேன்?

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி சந்தனா! :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails