Sunday, January 17, 2010

ஈஸி லட்டு

தேவையான பொருட்கள்
கடலை மாவு - 1 கப்
கோதுமை
மாவு - 1/2 கப்
வெள்ளை
ரவை - 1/4 கப்
சர்க்கரை - 1 1/4 கப்
நெய் - 3/4 கப்
திராட்சை
& முந்திரி,பாதாம் - சிறிதளவு.
செய்முறை
கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கோதுமை மாவையும்,ரவையையும் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

அதே போல கடலை மாவையும் ஒரு ஸ்பூன் நெய்யில் வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
திராட்சை மற்றும் நட்ஸ் வகைகளையும் நெய்யில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் வறுத்த மாவுகள்,சர்க்கரை,நெய் மற்றும் திராட்சை முந்திரியை சேர்த்துக் கலக்கவும்.

கலவையை மைக்ரோவேவில் நான்கு நிமிடம் வைக்கவும்.

கை பொறுக்கும் சூட்டிற்கு மாவுக்கலவை ஆறியதும், உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். விரைவில் செய்யக்கூடிய ஈஸியான லட்டுக்கள் தயார்.

5 comments:

  1. நல்லாயிருக்கு மஹீ இந்த ப்ரெசெண்டேஷன்.. ஸ்லைட் ஷோ லயே கீழ ஸ்டெப்ஸ் வரது இன்னும் நல்லா இருக்கு.. குட் ஜாப்..

    இது கொஞ்சம் ஈசியாத் தான் இருக்கு.. வழக்கம் போல.. ட்ரை பண்ணறேன் :)

    இமா.. எல்லா ஸ்வீட்க்கும் ட்ரை பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்கீங்க போல.. :))

    ReplyDelete
  2. //எல்லா ஸ்வீட்க்கும் ட்ரை பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்கீங்க போல.. :))//
    இந்த தடவை அப்படி இல்லை. ஆல்ரெடி ட்ரை பண்ணி ருசி பார்த்தும் ஆச்சு. :) வீட்லயும் 'வெரி குட்' சொல்லிட்டாங்க. :)

    ஈசியா இருந்துது மஹி. போட்டோவை எங்க அனுப்புறது? அட்மின் ஐடி இல்லையே! :D

    ReplyDelete
  3. மகி இன்னைக்கு தான் உங்கள் ப்ளாகை பார்த்தேன். ரொம்ப நல்லாயிருக்கு. இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்
    என்றும் நட்புடன்
    ஃபாயிஷாகாதர்
    http://en-iniyaillam.blogspot.com

    ReplyDelete
  4. ஃபாயிஷா,உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    இமா,நிஜமாவே செய்துட்டீங்களா? மிக்க மகிழ்ச்சி! உங்களுக்காகவே இன்னொரு கேட்ஜெட் சேர்த்துட்டேன்.. நீங்கள் மின்னஞ்சலில் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.நன்றி!!

    எல்போர்டு..தயவு செய்து // வழக்கம் போல.. ட்ரை // பண்ணாம, வழக்கத்துக்கு மாறாக ட்ரை பண்ணிப்பாருங்க..:)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails