Tuesday, February 9, 2010

புதினா சட்னி

தேவையான பொருட்கள்
புதினா - 1 கட்டு
பச்சை மிளகாய் - 3(அ) காரத்துக்கேற்ப
கொத்துமல்லி இலை - கால் கட்டு
கறிவேப்பிலை - சிறிது
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
உளுந்துப்பருப்பு - 1ஸ்பூன்
வெங்காயம் - கால் வாசி
புளி - நெல்லிக்காயளவு
தேங்காய் துருவல் - கால் கப்
எண்ணெய்
உப்பு

செய்முறை
புதினாவை சுத்தம் செய்து அலசி, இலைகளை தனியாக எடுத்து வைக்கவும்.
மல்லி இலை,பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காய வைத்து கடலைப்பருப்பு, உளுந்துப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், மிளகாய்,புளி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் புதினா இலை மற்றும் மல்லி இலையை சேர்த்து வதக்கவும்.
இறுதியாக தேங்காய் சேர்த்து மூன்று நிமிடம் குறைந்த தணலில் வதக்கி ஆறவைக்கவும்.
ஆறியதும் தேவையான உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

இந்த சட்னி இட்லி,தோசை,பணியாரம்,சப்பாத்தி,பூரி, சுடு சாதம், தாளித்த சாதம் எல்லாவற்றுக்கும் சூப்பராய் மேட்ச் ஆகும்.

6 comments:

  1. நாங்க வேற மாதிரி செய்வோம்.. இந்த மாதிரி ஒருக்கா செஞ்சு பாத்து சொல்றேன்..

    ReplyDelete
  2. மகி சட்னி எங்க மாமியாரின் பக்குவம் போல் அருமையாக இருக்கு.
    எல் போர்டு நீங்க எப்படிசெய்விங்க?

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சந்தனா & ஃபாயிஜா!

    சந்தனா ஸ்டைல் எப்படின்னு சொன்ன செய்து பாத்துடலாம்..சீக்கிரம் சொல்லு எல்போர்டு!! :)

    ReplyDelete
  4. இங்கு வந்தால் படம் பார்த்துப் பார்த்தே குண்டாகி விடுவேன் மாதிரி இருக்கிறதே. நல்ல நல்ல குறிப்புகளாகப் போட்டு ஆசையைத் தூண்டுகிறீர்கள் மகி.

    ReplyDelete
  5. பாராட்டுக்கு நன்றிங்க புனிதா! அடிக்கடி வாங்க.

    ReplyDelete
  6. puthina chutney A1.. nanum ippadithan seiven mahi akka.. ana enga mamiyar coconut,kadalai paruppu serkama, red chilli pottu pannuvanga..adhuvum romba nallarukum..try panni parunga..

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails