Monday, February 8, 2010

வெஜிடபிள் கட்லெட்

தேவையான பொருட்கள்
வேக வைத்த உருளை கிழங்கு - 1
பொடியாக நறுக்கி வேகவைத்த கேரட்,பீன்ஸ் மற்றும் பட்டாணி - 1 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 2 இன்ச் துண்டு
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி இலை - சிறிதளவு
சீரகம் - 1 ஸ்பூன்
மைதா (அ) ஆல் பர்ப்பஸ் மாவு - 3 ஸ்பூன்
ப்ளெய்ன் ப்ரெட் க்ரம்ஸ் - 1 கப்
உப்பு


செய்முறை

வேகவைத்த காய்கறிகள், சீரகம்,பச்சைமிளகாய்,இஞ்சி,கொத்துமல்லி,உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப் பிசையவும்.

உங்களுக்கு விருப்பமான வடிவில் கட்லெட்டுகளை செய்து வைக்கவும்.

மைதாவுடன் அரை டம்ளர் நீர் சேர்த்து நீர்க்கக் கரைத்துக்கொள்ளவும்.

செய்து வைத்த கட்லெட்டுகளை மைதா கரைசலில் தோய்த்து ப்ரெட் க்ரம்சில் நன்றாகப் புரட்டி வைக்கவும்.

மிதமான சூட்டில் எண்ணெயை காயவைத்து கட்லெட்டுகளைப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

டேஸ்ட்டான ஈவினிங் ஸ்னாக்ஸ் தயார்! டொமாட்டோ கெச்சப், கிரீன் சல்ஸாவுடன் பரிமாறவும்.

குறிப்பு

  • காய்கறிகளுடன் பீட்ரூட், மற்றும் கார்ன் சேர்த்தும் செய்யலாம். கூடவே சிறிது முந்திரிப் பருப்பும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருப்பின், பச்சை மிளகாயைத் தவிர்த்து மிளகாய்த்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.
  • கட்லெட்டுகளை எண்ணெயில் பொரிப்பதற்குப் பதிலாக அவன்-ல் வைத்து பேக் & ப்ராயில் செய்யலாம். ஆனால் அவன்-ல் செய்ய நேரம் அதிகமாகும். குறைந்தது முக்கால் மணி நேரம் பேக் செய்யவேண்டும். பின்னர் கால் மணி நேரம் ப்ராயில் செய்ய வேண்டும்.
  • மைதாவில் தோய்த்தெடுப்பதற்குப் பதிலாக முட்டையின் வெள்ளைக்கருவிலும் கட்லெட்டுகளை டிப் செய்து ப்ரெட் க்ரம்சில் புரட்டிக் கொள்ளலாம்.



9 comments:

  1. சிம்பிளா இருக்கு மஹீ.. நாங்கூட ரொம்போ கஷ்டமோன்னு நினைச்சேன்.. இதையும் கடன்ல சேத்துக்கோங்கோ

    ஸ்லைட் ஷோ ல ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் நல்லாயிருக்கு.. :)

    ReplyDelete
  2. mahi உங்க கிச்சன் உள்ளே வந்தாச்சு முதலில் வரவேற்றது எனக்கு பிடித்த கட்லெட்
    ரெசிபி சூப்பர் போட்டோஸ் சூப்பர் பூவும் சூப்பர்

    ReplyDelete
  3. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சந்தனா, சாரு, தாஜ் & சுஸ்ரீ!!

    //இதையும் கடன்ல சேத்துக்கோங்கோ// மீட்டர் வட்டி ஞாபகமிருக்கில்ல?? :)

    நல்வரவு தாஜ்!! உங்களுக்கு பிடித்த கட்லெட்-ஐ சுவைத்துக்கொண்டே அடிக்கடி இங்கே வாங்க. :)

    ReplyDelete
  4. மஹி நேத்து மாலை உங்கள் கட்லட் செய்தேன், ரொம்ப நல்லா இருந்தது .வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிட்டாங்க ஒரே பாராட்டு தான் . நன்றி

    ReplyDelete
  5. அப்படியா?? ரொம்ப சந்தோசம் சாரு!:D

    செய்து சுவைத்து,உங்க நேரத்தையும் ஒதுக்கி இங்கே வந்து சொன்னதற்கு என் மனமார்ந்த நன்றி! :)

    ReplyDelete
  6. வெஜி கட்லட் பிடித்திருக்கிறது மகி.

    ReplyDelete
  7. நன்றி புனிதா!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails