Thursday, January 28, 2010

இடியப்பம் - முன்கதை


கோவையில் நான் இடியப்பம் சாப்பிட்டதே இல்லை..அங்கே சந்தகை தான் பிரபலம்..குறிப்பாய் திருமணம் முடிந்து முதன்முதலில் பெண்வீட்டுக்கு வரும் மாப்பிளைக்கு டிபன் சந்தகை தான்..கூடவே இனிப்பிற்கு ஒப்பிட்டு (போளி) செய்வார்கள். எங்க வீட்டில் சந்தகை எப்படி செய்வோம் என்றால்,


தரமான புழுங்கல் அரிசியை நான்கு மணி நேரம் ஊறவைத்து நைசாக அரைத்து, இட்லித் தட்டுகளில் ஊற்றி வேக வைக்கவேண்டும். இட்லிகள் வெந்ததும் சந்தகை மிஷினில் சூடான இட்லிகளைப் போட்டு பிழிய வேண்டும். அவ்வளவுதான், சந்தகைரெடி!


முதலில் மரத்தில் தான் இந்த சந்தகை பிழியும் மிஷின் இருக்கும்..பின்னர் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்-இலும் வந்துவிட்டது. குறைந்தது ஓரடி உயரம் இருக்கும்..ஒரு ஈடுக்கு அதிகபட்சம் நான்கு இட்லிகள் போட்டுப் பிழியலாம்..அதற்குள் மற்ற இட்லிகள் ஆறிவிடும்.வெறும் அரிசி மாவு இட்லிகள் என்பதால் ஒவ்வொரு இட்லியும் பாறை மாதிரி இறுகிப் போய்விடும்...ஆறிய இட்லிகளைப் பிழிவதற்குள், அப்பப்பா..ரொம்ப கஷ்டம்! ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் மிஷின் வந்ததில் இருந்து சந்தகை பிழியும் வேலை கொஞ்சம் சுலபமாகிவிட்டது.


இனிப்பு சந்தகை என்றால் சைட் டிஷ் தேங்காய்ப்பால் அல்லது சர்க்கரை,தேங்காய்த்துருவல். கார சந்தகை என்றால் வெங்காயம்,மிளகாய் போட்டு தாளித்து விடுவார்கள்.அதிலே லெமன் ஜூஸ் சேர்ப்பது, அல்லது தக்காளி சேர்த்து வதக்குவது எல்லாம் நம் வசதிப்படி செய்து கொள்ளலாம்.


காலம் மாற,மாற ரைஸ் சேவை என்று கடைகளில் விற்பனைக்கு வந்தது..முதலில் காய வைத்து சேமியா போன்ற வடிவில் பாக்கெட்களில் வந்தது..பின்னர், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் பிரெஷ்-ஆக சந்தகை விற்பனைக்கு வந்தது..இப்பொழுதெல்லாம் ஒரொரு சாலை முனையில் இருக்கும் பெட்டிக்கடையிலும் பிரஷ் சந்தகை கிடைக்கும்! முன் போல மாவரைத்து, கை வலிக்கப் பிழியவேண்டிய அவசியமில்லை.

என்னிடம் இருக்கும் குட்டியூண்டு முறுக்கு அச்சில் சந்தகை செய்யும் ரிஸ்க் எல்லாம் எடுக்க தைரியம் வரவில்லை..அதுவுமில்லாமல், இங்கே நிறைய தோழிகள் இடியப்பம்செய்வதைப் பார்த்து ஒரு ஆர்வக்கோளாறில் இடியப்பம் செய்ய ஆரம்பித்தேன்.

ரொம்ப கதை சொல்லி போரடித்துட்டேனா?? ஓகே,ஓகே..இவ்வளவு நேரம் நீங்க பொறுமையா படிச்சதுக்கு நன்றிகள் சொல்லிக்கொண்டு, இடியப்பத்திற்கு நான் செய்யும் சைட் டிஷ் ஒன்றைப் பற்றியும் சொல்லிடறேன். இந்த ரெசிப்பி என் தோழி ஒருவருடையது..செய்து பார்த்து சொல்லுங்க!


ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன் ரெசிப்பியைக் காண இங்கே செல்லுங்கள்..

நன்றி : வானதி :)

6 comments:

 1. எனக்கு இந்தக் கதை புதுசு. :) சந்தகை கேள்விப் பட்டதே இல்லை. ஊருக்குப் போகையில் சமைத்துப் படம் எடுத்துப் போடுங்க மகி.

  ReplyDelete
 2. ரொம்ப நல்லா இருக்கு மஹி

  ReplyDelete
 3. எனக்கும் ரொம்ப நாளா இடியாப்பத்திற்க்கு சந்தவை,சேவைனு பெயர் இருப்பது தெரியாது.பிறகுதான் எல்லாம் ஒன்னுன்னு தெரிந்துக் கொண்டேன்.

  ReplyDelete
 4. எங்கவூர்ல சந்தவை.. சந்தனா சந்தவை என்னவொரு பேர் பொருத்தம் பாருங்க.. :) நாங்க வாழைப்பழம் சக்கரை போட்டு பிசைஞ்சு, அதை தொட்டுகிட்டு சாப்பிடுவோம்.

  ReplyDelete
 5. இடியப்பம் ல முதல்ல பிழிஞ்சு வேக வைப்பாங்கன்னு ப்ரென்ட்ஸ் சொல்லியிருக்காங்க.. இதுல வேக வச்சு பிழியறோம்..

  ReplyDelete
 6. அடுத்த முறை ஊருக்குப் போகும்போது கட்டாயம் படம் எடுத்து வருகிறேன் இமா.

  மேனகா, சந்தகை புழுங்கல் அரிசில செய்யறது..இடியப்பம்,சேவை எல்லாம் பச்சரிசில செய்வது. எல்லாமே ஒண்ணு இல்லைங்க, வேற-வேற!! :)


  // சந்தனா சந்தவை என்னவொரு பேர் பொருத்தம் பாருங்க.. :)//செல்ஃபூ!! தாங்க முடில..புனைபெயருக்கே இப்படி ஒரு செல்ஃபூ!!

  வேக வைத்து பிழியறது - பிழிந்து வேக வைக்கிறது...நல்ல அப்சர்வேஷன் சந்தனா..மேல வைங்க!! :)

  அனைவரின் வருகைக்கும் நன்றி!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails